தற்கால இஸ்லாமியச் சிந்தனை - எம். எஸ். எம். அனஸ்
நூல் அறிமுகம்
நூல்: தற்கால இஸ்லாமியச் சிந்னை
(முதன்மையான செல்நெறிகள் பற்றிய அறிமுகமும் விமர்சனமும்)
ஆசிரியர்: எம்.எஸ்.எம். அனஸ்
வெளியீடு: அடையாளம்
முகவரி: 1205/1 கருப்பூர் சலை
புத்தாநத்தம் - 621 310
தமிழ் நாடு
இந்தியா
தொலைப்பேசி: 04332 273444
மின் அஞ்சல்: info@adaiyalam.com
பக்கங்கள்: 400 விலை: ரூ. 275
பின்னட்டைக் குறிப்பு:
இஸ்லாத்தின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இஸ்லாமியச் சிந்தனை மரபிலும், பண்பாட்டிலும் நிகழ்ந்த திருப்புமுனையின் வரலாறாகும்.
ஒரு கட்டளைப் படிமநிலை நகர்வு இங்கு நடந்தேறியுள்ளது. புரட்சிகர சிந்தனைகளை அது வெளிப்படுத்தியது. அது கருத்து மோதல்களின் களமாக இருந்தது. இம்மாற்றங்களையும் அதற்குக் காரணமான அடித்தளச் சிந்தனைகளையும் அக்கால வரலாற்றினூடாக இந்நூல் ஆராய்கின்றது. மறுபுறமாக புத்துயிர்ப்புவாதம் எழுச்சி பெறுகின்றது. நவீனத்துவத்திற்கு அது சவாலாக இருப்பதுடன் தீவிர கருத்தியலின் ஊற்றுக்கண்களையும் அது திறக்கிறது. தற்கால அரசியல் இஸ்லாத்தின் தோற்றத்தினை ஆராய்வதனூடாக புத்துயிர்ப்புவாதத்தின் மையக் கருத்துகளும் இந்நூலில் பரிசீலிக்கப்படுகின்றன. தற்கால இஸ்லாமியச் சிந்தனையின் பிரதான செல்நெறி இவ்விரு சிந்தனை இயக்கங்களின் சமய, சமூக, அரசியல், கருத்தியல்களின் விளக்கங்களையும் மோதல்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல்.
நூலாசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (1949): இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் தலைவர். 'பல்கலை', 'ஆய்வு', ஆகிய இதழ்களின் ஆசிரியர். பல ஆய்வுக் கட்டுரைகளையும் 'மெய்யியல்-கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை இஸ்லாத்தின் தோற்றம், சமூக அறிவியல் - ஒரு முறையியல் நோக்கு' ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
இந்நூலில் ஆராயப்படும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள்:
1. இப்னு தைமிய்யா
2. முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்
3. ஷாஹ் வலியுல்லாஹ்
4. சர் செய்யித் அக்மத்கான்
5. ஜமாலுத்தீன் அல்-ஆஃப்கானி
6. ஷெய்க் முஹம்மத் அப்து
7. அல்லாமா முஹம்மத் இக்பால்
8. அபுல் கலாம் ஆஸாத்
9. அபுல் அஃலா மௌதூதி
10. ஹசன் அல்-பன்னா
11. குலாம் அக்மத் பர்வேஸ்
12. அலி ஷரீஅத்தி
இலங்கை
13. அஹ்மத் ஒறாபி பாஷா
14. எம்.சி. சித்திலெப்பை
15. எ.எம்.ஏ. அஸீஸ்
16. அப்துல் ஹமீத் அல்-பக்றி
No comments:
Post a Comment