Saturday, June 09, 2007

புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!

வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.

கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.

பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

Monday, May 14, 2007

எடுக்கப்படாத கருத்துக் கணிப்பு






தினகரன் எடுத்த கருத்துக் கணிப்பில், யார் கலைஞரின் வாரிசாக வர வேண்டும் என்று கேட்டதற்கு 2% பேர் மட்டுமே மு.க. அழகிரி பெயரைச் சொன்னார்களாம். அதற்காக மதுரை தினகரன் அலுவலகத்தில் வேலை பார்த்த, மூன்று பேரை உயிருடன் எரித்துக் கொன்று விட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். இப்போது நாம் மதுரைக்குச் சென்று, மோடியின் அடுத்த வாரிசாக யார் வரவேண்டும் என்று கேட்டால் 90% பேர் மு.க. அழகிரியின் பெயரைச் சொல்வார்கள்.

Wednesday, May 02, 2007

மலாய் இனவெறியை கண்டிப்போம்!

மலேஷியாவின் தலைநகாரான கோலாலம்பூரில் வசிக்கும் சுமார் 70 ஆயிரம் சீன முஸ்லிம்கள், தங்களின் தாய்மொழியான மாண்டரின் மொழியில் குத்பா பிரசங்கமும், மார்க்க உரையும் ஆற்றும் வகையில் தனி பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். பள்ளிவாசல் கட்ட மலேஷிய அரசிடம் நிலம் ஒதுக்குமாறு கோரினர். இதற்கு மலேஷிய அரசு அமைப்பான இஸ்லாமிய விவகாரத்துறை அனுமதி மறுத்து விட்டது. மலேஷிய அரசு சீன அடையாளத்தை இஸ்லாத்திற்கு விரோதமாக சித்தரிக்கின்றது. இது மலேஷிய ஆலிம்களின் அறியாமையா? அல்லது இனவெறியா? மலேஷியாவுக்கு இஸ்லாத்தைக் கொண்டுவந்தவர்கள் தமிழ் முஸ்லிம்களே. அந்த பாரம்பரியம் இருப்பதால் தமிழ் முஸ்லிம்களிடம் மலாய் இனவெறி பலிக்கவில்லை. அதனால் தலைநகர் கோலாலம்பூரில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் தமிழ் முஸ்லிம்களுக்கு தனி பள்ளிவாசல்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு கேடு செய்த முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்ஷின் தாய்லாந்து தலைநகரில் தமிழ் முஸ்லிம்களுக்கு தனிப் பள்ளிவாசல் கட்ட அனுமதி கொடுத்தான். மலேஷியா சீன முஸ்லிம்களுக்கு தனி பள்ளிவாசல் கட்ட அனுமதி மறுக்கிறது. தாய்லாந்தில் மலேஷிய வம்சாவளி இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆயுத உதவி அளிக்கும் மலேஷிய அரசு, சொந்த நாட்டில் சீன முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகிறது. இஸ்லாத்தின் பெயரால் இனவெறியா? ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மலேஷிய அரசுக்கு நம் கண்டனத்தை பகிரங்கமாகத் தெரிவிப்போம். இஸ்லாத்தின் பெயரால் அரபுநாடுகளில் காணப்படும் அரபு தேசியவெறியையும், இந்தியாவில் காணப்படும் உருது மொழிவெறியையும் அம்பலப்படுத்துவோம்.

Sunday, April 22, 2007

அகிலத்திற்கோர் அருட்கொடை

அகிலத்திற்கோர் அருட்கொடை

உலகத் தலைவராக விளங்கும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பையும் பாசத்தையும் வளர்க்கவும், அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் உணர்ந்து செயல்படவும் ஒரே வழி, அவர்களுடைய தூய வரலாற்றைப் படிப்பதேயாகும். அவர்களுடைய வரலாற்றைப் படிப்பதன் மூலம், நேர்மையாளர் எவருக்கும் அண்ணலாரைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு தானாகவே தோன்றிவிடும். அடுத்தவர் தூண்ட வேண்டியதில்லை.

அண்ணலாரைப் பற்றிப் படிப்பதில் கவனமும் ஆழமும் இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். ஒரு முறை படிக்கும்போது அண்ணலாரின் சிறப்பும் மேன்மையும் உயர்வாக வெளிப்படும். திரும்பத் திரும்பப் படிக்கும் போது அண்ணலார் மீது பற்றுதல் ஏற்படும். நெஞ்சில் நெருக்கம் அதிகமாகும்.

நூல்: அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி(ஸல்)
ஆசிரியர்: டாக்டர். இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ
தமிழாக்கம்: மௌலவி. அப்துல் ஹமீத் ஆமீர் உமரீ
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
முகவரி: 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை - 600 012
தொலைப்பேசி: +91 44 2662 4401
தொலை நகல்: +91 44 2662 0682
மின் அஞ்சல்: iftchennai12@gmail.com
இணையத் தளம்: http://www.iftchennai.org

விலை: ரூ.150
பக்கங்கள் 464 (கெட்டி அட்டையுடன்)