Monday, January 31, 2005

ஸலாம்

விடுமுறையில் ஊருக்கு வந்ததிலிருந்து எழுத்துப் பணியில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. உறவினர்களின் வருகை, மற்றும் உறவினர்களின் அழைப்பும் எழுத்துப் பணியை சற்று முடக்கி விட்டது.

ஹஜ் பெருநாள் முடிந்தபின் ஊரில் சரியாகத் தங்க முடியவில்லை. நேற்றுக் காலையில் பெங்களுர் வந்து சேர்ந்தேன் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை வரை இங்கேயிருப்பேன் இதோடு என் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்வேன். இதன் பின் ஊர் சென்று எழுதுவதற்கான நேரங்களை
ஒதுக்கிக் கொள்ளலாம் என எண்ணியுள்ளேன்.

இன்ஸா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
அபூ முஹை

Thursday, January 27, 2005

அதிசயம்???

நண்பர்கள் சிலர் "அதிசயம்" என தலைப்பிட்டு இந்தோனேசியாவில் சுனாமியால் அகோரமாக பாதிக்கப்பட்ட இடத்தில் எந்த பாதிப்பும் இல்லாத ஒரு பள்ளிவாசலின் படத்தை அனுப்பியிருந்தார்கள். இறைவனின் நாட்டம் அப்படிதான் என்றால் பள்ளிவாசல் என்ன, கோயிலோ அல்லது சர்ச்சோ இருந்தாலும் இறைவன் அதை காப்பாற்றியிருப்பான்.

ஒரு செய்தி மின்னஞ்சலில் வந்துவிட்டால் அதை அப்படியே மற்றவருக்கு தட்டிவிடுவது நம்மில் பலருக்கு மகிழ்ச்சி. இஸ்லாம் அதிசயத்தை வைத்து வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. இஸ்லாம் போற்றப்படுவதற்கு காரணம் அது தரும் நல்லொழுக்க பயிற்சியே காரணம். நம்மிடம் அவை குறைவதனாலோ என்னவோ இத்தகைய அதிசயங்களை ஈடு செய்யத் தேடுகிறோம்.

இந்த காலகட்டத்தில் நம்முடைய அறியாமையின் காரணமாக இஸ்லாத்திற்கு பல அவப்பெயரை எடுத்துத்தந்திருக்கிறோம். மற்றவர்களும் முஸ்லிம்கள் செய்வதெல்லாம் இஸ்லாம் என நம்பி இஸ்லாத்தின் மீது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இதுபற்றி பிறகு விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன்.

முஸ்லிம்கள் மதத்தையும் மீறி மற்றவர்களுக்கு உதவிசெய்தது மட்டுமே மேன்¨மாக எனக்கு பட்டது. முளர் கோத்திரம் என்னும் இஸ்லாமல்லாத கோத்திரத்திற்காக உதவிசெய்ய தூண்டி மதினா பள்ளிவாசலில் நபியவர்கள் சொறிபொழிவு நடத்தியது ஞாபகத்திற்கு வருகிறது.

கமலா சுரயாவைப்பற்றி

எழுத்தாளர் கமலா சுரயாவைப்பற்றி அனைவரும் கேளிவிப்பட்டிருப்போம். அவரைப்பற்றிய ஒரு செய்தி:

http://thinnai.com/ar0120055.html

இப்படிக்கு
அபூ உமர்

இணையம் வழியாக இஸ்லாமிய நூல்கள் விற்பனை

தமிழ் நூல்களை இணையம் மூலம் வாங்க பின் வரும் இணைய அங்காடிகளுக்குச் செல்லலாம்:

1. http://www.kamadenu.com
2. http://www.indiavarta.com/shopping/tamil/ (தினமணி - எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இணைய அங்காடி)

தமிழில் இஸ்லாமிய நூல்களை விற்பதற்கென்று இது போல இணைய அங்காடிகளை யாரேனும் தொடங்கினால் என்ன? அது வரை, இந்த இணைய அங்காடிகளை தமிழில் இஸ்லாமிய நூல்களை வெளியிடும் ரஹமத் ட் ரஸ்ட், இஸ்லாமிய நிறுவனம் ட் ரஸ்ட், தாருல் ஹூதா, மூன் பப்ளிகேஷன்ஸ், ஜான் ட் ரஸ்ட், இலக்கியச் சோலை போன்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே?

Tuesday, January 25, 2005

தனியார் ஹஜ் ஏஜென்டுகளிடம் கவனம் தேவை

14.01.2005 அன்று சேலம் மூசா டிராவல்ஸ் மூலமாக ஹஜ் செய்ய வந்த 67 புனித பயணிகள் ஜித்தா ஏர்போர்ட்டில் டிரலாவல்ஸின் தில்லுமுல்லு காரணமாக 40 மணிநேரம் காத்திருந்தனர்.

சில வருடத்திற்கு முன்பு மினாவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தற்போது (முஅல்லிம்) முறைப்படி தங்குவதற்கு இடம் மற்றும் ஏனைய பயண வசதிகள் செய்யப்பட்ட பின்னரே ஹஜ் செய்ய முடியும் என்ற நிலையை சவுதி ஹஜ் நிர்வாகம் எடுத்திருந்தது. அதன்படி மக்காவுக்கு வரும் ஹாஜிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்ட அதே வேளையில் பாதைகளில் தங்கும் யாத்திரியர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

அதன் படி சேலம் மூசா டிராவல்ஸ் நிர்வாகம் முஅல்லிம் நிர்வாகத்திற்கு கட்ட வேண்டிய தொகைக்கான காசோலையை எடுத்து வராததால் ஜித்தா விமான நிலையத்தில் இப்பயணிகள் சங்கடப்படவேண்டிய நிலையாகிவிட்டது. கடைசியாக அவர்களிடம் சிலவுக்கு உள்ள பணம் வசூல் செய்யப்பட்டு முஅல்லிமுக்கு நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட பின்னரே (அதாவது ஹஜ் கிரியை ஆரம்பிக்கும் கடைசி கட்டத்தில்) மக்காவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனை இங்கு எழுதுவதற்கு காரணம், இதே பிரச்சினையில் இதே டிராவல்ஸ் சுமார் 100 பயணிகளுடன் போன வருடம் இதே நாடகத்தை நடத்தியது. அப்படி இருந்தும் இந்த டிராவல்ஸ் மூலமாக ஹாஜிகள் வருவதற்கு ஏஜென்டின் முயற்சி காரணமாக இருக்கலாம்.

மனிதன் ஒரு தடவை தப்பு செய்யலாம். மீண்டும் மீண்டும் இதே வழியென்றால் இத்தகையவர்களை சமுதாயத்திற்கு இனம் காட்டுவது நமது கடமை.

இந்த தடவை சேலம் மக்கள் இச்செய்தியை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தி ஹின்டு, என்.டி.டீ.வி. போன்றவற்றிற்கு தெரிவித்து உள்ளார்கள். இது தவிர லோக்கல் பள்ளிவாசல்களில் இத்தகையவர்களைப்பற்றிய அறிவிப்பு செய்தால் மக்கள் விழிப்புணர்வு அடைய வாய்ப்புள்ளது. உணர்வு, மக்கள் உரிமை போன்ற முஸ்லிம்களின் வாரஇதழ்களுக்கு இத்தகைய செய்திகளை எடுத்துச்செல்வது நல்லது.

இத்தகைய விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஊர் பெரியவர்கள் இந்த டிராவல்ஸ்-க்கு கொடுக்கப்படும் லைசன்ஸ்களை ரத்து செய்வதற்குறிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அப்படியில்லையென்றால் அடுத்த வருடமும் இந்த நிலைமை வராது என்பது என்ன நிச்சயம்.

ஒரு முஸ்லிம் இரண்டு தடவை ஒரே விஷயத்தில் ஏமாறுவது அவனுடைய தகுதிக்கு இழிவானதாகும். அனுபவங்கள் எல்லாருக்கும் வருவதில்லை. மற்றவர்களுக்கு வந்தாலும் நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஏஜென்டிடம் நமது பயண வேலைகளை ஒப்படைப்பதற்கு முன்னால் அவர்களைப்பற்றி விசாரித்துக்கொள்வது நல்லது.

Monday, January 17, 2005

வருத்தம் நீங்கியது

போன வாரம் ஒழுங்காக வாசிக்க முடியாமல் போனதற்கு வருத்தமாக இருந்தது. தற்போது அவ்வருத்தும் நீங்கியது.

அவ்வருத்தத்தை நீக்கிய பெருமை பி.கே.எஸ் அவர்களின் சொன்னார்கள்.. சொன்னார்கள்.. திண்ணை கட்டுரையைச் சேறும்.

யுனிகோடில் இங்கு

நன்றி: திண்ணை - மின் வாரஇதழ்
http://thinnai.com/pl0113059.html

சொன்னார்கள்... சொன்னார்கள்...
பி.கே. சிவகுமார்

ஆற்காடு வீராசாமி: இந்த மைல்கல் ஹிந்தி எழுத்துப் பிரச்னையிலே ஜெயலலிதா சொல்றதுதான் எடுபடுது. நம்ம பேச்சு 'வீக்'கா இருக்குது. ஒண்ணு செய்யுங்களேன். முன்னே தண்டவாளத்துலே தலை வெச்சுப் படுத்தமாதிரி...

மு.கருணாநிதி: இப்பவும் செய்யணுமா? விளையாடறிங்களா? அப்போ ரயில் வண்டியை தொலைவிலேயே நிறுத்துவான்னு தெரியும். தலையை வெச்சோம். இப்ப ஓடறது லாலு பிரசாத் ரயிலு! பிரேக் பிடிக்காம ஓடி வந்தாலும் வந்துரும்... தைரியம் இருந்தா நீங்க போய் வையுங்க தலையை.

- மேற்சொன்ன இருவரும் பேசிக்கொள்வதாக, ஜனவரி 5, 2005 துக்ளக் இதழில், வெளியிடப்பட்ட அட்டைப்பட கார்ட்டூன்

**** ****'

கொலையுண்டவர் ஒரு பிராமணர்; கைது செய்யப்பட்டிருப்பவரும் ஒரு பிராமணர்; கைது செய்தவரும் பிராமணர்; இதில் பிராமணரல்லாதார் எங்கே வந்தனர்' என்று கேட்கப்படலாம். சங்கராச்சாரியாரின் அதிகார அழிப்பால் பலன் பெறப்போவது அவர்கள்தான். தீண்டாமையை வலியுறுத்திய, சாதியைக் கட்டிக் காத்த சங்கராச்சாரியாரின் வீழ்ச்சி தலித்துகளுக்கு மகிழ்ச்சியளிப்பதுதான். ஆனால், சங்கராச்சாரியாரின் மீதுகூட சட்டம் பாயும், சாதி வெறியர்களை அது ஒன்றும் செய்யாது என்னும் கசப்பான உண்மையையும் சாதிப் பெரும்பான்மை மதப் பெரும்பான்மையைவிட ஆபத்தானது என்னும் தத்துவத்தையும் உணர்ந்ததால் பிராமணரல்லாதாரோடு சேர்ந்து தலித்துகள் கூத்தாட முடியாது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறி வைக்கலாம்.

- ஜனவரி 2005 காலச்சுவடு இதழில் தொல்பதி நரகர் என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் ரவிக்குமார்

**** ****

பகுத்தறிவுப் பாசறைகள் கட்டித் தமிழகத்தை உய்விக்கத் திருவுள்ளம் பூண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி தன் ஆப்த நண்பர் சாவியை ஆசிரியராகக் கொண்டு 'குங்குமம்' பத்திரிகையைத் தொடங்கியபோது முதல் இதழின் அட்டைப்படம் என்ன தெரியுமா? ஒரு பெண் கண்ணாடியில் முகம் பார்த்துக் குங்குமம் இட்டுக் கொள்கிறார்; கண்ணாடிக்குப் பக்கத்தில் சுவரில் ஒரு படம் தொங்குகிறது. பரமாச்சார்யாள் படம்.

- ஜனவரி 2005, காலச்சுவடுக்கு அளித்த நேர்காணலில் தீம்தரிகிட இதழின் ஆசிரியர் ஞாநி.

**** ****

பொதுவுடைமைக் கட்சியின் தொடக்க காலத்தில் ஏகாதிபத்ய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு என்னும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். நேரடியாக ஆதிக்க-அதிகார சக்திகளை எதிர்ப்பதில் பொதுவுடைமைவாதிகளைவிடப் பெரியார் பின்தங்கித்தான் இருந்தார்.

- ஜனவரி 2005, காலச்சுவடு வாசகர் கடிதத்தில் ரவி சேகரன், மதுரை - 6.

**** ****

காலச்சுவடை சங்கர மட, ஜெயேந்திரர்களை ஆதரிக்கும் பத்திரிகையாக நீங்கள் மாற்ற நினைத்தால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே? எதற்கு இந்தப் பூசிமெழுகல்?- ஜனவரி 2005 காலச்சுவடில் பிரசுரமான பிரபஞ்சனின் கடிதத்திலிருந்த சில வரிகள்தலையங்கத்தை 'ஊன்றிப் படித்துப்' பிரபஞ்சன் கண்டுபிடித்துள்ளவை அவருக்குள் இருப்பவைதானே தவிர தலையங்கத்தில் இருப்பவையல்ல. அவர் ஒரு படைப்பாளியென்பதால் (இந்துவாக இருந்தாலும்கூட) அந்தப் பிரதியின்மீது தனது கற்பனைகளை எழுதவும் செய்துவிட்டார் போலும். எங்களிடம் பிற்போக்குத்தனத்தைக் கண்டுபிடித்துச் சீறியிருக்கிறார் பிரபஞ்சன். கிணற்றுக்குள் தெரிவது தனது பிம்பம்தான் என அறியாமல் பாய்ந்த சிங்கத்தின் கதைதான் நினைவுக்கு வருகிறது.

- ஜனவரி 2005 காலச்சுவடில் ஆசிரியர் குழு பிரபஞ்சனுக்கு அளித்த பதிலிலிருந்து சில வரிகள

்**** ****

உடுப்பி மடத்தைச் சேர்ந்த பேஜாவர் சாமி ஒருவர் இருக்கிறார். அயோத்திப் பிரச்னையில் அவரும் ஈடுபட்டுள்ளார். அதில் அவருடைய நிலைப்பாட்டை நான் ஒப்பவில்லை. ஆனால் அவர் புரட்சிகரமான ஒரு காரியத்தைச் செய்தார். அவர் அரிஜனங்களின் சேரிக்குச் சென்றார். அதைக் கேட்டு முதலில் அம்மா தத்தளித்துப் போனார். பின்னர் அரிஜனங்களும் நம் எல்லோரையும் போன்ற மனிதர்களே என்னும் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அந்தச் சுவாமிகளுக்கு ஐம்பது வயதானபோது, நான் அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய முற்போக்கு நண்பர்கள் அதற்காக என்னை விமர்சித்தார்கள். பேஜாவர் சுவாமி மாற்றத்தை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்ததால், என் அம்மாவும் ஓர் அடி எடுத்து வைத்தார். ஆனால், நான் நூறு அடி எடுத்து வைத்தாலும் என் அம்மா ஓர் அடி எடுத்து வைப்பது சந்தேகம். நம்முடைய புரட்சிகரச் செயல்பாடுகள் எல்லோரையும் சென்று அடைவதில்லை. ஆனால், பேஜாவர் சுவாமிகள் போன்ற ஒருவர் செய்யும் ஒரு புரட்சிகரமான காரியம் எல்லோர் கவனத்திற்கும் வருகிறது. அவர்மீது எனக்குப் பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரிடம் நம்பிக்கை இருக்கிறது. சமூக மாற்றங்களுக்கு நம்மைப் போன்றவர்கள் முதல் காரணர்களாகிறோம். சுவாமிஜியைப் போன்றவர்கள் அடுத்த கட்டக் காரணர்களாகிறார்கள். என் அம்மாவும் அந்த வழியில் வந்தவர்.

- ஜனவரி 2005, காலச்சுவடில் "அம்மா காட்டிய வீடு" கட்டுரையில் யு.ஆர்.அனந்தமூர்த்தி

**** ****

கேள்வி: நீங்கள் முதல்வராக இருந்தால், ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுத்திருப்பீர்களா?

மு.கருணாநிதி: நான் முதல்வராக இருந்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டுகளே எழாமல் இருந்திருக்கலாம் அல்லவா?

கேள்வி: அரசியல் அனுபவத்தில் ஜூனியரான தயாநிதி மாறனுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் மற்ற தி.மு.க. அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

மு.கருணாநிதி: அப்படியா? தி.மு.க. அமைச்சர்களில் நான் தனியாக ஒருவருக்கு முக்கியத்துவம் இதுவரையில் தரவில்லை. இனியும் இல்லை. தயாநிதி மாறன் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால் திருஞான சம்பந்தன் என்று பாராட்டியிருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே!

- டிசம்பர் 29, 2004 தேதியிட்ட தமிழ் இந்தியா டுடேக்கு மு.கருணாநிதி அளித்த நேர்காணலிலிருந்து எடுத்த இரு கேள்வி பதில்கள

்**** ****

சில மாதங்களுக்கு முன்புவரை ஏ.பி.வாஜ்பாயுடன் அவர் இருந்த புகைப்படங்கள் போய் இப்போது அவர் சோனியாகாந்தி மற்றும் மன்மோகன் சிங்குடன் இருக்கும் படங்கள் வீட்டுச் சுவரை அலங்கரிக்கின்றன.

- திரு. மு.கருணாநிதி வீட்டைப் பற்றி இந்தியா டுடேவின் எடிட்டர் பிரபு சாவ்லா, டிசம்பர் 29, 2004 இதழில் வெளியான கருணாநிதியின் நேர்காணலின் முன்னுரையில் சொன்னது.

**** ****

கேள்வி: மத்தியில் ஆளும்கட்சியுடன்தான் எப்போதும் கூட்டணி வைத்து வந்தீர்கள்?பரூக் அப்துல்லா: பிழைத்திருக்க அதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

- ஆஜ் தக் சேனலின் சீதி பாத் நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா சொன்னதாக டிசம்பர் 29, 2004 இந்தியா டுடே தமிழ் இதழில்.

**** ****

கேள்வி: கண்காட்சியில் வருகையாளர் எண்ணிக்கை போலவே விற்பனையும் அதிகரிக்கிறதா?

BAPASI தலைவர் இரா.முத்துக்குமாரசாமி: அதிகரிக்கிறது என்றே நினைக்கிறேன். பல்வேறு காரணங்களால் பதிப்பகங்கள் விற்பனை விவரங்களை ஒளிவுமறைவின்றி கூறுவதில்லை. ஸ்டால்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டதால் பதிப்பகங்களின் வருமானம் பகிர்ந்தளிக்கப்பட்டு விடுகிறது.

- டிசம்பர் 29, 2004 தேதியிட்ட இந்தியா டுடே இதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து

**** ****

இவ்வளவு பெரிய நிறுவனத்திற்குத் தொந்தரவு தருவதில் அர்த்தமில்லை.

- ரிலையன்ஸ் பற்றி கம்பெனி விவகார அமைச்சர் பிரேம் சந்த் குப்தா சொன்னதாக, டிசம்பர் 29, 2004 தேதியிட்ட இந்தியா டுடேவில

்**** ****

கேள்வி: தமிழ்ச் சூழலில் உங்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறீர்களா?

அசோகமித்ரன்: வெளிமாநிலங்களில், வெளி மொழிகளில் எனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தோடு ஒப்பிட்டால் இங்கு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அங்கீகாரம் கிடைத்திருந்தால் இன்னும் உற்சாகமாக இயங்கியிருப்பேன் என்று தோன்றுகிறது. என்னுடைய எந்தப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா நடந்ததில்லை. அதை யாருடைய குற்றமாகவும் சொல்ல முடியாது. நானும் அதற்கு முயற்சி செய்யவில்லை.

- டிசம்பர் 29, 2004 தமிழ் இந்தியா டுடேவுக்கு அசோகமித்ரன் அளித்த நேர்காணலில்

**** ****

காயம்பட்ட நீச்சல் வீரர் சோபினி ராஜன் மருத்துவ கடன் அதிகமானதால் தற்கொலை.- ஜனவர் 5, 2005 இந்தியா டுடேவிலிருந்துஅதைக் குடிக்கிறவன்தான் குற்றவாளி. கொடுக்கிறவன் இல்லை.

- ஊக்க மருந்துப் பிரச்னையில் பயிற்சியாளர்களுக்குத் தண்டனை கிடையாதா என்பது பற்றி விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் தத் சொன்னதாக ஜனவரி 2005, தமிழ் இந்தியா டுடேவில்

**** ****

வீரப்பன் என் கனவில் வந்தபோதெல்லாம் அவனது கதையை நான் முடிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன்.

- சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார் சொன்னதாக ஜனவரி 5, 2005 இந்தியா டுடேவில்

மரணத்தை அதன் நுனிவரை சென்று ருசித்ததுண்டு.

பி.எஸ்.எஃப்பில் இருந்த காலத்தைப் பற்றி கே.விஜயகுமார் சொன்னதாக ஜனவர் 5, 2005 இந்தியா டுடேவில்

**** ****

கேள்வி: உங்களுடைய நிறுவன விளம்பரங்களில் தயாரிப்புகளின் படங்களைக்க்காட்டிலும் உங்களுடைய படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஏன்?

வசந்த் & கோ எச்.வசந்தகுமார்: எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் என்னுடைய புகைப்படம் வருவதால் மக்கள் என்னைச் சந்திக்கும்போது அறிமுகமான, பழக்கமுள்ள நபர் போல என்னிடம் பழகுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அது உதவுகிறது.

- ஜனவரி 5, 2005 தமிழ் இந்தியா டுடேவிலிருந்து

**** ****

ஊகிக்க முடியாத இடங்களிலிருந்தெல்லாம் தரகர்கள் வெளிப்படுவார்கள். ஜெயேந்திரர் 1987-இல் மடத்தைவிட்டு வெளியேறியது பற்றி 1991-இல் தான் வெளியிட்ட கதையால் எரிச்சலடைந்து ஜெயேந்திரர் தனக்கு மிரட்டல் அனுப்பியதாக அண்மையில் நக்கீரனில் எழுத்தாளர் ம.வே.சிவகுமார் எழுதியிருக்கிறார். அப்போது மடத்தின் சார்பாகத் தன்னை அச்சுறுத்தியது, பின்னர் சமரசம் பேசியது எல்லாமே சக எழுத்தாளர் பா.ராகவன் என அவர் சொல்லியுள்ளார்.

- ஜனவரி 2005 காலச்சுவடுக்கு அளித்த நேர்காணலில் இதழாளர் தீம்தரிகிட ஞாநி

**** ****

ஒருமுறை சந்திப்புக்குப் பின் வெளியில் அமர்ந்திருந்த சதாசிவத்திடம் கேட்டேன்."சுப்புலக்ஷ¢மியின் தனிப்பட்ட சிறப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?""அவளுடைய அடக்கம்" என்றார்.

- ஜனவரி 2005 காலச்சுவடில் எம்.எஸ். பற்றிய கட்டுரையில் வாஸந்தி.

**** ****

பெரியாரை விமர்சிக்கிறவர்கள் எல்லாம் பாசிஸ்டுகள், பார்ப்பன அடிவருடிகள் என்றால் இடதுசாரிகள் உட்பட இங்கு ஒருவரும் மிஞ்சப் போவதில்லை.

- ஜனவரி 2005 காலச்சுவடில் பெரியார் பற்றிய தன் கருத்துகளுக்காக ரவிக்குமார் வசைபாடப்படுவது பற்றி, பாணர் எழுதிய கடிதத்திலிருந்து

**** ****

முழுக்க முழுக்க சதிகாரர்களால் நடிக்கப்படும் ஒரு நாடகத்தில் நாம் உண்மையைத் தேடி அலைவதை முதலில் நிறுத்தலாம்.

- டிசம்பர் 2004 உயிர்மை தலையங்கத்தில் வீரப்பன் சுடப்பட்டது, ஜெயேந்திரர் கைது ஆகியவற்றைப் பற்றி எழுதியபோது மனுஷ்ய புத்திரன் சொன்னது.

**** ****

புதைகுழியில் கிடைத்த ஒரு எலும்புத்துண்டை வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான ஒரு டினோசாரை உருவாக்குவது போன்றதே பத்திரிக்கையாளரின் வேலை.

- கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் மேற்கோளாகத் தன் கட்டுரையின் முகப்பில் டிசம்பர் 2004 உயிமமையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது.

**** ****

கேள்வி: பா.ம.க. இப்போது புதிதாகக் கையில் எடுத்துள்ள தமிழ் என்ற ஆயுதம், அவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்?

சோ ராமசாமி: மேடைப் பேச்சுக்கு உதவும். கருணாநிதியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள உதவும். அவ்வளவுதான். ஓட்டுக்கு உதவாது.

கேள்வி: கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர, ஸ்ரீ சாய்பாபாவின் முயற்சி முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறதே? உண்மையா?

சோ ராமசாமி: கால்வாயின் ஒரு பகுதி, அவருடைய முயற்சியினால் சீரமைக்கப்படவில்லை என்றால் - வருகிற தண்ணீரில் பெரும்பகுதி 'எவாபரேட்'டாகி (ஆவியாகி) விடுகிற ஆபத்து இருந்திருக்கும். இது குறிப்பிடத்தக்க அளவில் தவிர்க்கப்பட்டது, அவருடைய முயற்சியினால்தான். பணத்தையும் செலவிட்டு, பணியையும் சீராக முடித்து வைத்த அவருடைய உதவிக்கு நன்றி சொல்லக்கூட, தமிழக அரசுக்கும் மனம் வரவில்லை. எதிர்க்கட்சிகளும் முன்வரவில்லை. கழகங்களுக்கு உள்ள 'காம்ப்ளெக்ஸின்' விளைவு இது.

- ஜனவரி 5, 2005 துக்ளக் கேள்வி - பதிலில் சோ

**** ****
நன்றி: காலச்சுவடு, உயிர்மை, துக்ளக், தமிழ் இந்தியா டுடே.

தடி எடுத்தவன்...!

போர் கருவிகளை பயன்படுத்துவதில் அமெரிக்கா தனக்கு எல்லையோ அல்லது கட்டுப்பாடோ வகுத்துக்கொள்வதில்லை. ஆனால் மற்ற நாடுகளுக்கு அது கட்டுப்பாடு விதிப்பது எந்த அளவில் நியாயம் எனவும் புரியவில்லை.

தடி எடுத்தவன்... அப்படின்னு சொல்லுவாங்களே அது ஞாபகத்திற்கு வருகிறதா?

எனது கருத்துக்கான காரண செய்தி இங்கு..! (தமிழில்)

மேலதிக தகவலுக்கு இங்கு..! (ஆங்கிலத்தில்)

Sunday, January 16, 2005

குர்பானி கொடுப்பது பற்றிய விளக்கம் :

தமத்து நிய்யத்தில் ஹஜ்ஜுக்கு வந்த ஹாஜிகளிள் சிலர் உம்ரா செய்து விட்டு ஹஜ்ஜுடைய 10 வது நாளில் கொடுக்க வேண்டிய குர்பானியை இப்பொழுதே கொடுத்து விட்டர்கள். 10ஆம் நாளில் கொடுக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.

இதற்கான விளக்கம் குரான், ஹதீஸ் ஒளியில் தரவும்.

நவீன தொழிற்நுட்பத்தை...

மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழி தலாக் போன்றவை சமீபத்தில் கேள்விபட்டிருக்கலாம். மார்க்க அறிஞர்கள் இதனைப்பற்றி விவாதிப்பது தேவையில்லை என்பது எனது கருத்து.

ஒருவன் இவ்வளவு காலம் வாழ்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்கிறான். இந்த விவாகரத்து சாதாரண குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பும் அளவுக்கு அற்பமான விஷயம் அல்ல.

இருவரும் மனம் ஒப்பி விவாகரத்து செய்யும்போது இச்சிறு கன்ஃபர்மேசன் போதுமே என்று நீங்கள் நினைக்கலாம். இருவரும் மனம் ஒப்பினால்கூட அதே வழிமுறையை பிடித்துக்கொண்டு சிலர் விளையாடலாமல்லவா? இதனால் நடுநிலையாளர்கள்கூட இஸ்லாத்தைப்பற்றி தவறாக எண்ண வாய்ப்பாகிவிடும்.

ஒருவன் திருமணம் செய்துகொள்ள குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலிலோ பயன்படுத்தலாமா என்று யோசிப்பதில்லை. அதைவிட சென்ஸிடிவான ஒரு பிரச்சினையை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான் எனது வாதம்.

இதுபோன்ற ஃபத்வா கொடுக்கும் ஹஜ்ரத்துகள், தன் மகளுக்கு இதுவழியாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்வாரா?

எதிர்வினைகள்:
இதையெல்லாம்விட இஸ்லாத்தில் முத்தலாக் (ஒரே நேரத்தில் சொல்லும் மூன்று தலாக்) அனுமதி இல்லை என்பதும் அதனை சில முஸ்லிம்கள் பயன்படுத்துவதால் இஸ்லாத்திற்கு தவறான அவப்பெயர் என்பதும் நாம் அறிந்ததே. இறைவன் தன் திருமறையில் சொல்கிறபடி ஒவ்வொரு தலாக்கிற்கும் இடைவெளி கொடுத்து அந்த இடைவேளையில் அவன் தன் மனைவியை இணைத்துக்கொள்ள விரும்பினால் இணைத்துக்கொள்ளலாம் என்ற செய்தியும், அவ்வாறு இணைத்துக்கொள்ளாமல் கால இடைவெளிக்குப்பிறது மூன்று தலாக்குகள் பூர்த்தி ஆகிவிட்டதென்றால் அவன் தன்மனைவியை மீட்டிக்கொள்வதற்கு மனரீதியாக என்ன தண்டனை என்பதை நாம் அறிந்ததுபோல் மாற்றுமதத்தவர்கள் அறிந்துக்கொள்ள வாய்ப்புகள் இல்லை.

சாதாரணமாக ஒரு முஸ்லிம் தும்மினாலே வெடிக்குண்டு வெடித்துவிட்டது என்று பத்திரிகைகள் திரித்து எழுதும் காலத்தில் இருக்கிறோம். எனவே இதுபோன்ற அற்பமான ஆராய்ச்சிகளை கைவிட வேண்டும். மேலும் இறைவன் அனுமதித்த விஷயங்களில் மிகவும் வெறுக்கின்ற ஒரு விஷயம்தான் இந்த தலாக் என்பது. இதனை ஒரு வாழ்த்து செய்திபோல் விளையாடுவது நல்லதல்ல.

ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு பணம் அனுப்புவதற்கு ஃபாக்ஸ், மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை பயன்படுத்துவதில்லை. காரணம் இது நம்பகமானது அல்ல என்பதால் ஸ்விஃப்ட் (Swift) மற்றும் டெலக்ஸ்களே (Telex) பயன்படுத்தப்படுகின்றன.

நமது மற்ற மின்னஞ்சல் கணக்கிலிருந்து நமக்கே வைரஸ் அனுப்பப்படுகிறது. நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் தெரிகிறதா?

எல்லா விஷயங்களுக்கும் ரெடிமேட் ஃபத்வா எழுதுகிறேன் என்று முயற்சி செய்து உண்டாக்கப்பட்ட மொகலாய காலத்து ஃபத்வாக்கள் இன்று குப்பை கூடையில். ஆகவே இதுபோன்ற நடைமுறைகளையும் ஆராய்ச்சிகளையும் கைவிடப்படவேண்டும்.

நவீன தொலைத்தொடர்பு காரணிகளை பயன்படுத்தி முஸ்லிம்கள் முன்னேற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அது இத்தகைய விஷயங்களில் ஏற்படுவது முன்னேற்றமாக கருதமுடியாது.

உறுப்பினர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
அபூ உமர்

Saturday, January 15, 2005

Font help

We are using Unicode Dynamic font. Also, you can download TheneeUniTx Font from here :
TheneeUniTx.ttf

This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'.

Installing and using Unicode font is just like any other font. In Win2000 or WinXp, there won't be any problem as they have Unicode support.

WinXP is shipped with a Tamil Unicode font "Latha".

Win98 is not Unicode enabled. But you can read websites or web mails (like yahoo groups). Only prerequisite is: You should have IE ver5 or above. When you find any website or web mail in Unicode, simply change encoding by selecting View>Encoding>Unicode (UTF-8) or right click and select Encoding>Unicode (UTF-8).

How to Enable Tamil in Windows 2000?
You may need to have the Windows 2000 Installation CD for doing this.

1. From Start Menu, Open Settings --> Control Panel
2. In Control panel, Open "Regional Settings"
3. In that, in Language Settings for the system, many language groups can be clicked. Search for "Indic" then Check this box near by "Indic". And press OK Thats all Now your Computer has tamil support into it.How to Enable Tamil in Windows XP? If you are having Windows XP OS and are having problem viewing the Tamil fonts in ThamiZha, then you have to enable Indic support. Doing so is quite simple, actually. Just follow the simple steps mentioned below.

1) keep your XP installation CD at hand. (If you have misplaced yours, or if you have lost it, please get one from your friend, or relative, or someone you know.)
2) Click Start > Control Panel.
3) Click Date, Time, Language, and Regional Options.
4) Now, click Regional and language Options.
5) In the Suplemental Language support, Check the "Install files for Complex Script and right to left languages (including thai) ", and then click Apply.
6) If you hadn't yet inserted the Win XP installation CD into your CD-ROM drive, An alert will appear to ask you to insert the installation cd. Insert the CD and then click OK. After the installation, your system will restart for proper operation
7) Thats all... now your computer is enabled for Tamil Unicode.

எழுத்துரு பிரச்சினைகள்

உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM பொன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான் இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் XP இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும். விண்டோஸ் 98-ல் இண்டெர்நெட் எக்ஸ்புலோரர் 5.5 (அல்லது அதற்கு பிந்தைய வெளியீடு) இருந்தால் யூனிகோட் எழுத்துருவை பார்வையிட முடியும். ஆனால் தமிழ் யுனிகோடு எழுத்துரு உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வாசகர்கள் யுனிகோடின் அவசியத்தை அறிந்துக்கொள்ள கீழ்கண்ட தளங்களில் விரிவாக படிக்கலாம்.
http://www.e-sangamam.com/unicode.asp
http://kasi.thamizmanam.com/index.php?itemid=77
http://www.ezilnila.com/

மொழி அனுசரனையை சேர்ப்பது எப்படி?
யூனிகோட் மூலம் தமிழ் எழுதும் முன் முதலில் மொழி அனுசரனையை அதாவது Language Supportஐ உங்கள் கணினியில் சேர்க்க வேண்டும் இதற்கு கீழ்காணும் முறையை பின்பற்றவும் குறிப்பு மொழி அனுசரனையைச் சேர்க்கும் போது இயங்குதள குறுந்தட்டு அதாவது Operating System CD தேவைப்படும்.

வின்டோஸ் 2000
Startஐ சொடுக்கி அதில் Settings என்ற பகுதியிலிருந்து Control Panelஐ தேர்வு செய்யவும் இப்போது Regional Options என்பதை சொடுக்கவும். இதில் General என்ற பகுதிக்குச் சென்று அதில் Indic என்ற check boxஐ சொடுக்கிக் கொள்ளவும். பிறகு OK பொத்தானை அழுத்த இயங்குதள CDஐ உள்ளிடும்படி அறிவுருத்தப்படும் இப்போது தேவையானவற்றை பூர்த்தி செய்ய உங்கள் கணினியில் மொழி அனுசரனை சேர்க்கப்பட்டுவிடும்.

வின்டோஸ் XP
Startஐ சொடுக்கி அதில் Control Panelஐ தேர்வு செய்யவும் இப்போது Regional and Language Options என்பதை சொடுக்கவும் இதில் Languages என்ற பகுதிக்குச் சென்று அதில் காணும் supplimental Language Support என்ற பகுதியில் உள்ள Install files for complex scripts and right to left language including Thai என்ற check boxஐ சொடுக்கிக் கொள்ளவும் பிறகு OK பொத்தானை அழுத்த இயங்குதள CDஐ உள்ளிடும்படி அறிவுருத்தப்படும் இபோது தேவையானவற்றை பூர்த்தி செய்ய உங்கள் கணினியில் மொழி அனுசரனை சேர்க்கப்பட்டுவிடும்.

இன்டர்நெட் எக்ஸ்புலோரர்
இன்டர்நெட் எக்ஸ்புலொரரின் Toolsஐ சொடுக்கி Internet Options என்பதை தேர்வு செய்யவும் இப்பொது Fonts என்ற பொத்தானை சொடுக்கி Language Script என்ற பகுதியில் தமிழை தேர்வு செய்யவும் பிறகு web page Font என்ற பகுதியில் Latha என்ற எழுத்துருவைத் தேர்வு செய்து OK பொத்தான்களை சொடுக்கவும்.