Monday, June 19, 2006

ததஜ -வினருக்கு பகிரங்க விவாத அழைப்பு

அண்மைக்காலமாக இந்திய தமிழ் நாட்டைத்தாயகமாகக் கொண்ட ஒருவர் அல்லது ஒரு ‎‎கூட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் தவ்ஹீத் போர்வைக்குள் இருந்து கொண்டு ‎‎இஸ்லாத்தை தமக்கு தேவையானமாதிரி தமது மனோ இச்சைக்கு இசைவாக திரிபு படுத்தியும், ‎நபித்தோழர்களை இழிவு படுத்தியும், இஸ்லாமிய கொள்கை கோட்ப்பாடுகளுக்கும், சரீஅத்திற்கும் ‎எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தமிழ் நாட்டு மார்க்க அறிஞர்கள் ‎எங்கே என்ற கேள்வி எழுகின்றது, மட்டுமின்றி 'உரை கல்லு இல்லாத இடத்தில் பித்தளை தான் ‎தங்கம்' என்று வாதிடுமாம் எனும் முது மொழி ஞாபகத்திற்கு வருகின்றது. இவர்களின் தேனிலும் ‎‎இனிய நாவண்மையால் நம் சமூகத்தில் விதைக்கப்படும் மார்க்கத்திற்கு முறனான கருத்துக்களை ‎களை எடுக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.

ஆகவே அவர்களின் மக்களை ஏமாற்றும் முக்கிய ‎ஆயுதம் விவாதம் என்பதனால் நான் அவர்களுடன் விவாதத்திற்கு எந்நேரமும் தயாராகவுள்ளேன் ‎என்பதனை இதனால் அவர்களுக்கும் அனைத்து தமிழ் முஸ்லிம் உலகத்திற்கும் ‎தெரிவித்துக்கொள்கின்றேன்.‎

எனவே மேற்படி இயக்கத்தினர்கள் அல்லது அவர்களின் உலகப் பேரறிஞர் கால தாமதமின்றி விவாதத்திற்கு ‎தயாராகட்டும். ‎

இப்படிக்கு உண்மையுள்ள‎
முனாப் நுபார்தீன்-ஜே.பி
தொடர்புகளுக்கு:-
00966 5 61568056‎

Links:

ததஜ-வினருக்குப் பகிரங்க விவாத அழைப்பு

விவாதத்தின் விதிகள்

வலைப்பதிவு

No comments: