Monday, May 14, 2007

எடுக்கப்படாத கருத்துக் கணிப்பு






தினகரன் எடுத்த கருத்துக் கணிப்பில், யார் கலைஞரின் வாரிசாக வர வேண்டும் என்று கேட்டதற்கு 2% பேர் மட்டுமே மு.க. அழகிரி பெயரைச் சொன்னார்களாம். அதற்காக மதுரை தினகரன் அலுவலகத்தில் வேலை பார்த்த, மூன்று பேரை உயிருடன் எரித்துக் கொன்று விட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். இப்போது நாம் மதுரைக்குச் சென்று, மோடியின் அடுத்த வாரிசாக யார் வரவேண்டும் என்று கேட்டால் 90% பேர் மு.க. அழகிரியின் பெயரைச் சொல்வார்கள்.

Wednesday, May 02, 2007

மலாய் இனவெறியை கண்டிப்போம்!

மலேஷியாவின் தலைநகாரான கோலாலம்பூரில் வசிக்கும் சுமார் 70 ஆயிரம் சீன முஸ்லிம்கள், தங்களின் தாய்மொழியான மாண்டரின் மொழியில் குத்பா பிரசங்கமும், மார்க்க உரையும் ஆற்றும் வகையில் தனி பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். பள்ளிவாசல் கட்ட மலேஷிய அரசிடம் நிலம் ஒதுக்குமாறு கோரினர். இதற்கு மலேஷிய அரசு அமைப்பான இஸ்லாமிய விவகாரத்துறை அனுமதி மறுத்து விட்டது. மலேஷிய அரசு சீன அடையாளத்தை இஸ்லாத்திற்கு விரோதமாக சித்தரிக்கின்றது. இது மலேஷிய ஆலிம்களின் அறியாமையா? அல்லது இனவெறியா? மலேஷியாவுக்கு இஸ்லாத்தைக் கொண்டுவந்தவர்கள் தமிழ் முஸ்லிம்களே. அந்த பாரம்பரியம் இருப்பதால் தமிழ் முஸ்லிம்களிடம் மலாய் இனவெறி பலிக்கவில்லை. அதனால் தலைநகர் கோலாலம்பூரில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் தமிழ் முஸ்லிம்களுக்கு தனி பள்ளிவாசல்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு கேடு செய்த முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்ஷின் தாய்லாந்து தலைநகரில் தமிழ் முஸ்லிம்களுக்கு தனிப் பள்ளிவாசல் கட்ட அனுமதி கொடுத்தான். மலேஷியா சீன முஸ்லிம்களுக்கு தனி பள்ளிவாசல் கட்ட அனுமதி மறுக்கிறது. தாய்லாந்தில் மலேஷிய வம்சாவளி இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆயுத உதவி அளிக்கும் மலேஷிய அரசு, சொந்த நாட்டில் சீன முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகிறது. இஸ்லாத்தின் பெயரால் இனவெறியா? ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மலேஷிய அரசுக்கு நம் கண்டனத்தை பகிரங்கமாகத் தெரிவிப்போம். இஸ்லாத்தின் பெயரால் அரபுநாடுகளில் காணப்படும் அரபு தேசியவெறியையும், இந்தியாவில் காணப்படும் உருது மொழிவெறியையும் அம்பலப்படுத்துவோம்.