Sunday, September 02, 2007

மவ்லவி பி.ஜெவை கைது செய்தது சரியா?

மவ்லவி பி.ஜெவை மலேசிய காவல் துறை கைது செய்தது சரியா?
மலேசியாவில் மவ்லவி பி.ஜெவும், பாக்கரும் மலேசிய காவல் துறையால் கைது செய்யப்பட்ட செய்தியை இணையத்தில் படித்தேன். இது கண்டனத்துக்குரிய செயல். மவ்லவி பி.ஜெ. அவர்களின் ஜகாத் கொள்கை, சஹாபக்களின் மீதான விமர்சனம், உடன் பொதுப்பணியாற்றியவர்களிடம் இருந்து பிரியும் போது அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்றவை எனக்கு உடன்பாடில்லை. அதற்காக மலேசியாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆலிம் கைது செய்யப்படுவதை நாம் ஆதரிக்க முடியாது. மலேசியாவில் வேறு மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் கைது செய்யப்பட்டிருந்தாலும் நாம் கண்டனம் செய்யவேன்டும். மலேசியாவில் வாழும் தமிழர்களில் முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகம். அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் பாணியில் பல அமைப்புகளை நடத்துகின்றனர். அவர்களுக்கு பல இணையத் தளங்களும், வலைப்பதிவுகளும் உள்ளன. அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து இந்து வெறி பேச்சாளர்கள் வருகின்றனர். இவர்களை எல்லாம் மலேசிய காவல் துறை கைது செய்வது கிடையாது. ஆனால் மவ்லவி பி.ஜெ அவர்களை மட்டும் கைது செய்ததை, தமிழ் முஸ்லிம்கள் மீது மலேசிய காவல் துறையின் காழ்ப்புணர்வாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

Thursday, August 23, 2007

அல்லாஹ்வே இடிகளை விழச் செய்து அதைக் கொண்டு தான் நாடியவரைத் தாக்குகின்றான்

இன்றைய தினத்தில் யாஹு தளத்தில் வந்த ஒரு செய்தி திருகுர்ஆனின் பார்வையில்....

http://in.tamil.yahoo.com/News/Regional/0708/22/1070822006_1.htm

(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு "எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்" எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம். (அல்குர்ஆன்: 4:153)

அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:19)

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (அல்குர்ஆன்: 2:55)

மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 13:13)

ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. (அல்குர்ஆன்: 41:17)

ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், "ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன்: 41:13)

Saturday, June 09, 2007

ஆரியக் கூத்து - அ. மார்க்ஸ்

நூல்: அந்தனர் வரலாறு எனும் ஆரியக் கூத்து
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
எதிர் வெளியீடு
305 காவல் நிலையம் சாலை
பொள்ளாச்சி - 642 001
தொலைப்பேசி: 04259 - 226012, 9865005084
மின் அஞ்சல்: ethirveliyedu@sify.com

பக்கங்கள்: 116 விலை: ரூ 60


பின்னட்டைக் குறிப்பு:
கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து வெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்மைகளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். 'தமிழக அந்தனர் வரலாறு' என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.

ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படையில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ. மார்க்ஸ். வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சம காலக் கருத்துகளின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது.

புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!

வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.

கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.

பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.