Thursday, May 04, 2006

இளையவன் பதில் சொல்வாரா?

"தீமைக்கெதிராக எழுதுகோல் ஆயுமேந்தி"யிருப்பதாக உங்கள் தளத்தில் டைட்டில் போட்ட நீங்கள் அதில்,

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்-ஆன் 61:2)

என்ற இறைவனத்தை குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஆனால் கடந்த மாதம் (ஏப்ரல்-2006) சகோ. பாக்கர் அவர்களின் ஜித்தா வருகையையொட்டி வெளியிடப்பட்ட உங்களது சிறப்பு செய்தியாளர் அப்துல்லாஹ்வின் கட்டுரைக்கும் மேற்சொன்ன இறைவசனத்திற்கும் சில தொடர்பு இருப்பதாக நான் கருதுவதால் இப்பதிவை இடுகிறேன்.

பாக்கரை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் தலைவர் அவரை ததஜவின் சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார். அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல..

சகோ. பாக்கர் அவர்களின் (உம்ராவிற்கான) மொட்டைத் தலையுடன் சிங்கத்தின் பிடறி முடியை முடிச்சு போட்டதிலேயே உங்கள் சிறப்பு செய்தியாளர் அப்துல்லாஹ்வின் களத்தொகுப்பு சீரிய முறையில் வெளிப்படுகிறது.

பலபேர் இத்தவறை இணையத்தின் பல இடங்களில் சுட்டிக்காட்டியும்கூட, இதுவரை மறுப்போ அல்லது அக்கட்டுரையில் குறிப்பிட்ட வரியை நீக்கவோ நீங்கள் முயற்சி செய்யாததன் நோக்கமென்ன?. யாரோ எழுதிய கட்டுரையை பதிவு செய்திருந்தால் இந்த கேள்வியை நான் கேட்கப்போவதில்லை. சிறப்பு செய்தியாளர் செய்த தவறுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது உங்கள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளிலும் உண்மைகளுடன் பொய்களும் கலந்து இருக்கலாம், அதனை வாசகர்கள்தான் பிரித்துப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

தீமைக்கெதிராக எழுதுகோல் ஆயுதமேந்துவதை வரவேற்கிறேன். அதற்காக பொய்மையை ஆயுதமாக ஏந்துவது எந்த வகையில் நியாயம் என்பதை விளக்குவீர்களா?

மேற்குறிப்பிட்ட அதே கட்டுரையின் இறுதியில்:
இந்த வெளியீட்டை வாசிக்கின்ற அன்புச் சகோதரர்களே! யாரும் எங்கும் வருவதிலோ, பேசுவதிலோ காழ்ப்புணர்வுக் கொண்டு இதை நாம் வெளியிடவில்லை.
என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்-ஆன் 61:2) இன்ற இறைவசனத்தை மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.

No comments: