Thursday, March 31, 2005

விவாதங்களும் விளக்கங்களும்!

ஜாபர் அலி தனது வலைப்பதிவில் "நிராகரிக்கும் வாதத்தையும், பரிகசிப்பையும் தங்கள் எழுத்து திறமையால் எதிர்கொள்வோரே கவனியுங்கள்!" என்ற தலைப்பில் சில திருமறை வசனங்களை பதிந்துள்ளார். குறிப்பாக வசனம் 6:68 "(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்".

இதன் அடிப்படையில் பார்த்தால்,நேசகுமார் போன்றவர்களின் விஷம பிரச்சாரத்திற்கு முஸ்லிம்கள் பதிலளித்துக்கொண்டிருப்பதைவிட புறக்கணித்துவிடுவதே சிறந்தது என்ற அர்த்தம் தொனிக்கிறது.

இது குறித்து தெளிவான விளக்கம் அறிய விரும்புகிறேன். சகோதரர்களே! உதவுங்கள்!

Wednesday, March 30, 2005

மறுமொழிகள் வாழ்க/ஓழிக

வலைப்பதிவின் சிறப்பம்சத்தில் ஒன்று, மறுமொழி இடும் வசதியாகும்.

மறுமொழிகளால், கட்டுரையாளர் சொல்ல மறந்த எத்தனையோ விஷயத்தை சுட்டிக்காட்டி கட்டுரைக்கு வலிமை சேர்க்கமுடியும்.

இதன் மூலம்
1) கட்டுரையாளரை ஆர்வமூட்டுவது (அதற்காக மறுமொழிகள் செயற்கையாக இருக்கக்கூடாது)
2) கட்டுரை எழுத தயக்கயமாக இருந்தால், சிறு சிறு மறுமொழிகளின் மூலம் நமது எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ளலாம். (அதற்காக கட்டுரைக்கு சம்பந்தமில்லாததை கிறுக்க கூடாது)
3) கட்டுரையாளர் விட்டதை தொடுவது. (இதற்கு பல வழிகளை கையாளலாம்)

உதாரணமாக கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கி, படித்துப் பாருங்கள்.

எழுதப் பழகுங்கள்!
டாக்டர்னா பெரிய பருப்பா நீ?
ஒட்டகப் பயணம் - 1

இதே மறுமொழி வசதியை வைத்து நல்ல கட்டுரையை அசிங்கப்படுத்திச் செல்பவர்களும் உண்டு.

இதற்கு உதாரணம் தேவையில்லைதானே?

Monday, March 28, 2005

இஸ்லாம் ஓர் அறிமுகம்

உலக மக்கள் சமுதாயம் ஆன்மீக நெறிகளுக்கு ஒவ்வொரு மதத்தைச் சார்ந்துள்ளனர். அவை போதிக்கும் வணக்க வழிபாட்டு முறைகளைக் கலாச்சார நெறிகளைப் பின்பற்றி வாழ்கின்றனர். நாம் வாழும் பாரத நாட்டில் பல்வேறு மொழியினர் வாழ்வது போல் பல்வேறு மதத்தவர்களும் வாழ்கின்றனர். பெரும்பான்மை சமுதாய மக்கள் பின்பற்றுகின்ற இந்து மதம் முதல் சிறுபான்மையோர் பின்பற்றுகின்ற இஸ்லாமிய மார்க்கம், கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், பௌத்த மதம் ஆகியவையும் உள்ளன. இம்மதங்கள் தங்களுக்கென வேதங்களைக் கொண்டுள்ளன. இவ்வேதங்கள் அதனைப் பின்பற்றும் சமுதாயத்தவர்களுக்கு ஆன்மீக நெறிகளைப் போதிக்கின்றன. இம்மதங்கள் நீங்கலாக யூத மதமும் உள்ளது. மேலும் எம்மதத்தையும் சாராமல் வாழும் நாஸ்திகர்களும் உள்ளனர். இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் குறித்த ஓர் அறிமுகத்தை சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்வடைகிறோம்.

ஒவ்வொரு மதமும் தங்களுக்கென வேதங்களைக் கொண்டுள்ளன. இந்து மதம் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களையும், மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணங்களையும், சீக்கிய மதம் குருகிரந் என்ற சட்ட நூலையும், கிறிஸ்தவ மதம் பைபிளையும் வேதங்களாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் அருள்மறைக் குர்ஆன் முஸ்லிம்களின் வேதம் என்று கூறுவோரும் உண்டு. முஸ்லிம்களில் சிலரும் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறும் நிலையையும் நாம் காண்கிறோம். ஆனால் வல்ல அல்லாஹ் அருள்மறையில் இவ்வேதம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்காகவும் அருளப்பட்டது என்பதனை

"ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவுள்ள சத்திய, அசத்தியத்தை பிரித்து அறிவிக்ககூடிய இக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. '' - 2:185 எனக் குறிப்பிடுகின்றான்.

ஆக ஒவ்வொரு மதத்தவரும் தங்களுக்கென அருளப்பட்ட வேதம் என்று கூறிக்கொள்வதைப் போல் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் அருளப்பட்டது என முஸ்லிம்கள் கூறவியலாது மாறாக குர்ஆனிய கோட்பாடுகளை அப்படியே பின்பற்றி வாழ்பவர்களே முஸ்லிம்கள் என்று நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பிறமதத்தவர்களின் வேதங்களை ஆராயந்தால் சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது அவை:

(1) கால சமய சூழ்நிலைகளுக்கேற்ப இவ்வேதங்களில் மனிதக் கரங்களால் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வேதங்களின் சில வசனங்கள் சேர்க்கப்பட்டு மாற்றப்பட்டு, நீக்கப்பட்டு, திருத்தப்பட்டு அருளப்பட்ட உண்மைப் பொலிவினை இழந்து விட்டன.
(2) இவ்வேதங்கள் அருளப்பட்ட மூல மொழியில் இவை பாதுகாக்கப்படவில்லை.
(3) இவ்வேதங்கள் அருளப்பட்ட மூலமொழி பல இன்று உலகில் நடப்பில் இல்லை.
(4) பைபிளில் ''இசக்கியேல்'' என்னும் அதிகாரம் நம் குடும்பத்தார்களுடன் இருந்து படிக்க முடியாத அளவுக்கு ஆபாசம் மிகுந்து காணப்படுவது இறைவேதம் இப்படியும் இருக்குமா? என்று சிந்தக்க வைக்கிறது.
(5)இந்து மத சட்ட நூலாகிய ''மனுஸ்மிருதி'' அதன் வேத வசனங்களை படிப்பது மனனம் செய்வது பிறருக்கு மந்தரிப்பது போன்றவற்றை ஒரு சாரார் மட்டுமே (உயர் சாதியினர்) செய்யவியலும் என்றும் பிறர் அதனை செய்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுமாறும் உத்திரவிடுகின்றது. அதேபோல் ஒரு குற்றத்தைச் செய்தவன் என்ன சாதியில் இருக்கிறான் என்பதனை வைத்து தண்டனையில் வித்தியாசப் படுத்துகின்றது. இவ்வாறு தீண்டாமைக்கு வழிகோலும் அத்தனை அம்சங்களும் மலிந்து காணப்படுகின்றன.
(6) உலகம் விஞ்ஞான கண்டு பிடிப்புகளில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அதன் தீர்வுகளை அதனால் எழும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவியலாது பிறமத வேதங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன..

அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறைக் குர்ஆனோ மேற்கூறிய அத்தனை பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு பொலிவுடன் திகழ்கிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருள்மறைக் குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே எந்த மாற்றமின்றி மூல மொழியில் (அரபியில்) அப்படியே உள்ளது. மனித கரங்களின் தீண்டுதலுக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை வல்ல அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டதை அருள்மறையின் வசனம் கூறுகிறது

15:9- நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

ஒட்டுமொத்த மனித சமுதாயமும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கண்டு வியந்து கொண்டிருக்கும் போது இஸ்லாம் மட்டும் அல்லாஹ்வின் அற்புதங்கள் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது எனவும் விஞ்ஞான உண்மைகள் குர்ஆன் கூறும் தீர்வுகளுக்கு எவ்வாறு பொருந்திப் போகின்றது என விளக்குகிறது. மனிதனின் படைப்பு, வானம், பூமி, கோள்களின் சுழற்சி என ஒவ்வொன்றின் வரையறைகளையும் அருள்மறை ஒளியில் ஆராயும் அறிவியலார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்துணை செய்திகளைக் கூறும் இந்நூல் உண்மையிலேயே இறைவேதம் தான் என உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை நாம் அறிகிறோம்.

உதாரணமாக ஃப்ரான்ஸைச் சார்ந்த விஞ்ஞானி மாரிஸ் புகைல் அவர்கள் குர்ஆனின் மொழியாக்கத்தைப் படித்து அதன் அறிவியல் அற்புதத்தை முழுமையாக அறிய வேண்டுமானால் அதன் மூல மொழியில் படிக்க வேண்டும் என்றெண்ணி அரபி மொழியைக் கற்று அதன் அறிவியல் உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொன்னது இவ்வுலகம் அறிந்த செய்திதான். ஆக எந்த கால கட்டத்திலும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருப்பதே இறைவேதம் என்பதற்கு முதல் அளவுகோலமாகும். அந்தத் தகுதி முழுக்க முழுக்க அருள்மறைக் குர்ஆனுக்கு மட்டுமே உண்டு என்பது நிதர்சனமான உண்மை.

இறைக்கோட்பாடு
ஒவ்வொரு மதத்தின் அடிப்படையும் அது கொண்டுள்ள இறைக்கோட்பாட்டைப் பொறுத்ததாகும். வேதங்களை அருளிய இறைவன் எத்தகைய தன்மைகளுடன் திகழ்கிறான் என்பதனை இவ்விறைக் கோட்பாடுகளே பறைசாற்றுகின்றன. எப்பொழுதெல்லாம் உலகத்தில் அநீதி தலைவிரித்தாடுகிறதோ அப்பொழுது அங்கு நீதியை நிலைநாட்ட கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்று பகவத்கீதை கூறுகிறது. இவ்வாறு பத்து அவதாரங்கள் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை என்று வினவினால் மூன்றிலிருந்துத் துவங்கி முப்பத்தி முக்கோடி கடவுளர்கள் உள்ளதாக அதற்கு பதில் கூறுவர் ஆனால் சந்தோக்ய உபநிஷம் அத்தியாயம் 6 உட்பிரிவு 2 ஸ்லோகம். "ஏகம் எவதித்யம்" (அவன் ஒருவனே இரண்டல்லாத ஒருவன் மட்டுமே) என உறுதிபடக் கூறுகின்றது.

வேதங்கள் அருளப்பட்ட யூத கிறிஸ்தவர்களோ சத்தியத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர்களாகிய உஜைர்(அலை), ஈஸா(அலை), ஆகியோரை இறைவனின் மகனாக்கி முத்தெய்வ கொள்கைக்கு வித்திட்டனர். ''அன்பே கடவுள்'' என சிலை வணக்கத்தை எதிர்த்துப் போதித்த புத்தரே பௌத்தர்களின் கடவுளானார்.

ஸ்ரீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளப்பதுவும் எந்நாள்? என்று பகுத்தறிவ வாதம் பேசிய நாஸ்திகவாதிகளுக்கோ சிலை வணக்கம் எட்டிக்காயாய் கசந்தது ஒரு காலம். கற்சிலைகளுக்கு நீங்கள் செய்யும் பூஜை புனஸ்காரம் முட்டாள் தனமானது என்று நீட்டிய முழக்கிய பகுத்தறிவுவாதிகள் இக்கொள்கையைப் போதித்த பெரியாரையே சிலை வடித்து அவருக்கு ஆண்டு தோறும் மாலையிட்டு மகிழும் மகிமையை என்ன சொல்வது? இப்படி இறைக்கோட்டுபாடுகள் சிதைந்து சீரழியும் இந்நிலையில் இஸ்லாமிய இறைக்கோட்பாடு என்ன ? என்று பார்ப்போம்.

அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்:

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 112:1
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. 112:3
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. 112:4

திருமறையின் இவ்வசனங்கள் இறைவனின் இலக்கணத்தை மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கின்றன.

1) அவன் ஒருவனே
2) அவன் எந்தத் தேவையுமற்றவன். தேவை என்று இருந்தால் பிறரைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.
3) அவனுக்கு சந்ததிகள்(பிள்ளைகள்) இல்லை, (மூதாதையரும்) பெற்றோரும் இல்லை
4)அவனைப் போன்று வல்லமையும் சக்தியும் பொருந்திய வேறு யாரும் , எதுவும் இல்லை.

அவனின் தன்மைகள் குறித்து மற்றொரு வசனம் கூறுவதைப் பாருங்கள்:

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.2:255

இவ்வசனம் வல்ல இறைவனின் தன்மையை நமக்கு விவரிக்கின்றது. அவையாவன
1) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன். தகுதியானவன் வேறுயாருமில்லை.
2) அவன் மரணிக்காத நித்திய ஜீவன்
3) அவனுக்கு களைப்போ தூக்கமோ சிறிதளவும் இல்லை.
4) வானம், பூமியிலுள்ள அனைத்துக்கும் அவனே அதிபதி.
5) அவனின் அனுமதியின்றி எவரின் பரிந்துரையும் இல்லை.
6) படைப்பினங்களின் முன், பின் உள்ளவற்றை (நடந்தை, நடக்க இருப்பவை குறித்து) அவனே நன்கறிந்தவன்
7) அவனின் விருப்பமில்லாமல் எந்தப் படைப்பினமும் அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் அறியும் சக்தி பெறவில்லை.
8) அவனின் ஆட்சி அதிகாரம் வானம் பூமியில் விசாலமாய் பரவியுள்ளது.
9) அதனை நிர்வகிப்பதில் எந்தச் சிரமும் அவனுக்கில்லை.

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனோ (எல்லாப்) பார்வைகளை (யும்)அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். 6:103 .

அல்லாஹ்வை நம்மால் காணமுடியாது. இருப்பினும் நம்மை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை விளங்குகிறோம். இதுபோன்று இறைக்கோட்பாட்டை இஸ்லாம் விவரிக்கும் வசனங்கள் பல உள்ளன. இருப்பினும் விரிவஞ்சி ஆதாரங்களைக் குறைக்கிறோம்.

படைத்த இறைவனின் வல்லமையை இவ்வாறு இஸ்லாம் கூற வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களின் பைபிளில் '' வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்து விட்டு இறைவன் களைப்படைந்து ஏழாவது நாள் ஒய்வெடுத்ததாக கூறுகிறது. துயில் கொள்ளும் இறைவனை எழுப்ப அதிகாலையில் ''சுப்ரபாதம்'' பாடி துயில் களையச் செய்யும் துரித ஏற்பாட்டை இந்து மதத்தினர் செய்வதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு இறைவனின் மாபெரும் வல்லமை மதங்களால் மாசுப்படுத்தப்படுகிறது.

சாதாரண மனிதனைப் போல் கடவுள் தேவையுடையவனாக, களைப்புடையவனாக, துயில் கொள்ளக்கூடியவனாக, தாய், தந்தை, மனைவி, மக்களுடன் இருப்பதாகக் கூறி போலி சித்தாந்தங்களைப் போதிக்கின்றன. இந்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இஸ்லாம் கூறிய இறைக்கோட்பாட்டைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இஸ்லாம் இறைவனை நம்பச் சொல்லும் முறையில் கூட அது எடுத்துவைக்கும் வாதம் அறிவுப்பூர்வமானது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். அதனை சற்று சுருக்கமாகக் காண்போம்.

1.படைத்தல்
ஏக இறைவனாகிய அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் படைத்தவன் என்று இஸ்லாம் கூறுகிறது. படைப்பது இறைவன் தான் என்பதில் நாத்திகர்கள் தவிர எல்லா மதத்தவர்களும் ஏற்றுக்கொண்ட சித்தாந்தம் தான். இருப்பினும் படைப்பின் வல்லமையை இஸ்லாம் மட்டுமே பிற மதங்களைக் காட்டிலும் தெளிவாகக் கூறுகிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் மனிதனும் படைக்கிறான், இறைவனும் படைக்கிறான். இவ்விருவரின் படைப்புகளும் வித்தியாசப்படுத்தி காட்டுவது இஸ்லாமே. மனிதனின் படைப்புக்கு மூலப்பொருள் தேவைப்படுகிறது. முயற்சி காலஅளவு என பட்டியல் நீளுகிறது. அவன் படைத்த அப்பொருளின் முடிவு எப்படி இருக்கும் என்பதை அவனால் அறியமுடியாது. மனிதன் படைத்த பேனா எவ்வளவு நாள் அவனிடம் இருக்கும் பின்னர் யாரிடம் செல்லும்? பின்னர் அப்பேனாவின் முடிவு எப்படி? என்பதை படைத்த மனிதனுக்கு கூடத் தெரியாது. ஆனால் படைத்த வல்லோனாகிய இறைவனுக்கோ மூலப்பொருள் எதுவும் படைப்புக்குத் தேவையில்லை. அவன் "ஆகுக" என உத்திரவிட்டால் உடனே ஆகிவிடும் படைத்த அப்பொருளின் வாழ்நாள் உறைவிடம் அனைத்தையும் அவனே நன்கறிந்தவன். அல்லாஹ் கூறுகிறான் (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. 2:117.

ஆக படைத்தவன் என்று நம்பினால் மட்டும் போதாது. அவனது பிற தன்மைகளையும் வல்லமைகளையும் சேர்த்தே ஒருவன் நம்பவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

2. வணக்க வழிபாடுகள்
படைத்ததை நம்பியவர் அந்த படைத்த வல்லோனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்ய வேண்டும். அந்த வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே செய்யவேண்டும். அவனைத் தவிர வேறு எவர்க்கும் செய்யக்கூடாது என இஸ்லாம் போதிக்கிறது.

அருள்மறையில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
6:162. நீர் கூறும்; ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அதாவது தொழுகை, பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல் சிரம்பணிதல் போன்ற வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அது அல்லாஹ்வைத் தவிர வேறு எவர்க்கும் நிச்சயமாகச் செய்யக்கூடாது என்று இஸ்லாம் உறுதியாகக் கூறுகிறது. அருள்மறைநெடுகிலும் இறைத்தூதர்கள் தம் சமுதாய மக்களுக்கு வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மட்டும் செய்யுங்கள் என்று போதித்ததால் பட்ட சிரமங்களை அதிகம் காணலாம்.

ஆக படைத்ததை நம்பிய சமுதாய மக்கள் வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வை வணங்கியதோடு அவனுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி வைக்கும் என சில சிலைகளையும் வணங்கினர். இந்நிலை நபி நூஹ்(அலை) அவர்கள் காலம் துவங்கி இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் காலம் வரை தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால் இன்னும் உள்ளது. இஸ்லாம் கூறும் சித்தாந்தத்திற்கும் இந்துமதச் சித்தாந்தத்திற்கும் வேறுபாடு வெறும் 'S தான்

இஸ்லாம் கூறுகிறது "Everything is God's" (எல்லா பொருட்களும் இறைவனுக்குறியது).
ஆனால் இந்துமதமோ "Everthing is Gods" (எல்லாப் பொருட்களும் கடவுள்களே) எனக்கூறுகிறது. அதாவது மரம், செடி, கொடி, எலி, புலி, குரங்கு, காற்று, நெருப்பு என படைக்கப்பட்ட ஒவவொரு பொருளையும் வணங்கும் நிலையைக் காண்கிறோம்.

ஆக வணக்க வழிபாடுகளில் இறைவனைத் தவிர எவருக்கும் தகுதியில்லை என்று இஸ்லாம் உரக்க ஒலிக்கிறது. வேதம் கொடுக்கப்பட்ட மதங்களாகிய கிறிஸ்தவமும், யூதமும் முறையே இறைத்தூதர்களாகிய ஈஸா(அலை), உஜைர்(அலை) ஆகியோரை இறைத்தன்மை பொருந்தியோராய்க் கூறுவதை இங்கு குறிப்பிட்ட விரும்புகிறோம். இஸ்லாம் அருள்மறை அருளப்பெற்ற நபி முஹம்மது(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்றும் அல்லாஹ்வின் அடியார் என்றுதான் நம்புமாறு கூறுகிறதே ஒழிய இறைத்தன்மையின் கடுகளவு கூட நபிக்கு இருப்பதாக கூறவில்லை.

3. பெயர் மற்றும் தன்மைகள்
இறைவனின் தன்மைகள் மனிதன் போன்றே பார்ப்பது, கேட்பது, உணர்வது, கண்காணிப்பது என்று பல்வேறுபட்ட தன்மைகள் இருப்பினும் அவனின் எந்தத் தன்மையையும் உருவகிக்க கூடாது. அவனைப் பற்றிக் கூறப்பட்ட செய்திகளை அவனின் தன்மைகளை அப்படியே நம்பவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான். (அல்குர்ஆன் 20:5)

இவ்வசனத்தில் அல்லாஹ் அர்ஷின் மீது இருப்பதாகக் கூறுகிறான் நாமும் அவன் அர்ஷில் உள்ளான் என்று உருவகிக்காமல் நம்புதல் வேண்டும். மாறாக இப்படி இருக்கிறான். அப்படி அமர்ந்திருக்கிறான். அவனின் கைகள் இப்படி கால்கள் இப்படி என உருவகிக்க கூடாது. மேலும் படைத்தவன் அல்லாஹ்வே எல்லா பணிகளையும் நிர்வகிக்கிறான். இந்து மத சித்தாந்தம் கூறுவதுபோல் படைத்தலுக்கு ஒருவன் காப்பதற்கு ஒருவன் அழிப்பதற்கு ஒருவன், கல்விக்கு ஒரு கடவுள், செல்வத்துக்கு ஒரு கடவுள், வீரதீரத்துக்கு என்று ஒரு கடவுள் என கடவுளின் தன்மைகளைக் கூறுபோட்டு கடவுள் என கடவுளின் தன்மைகளைக் கூறுபோட்டு கடவுள்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதை இஸ்லாம் முற்றிலும் தடைசெய்கிறது. மேலும் கடவுளுக்கு இருப்பது போன்ற வல்லமை அல்லது சிறப்பு வேறு எவர்க்கும் கொஞ்சமாவது உள்ளது என்று கூறுவதைக் கூட இஸ்லாம் முற்றிலும் தடுக்கின்றது. அவ்வாறு செய்வது பெரும்பாவம் என எச்சரிக்கிறது. அப்படிச் செய்யும் செயல்களையே இணைவைத்தல் (ஷிர்க்) என்று கூறி இஸ்லாம் ஏக இறைக்கோட்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

மனிதனுக்கு இருக்கும் தேவை, ஆசை, காமம் போன்ற சிற்றின்ப சில்மிஷங்கள் இறைவனைத் தீண்டுவதேயில்லை என்பதில் இஸ்லாம் உறுதியாய் இருக்கிறது. ஆனால் இந்து மதப்புராணங்களில் வரும் கடவுளோ தனது படைப்பினங்களாகிய பெண்கள் கங்கை நீரில் நீராடும் போது அவற்றின் ஆடையை ஒழித்து வைத்துக் கொண்டு காமலீலைகள் புரிந்ததாக கடவுள் கோட்பாட்டைக் கேலி செய்வதைக் பார்க்கின்றோம்.

ஆயர்பாடியில் வெண்ணை திருடுவது முதல் கோகுலப் பெண்களிடம் கடவுள் புரியும் சரசம் வரை இப்படியும் இறைக்கோட்பாடா? என்று நெகிழவைக்கிறது.

மற்றொருபுறம் கிறிஸ்தவர்கள் தங்கள் மத குருமார்களாகிய பாதிரிகளை தெய்வநிலைக்கு உயர்த்துகிறார்கள். கிறிஸ்தவ சர்ச்சுகளின் உள்ள பாவமன்னிப்பு அறையில் சென்று ஒரு கிறித்தவர் தாம் செய்த அநீதங்களை பாதிரியாரிடம் எடுத்துக் கூறுகிறார். அவர் பிறருக்கு இழைத்த அநீதிகளைச் செவியுற்ற குற்றத்தில் சிறிதும் பாதிக்கப்படாத அப்பாதிரி எந்த தங்கு தடையுமின்றி அக்குற்றவாளிக்கு பாவமன்னிப்பு வழங்கி அன்று பிறந்த பாலகன் போல் பவித்ர புத்திரனாக ஆலயத்தைவிட்டு வெளியேற்றும் அறிவுக்கு பொருத்தமில்லாத இச்செயல்களையும் நாம் காண்கிறோம்.

இஸ்லாமோ சமூகத்தில் நிலவும் எந்தச் குற்றத்துக்கும் தீர்வு மட்டுமே சொல்லாமல் அக்குற்றம் வேரோடும் வேரடி மண்ணோடும் களை எடுக்கப்பட குற்றவியல் சட்டங்களை பணக்காரனிலிருந்து பாமரன் வரை பாகுபாடுகாட்டாமல் வழங்குகிறது. ஆளுக்கு ஒரு நீதி சாதிக்கு ஒரு அநீதி என்ற பாரபட்சம் இஸ்லாத்தில் எள்முனையும் இல்லை. இதனை அருள்மறையின் வசனம் எவ்வாறு விளக்குகின்றது என்று பாருங்கள்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1).

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் 9:13).

தொட்டால் தீட்டு, பாவி உன் நிழல்பட்டால் தீட்டு என்ற சாதிக்கொடுமை

மனிதன் மிருகத்திலும் கேடாக நடத்தப்படும் இழிநிலை.

சடை வளர்த்த முனிவர்கள் கொடுத்தார்கள் விடை

நாய் நுழையும் வீதியில் மனிதா நீ நுழையத் தடை

இப்படித் தீண்டாமைக் கொடுமை கொடிபட்டிப் பறக்கும் நம் பாரத்தில் தான் படைத்த கடவுளைத் தரிசிப்பதிலே கூட பாகுபாடு. தீண்டாமை வெறி. சாதிக் கலவரம். வீதிக்கொரு, வீட்டுக்கொரு கடவுள். பாரபட்சம் காட்டி விட்டு பகுத்தறிவு வாதம் பேசுவது.

இஸ்லாம் கூறும் இறைவழிபாடாகிய தொழுகையில் ஆண்டி முதல் அரசன் வரை படைத்த இறைவன் முன்பு சரிசமம் என்ற பாகுபாடற்ற நிலைப் பேணப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோமா? இல்லையா? சற்று சிந்தித்து பாருங்கள்.

மனிதனின் படைப்பில் எந்த வித்தியாசமுல்லை. ஆனால் அவன் செய்யும் நல்லறங்களாலும் இறைவனுக்கு அஞ்சி தன் வாழ்வை எவன் புனர் நிர்மாணம் செய்து கொள்கிறானோ அவனே சிறந்தவன் என்றும் மேலே குறிப்பிட்ட இறைவசனம் எத்தனை அழகாகக் கூறுகிறது. ஆக இறைக்கோட்பாடு என்பதே ஒரு மதத்தின் முதுகெலும்பு. பிற மதங்கள் சமயங்களைக் காட்டிலும் இஸ்லாம் கூறும் இறைக்கோட்பாடு அறிவுப்பூர்வமாக தர்க்க ரீதியாக ஆன்மீக ரீதியாக எவ்வாறு அலசினாலும் உயர்ந்து விளங்குவதை நீங்கள் உணரவியலும்.

ஒருவர் முஸ்லிமாக இருந்தால் அவர் இஸ்லாம் கூறும் இச்சித்தாந்தங்களை அப்படியே பின்பற்றுபவராக இருக்கவேண்டும். மாறாக பெயர் தாங்கிகளாக உள்ள சில முஸ்லீம்களின் தர்கா வழிபாடு சந்தனக்கூடு, கொடி எடுத்தல், நேர்ச்சை விநியோகம், தாயத்தது மந்தரித்து கொடுத்தல் போன்றவற்றைப் பார்த்துவிட்டு இஸ்லாம் இப்படித்தான் இருக்கிறது போலும் என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. இனி இஸ்லாம் மேலும் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

இஸ்லாம் பற்றிச் சுருக்கமாக கூறுவதென்றால் அதன் கூற்றை மூன்று விஷயங்களில் அடக்கிவிடலாம்.

1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று உள்ளத்தால் உறுதிபூண்டு நாவால் மொழிந்து செயலால் அமுல்படுத்துவது.

2) முஹம்மது நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துதரும் அவனின் அடியாருமாகும் என்று உறுதியாக நம்புவதோடு நாம் வாழும் வாழ்க்கைக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகிறான்

33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

மற்றொரு வசனத்தில்

33:31. அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
3:31. (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.

ஆக நபி முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் அல்லாஹ்வின் அடியார் என்றும் சாட்சி கூறி அவர்கள் நடந்து காட்டிய வழியில் அதாவது அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வது.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனின் விளக்கமாகவும், வாழ்வில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கூறும் வகையிலும் தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். ஆக ஏக இறைவனின் அருள்மறையும், அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உறைகல்லாக ஒப்புநோக்கி நடக்க உதவுகின்றன.

3) வல்ல இறைவன் படைப்பினங்களைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒரு நாள் மரணிக்கச் செய்து பின்னர் உயிர் கொடுத்து எழுப்புகிறான். பின்னர் அவற்றிடம் அவைகள் செய்த நல்ல மற்றும் தீய செயல்களை விசாரித்து நன்மைக்குப் பரிசாக சுவனத்தையும் தீமைக்குத் தண்டனையாக நரக வேதனையையும் தருவான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒவ்வொரு படைப்பினமும் அந்த கேள்வி கணக்கு நாளில் தீர விசாரிக்கப்பட்டு எள்முனையளவும் அநீதி இழைக்கப்படாமல் தீர்ப்பு பெறுவர்.

இதே சித்தாந்தம் இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ மதங்களிலும் உள்ளது. ஆனால் இந்து மதமோ மரணத்துக்குப் பின் மனிதன் மறுபிறவி எடுக்கிறான். அவரவரின் கிரியைகளுக்கு ஏற்ப அவன் மிருகமாகவோ, பறவையாகவோ இப்படி பல பிறவிகள் எடுப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆக இன்று மனிதன் நாளை மரணித்தால் அவன் நாயாக பிறவி எடுப்பான் அல்லது நாய் மனிதனாக மறுபிறவி எடுக்கிறது. இச்சித்தாந்தப்படி உலக மக்கள் ஜனத்தொகை கோடி கோடியாய் பல்கிப் பெருகிவரும் இந்நாளில் மறுபிறவி தத்துவம் அறிவுப்பூர்வமானதாக இல்லை. மேலும் நாயாய் இருந்தது எதற்காக மனிதனாக பிறவி எடுத்தான் அல்லது மனிதனாக இருந்தவன் எதனால் நாயாய் போனது என்பது பிறவி எடுத்த நாய்க்கோ, மனிதனுக்கோ உணர்த்தப்படாத வகையில் கடவுள் தண்டனையை அல்லது பரிசை வழங்கிவிடுகிறார். இப்படி தர்க்கரீதியாகவும் தவறாக உள்ளது.

ஆக இறைவனின் வேத வசனங்களும், இறைத்தூதரின் அருள் மொழிகளும், மறுமை சிந்தனையையூட்டி கட்டுபாடற்ற மனித வாழ்வுக்கு சிறந்த ஒரு கடிவாளமாக அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் மன அமைதி என்று வீதிவீதியாய் அலையும் மனிதர்களுக்கு சாந்தியும் சமத்துவமும் வழங்கி சரியான பாதையும் காட்டுகிறது இஸ்லாம்.

தீண்டாமைக்குத் தீர்வு இஸ்லாம் மட்டுமே சிறந்த வழி. இறைவன் பிறஜீவராசிகளுக்கு வழங்கியுள்ள அறிவாகிய தொட்டறிதல், ருசித்து அறிதல், முகர்ந்து அறிதல், கேட்டறிதல், பார்த்தறிதல் என்னும் ஐந்து அறிவுடன் நன்மை தீமையை எடைபோட்டுப் பார்த்து அதன் பின்விளைவுகளையும் உணர்ந்து சரியான பாதையைத் தேர்வு செய்யும் பகுத்தறிவினைப் பயன்படுத்தி சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைப் பற்றியும் அது மனிதனின் வாழ்வை எவ்வாறு இம்மை மறுமையில் செம்மையுறச் செய்கின்றது என்பதனை எல்லாம் பிறமதக்கோட்பாடுகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து சீர்தூக்கிப் பார்த்து சீரிய முடிவெடுக்க வேண்டுகிறோம்.

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். அதன் வாசல்கள் என்றென்றும் உங்களுக்குத் திறந்தேயுள்ளது. ஏகஇறைக்கோட்பாடும், இனிய வாழும் முறையும் உங்கள் வாழ்வில் மணக்கும் தென்றலாக வாசம் வீச சாந்தி நிலவி சமத்துவம் தொடர இஸ்லாம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகிறான்:

இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். 2:221.

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. 3:133.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். 4:124

அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். 33:71

அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சவர்க்கங்களில் விரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான். 48:17.

ஆக்கம்: முஹம்மது ரஃபீக், ஜித்தா
யுனிகோடில் பதிந்தது: அபூ உமர்

Sunday, March 27, 2005

தொழுகையில் பேணவேண்டியவை

முன்னுரை
நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தொழுகை என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள். நாளை மறுமையில் கேள்வி கணக்கின் போது தொழுகையைப் பற்றித்தான் முதன் முதலில் அல்லாஹ் நம்மிடம் விசாரிப்பான். தொழுகை சீராக அமைந்து விடுமென்றால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே இருக்கும். தொழுகை சீரான நிலையில் இல்லையென்றால் ஏனைய அனைத்துமே சீரற்றதாகவே இருக்கும். எனவே இறைவன் மலக்குகளைப்பார்த்து சொல்லுவான், எனது அடியான் ஏதேனும் உபரியான தொழுகைகளை தொழுதிருந்தால் அதனைக் கொண்டு அவனின் பர்ளான தொழுகையில் ஏற்பட்டிருந்த குறைகளை நிறைவு செய்யுங்கள் என்று. ஒவ்வொறு மனிதர்களின் நிலையும் இதே முறையில்தான் அவர்களின் செயல்களைப்பற்றி கணக்கு பார்க்கப்படும். (திர்மிதி)

(முஸ்லிம்களான) நமக்கும் (காஃபிர்களான) அவர்களுக்கும் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதுதான். யார் அதனை விட்டுவிடுகிறாரோ அவர் நிராகரித்தவர் ஆவார். (நஸாயி, இப்னுமாஜா)

உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா? என பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள். அதற்குத் தோழர்கள், இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது என்றார்கள். 'இதே போன்றுதான் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக் கறைகளைப் போக்குகின்றான் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (நஸாயி)

பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம், தொழுகை மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான சிறந்த சாதனம் என தெளிவுபட விளக்கியுள்ளார்கள். இதனை மேற்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் உணர்த்துகிறார்கள். தொழுவதினால் ஒருவனின் உள்ளத்தில் நன்றியுணர்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பயனாக இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டிய பாதையில் சிறப்பாக முன்னேறிச் சென்ற வண்ணம் இருக்கின்றான். இறைவனுக்கு கீழ்ப்படியாமை, மாறுசெய்தல் ஆகியவற்றிலிருந்து அவன் தூர விலகிக்கொண்டே செல்கிறான். எப்பொழுதேனும் அவனிடம் தவறேதுவும் நிகழ்ந்து விட்டால்கூட அது அறிந்தும் புரிந்தும் அவன் செய்ததாய் இருக்காது. அறியாமல் ஏற்பட்ட பிழையாகவே இருக்கும். ஆயினும், அதனை உணர்ந்த உடனே அவன் தனது இறைவனின் முன் தலைகுனிந்து விடுகின்றான். அழுதழுது மன்னிப்புக் கோருகின்றான். அதே நேரத்தில் ஒருவன் தொழுகையாளியாகவும் இருந்து வெட்கப்படாமல் பாவமும் செய்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனின் தொழுகையில் உயிர் இல்லை என்றுதான் அர்த்தம்.

முஸ்லிம் சமுதாயத்தில் பலர் தொழும்போது கீழ்கண்ட சில தவறுகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தொழுது வருகிறார்கள். இவையனைத்தும் நபி(ஸல்) அவர்களின் தொழுகை வழிக்கு மாறானதாகும். எனவே இத்தவறுகளிலிருந்து நாம் தவிர்ந்து, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் தொழுது இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வோமாக!

01) கீழ் ஆடைகளை கரண்டைக் கால்களுக்குக் கீழே தொங்குமாறு அணிதல்
மறுமை நாளில் மூன்று பேருடன் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் உண்டு, அவர்கள் மிகப் பெரும் நஷ்டவாளிகள். அவர்கள், (1) கீழாடையை கரண்டைக் காலுக்கும் கீழே இறக்கி உடுத்தியவர், (2) செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டியவர், (3) பொய்ச்சத்தியம் செய்து பொருளை விற்றவர் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். நம்மில் பலர் இதை சர்வசாதாரணமாகக் கருதுகிறோம். இன்னும் சிலர் தொழுகையின்போது மட்டும் தன் கீழ் உடுப்புக்களை கரண்டைக் காலுக்கு மேலே சற்று உயர்த்தித் தொழுகின்றனர். தொழுகை முடிந்ததும் அதை மீண்டும் கரண்டைக்காலுக்கு கீழே இறக்கி விடுகின்றனர். சிலர் பெருமையாக நினைத்துதான் கரண்டைக் காலுக்கு கீழே உடுத்தக் கூடாது என்றும் இன்னும் சிலர் இதனை தவறு இல்லை என்றும் கருதுகின்றனர். இது போன்று உடையணிவது தொழுகையின் போது மட்டுமல்லாமல் எப்பொழுதும் தவிர்ந்துக் கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகும்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக, யாருடைய கீழ் ஆடை கரண்டைக்காலுக்குக் கீழ் தொங்குகிறதோ அப்பகுதியானது மறுமையில் நெருப்பைக் கொண்டு வேதனை செய்யப்படும். (புகாரி)

முஸ்லிம் கிரந்தத்தில் வந்துள்ள ஹதிஸின் படி ஒருவர் கீழ் உடுப்பையோ அல்லது மேல் சட்டையையோ மடக்கி விட்டு (நாகரீகம் இல்லாமல்) தொழுவது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதாகும்.

02) அருவெருக்கத்தக்க வாடையுடைய (பூண்டு, வெங்காயம்) ஆகியற்றை உண்ட உடனோ அல்லது புகைபிடித்து விட்டோ தொழுகைக்காக பள்ளிக்குள் வருதல்''
இத்தாவரப் பொருட்களான (வெங்காயம், பூண்டு) ஆகிய துர்வாடையுடையவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலின் பக்கம் நெருங்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக எவற்றால் மக்கள் இம்சை அடைகிறார்களோ, அவற்றால் மலக்குகளும் இம்சை அடைகின்றனர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)புகைபிடித்து விட்டு பள்ளிக்குள் வருவதால் புகைபிடித்தவர் வாயிலிருந்து வரக்கூடிய கருகிய வாடையானது அருகில் இருப்பவரை அருவெருக்கத்தக்தாக மாற்றுகிறது. இதன் மூலம் அருகிலிருப்பவர் தொழுகையில் கவனச்சிதைவோடு தொழும் நிலை உருவாகிறது. மக்கள் வெறுப்பதை மலக்குகளும் வெறுக்கிறார்கள். புகைபிடித்தல் பழக்கமானது இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று. இஸ்லாமிய சமுதாய மக்கள் இத்தீய பழக்கத்தை கைவிடுவதே சாலச் சிறந்தது.

03) இகாமத் கூறப்பட்டவுடன் எட்டுக்களை விரைவுபடுத்தியும், ஓடியும் வந்து தொழுகையின் வரிசையில் சேருதல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்துக்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள். (புகாரி, முஸ்லிம்)

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர். தொழுகையை முடித்ததும், உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும் போது அமைதியாக வாருங்கள். தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவ்வாறு ஓடிவந்து தொழுகையில் சேருவது ஏற்கனவே தொழுது கொண்டிருப்போரின் சிந்தனையை சிதறடிக்கச் செய்யும் செயலாக அமைந்து விடுகிறது. இதைவிடச் சிறந்தது தொழுகைக்கான பாங்கு கூறப்பட்ட உடன் பள்ளிக்கு வருதலே ஆகும்.

04) தொழுகைக்கான ஆரம்ப தக்பீரை ருகூவில் கூறுதல்
நம்மில் பலர் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விரைந்து வந்து அத்தொழுகை எந்த நிலையில் இருக்கிறதோ அதோடு சேர்ந்து கொள்கிறோம். இமாம் ருகூவில் இருந்தால் சிலர் ஆரம்பத் தக்பீரை கூறி நெஞ்சில் கைகளை கட்டி பிறகு ருகூவிற்கு தக்பீர் சொல்லி குனிகிறார்கள். தொழுகையின் ஆரம்பத் தக்பீரானது இமாம் நின்ற நிலையில் இருக்கும்போது மட்டுமே கூறவேண்டும்.

05) தொழுகைக்கான நிய்யத்தை தக்பீரின் ஆரம்பத்தில் முணுமுணுத்தல்
எண்ணங்களே செயல்களாக அமைகின்றன. இதற்கு மாற்றமாக தொழுகையின் ஆரம்பத்தில் குறைவான சப்தத்தைக் கொண்டு இந்த நேரத்திற்கான, இத்தனை ரக்ஆத் எண்ணிக்கை கொண்ட தொழுகையை தொழுவதற்காக தக்பீர் கட்டுகிறேன் என்று கூறுதல் நபி(ஸல்) அவர்களின் வழியுமில்லை அல்லது அவரைப் பின் தொடர்ந்து வந்த தோழர்கள் மற்றும் நல்லடியார்களின் வழியுமில்லை.

சில சமயம் ஷைத்தான் லுஹர் தொழுகைகாக அஸர் என்றும் அஸருக்கு இஷா என்றும் நாம் மொழியும் போது மாற்றியமைப்பான். இந்தச் ஷைத்தானின் குழப்பத்திலிருந்து நாம் நம் தொழுகையை பாதுகாத்துக் கொள்ள அமைதியான முறையில் தக்பீர் சொல்லி தொழுவதே நன்று. ஏனென்றால் அந்த நேரத்து தொழுகையை தொழ எண்ணித்தான் தொழும் இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.

06) தொழுகையில் ஆரம்பத் தக்பீரின் போதும் ருகூவிற்கு செல்வதற்கு முன்னும், பின்னும் மற்றும் மூன்றாவது ரக்அத்திற்காக எழுந்து நிற்கும்போதும் கைகளை உயர்த்தாமல் இருப்பது
நபி(ஸல்) அவர்கள் தொழுகையை துவக்கும்போது தம் தோள் புஜங்கள் வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்குத் தக்பீர் கூறும் போது இவ்வாறு செய்வார்கள். ருகூவிலிருந்து எழும்போதும் இவ்வாறு செய்வார்கள். (புகாரி)

ஜனாஸா, மழைத் தொழுகை மற்றும் ஈத் தொழுகையின் முதல் தக்பீரைத் தொடர்ந்து சொல்லும் மேலதிகமான தக்பீர்களுக்கு கைகளை உயர்த்துதல் அவசியமில்லை. நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் போது (நிற்கும் நிலையில்) தனது கைகளை நெஞ்சின் மீது வைப்பார்கள். (புகாரி, அபூதாவூத்)

07) தொழுகையின் ஆரம்பத்தில் அவூது மற்றும் பிஸ்மில்லாஹ் ஓத தவறுவது
தொழுகையின் ஆரம்ப நிலையில் அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம் மற்றும் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் ஓத வேண்டும்.

(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக (அல்குர்ஆன்: 16:98)

நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் பற்றி உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் கேட்டபோது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஒவ்வொரு வசனமாக ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

08) தொழுகை விரிப்பிற்கு முன் சுத்ரா(தடுப்புப் பொருள்) வைக்காமல் தொழுவது
சுத்ரா என்பது ஒரு பொருள் ஆகும். அது ஒரு சுவராகவும் இருக்கலாம் அல்லது தூணாகவும் இருக்கலாம், தொழுகையின் போது நம்மை முன்னோக்கியிருக்கும் தடுப்பு ஆகும். தொழுகையின் போது நமக்கு முன் யாரும் குறுக்கிட்டுச் செல்லாதவண்ணம் அதை நாம் பயன்படுத்தலாம்.
உங்களில் ஒருவர் (தடுப்பு வைத்து கொண்டு) தொழுது கொண்டிருக்கும்போது யாரேனும் குறுக்கே செல்ல நாடினால் அவரைச் செல்ல விடாதீர்கள். தடுத்ததையும் அவர் மீறினால் அவருடன் சண்டையிடட்டும். ஏனெனில் அவருடன் ஷைத்தான் இருக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு குஸைமா)

உங்களில் ஒருவர் தொழுதால் தடுப்பு வைத்துக் கொள்ளட்டும். மேலும் அதனருகில் நெருங்கி நின்று கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)

மேற்கண்ட ஹதிஸ்களின் மூலம் சுத்ரா (தடுப்பு) இல்லாமல் ஒருவர் தொழும்போது அவரின் தொழுகையை வீணாக்குவதற்காக ஷைத்தான் குறுக்கே செல்கின்றான். மேலும் ஒருவர் திறந்தவெளியில் தொழுதாலும் சுத்ரா வைத்துக் கொண்டுதான் தொழவேண்டும்.

இதையே அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)

09) முதல் வரிசையில் நின்று தொழுவதை அலட்சியம் செய்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், பாங்கு கூறுவதிலும், (தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ளதை (சிறப்பை) மக்கள் அறிந்துகொண்டால், அதை அடைய முடியாத நிலை ஏற்பட்டால், சீட்டுக் குலுக்கி போட்டுக் கொள்வார்கள். மேலும் பர்ளான தொழுகைக்கு விரைவாக வருவதின் சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், அதற்காக முந்திக் கொள்வார்கள். மேலும் இஷாவிலும், சுப்ஹிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)

தொழுகைக்காக பாங்கு கூறப்பட்டால் பள்ளிக்கு விரைந்து வருவதிலும், முதல் வரிசையில் நின்று தொழுவதிலும் ஆர்வம் காட்டுவதே சிறந்தது.

10) தொழுகையின் போது வானத்தை நோக்கி முகத்தை உயர்த்துதல் அல்லது இமாமைப் பார்த்தல் அல்லது வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பிப் பார்த்தல்
தொழும்போது முகத்தை வானத்தின்பால் உயர்த்துவோர், அதிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்வார்களாக! இல்லையென்றால் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (முஸ்லிம்)

நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழும்போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் இது ஷைத்தான் மனிதனிடமிருந்து (அவனது கவனத்தை) அபகரிக்கும் படியானதோர் செயலாகும் என்றார்கள். (புகாரி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பதானது, முறையாக இறை உணர்வோடு தொழும் ஒருவரின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். தொழுவோர் இவ்விஷயத்தில் மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்ளவேண்டும்.

11) தொழுகையின் போது வரிசைகளுக்கு மத்தியில் இடைவெளியிட்டு நின்றல்
வானவர்கள் தம் இரட்சகனின் முன் அணி வகுத்து நிற்பது போல நீங்கள் அணிவகுத்து நிற்க வேண்டாமா? என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் வானவர்கள் தம் இரட்சகனின் முன் எவ்வாறு அணிவகுத்து நிற்கின்றார்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் முதல் வரிசையை நிறைவு செய்வார்கள். வரிசையில் சேர்ந்து (இடைவெளியின்றி) நெருக்கமாக நிற்பார்கள் என்று பதில் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்கள் வரிசைகளை நேராக ஆக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் வரிசையை நேராக்கிக் கொள்வது தொழுகையின் பரிபூரணத் தன்மையின் ஓர் அம்சமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் புறப்பட்டு வந்து தக்பீர் சொல்லத் தயாரான போது அணியை விட்டும் தனது மார்பை வெளிக் காட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். உடனே அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அல்லாஹ் உங்களிடையே வேற்றுமையை உண்டாக்கி விடுவான் என்று கூறினார்கள். (முஸ்லிம்)

உங்கள் வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் எனது முதுகுக்குப் பின் புறமும் உங்களைக் காணுகின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒவ்வொருவரும் தனது தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும், தனது பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள். (புகாரி)

12) சூரத்துல் ஃபாத்திஹாவை நிறுத்தியும், நீட்டியும் ஓதாமல் விரைவாக ஓதுதல்
நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் வசனம், வசனமாக நிறுத்தியும், நீட்டியும் அழகாகத் தொழுவார்கள். (அபூதாவூத்)

13) தொழுகையின் போது அமைதியில்லாமல் இருப்பதும், கடிகாரத்தில் நேரம் பார்ப்பதும், ஒரு கையைக் கொண்டு ஆடைகளைச் சரிசெய்வதும், கால்களை அசைத்துக் கொண்டு நிற்பதும்
இதுபோன்ற அனைத்து செயல்களும் தொழுகையில் உள்ளச்சத்தை மறந்து தொழும் நிலையை உண்டுபண்ணும். இதையே அல்லாஹ் தனது திருமறையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள் (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (அல்குர்ஆன் 2:238)

14) ஜமாத்(கூட்டுத்) தொழுகையின் போது இமாமை முந்தித் தொழுதல்
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள், இமாமை முந்தாதீர்கள். இமாம் அல்லாஹுஅக்பர் என்று கூறும் போது நீங்களும் அல்லாஹுஅக்பர் என்று கூறுங்கள். இமாம் வலள்ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள் என்றும் இன்னொரு அறிவிப்பில் நிச்சயமாக இமாமை ஏற்படுத்தியது பின்பற்றப்படுவதற்கே என்று கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களில் ஒருவர் இமாமுக்கு முந்தி (ருகூவு அல்லது ஸஜ்தாவில்) தலையை உயர்த்தினால்(மறுமையில்)அவரின் தலையை கழுதையின் தலையைப் போன்று அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்சக் கூடாதா? அல்லது அவரின் தோற்றத்தைக் கழுதையின் தோற்றத்தைப் போன்று அல்லாஹ் ஆக்கி விடுவதை அவர் அஞ்சக் கூடாதா? என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

15) ருகூவின் போது தலையை தாழ்த்துதல், உயர்த்துதல் அல்லது பின்பக்கமாக வளைந்து இருப்பது
ருகூவின் போது தலையை சாதாரண நிலையில் வைத்து முதுகுத் தண்டை செவ்வையாக வைத்து கால்களின் நிலை சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள், உயர்த்தவும் மாட்டார்கள். மாறாக இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக வைப்பார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)

16) ருகூவிலும் ஸஜ்தாவிலும் கைகளை உடலின் இரண்டு பக்கமும் இடித்தவாறு வைத்தல் அல்லது சஜ்தாவில் தொடைகளின் மேல் வயிற்றைத் தாங்கிக் கொள்ளுதல்.

சஜ்தாவின் போது நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)

நபி(ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும் போது தமது தொடைகளின் மேல் வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் (ஒன்றுடன் மற்றொன்று சேராமல்) விரித்தவர்களாகவும் ஸஜ்தாச் செய்வார்கள். (அபூதாவூத்)

17) சூரத்துல் ஃபாத்திஹா முடிந்தவுடன் ஆமீன் என்று சப்தமாக சொல்லாமல் இருப்பது
இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவரது ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு சரியாக அமைந்து விட்டால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஆகவே சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்து இமாம் ஆமின் சொல்லும்போது தொழுகையில் நாமும் சப்தமாக ஆமீன் கூறவேண்டும்.

18) ஸஜ்தாவின் போது நெற்றியை தரையில் வைக்கும் முறை
இருபாதங்கள், இரு மூட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புக்கள் தரையில் படுமாறு ஸஜ்தாச் செய்யம்படி நான் கட்டளையிடப் பட்டிருக்கின்றேன் என நபி(ஸல்) அவர்கள் கூறும்போது நெற்றியைக் குறிப்பிடுகையில் தமது கையை மூக்கின் மீது வைத்துச் சுட்டிக் காட்டினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

19) அவசர அவசரமாக ருகூவும், சுஜுதும் செய்தல்
நபி(ஸல்) அவர்கள் பூரணமாக ருகூஹ் மற்றும் சஜ்தா செய்யாத ஒரு மனிதரைப் பார்த்து சொன்னார்கள், பரிபூரணமற்ற முறையில் தொழுத நிலையிலேயே இவர் மரணித்தால், முஹம்மதுக்கு வழங்கப்பட்ட மார்க்கத்தை அல்லாது பிற மார்க்கத்தை பின்பற்றிய நிலையில் மரணித்தவரை போன்றவராவார். அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள், எனது நம்பகமான நண்பர் முஹம்மது(ஸல்) அவர்கள், 'கோழி கொத்துவதை போல அவசரமாக தொழுவதையும், நரியைப் போன்று தொழுகையில் கண்களை சுழல விடுவதையும், குரங்கைப் போல (தொழுகையில் தொடையில்) அமருவதையும் தடை செய்தார்கள்'. (அஹ்மத், தயாலிஸி)

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள், திருடர்களில் மோசமானவன் யார் என்றால், எவர் ஒருவர் தன்னுடைய தொழுகையில் திருடுகிறாரோ அவர்தான். அதற்கு ஸஹாபாக்கள் கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எவ்வாறு திருடமுடியும்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எவரொருவர் தொழுகையில் ருகூவும், ஸுஜுதும் சரிவர பூர்த்தி செய்யாமல் தொழுகின்றாரோ அவரே தொழுகையில் திருடுபவர் ஆவார். (தப்ரானி)

ருகூவிலும், ஸுஜுதிலும் சிறிது நேரம் தாமதித்து உடல் உறுப்புக்கள் அமைதியடையும் வரை அடுத்த நிலைக்கு செல்ல வேண்டாம். ருகூவில் குறைந்தது மூன்று முறை மெதுவாக சுப்ஹான ரப்பியல் அளீம் கூறும் நேரம், ஸுஜுதில் மூன்று முறை சுப்ஹான ரப்பியல் அஃலா கூறும் நேரம் போதுமானது.

20) தொழுகையின் முடிவில் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்' என்று கூறும் போது தன் இரு உள்ளங் கைகளும் உயர்த்துதல்
நபித்தோழர்கள் அவ்வாறு செய்யும் போது நபி(ஸல்) அவர்கள், 'கட்டற்ற குதிரைகளின் வால்களைப் போல் ஏன் கைகளை நகர்த்துகிறீர்கள்' என்றனர். பிறகு அதனைப்போன்று அவர்கள் செய்யவில்லை. (அபூதாவூத், நஸாயி)

21) இடது கை மூலம் தஸ்பீஹ் எண்ணுவது
நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின் தன்னுடைய வலது கைவிரல்களை பயன் படுத்தித்தான் தஸ்பீஹ் எண்ணுபவர்களாக இருந்தார்கள். எனவே இடது கை கொண்டு தஸ்பீஹ் எண்ணுவது உகந்ததல்ல. யஸீரா அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி(ஸல்) அவர்கள் பெண்களை அவர்களின் விரல்களினால் தஸ்பீஹ் செய்ய ஏவினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள், மறுமை நாளில் அவைகள் (அவ்விரல்கள்) பேசவைக்கப்படும் மேலும் அவைகளின் மீது கேள்வி தொடுக்கப்படும் (அதன் செயல்கள் பற்றி). (திர்மிதி)

22) பர்ளான தொழுகைக்கு பிறகு மற்ற தொழுகையாளிகளின் கைகளைப் பற்றி குலுக்கி 'தக்கப்பளல்லாஹ்' (தொழுகை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக) என்று கூறுவது
இதுபோன்ற செயல்கள் பித்அத் ஆகும். இது நபி(ஸல்) அவர்களின் வழியுமல்ல, அவரைப் பின்தொடர்ந்து வந்த ஸஹாபாக்களின் வழியுமல்ல.

23) தொழுகையில் துஆ கேட்கும் நேரம்
அத்தஹியாத் ஓதிய பிறகு (ஸலாம் கொடுப்பதற்கு முன்) தமக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்துத் தன் இறைவனிடம் கேட்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயி)

24) தொழுகை முடிந்ததும் பள்ளிளை விட்டு வெளியேறுதல் மற்றும் திக்ர்(இறைதியானம்) செய்யாமை
தொழுகை முடிந்ததும் பள்ளியைவிட்டு வெயியேறாமல் சுபஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும், அல்லாஹுஅக்பர் 33 முறையும் ஓதி லாஇலாஹா இல்லல்லாஹ் வஹதஹு.., ஆயத்துல் குர்ஸி (அல்குர்ஆன் 2:255) யையும் மற்றும் ஆதாரபூர்வமான திக்ருகளை ஓதுவது.

25) தொழுபவருக்கு முன் குறுக்கிட்டுச் செல்லுதல்
தொழுபவனின் குறுக்கே நடந்து செல்பவன், அவன் மீது உள்ளதை (தண்டனையை) அறிந்தால், அவன் முன் நடந்து செல்வதை விட நாற்பது நாள் கூட (தொழுகையை முடிக்கட்டும் என எதிர்பார்த்து) நிற்பது அவனுக்கு சிறப்பாகி விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் கூறினார்கள்.

(என்னிடம்) கூறியவர் நாற்பது நாள் அல்லது நாற்பது மாதம் அல்லது நாற்பது வருடம் என்பதில் எதைக் கூறினார் என்பதை நான் அறிய மாட்டேன் என இதன் அறிவிப்பாளரில் ஒருவரான அபூ நஸ்ர் கூறுகின்றார் (புகாரி, முஸ்லிம்)

26) நோயின் காரணமாகவோ, உடல்நிலை சரியில்லாத காரணத்தாலோ தொழுகையை விட்டு விடல்
வியாதி அல்லது இயலாமை ஆகியவற்றின் காரணமாக பர்ளான தொழுகையை நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்து தொழவேண்டும். அதற்கும் இயலாதவர் ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு தொழவேண்டும். அதற்கும் இயலாதவர் மல்லாந்துப்படுத்துக் கொண்டு ருகூவு, ஸுஜூது ஆகியவற்றைக் சைகை செய்து தொழவேண்டும் என்பதாக மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் உளூ எடுப்பதற்கு தண்ணீர் இல்லாதவர்கள் சுத்தமான மணலோ அல்லது தரைப்பகுதியிலோ தமது கைகளை அடித்து தயம்மும் செய்து தொழுதுக் கொள்ளவேண்டும். தொழுகை இஸ்லாத்தின் முக்கியத் தூண்களில் ஒன்று என்பதன் அடிப்படையில் பார்த்தோமானால் அதைத் தவறவிடுவது நல்லடியார்களுக்கு சிறந்ததல்ல. ஏனென்றால் நபியவர்கள் தங்களின் எதிரிகளை போர்முனையில் சந்தித்த போது கூட தொழுகையை பேணித் தொழுதார்கள்.

27) கப்ரு (அடக்கஸ்தலங்)களில் தொழுதல் கூடாது
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள் கப்ருகள் இருக்கும் இடங்களில் தொழுவதும் கப்ருகளின் மேல் அமர்வதும் கூடாது. (முஸ்லிம்)

கப்ருகள் இருக்கும் இடங்கள்தான் பள்ளிவாசல்கள் என பிற சமுதாய மக்கள் நினைக்கும் அளவிற்கு முஸ்லிம் சமுதாய மக்கள் கப்ரு வணங்கிகளாக இருக்கின்றனர். ஆகவே முஸ்லிம் மக்கள் கப்ருகளை வணங்குவதும் அவற்றின் மீது கட்டிடம் (தர்கா) கட்டுவதும் தவிர்த்து இறைவனிடம் மட்டும் கையேந்தி தமது அனைத்து வகை வணக்க வழிபாடுகளிலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழி நடப்பதே இம்மைக்கும், மறுமைக்கும் உகந்தது.

மொழிப்பெயர்த்து தொகுத்தது: மாலிக் மற்றும் அபூ உமர்

Thursday, March 24, 2005

கொள்கையின் பெயரால் இடைச்செருகல்கள்.

கிரேக்க தர்க்கக்கலை முஸ்லிம்களிடம் நுழைய ஆரம்பித்தபோது, இஸ்லாமியக் கொள்கைகளை கிரேக்கத் தத்துவங்களோடு ஒப்பிட ஆரம்பித்தார்கள்.

இதனால் முஸ்லிம்களுக்கிடையில் முஃதஸிலா, கதரிய்யா ஜஹமிய்யா போன்ற பலப் பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தன. இது இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கொள்கையை நிலைநாட்டுவதற்காக விவாதங்கள் புரிந்தார்கள். தூய்மையான இஸ்லாமியக் கொள்கையில் களங்கம் ஏற்படுத்தினார்கள்.

ஒவ்வொரு பிரிவினரும் குர்ஆன், ஹதீஸை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்று, தவறான விளக்கங்கள் கொடுக்கலானார்கள். சரியான ஹதீஸ்களில் தங்களுக்கு சாதகமான விஷயங்கள் இல்லாதபோது தங்கள் கொள்கையை வலுப்படுத்த ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூற ஆரம்பித்தனர்.

இப்பிரிவினரிடையில் கொள்கை அடிப்படையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் ஒன்று ஈமான் அதிகரிக்குமா? அதிகரிக்காதா? என்பது. ஒரு சாரார், ஈமான் அதிகரிக்கும் என்றும், மற்றொரு சாரார் ஈமான் அதிகரிக்காது என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு சாராரும் தங்கள் விவாதத்திற்குத் தக்கவாறு ஹதீஸ்களை உற்பத்தி செய்து நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யாகக் கூறினார்கள். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஈமான் அதிகரிக்காது என்ற கொள்கையுடையவர்கள் பின்வருமாறு ஒரு ஹதீஸை இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

"ஈமான் என்பது அதிக்கவும் செய்யும், குறையவும் செய்யும் என்று யாராவது கருதினால், அதிகரிப்பது நயவஞ்சகமாகும். அது குறைவது நிராகரிப்பதாகும். இதைச் சொன்னவர்கள் அதற்காக தவ்பா செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர்களுடைய கழுத்தை வாளால் வெட்ட வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இது போன்ற பொய்யான ஹதீஸ்களை ஏராளம் உற்பத்தி செய்து கூறியுள்ளனர்.

யார் அந்த அஹ்மத்?

யாரெல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு தூபம் போட்டு வளர்ப்பதும் அல்லது அவர்களுக்கு துணைபோவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் வழக்கம். இதன் மூலம் இஸ்லாத்தை ஒழித்துக்கட்டலாம் என்பதே இவர்களின் எண்ணம்.

மிர்சா குலாம் அஹ்மத் என்ற மனிதரால் தோற்றுவிக்கப்பட்ட காதியாணி கொள்கையினரை சிலர் போற்றுவதும் அதற்குத்தான். காதியாணிகளும் இப்பொழுது மீடியாவில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே இக்கொள்கையினரைப்பற்றி இங்கு தெரிந்துக்கொள்வோம்.

-அபூஉமர்-
-o0o-

"இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக! எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.

மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 61:6,7)

இது யாருடைய விளக்கவுரையும் தேவைப்படாத அளவுக்கு மிகத்தெளிவாக அமைந்த வசனமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முன்னால், இறைவனின் தூதராக அனுப்பப்பட்ட ஈஸா நபியவர்கள், தமது சமுதாயமான இஸ்ரவேல் மக்களிடம் ஒரு முன்னறிவிப்புச் செய்ததை சுட்டிக்காட்டும் வசனம்தான் இது.

ஈஸா நபிக்குப்பின் அஹ்மத் என்ற பெயருடைய ஒரு தூதர் வரவிருக்கிறார், என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வருகையைப்பற்றிய முன்னறிவிப்பு செய்ததை இவ்வசனம் கூறுகிறது. ஈஸா நபி மட்டுமின்றி இன்னும் பல நபிமார்களும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்திருக்கின்றனர். இவ்வளவு தெளிவான வசனத்திற்கு எதற்காக விளக்கவுரை என்று கேட்கிறீர்களா? விளக்கவுரை தேவைப்படாத வசனம், என்றாலும் இவ்வசனத்திற்கு சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் அறிவுக்குப் பொருந்தாத விளக்கம் கொடுத்தான். இது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை என்னைத்தான் குறிக்கிறது என்று வாதிட்டான்.

நபிகள் நாயகத்தின் பெயர் முஹம்மத் தானே தவிர அஹ்மத் அல்ல. என் பெயர் தான் அஹ்மதாக உள்ளது. எனவே இவ்வசனத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவன் நான் தான் என்று வாதிட்டான். தானும் ஒரு நபிதான் என்று கூறினான். இவ்வசனத்தில் இவனது வாதத்திற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று பார்க்காத ஒரு கூட்டம் அவனையும் நபியென்று நம்பியது இவர்கள் காதியாணிகள் என்று கூறப்படுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தின் அனைத்து தரப்பினராலும் இவர்கள் முஸ்லிமல்லாத புது மதத்தவர்கள் என்ற தீர்ப்பளிக்கப்பட்டனர்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனைப் பற்றியும் அவன் உருவாக்கிய காதியாணி மதம் பற்றியும் இந்தச் சிறிய அறிமுகம் போதுமானதாகும். இனி இவ்வசனத்திற்கு இவன் கொடுத்த விளக்கம் சரிதானா? என்று ஆராய்வோம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் மட்டுமல்ல அஹ்மத் என்பதும் அவர்களின் பெயர் தான்.

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் தான் முஹம்மத், நான் தான் அஹ்மத், நான் தான் ஹாஷிர், நான் தான் ஆகிப், நான் தான் மாஹீ என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளனர். புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே தமது பெயர்களில் அஹ்மதும் ஒன்று எனக் கூறுகிறார்கள். நபிகள் நாயகத்திற்கு அஹ்மத் என்ற பெயர் கிடையாது என்று கூறிய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் மார்க்க அறிவற்றவன் என்பது இதிலிருந்து தெரியவரும்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்ற இவனது பெயரில் அஹ்மத் என்ற வார்த்தை உள்ளதல்லவா? அதனால் இது தன்னைப் பற்றிய முன்அறிவிப்பு என்றான். ஒருவனது பெயர் அப்துல்லாஹ் என்று இருந்தால் அதில் அப்து என்றும் அல்லாஹ் என்றும் இரண்டு பெயர்கள் உள்ளன (இதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை). அப்துல்லாஹ் என்று பெயரில் அல்லாஹ் என்பது உள்ளதால் நான் தான் அல்லாஹ் என்று யாரேனும் கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா?
பெரியார் தாசன் என்று ஒருவருக்குப் பெயர். ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றிக் கூறும் வாசகம் தன்னைத்தான் குறிப்பதாக அவர் வாதிட்டால் அவரை நாம் என்னவென்போம்! மிர்ஸா குலாம் அஹ்மதின் வாதமும் இவரது வாதமும் சமமானவை தான். குலாம் என்றால் ஊழியன். பணியாளன், தாசன் என்று பொருள். குலாம் அஹ்மத் என்றால் அஹ்மத் என்பவரின் தாசன் என்பது பொருள் அஹ்மதின் தாசன் என்ற பெயருடையவன் அஹ்மத் என்பது தன்னையே குறிக்கும் என்று கூற முடியாது. இன்னும் சொல்வதாக இருந்தால் இவனது பெயரே நபிகள் நாயகத்தின் பெயர் அஹ்மத் என்பதற்கு சான்றாக உள்ளது எனலாம்.

அஹ்மதின் தாசன் என்று இவனது தந்தை இவனுக்குப் பெயர் சூட்டியபோது அவர் அஹ்மத் என்று யாரை நினைத்திருப்பார்? இவன் கூட இவ்வாறு வாதம் செய்த பின் தன் பெயரை அஹ்மத் என்று மாற்றிக் கொள்ளவில்லை காலமெல்லாம் அஹ்மத் தாசன் (குலாம் அஹ்மத்) என்ற பெயரைத்தான் பயன்படுத்தி வந்தான். அஹ்மத் தாசன் என்ற பெயரை இவன் கடைசி காலம் வரை பயன்படுத்தியதிலிருந்து இவன் அஹ்மத் அல்ல என்பதும் அஹ்மத் என்பவரின் தாசனே என்பதும் மிகத்தெளிவாகத் தெரிகிறது. அஹ்மத் தாசன் என்று பெயர் வைத்திருந்த அவன் இந்த அஹ்மத் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்க முடியாமலே போய்ச் சேர்ந்து விட்டான்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனும் ஒரு நபி என்றே வாதத்துக்காக வைத்துக் கொண்டால், ஈஸா நபி அவர்கள் நிச்சயமாக இவனைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பின் வரக்கூடிய நபிகள் நாயகத்தைத் தான் முன்னறிவிப்புச் செய்வார்கள். நபிகள் நாயகம்(ஸல்) தான் முக்கிய நபி. தான் அவர்களின் நிழல் நபி என்று தான் மிர்ஸா குலாம் வாதிட்டான். ஒரிஜினலும் நிழலும் வரவிருக்கும் போது ஒரிஜினலை விட்டு விட்டு நிழலைப் பற்றி யாரேனும் முன்னறிவிப்பு செய்வார்களா?

ஒரு கலெக்டர் பின்னால் வருவதை முன் கூட்டியே ஒருவன் அறிவித்துச் செல்கிறான் கலெக்டருடன் அவரது டிரைவரும் வருவார் அறிவிப்புச் செய்பவன் கலெக்டர் வருகிறார் என்று கூறுவானா? கலெக்டரின் டிரைவர் வருகிறார் என்று கூறுவானா? முதல்வரும் 18-வது வார்டு உறுப்பினரும் வந்து கொண்டிருக்கும் போது முதல்வர் வருகையை கூறாமல் 18-வது வார்டு மெம்பர் வருகிறார் என்று யாரேனும் அறிவிப்பு செய்வார்களா? என்பதைக் கூட இவனும் இவனது மதத்தவர்களும் சிந்திக்கவில்லை.

இது நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் குறிக்கவே முடியாது என்பதற்கு இந்த வசனத்திலேயே வலுவான ஆதாரம் உள்ளது அவர் (அஹ்மத்) அவர்களிடம் வந்த போது அவர்கள் சூனியம் என்று கூறிவிட்டனர் என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது இந்த வசனம் அருளப்பட்ட காலத்திற்குப் பிறகு தான் அஹ்மத் வருவார் என்பது இதன் கருத்தாக இருப்பதால் இவ்வாறு கூற முடியாது. அவர் இனிமேல் வரும்போது சூனியம் எனக்கூறுவார்கள் என்று வருங்கால வினையாகச் சொல்லப்பட்டிருக்கும் அவர் வந்த போது என்று சென்றகால வினைச் சொல் (ஃபலம்மா ஜா அ) பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் வந்த போது கூறினார்கள் என்று குர்ஆன் கூறுவதால் இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் அந்த அஹ்மத் வந்திருக்க வேண்டும். அவர் வந்த பின் அவர்கள் அவரை நிராகரித்திருக்கவும் வேண்டும் அவ்வாறு நடந்திருந்தால் தான் அவர் வந்த போது எனக் கூறியிருக்க முடியும்.

இவ்வசனம் அருளப்பட்ட போது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வந்திருக்கவில்லை இவனைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் அவர் வரும்போது சூன்யம் எனக் கூறுவார்கள் என்று வசனம் அமைந்திருக்கும். "அவர் வந்தபோது சூனியம் என்று கூறினார்கள்" என்று கூறப்படுவதால் இவ்வசனம் அருளப்படும் போதே அஹ்மத் வந்துவிட்டார் என்பது தெளிவு. இவ்வசனம் அருளப்பட்ட போதே வந்திருந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தானே தவிர இவ்வசனம் அருளப்பட்ட போது எந்தப் பொருளாகவும் இருந்திராத அஹ்மத் தாசன் (மிர்சா குலாம் அஹ்மது) அல்ல.

இவ்வசனம் தன்னைத்தான் குறிக்கிறது என்பதற்கு இவன் எடுத்துக்காட்டும் முக்கியமான ஆதாரம் என்ன தெரியுமா? இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும்போது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் 'இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில் என்ற வாசகத்ததை எடுத்துக் கொண்டான்'. எல்லோரும் என்னைக் காஃபிர்கள் என்று கூறி இஸ்லாத்தின் பால் அழைக்கின்றனர் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே எனவே இது என்னைத் தான் குறிக்கிறது என்பது தான் இவனது ஆதாரம். முந்தைய வசனம் இவனைக் குறிக்காது என்பதற்கு போதுமான காரணங்களைக் கூறியுள்ளோம்.

இவன் சுட்டிக்காட்டிய இரண்டாவது வசனம் இவனைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. அது இவனைத்தான் (இவனையும் தான்) குறிக்கிறது. 'இஸ்லாத்தின் பால் அழைப்பு விடப்படும் நிலையில் அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறி நானும் நபி என்று வாதிட்டவனைத் தவிர மிகவும் அநியாயக்காரன் யார்? என்பது நிச்சயமாக அவனைக் குறிக்கும். அஹ்மத் என்பது ஒருக்காலும் இவனைக் குறிக்காது. இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். மிர்ஸா குலாம் அஹ்மத், நபி வேறு - ரசூல் வேறு என்று வித்தியாசப்படுத்தி, தான் ரசூல் அல்ல நபி தான் என்று கூறினான்.

ஒரு ரசூலின் வழியில் பல நபிமார்கள் வரவார்கள் அந்த வகையில் முஹம்மது ரசூல் அவர்கள் வழியில் வந்த நபிதான் நான் என்றான் இப்படி வாதிட்டவன் இந்த வசனத்தில் ரசூலைப் பற்றித்தான் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதை வசதியாக மறைத்துவிட்டான். இந்த வசனத்தில் எனக்குப் பின் வரக்கூடிய ரசூலைப் பற்றி முன்னறிவிப்புச் செய்கிறேன் என்று ஈஸா நபி கூறியதாகக் குறிப்பிடுகிறது. இவனது வாதத்தின்படி இவன் ரசூல் இல்லை. பெயரிலும் பொய் சொல்லியதாலும் இவனது வாதப்படியே ரசூலாக இல்லாதிருந்தும் ரசூல் என்று வாதிட்டு பொய்யுரைத்ததாலும் இவன் நபியாகவும் இருக்க முடியாது பொய்யனும், மூடனும், மனநோயாளிகளும் நபியாக அனுப்பப்பட மாட்டார்கள்.
வழிகேடர்கள் தெளிவான வசனங்களையும் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமே இது.

நன்றி: பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் விளக்கத்தொடர்.

-o0o-

Monday, March 21, 2005

படங்களை வலைப்பதிவில் ஏற்றும் முறை

படங்களை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்பவர்கள், யாஹு வழங்கும் ஜியோசிட்டி அல்லது தங்களின் சொந்த தளங்களில் பொருத்தி அதன் எச்.டி.எம்.எல் கோடினை வலைப்பதிவில் இணைப்பது வழக்கம். இது இரண்டும் இல்லாதவர்கள் இலவச இமேஜ் ஹோஸ்டிங் வழங்கும் வசதியினை பயன்படுத்திக்கொள்வார்கள். டினிபிக்.காம் தளத்தின் உதவியுடன் உங்கள் படத்தினை பிளாக்கர் வழங்கும் இலவச வலைப்பதிவில் பதிப்பது பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.

Steps:
1. Goto TinyPic.com

2. Click Upload (கணினியில் உங்கள் இமேஜ்(image or picture) உள்ள இடத்தை காண்பிக்கவும்)

3. Click "Host It"

4. சில வினாடிகள் காத்திருந்து பின்னர் பக்கம் மீண்டும் வெளிப்பட்டவுடன், அப்பக்கத்தின் அடிப்பாகத்திற்கு போய் பார்க்கவும்.

5. Link, Tag, Img, Url என நான்கு ஜன்னல்களை பார்ப்பீர்கள்

6. Click on "Tag" field

7. ^ C (Ctrl + C)
(மின்னஞ்சல் வழியே அதன் சுட்டிகள் வரவேண்டுமென்றால் "Email to this link" என்ற சுட்டியை தட்டி உங்களின் மின்னஞ்சல் விலாசத்தினை கொடுக்கவும். இதன் மூலம் மின்னஞ்சலில் பாதுகாத்துக் கொள்ளலாம்).

8. இப்பொழுது உங்களின் வலைப்பதிவில் உங்களின் கட்டுரை பக்கத்திற்கு செல்லுங்கள். உங்கள் படத்தினை எங்கு இணைக்கவேண்டும் என்பதை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.

9. Click "Edit HTML"

10. ^C (Ctrl + V)
முன்பு கன்ட்ரோல் சி போட்டதினால் உங்களின் கணினி கிளிப்பேடிற்கு வந்திருக்கும் அதன் html codes இப்பொழுது இங்கு வெளிப்படும்.

11. Click Preview (இப்பொழுது உங்களின் படம் தெரிந்தால் சேமிக்கவும்).


Image hosted by TinyPic.com

Sunday, March 20, 2005

அன்பின் பாலம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாத்தில் சிறந்த செயல்...
பசித்தவருக்கு உணவளிப்பதும்
தெரிந்தவர் தெரியாதவர் பேதமின்றி ஸலாம் உரைப்பதும். -(புகாரி,முஸ்லிம்)


அல்லாஹ்விடத்தில் மனிதர்களில் உயர்ந்தவர்
ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பம் செய்பவரே!
(ஆபூதாவூத், திர்மிதி)

சாந்தியுடன் சுவனத்தில் நுழைய
ஸலாத்தினை பரப்புங்கள்,
பசித்தவருக்கு உணவளியுங்கள்,
உறங்கும் வேளையில் தொழுங்கள்!
(திர்மிதி,அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் சபையில் நுழைந்த
முதல் மனிதர் : அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கூறினார்.
நபி(ஸல்) : பத்து நன்மைகள்! - என்றார்கள்.
இரண்டாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக்கூறினார்.
நபி(ஸல்) : இருபது நன்மைகள்! – என்றார்கள்.
மூன்றாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ! எனக்கூறினார்.
நபி(ஸல்) : முப்பது நன்மைகள்!-எனப்பகர்ந்தார்கள். -(அபூ தாவூத்,திர்மிதி)

உங்களில் ஒருவர் சபைக்கு சென்றால் ஸலாம் கூறட்டும்,
சபையிலிருந்து வெயியேரும் போதும் ஸலாம் கூறட்டும்.

(அபூ தாவூத்,திர்மிதி)

ஒருவர் ஒருவீட்டில் நுழையும் முன் "அஸ்ஸலாமு அலைக்கும்" என அனுமதி கோரட்டும்.

சிறியவர் - பெரியவருக்கும்,
நடந்து செல்பவர்-அமர்ந்திருப்பவர்க்கும்,
குறைந்த எண்ணிக்கையுடைய கூட்டத்தார்-அதிக எண்ணிக்கையுடைய கூட்டத்தினருக்கும் ஸலாம் கூறட்டும். -(புகாரி, முஸ்லிம்)

எங்கே போனது கூச்சம்?

அன்பு, மகிழ்ச்சி, துக்கம், சிரிப்பு, கேபம் என்று மனிதனுக்கு பல உணர்வுகள் இருப்பது போல கூச்சம் என்பதும் ஒரு உணர்வாய் இருக்கிறது. கூச்சம் என்பது வெட்கத்தின் வெளிப்பாடு எனவும் சொல்லலாம். வெட்கத்தைப்பற்றிய

நபி(ஸல்) கூறினார்கள்: வெட்கம், நலவைத் தவிர வேறெதனையும் கொண்டு வராது. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம். அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன்(ரலி))

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி))

கன்னிப் பெண் தன் அறையில் வெட்கப்படும் வெட்கத்தை விட மிக அதிகமாக நபி(ஸல்) வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வெறுப்பான ஏதாவதொரு விஷயத்தை அவர்கள் பார்த்தால், (அவர்களின் வெறுப்பை) அவர்களின் முகத்தில் நாங்கள் அறிந்து கொள்வோம். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரி(ரலி))

வெட்கம் என்ற நல்ல பண்பை அல்லாஹ் என்றும் நம் அனைவருக்கும் அருள்வானாக!

இத்தகைய நல்ல பண்பு இன்று சிதறடிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் பாகுபாடின்றி எல்லாத் தவறுகளும் எல்லோரும் செய்யக்கூடியவர்களாகி விட்டார்கள்.

கூச்சம் என்பது சமுதாயத்தில் சிறிது சிறிதாக எப்படி களையப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணங்களான சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் எப்படிப் பங்களிக்கின்றன, பெண்களின் நவீன உடைக் கலாச்சாரம் எப்படியெல்லாம் சமுதாயத்தில் நச்சு விதைகள் விதைக்கிறது என்பது குறித்து வெ. இன்சுவை(பெண் எழுத்தாளர்) தினமணியில் எழுதியிருந்த "கூச்சம்" - ஒரு மெய்ப்பாடு என்ற கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

- மாலிக் கான்.


'சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சமுதாயத்தின் மேல் தட்டு திருமணம். வழக்கம்போல் பணம் பேசிக் கொண்டிருந்தது. அனைவரின் செவிப்பறையும் இசைக்குழவினர் கிழித்துக்கொண்டிருந்தனர். ஒரு கானாப் பாடலை அவர்கள் பாட ஆரம்பிக்க, அங்கே நான் பார்த்த காட்சியால் அதிர்ந்து போய்விட்டேன். ஓர் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி(பாட்டி!) எழுந்து அந்த பாடலுக்கேற்றவாறு ஆட ஆரம்பித்துவிட்டார். அப்பப்பா! என்ன ஆட்டம்? தான் ஆடியதோடல்லாமல் பக்கத்திலிருந்த சில பேரிளம் பெண்களையும் இழுத்து ஆடவைத்துவிட்டார். இது எப்படிச் சாத்தியம்?

இப்போதெல்லாம் மக்கள் எதற்காகவும், எப்போதும் கூச்சப்படுவது இல்லை. உண்மையில் "கூச்சம்" என்ற மெய்ப்பாடு பலரிடமும் கிடையாது. நான்கு பேர் பார்க்கிறார்களே! என்ன நினைப்பார்கள்? நம்மைப் பற்றித் தவறாக எண்ணுவார்களே! என்றெல்லாம் யாரும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

நாம் தினமும் பேருந்துகளிலும், மின்சார ரயில்வண்டிகளிலும், திரை அரங்குகளிலும் இன்னும் இதுபோன்ற பொது இடங்களிலும் காணும் காட்சிகள் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. பொது நாகரிகம் என்ன என்பதே ஏன் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

பொதுவாக மெத்தப் படித்தவர்கள் கூட மேடை ஏறி பலர் முன்னிலையில் பேசத் தயங்குவார்கள். எல்லோருக்கும் சபைக் கூச்சம் என்பது இருக்கும். அதன் அளவுகோல் வேண்டுமானால் மாறக்கூடும். ஒவ்வொரு மேடைப் பேச்சும் ஒரு பிரசவம் என்பார் நண்பர். ஆனால் இன்று பேச்சுக்கலை பிரமிப்பூட்டும் வண்ணம் வளர்ந்துள்ளது. சிறிது கூட பயம் இன்றி, தயக்கம் இன்றி, சிலசமயம் நாணமின்றிப் பேசுகின்றனர். யார் வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும், எப்படியும் பேசலாம் என்ற நிலைமை வந்து விட்டதால்தான் கண்ணியமும், நாகரிகமும் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன.

மக்கள் எதற்கும் கூச்சப்படுவதில்லை. தவறு செய்யக் கூசுவது இல்லை, பொய் பேசக் கூசுவது இல்லை, புறம் பேசக் கூசுவது இல்லை, பெற்றோரை உதாசீனப்படுத்தக் கூசுவது இல்லை, குற்றம் செய்யக் கூசுவது இல்லை, பிடிபட்டாலும் கூசுவது இல்லை. கைவிலங்குடன் சிரித்துக் கொண்டே செல்லக்கூடிய அளவிற்கு மனநிலை பெற்றிருக்கிறார்கள்.

நிறைய பேர் எதைச் செய்யவும், எப்படிச் செய்யவும் தனக்கு உரிமை உண்டு என்று எண்ணுகிறார்கள். யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டுமே, என்ன கவலை என்ற மனப்போக்கு. இதனால்தான் நாண வேண்டிய செயலுக்குக் கூட அவர்கள் நாணுவதில்லை.

உதாரணமாக உடை விஷயத்தில் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். உடுத்துவது அவரவர் சொந்த விஷயம் என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால் இவர்களின் அரைகுறை உடுத்தல், கண்ணியமில்லாத அலங்காரம் சமுதாயத்தில் தேவையற்ற நச்சு விதையைத் தூவுகிறதே! "சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிட்டு" பின்னர் பெண்களைக் கேலி செய்கிறார்கள், அவர்களிடம் தவறாக நடக்க முற்படுகிறார்கள் என்று வெற்றுப் புலம்பல் புலம்பி என்ன பயன்? வசீகரிக்கும் அலங்காரத்தை விட, வணங்க வைக்கும் அழகே ஆராதனைக்குரியது என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்? தனிமனித சுதந்திரம் என்பதையும் உடை அலங்காரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்தச் சமுதாயச் சீரழிவிற்கு நம் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் துணைபோகின்றன. தான் காசு பண்ண, கதாநாயகனை வெட்கமின்றிப் பெண் துரத்தித் துரத்தித் துடுக்காகப் பேசி வலிந்து சென்று கவர்ச்சி காட்டிக் காதலிப்பதாகக் காட்டுகிறார்கள் பல புண்ணியவான்கள். நேசத்தை இப்படியா நிஜவாழ்க்கையில் (ஆணின் மேலே விழுந்து) பட்டவர்த்தனமாக உணர்த்துகிறார்கள். இவர்களின் மிகையை நிஜம் என்று நம்பி, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இது மட்டுமல்ல - அருவருப்பான இரட்டை அர்த்த வசனங்களையும், பாடல்களையும் எழுத கைகள் கூசுவதில்லை. பணத்திற்காப் பண்பை விற்கக் கூசுவதில்லை.

நாகரிகத்தின் உச்சகட்ட சீரழிவு இன்றைய ஆண், பெண் சிநேகம். இருபாலரும் சேர்ந்து படிப்பதாலும், ஒன்றாக வேலை செய்வதாலும் பழக வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் சிநேகிதம் என்ற பெயரில் அவர்கள் பழகுவது பல சமயம் எல்லை மீறிப் போகிறது. பொது இடங்களில் அவர்கள் சிறிதும் நாணமின்றி நடந்து கொள்கின்றனர். பேருந்துகளிலும், திரையரங்குகளிலும், கடற்கரைகளிலும் அவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் நமக்குத்தான் கூச்சமாக இருக்கிறது. கணவன் மனைவியே ஆனாலும், நான்கு சுவர்களுக்கு வெளியே எப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறை வேண்டாமா? இதையெல்லாம் கற்றுக் கொடுக்க பள்ளிக் கூடமா வைக்கமுடியும்?

மற்றவர்களிடத்திலிருந்து வித்தியாசப்படும் போது நாம் கூர்ந்து நோக்கப்படுவோம். அப்போது எப்பேர்ப்பட்டவருக்கும் ஒரு சிறிதாவது கூச்சம் அல்லது தயக்கம் ஏற்படும். ஏற்பட வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறு ஏற்படாததுதான் ஆச்சரியமாக உள்ளது. பெரியவர்களின் இந்த நடவடிக்கையைப் பார்த்து குழந்தைகள் என்ன படிப்பினையைக் கற்றுக் கொள்ளும்? ஐந்து வயதிலேயே அழகிப் போட்டியில் பூனை நடை (Cat Walk) கற்று அரங்கை அசத்தப் பழகிக் கொள்கின்றனவே!

ஆனாலும் இக்காலக் குழந்தைகள் எதற்கும் பயப்படுவதில்லை. சபைக்கூச்சம் என்பது மருந்துக்கும் அவர்களிடம் இல்லை. எத்தனை அழகாகப் பாடுகிறார்கள்! பேசுகிறார்கள்! ஆடுகிறார்கள்! வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதே சமயம் அவர்களுக்கு முன்னிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லித் தர வேண்டும்.

இயற்கை உபாதையையும் எங்கே வேண்டுமானாலும் கழிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர். இதற்குக் கூட கூச்சப்படாதவர்களை என்னவென்று சொல்வது?

அடுத்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தவறு செய்பவர்கள் அனைவருமே தாம் செய்யும் தவறு வெளியே தெரியவே தெரியாது! கண்டிப்பாக மாட்டிக் கொள்ளமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கையுடன்தான் துணிச்சலாகச் செய்கிறார்கள். அலுவலகத்தில் கையூட்டு, கையாடல், "சைபர் கிரைம்" போன்ற படித்தவர்கள் செய்யும் குற்றங்கள், கொலை செய்துவிட்டு எதையோ பெரிதாகச் சாதித்ததுபோல் நடந்துகொள்ளும் பாவிகள், அடுத்தவர் பணத்தைத் திருடும் கேவலம்.. இப்படி குற்றங்களில்தான் எத்தனை வகை? ஆனால் செய்த குற்றம் அம்பலமாகி, பிடிபட்டுவிட்டால் முன்பெல்லாம் உறவும், நட்பும் அதைப் பெரிய அவமானமாகக் கருதித் துண்டித்துப் போகும். குற்றவாளியும் அவமானத்தால் சிறுத்துப் போவான். ஆனால் இன்று கைதாகி அழைத்துப் போகும்போது ஒருவித பெருமித சிரிப்புடன்தானே செல்கிறார்கள்? தவறு செய்தவர்களை ஒதுக்கி வைக்காமல் பணமும், அதிகாரமும் இருப்பவர்களை இச் சமூகம் அங்கீகரிப்பதுவும் இத்தகைய மனப்பான்மைக்குக் காரணம் எனலாம்.

சமூகம் எந்தச் சட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ, எதைப் பண்பாடு, கலாச்சாரம் என்று வகுத்திருக்கின்றதோ, "இது இப்படித்தான்" என்று எதற்கு ஓர் எல்லை வகுத்திருக்கிறதோ அதை எந்தத் தனிமனிதனும் மீறக் கூடாது. அப்போதுதான் நம் சமுதாயத்தில் ஓர் ஒழுங்கும், இசைவும், கட்டுக்கோப்பும் ஏற்படும். எதற்கு அச்சப்படவேண்டுமோ அதற்கு அச்சப்படவேண்டும். எதற்கு நாணம் கொள்ளவேண்டுமோ, அதற்கு நாணம் கொண்டால்தான் அழகு. தலைகுனிய வேண்டிய அவச்செயல்களுக்குத் தலைநிமிர்ந்தால் அச்செயல் சரி என்று ஆகிவிடாது.

தான் ஈட்டியுள்ள உயர்வான உணர்வை மனிதன் இழந்துவிடலாகாது. எனவே அவன் செய்ய வேண்டியதெல்லாம் தற்போதைய ஒழுங்கீனத்திலிருந்து மீள வழி காண்பதுதான். வயதுக்கேற்ற நடை உடையும், சிந்தனைகளும் அந்த வயதிற்கே உரிய அழகையும், கம்பீரத்தையும் கொடுக்கும். எப்போதும் மற்றவர் அருவருப்பால் முகம் சுளிக்கக்கூடிய எச்செயலையும் செய்யாமை இனிது.

தவறு செய்ய மனம் கூச வேண்டும், தீயவற்றைக் கேட்கும்போது காதுகளுக்குக் கூச வேண்டும், பொய் பேச வாய் கூச வேண்டும். கெட்டவற்றைப் பார்க்க கண்கள் கூச வேண்டும், இந்தக் கூச்ச உணர்வு தேவையானபோது ஏற்பட வேண்டும்.

நன்றி : தினமணி 11-03-2005.

Saturday, March 19, 2005

ரேடியோ ரியாத்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வழக்கமா இரவு 11 மணிக்கு தூங்குவதுக்காக படுக்கைக்கு போறது பழக்கமாயிபோயிருச்சு. எதைத் தள்ளிப்போட்டாலும் போடுவேன் தூக்கத்தை தள்ளிப்போடுறது முடியாத ஒண்ணாயிடுச்சு..

காதுல வாக்மேனோட கிளாசிக் சாங்ஸ்சும், ரொமாண்டிக் சாங்ஸ்சும், அல்டிமேட் ஹிட்ஸும் கேட்டுகிட்டே தூங்குன காலம் எல்லாம் மறந்தே போயிடுச்சு. மியூசிக் இஸ்லாத்துல கூடாது என்பதால ஓரங்கட்டி வைச்ச நிறைய பாட்டு கேசட்.. எல்லா கேஸட்டுக்குள்ள இருக்கிற ரீலும் கெட்டுப் போயிடுச்சு..

எப்படியாவது "அம்ம ஜுஸ்" (30th part of Quran) மனப்படாம் செஞ்சிடனும் எங்கிறது என்னோட இரண்டுவருட திட்டம் இன்னும் நீண்டுகிட்டேயிருக்கு.. இனிமே மனப்பாடம் செஞ்சாலும் அதை வைச்சு போட்டியில கலந்து பிரைஸ் ஒண்ணும் வாங்க முடியாது, ஏன் என்னா இப்பொ எல்லாம் சின்ன வயசுலேயே புள்ளைங்க எல்லாம் ரொம்ப அழகா மணப்பாடம் செஞ்சிடுறாங்க.. வயசு முப்பதத் தொடப்போவுது.."அம்ம ஜுஸ்" மணப்பாடம் செய்யமுடியில வெக்கமாயிருக்கு..

இருந்தாலும் என்னோட முயற்சி தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.. டெய்லி இமாம் காரித் அஷ்ஷாப் முஹம்மது அல் பர்ராக் அவங்களோட இனிய குரலில் இருக்கிற அம்ம ஜுஸ் கேஸட்டை கேட்டுகிட்டே தூங்குற பழக்கம்..

தினமும் ஒரு முறை, இரண்டு முறை என்னு கேட்டு கேட்டு கேஸட்டு தேஞ்சு போச்சு.. பலமுறை கேஸட்டோட ரீல் டேப்ல சுத்திக்கும், சில டைம்ல டேப் இழுக்கும் போது தூக்கத்துல பட்டுன்னு ஆப் பண்ணுல என்னா கடிச்சு வைச்சிடும் (டேப் கடிக்கிறது என்னையில்ல கேஸட் ரீலை. சரி நானும் உங்களைக் கடிக்கில விஷயத்துக்கு வர்ரேன்)

இப்படித்தான் 15.03.2005 அன்று டேப்ல ரீல் சுத்துகிச்சு... கேஸட் சுத்தி நின்னா, உடனே தூக்கத்தில இருந்துகிட்டே டேப்பை நிறுத்திட்டு, ரேடியோ மோடுக்குத்(Mode) தாவிடுவேன். M.B.C ரேடியோவுக்குப்போன அங்கேயும் அரபி பாட்டுகள் (ஹபீபீ ஹபீபி பாட்டுக்கள்)தான் ஒலிக்கும் என்பதால..டிஃபால்டா(Default) என்னோட ரேடியோ மோடு அல்-குர்ஆனில் கரீம் மம்லகத்துல் அரபித்துஸ் ஸவுதியா' (The Quran Radia - Kingdom Of Saudi Arabia) வுலதான் இருக்கும்..

செல்போன் ரேஞ்சு பிராப்ளம் மாதிரி என்னோட ரேடியோவிலும் ரேஞ்சு பிராப்ளம் போலிருக்கு. ஓ பிரிக்கோன்ஸி (Frequency) பிராப்ளமா? கர்.. கொர் என்னு சத்தம்தான் வந்திச்சு குர்ஆன் கிராத் எதுவும் வருல.. அங்கேயும் பிரச்சனை என்னு லேசா ரேடியோ டியூனரை சுழட்டுனேன்.

தி ரேடியோ ரியாத் இங்லீஷ் பிராட்காஸ்டிங் சர்வீஸ் என்னு கிளியரா கேட்டிச்சு இதையே கேக்கலாம் என்னு சவுண்ட் கொஞ்சம் இங்க்கிரீஸ் பண்ணுனேன்.

(எதையோ நான் ரீல் சுத்தப்போறேன் என்னு நினைக்கிறீங்களா? என்னோட டேப்தான் ரீல் சுத்துனதே ஒழிய, நானில்ல!)

ரேடியோ ரியாத்ல எப்பவுமே 9 மணியிலேருந்து நல்ல புரோகிறாம் எல்லாம் இருக்கும்.. அதுல ஒண்ணு பெரிய பெரிய டாக்டர்ஸ், இன்ஜினியர்ஸ், மினிஸ்டர்ஸ் என்னு பல பிரபலங்களையெல்லாம் பேட்டி எடுக்கிறது.

நேத்து நான் கேட்ட பேட்டி ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான பேட்டி.. பேட்டிய முடிஞ்ச அளவுக்கு அப்படியே சொல்லுறே கேட்டுக்குங்க..(தூக்கத்துல கேட்டாலும் தெளிவா புரிஞ்சுகிட்ட விஷயங்களைத்தான் சொல்றேன்)

பேட்டி எடுக்கப்பட்டவர் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன் நாட்டு சகோதரரர்..
பெயர் என்னா என்னு கேட்டதுக்கு அழகாச் சொன்னாரு அப்துர்ரஹ்மான் என்னு,
எங்கே வேலை செய்யிறீங்க? - "யான்பு" வில இருக்கிற சஹ்ரான் கம்பெனியில
என்னாவா இருக்கீங்க? - ஆட்டோகாட் ஆப்பரேட்டரா
எப்போ இருந்து இருக்கீங்க? - 1996ல் இருந்து
எப்போ இஸ்லாத்தை ஏத்துக்கிட்டீங்க? - 4 வருஷத்துக்கும் மேல ஆயிருச்சு.
இஸ்லாம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? - தாஃவா சென்டர்ல இருந்துதான் முதலில் ஆரம்பமாச்சு, நிறைய டிரான்ஸ்லேஷன் (translation) இருக்கிற புக்ஸ் எல்லாம் கொடுத்தாங்க, இங்கிலீஷ் குர்ஆனை கொடுத்தாங்க அதெல்லாம் நான் படிச்சு பார்த்தேன்.

பிலிப்பைனில் இருக்கும் போது எவரி சண்டே சர்ச்சுக்குப் போயிடுவேன், பைபிள் படிச்சிருக்கேன். இங்கே எனக்கு இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன் குர்ஆன் கொடுத்ததும் அதோட நான் ஒப்பிட்டுப் பார்த்தேன், இரண்டுக்கும் இருக்கிற சிமிலாரிட்டீஸ் என்னா என்னு பார்த்தேன்.

கிரிஸ்டின்ஸ் ஜீஸஸ்'ஐ கடவுளாக்கிகிட்டது தவறான கொள்கை என்பதை உணர்ந்தேன். அதனால நான் இஸ்லாத்தை ஏத்துக்கிட்டேன்.

இஸ்லாத்தை எப்படியெல்லாம் நீங்க விரும்புறீங்க? - முஸ்லிம்கள் எல்லாம் நல்லவங்களா இருக்கிறது, மென்மையா பழகுறது இதெல்லாம் எனக்கு ரொம்பவே பாதிச்சது. பிடிச்சிருந்தது. காலையிலேயே நான் தூங்கிட்டு இருக்கும் போது பள்ளியில கொடுக்குற இனிமையான அந்த பாங்கு "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்" கேக்கிறத்துக்கு நல்லா இருக்கும். அதைக்கேட்டவுடனே நான் எழுந்திருச்சுடுவேன்.

பிஸ்மில்லாஹ் என்று சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். சொல்லுறத்துக்கு சுருக்கமாகவும் இருக்கு. In the Name Of God, In the Name Of Jesus என்னு சொல்றதை விட பிஸ்மில்லாஹ் என்னு சொல்றது நல்லாயிருக்கு. "அல்ஹம்துலில்லாஹ்" இஸ்லாம் எனக்குக் கிடைச்சிருச்சு..

உங்கக் குடும்பத்தைப் பற்றி?

அப்பா இஸ்லாமியன், அம்மா தீவிர கிரிஸ்டின் அவங்களும் இப்பொழுது இஸ்லாத்தைப் படிச்சுட்டு வர்ராங்க! அதனால நான் இஸ்லாத்தை ஏத்துக்கும் போது எந்தவிதமான எதிர்ப்பும் எனக்கு இல்லை!

நீங்க இஸ்லாத்தை ஏத்துக்கிட்டதுக்குப்பிறகு உங்க சக நண்பர்கள் எப்படி உங்ககிட்ட பழகுனாங்க? - நான் இஸ்லாத்தை ஏத்துக்கிட்டதுக்கு பிறகு இங்கே இருக்கிற நண்பர்கள்கிட்ட நான் எந்த விதமான மாற்றமும் பார்கவில்லை. என்னோட அவங்க தர்க்கம் பண்ணல.. நான் 2002 வெக்கேஷன் லீவுல பிலிப்பைன்ஸ் போன போது என்னோட நண்பர்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரியாகப் பேசினாங்க..

2001, செப்டம்பர்-11 அட்டாக் நடந்து முடிந்த நேரம் அது, அப்போ என்னோட நண்பர்கள் எல்லாம் முஸ்லிம்கள் எல்லாம் கொடுமையானவங்க.. இஸ்லாம் வந்து வன்முறையானது என்னு எல்லாம் சொன்னாங்க.. அவங்ககிட்ட நான் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் விளக்கிச் சொன்னேன்.

முஸ்லிம்களுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் எங்கிறது அமைதியான மார்க்கம். என்னு சொன்னேன்.. ஒரளவிற்கு விளங்கிக் கொண்டார்கள். அவங்க என்னிடத்தில் கேட்டது ஒரு இங்கிலீஷ் டிராஸ்லேஷன் குர்ஆன். அதுக்கு பதிலா நான் மூணு இங்கிலீஷ் குர்ஆன் கொடுத்து அனுப்பினேன்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது என் மனதுக்கு திருப்தியளிக்கிறது. என்னு செல்லிமுடிச்சார். பேட்டி எடுத்தவரும் நன்றிசொல்லி பேட்டிய முடிச்சுகிட்டார்.

நான் மூணு வருஷமா வேலை செய்யிற கம்பெனியிலும் பீபீங்க(பிலிப்பைன் நாட்டுக்காரங்க) நிறைய பேர் வேலை செய்யிறாங்க.. சகோதரர் அப்துர் ரஹ்மானோட இங்கிலீஷ் பேச்சு எனக்கு தெளிவா விளங்கிச்சு.

கிட்டத்தட்ட நானும் சகோதரர் அப்துர் ரஹ்மான் மாதிரிதாங்க.. பேரளவுக்கு முஸ்லிமா இருந்துட்டு வந்தாலும் உண்மையான இஸ்லாம் நான் தெரிஞ்சுகிட்டது ஜித்தா தஃவா சென்டர்லதாங்க.. தமிழ் மீனிங்கோட குர்ஆனை படிச்சுட்டு வர்ரேனுங்க.. அவர் சொல்லுற மாதிரி இஸ்லாம் எங்கிறது எவ்வளவு ஒரு தெளிவான மார்கம். எப்படியோ சகோதரர் அப்துர் ரஹ்மான் பேட்டிய உங்களுக்குச் சொல்லுற சாக்குல என்னோட பேட்டியும் உங்களுக்குச் சுருக்கமா சொல்லிப்புட்டேனுங்க..

இதை ஏய்யா இங்கே வந்து சொல்லுறே என்னு கேக்கிறீங்களா? (www.tamilmuslim.blogspot.com வேற எதுக்கா தொறந்து வச்சுறுக்காங்க)

நானும் ஒரு எழுத்தாளனா மாறுனும் என்னு நிறைய ஆசையிருக்குங்க.. இஸ்லாம் எங்கிறது அமைதியான மார்க்கம் என்னு புதுசா இஸ்லாத்தை ஏத்துக்கிட்ட பிலிப்பைன் சகோதரர் அப்துர்ரஹ்மான் தன்னோட நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது, நானும் இந்த எழுத்து மூலமா இஸ்லாத்தை என்னோட நண்பர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா?

படிக்கிற உங்களுக்கும் அந்தமாதிரி ஏதாவது எண்ணம் உண்டானா பட்டுன்னு கீழேயிருக்கிற ஸ்டெப்ஸ் ஃபால்லோ பண்ணுங்க..

http://tamilmuslim.blogspot.com/2005/01/blog-post.html

நீங்களும் உங்களோட எழுத்துப்படைப்புகளை போஸ்ட் பண்ணுங்க.

என்னைப்போல எழுத்துப்பயிற்சி எடுக்கிறத்துக்கு இடம் செஞ்சு கொடுத்ததுக்கு நன்றிங்க! பொறுமையா படிச்ச உங்களுக்கும் நன்றிங்க..

கேஸட்டை சரிசெஞ்சு அம்ம ஜுஸ் மணப்பாடம் செய்யுனுமுங்க! நானு வர்ரேனுங்க...

வஸ்ஸலாம்.

-மாலிக் கான்-

Friday, March 18, 2005

தொழுகையின் முக்கியத்துவம் (பகுதி 4)

இத்தொடரின் நோக்கம், மார்க்கத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட சகோதரர்கள், தொழுகையின்பால் மக்களை ஆர்வமுட்டுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகளையும் (உதாரணம்: சூஃபிச கதைகள்) இல்லாத நன்மைகளையும் (உதாரணம்: ஜக்கரியா அவர்களின் அமல்களின் சிறப்புகள்) சொல்லலாம் என நினைக்கிறார்கள். இதற்கு காரணம் இதன் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்டோ அல்லது பிற்காலத்தில் இவைகள் அறிமுகப்படுத்துப்பட்டு அதன்பால் கவரப்பட்டோ இருக்கலாம். இது ஒருவகை அறியாமையே. குர்ஆனும் சுன்னாவும் நமது தாய்மொழியில் கிடைக்காத கால கட்டத்தில் நம்மீது திணிக்கப்பட்ட அறியாமையாகும்.

நாமும் இச்சூழலில் இருந்திருக்கிறோம். தவறு என்று தெரிந்தப்பின்னர் அத்தவறுகளை விட்டு ஒதுங்கி நல்லதின்பால் நகருவது ஒரு புத்திசாலிக்கு அடையாளமாகும். அதனால்தான் நபி(ஸல்) சொன்னார்கள், "ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறுசெய்பவர்தான். அதில் சிறந்தவர்கள் அத்தவறுகளை நீக்கி பாவமன்னிப்பு கேட்டு மீள்பவரே" என்று.

முந்தைய மூன்று தொடர்களிலும் இபாதத் என்றால் என்ன?, தொழுகை ஏற்படுத்தும் நற்பயிற்சி மற்றும் தொழுகாதவர்களின் மறுமைநிலை எனப் பார்த்தோம். மவ்லானா அபுல்அஃலா மெளதூதி அவர்களின் குத்பா பேருரைகளின் நற்கருத்துகளையும், கூடவே தொழுகையாளியாக இல்லாதவனுக்கு கொடுக்கப்படும் தண்டனைப்பற்றி "ஃபிக்ஹு சுன்னா" ஆங்கில வெளியீட்டிலிருந்து எடுத்து தொகுத்தது ஒருவகையில் எனது எழுத்துப்பயிற்சியாக அந்த ஆரம்பநாட்களில் தெரிந்தோ தெரியாமலோ அமைந்துவிட்டது. மெளதூதி அவர்களின் இக்கருத்துகள், எனக்கு கான்வென்ட் வாழ்க்கையைத்தான் ஞாபகப்படுத்தியது.

சுன்னாவில் இத்தனை நல்லவைகள் இருந்தாலும் ஏனோ சிலர் சூஃபிச தத்துவத்திற்கு போகிறார்கள். சூஃபிச தத்துவங்கள் வேண்டுமானால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் அதிகமானவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்று புரிந்துக் கொள்ளவேண்டும். சூஃபிச கருத்துகளாக மக்கள் முன் நடமாறுபவை வடிக்கட்டப்பட்டவையே. இதிலும்கூட இத்தனை அபத்தங்கள் நிறைந்திருந்தால், சூஃபிசத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள். இன்னும் அது நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் அமைந்திருக்கிறது.

பாட்டுகூட இப்படித்தான் சில நேரத்தில் அமைந்துவிடுகிறது. பாட்டு என்றவுடன் ஒரு செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. எனது காரைக்கால் நண்பன் ஒருவன், "ஒரு கையில் தம்ரூட்டு, மறுகையில் பிஸ்கோத்து, இருக்கையில் நமக்கென்ன கலக்கம்ம்ம்ம்ம், இனி, கண்களில் ஏன் இந்த மயக்கம்ம்ம்.. கண்களில் ஏன் இந்த மயக்கம்ம்ம்" என்று விளையாட்டாக பாடுவான்.

ஒருகையில் இறைவேதம் மறுகையில் நபி-போதம் போய், சில மக்களுக்கு தம்ரூட்டு போல சூஃபிச கதைகளும், பிஸ்கோத்து போல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் இனிப்பில் ஏன் இந்த மயக்கமோ தெரியவில்லை.

ஒருவன் ஈமான் கொண்டபின்னர், அந்த நேரத்திற்குரிய தொழுகையை அவன் உடனே நிறைவேற்றவேண்டிய முதல் விஷயமாக ஆகிவிடுகிறது. ஐந்து கடமைகளில் ஈமானுக்கு அடுத்தவிஷயமல்லவா.

கான்வென்டில் சேர்க்கப்பட்ட ஒரு சிறுவன், தினமும் வைகறையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதும், யுனிபார்ம் உடுத்தி அசெம்பிளிக்கு சென்று பள்ளியறையில் அமர்வதும் வாடிக்கையாக்கி கொள்கிறான். கான்வென்ட் பயிற்சியை மனதார ஏற்றுக்கொண்டவன் நல்ல நிலைமைக்கு முன்னேறுகிறான். கான்வென்ட் பயிற்சி திணிக்கப்பட்டவன் பிறகு தனது பயிற்சி தந்த விஷயங்களை செயல்படுத்தாது மது நிலையங்களில் கும்மாளமிடுகிறான்.

ஆனால், படித்துவிட்டு பிற்காலத்திலும் வைகறையில் எழுந்து அதேபோல உடற்பயிற்சி செய்துவிட்டு சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்லும் ஒருவனிடம், அவனின் செயல்பாடுகள் நன்றாக, துள்ளியமாக இருப்பதற்கு காரணம் கேட்டால், கான்வென்ட் பயிற்சி என்பான்.

தொழுகையும் மனிதனுக்கு இத்தகைய பயிற்சியை அளிக்கின்றது. இன்னும் இதைவிட அதிகமாகவே அளிக்கின்றது. ஆனால் கான்வென்ட் போல இயந்திரதனம் இருக்காது. பசித்தவன் அவனுக்கு முன்வைக்கப்பட்ட உணவை முடித்துவிட்டு பள்ளிக்குச்செல்லலாம் என்கிறது இஸ்லாம். இயந்திரத்தனமாக மூர்க்கம் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டில் பார்க்க முடியாது.

ஒரு மனிதன் தொழுதானா இல்லையா என்று பள்ளியின் தலைவரோ, தாய் தந்தையோ அவனை கட்டுப்படுத்த முடியாது. காரணம் நாளின் ஐந்து வெவ்வெறு நேரங்களில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவன் உடற்பயிற்சியில் இருக்கலாம், மீட்டிங்கில் இருக்கலாம், தொழிற்சாலையில் உற்பத்தியில் இருக்கலாம் அல்லது கணினிக்கு முன்னே உட்கார்ந்து புது நிரலி கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கலாம். இவனுக்கு தொழுகையை அந்தந்த நேரத்திற்கு தொழுக வேண்டுமென்று சொல்வதற்கு சூஃபிச கட்டுக்கதைகள் முக்கியமில்லை அதில் உண்மையும் இல்லை. இவனுக்கு தேவையெல்லாம் இறைவனைப்பற்றிய நம்பிக்கையும் மறுமையைப்பற்றிய பயமும் ஐந்து நேர இறைவணக்க அசெம்பிளிக்கு செல்லவில்லையென்றால், கிடைக்கக்கூடிய மறுமை தண்டனைப்பற்றிய நினைவூட்டலும்தான்.

நண்பர்கள் சிந்திப்பார்களா?

Thursday, March 17, 2005

விமர்சனம் - விளக்கம்.

ஒருவரின் கருத்தை மறுக்கவில்லை என்பதால், அக்கருத்தில் முழு உடன்பாடு உண்டு என்பது அர்த்தமல்ல. சகோதரர் ஹமீத் ஜாஃபர், சகோதரர் நேசகுமாருக்கு எழுதியது, அதற்கான எதிர் கருத்தை நேசகுமார், ஹமீத் ஜாஃபருக்கு எழுதியது. இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தொடர்ந்து வாசிக்க.. நேசகுமாரும், ஹமீத் ஜாஃபரும்.

Wednesday, March 16, 2005

திசைகளின் பூந்தோட்டத்தில்..

"திசைகள்" மாத இதழ் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் கருத்தைக் கவர்ந்த வலைப்பதிவுகள் சிலவற்றை தொகுத்து வெளியிட முன்வந்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இதில் இரண்டாவது வாரத்தில்.. திசைகளின் பூந்தோட்டத்தில் த்சு.. த்சு..

மத்ஹபுகளின் பெயரால் இடைச்செருகல்கள்.

மத்ஹபுகளை பின்பற்றுகின்றவர்களில், மத்ஹபுகளில் பிடிவாதம் கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் மத்ஹபு கூறும் சட்டங்களுக்கு சாதகமாக பல ஹதீஸ்களை புனைந்து கூறினார்கள்.ஒவ்வொருவரும் தாங்கள் பின்பற்றும் இமாமை புகழ்ந்து கூறி, ஹதீஸ்களை உருவாக்கி கூறிவிட்டு அதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்லி விட்டனர்.

"என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார் அவருடைய பெயர் நுஃமான் பின் ஃதாபித், அவர் அபூஹனீபா என்றப் புனைப்பெயரால் அழைக்கப்படுவார். அவர் தனது கையால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தையும், என் சுன்னத்தையும் உயிர்ப்பிப்பார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு பொய்யைத் துணிந்துக் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் அடுத்த மத்ஹபுடைய இமாமை தாழ்த்தியும் பல ஹதீஸ்களை உற்பத்தி செய்தனர். (தாரீகு பக்தாது)
''என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார், அவருடைய பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் (ஷாஃபீ). அவர் என்னுடைய உம்மத்தைக் கெடுப்பதில் இப்லீஸைவிட மிக மோசமானவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

சிலர் தாங்கள் பின்பற்றுகின்ற மத்ஹபு கூறுகின்ற சட்டங்கள் நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக சில ஹதீஸ்களைப் புனைந்து கூறியுள்ளனர்.

''யார் தனது தொழுகையில் கையை உயர்த்துகிறானோ அவனுக்குத் தொழுகை இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர். காரணம் தொழுகையில் கையை உயர்த்தக் கூடாது என்பதுதான் அவர்களின் மத்ஹப் சட்டம். (அஸ்ஸுன்னத் வமாகானதுஹா)
தொழுகையில் இமாம் பிஸ்மியை சப்தமிட்டு ஓதவேண்டுமென்ற மத்ஹபுடையர்கள் அவர்களின் மத்ஹபுக்குச் சாதகமாக பின்வருமாறு ஒரு பொய்யான ஹதீஸை உற்பத்தி செய்து கூறினர்.

''காஃபத்துல்லாஹ்வில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு இமாமாக நின்று தொழுதார்கள் அப்போது பிஸ்மியை சப்தமிட்டு ஓதினார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகக் கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

மத்ஹபு வெறிபிடித்தவர்கள் இது போன்ற பல ஹதீஸ்களை இடைச்செருகல் செய்துள்ளனர். அவை அவ்வப்போது மக்களுக்கு இனம் காட்டப்பட்டு வந்துள்ளது.

தொழுகை (பகுதி 5)

வெளிநாட்டிற்கு செல்கையில் ஒரு பழம் ஒன்றை சாப்பிடுகிறோம். மிகவும் சுவையாக உள்ளது. அதை பற்றி நாம் அந்த பழத்தை பற்றி கேள்வியும் பட்டிராத ஒருவரிடம் சொல்லும் போது அதன் சுவையை முழுமையாக எடுத்து கூறி விட முடியாது.

அப்படி எடுத்து கூறும் போது எதிராளிக்கு தெரிந்த ஒரு பழத்தை பற்றி இந்த பழம் போல் இருந்தது அந்த பழம் போல் இருந்தது என்று தான் சொல்ல இயலுமே தவிர அதன் தனித்தன்மை பெற்ற சுவையை முழுமையாக விளக்கி விட முடியாது.

இந்த உதாரணத்தை பெருமானார் வாழ்வில் நடந்த பல சம்பவங்களுக்கு மேற்கோள் காட்ட முடியும். அவர்கள் மிஹ்ராஜ் சென்றது, அவர்களுக்கு வஹி வந்தது, இப்படி பல சம்பவங்கள்.

அனுபவித்து அடைந்த பேரின்பத்தை விளக்க வார்த்தைகள் கிடையாது. மொழியின் குறைகளினால் தான் அல்லாஹ்வை கூட அவன் இவன் என்று வழங்கி வருகிறோம்.

பெருமானார் சொன்னார்கள் 'இறைவணக்கம் என்பது எனக்கு கிடைத்த உலக இன்பங்களில் ஒன்று..' என்று.

அவர்கள் அடைந்த பேரின்பம் வார்த்தைகளில் இல்லை.. அது இறைவணக்கத்தில் தான் உள்ளது..

(தொடரும்)

Tuesday, March 15, 2005

சொல்லட்டுமா?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நன்மைகளின் வாயில்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நோன்பு (பாவங்களைத் தடுக்கும்) கேடயமாகம். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல, அது பாவத்தைப் போக்கிவிடும் மேலும் நடு இரவில் (தஹஜ்ஜத்) தொழுவதுமாகும். விஷயத்தில் தலையானதையும் அதன் தூணையும், அதன் உச்சியையும் அறிவிக்கட்டுமா? விஷயத்தில் தலையானது இஸ்லாம், தூண் தொழுகை, உச்சி ஜிஹாத், இவையனைத்தையும் ஒன்று சேர்க்கும் உறுதியான விஷயத்தை அறிவிக்கட்டுமா நாவைத் தடுத்துக் கொள்வீராக மக்களை முகம்குப்புற நரகில் வீழ்த்துவது நாவின் விளைச்சல்கள்தான். எனப் பகர்ந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

(அறிவிப்பாளர் : முஆத்(ரலி), ஆதாரம் : திர்மிதி)

நன்றி: பட்டினத்தான்

Monday, March 14, 2005

கற்காலம் கட்டுரையின் விளக்கம்.

கற்காலம் கட்டுரையின் முரண்பட்ட கருத்தை சுட்டிக்காட்டியுள்ளேன்!

கற்காலம் சொல்லும் கருத்து!?

உடற்பயிற்சி டிப்ஸ்

நடைபயிற்சி (Walking) - ஓர் சிறந்த உடற்பயிற்சி (Exercise)

உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது எனில் உடற்பயிற்சியும் சிறந்த உணவுப் பழக்கமுமே ஆகும். உணவுப்பழக்கத்தில் எல்லோருமே கவனம் எடுத்துக்கொள்கிறோம். அதுபோல உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பரவலாக பேசப்படும் காலம். உடற்பயிற்சிக்கென்றே எல்லாவித கருவிகளுடனும் உடற்பயிற்சி மையங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் வேளையில் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எத்தனை முக்கியம் வாய்ந்தது என்பதனை ஒவ்வொருவரும் சற்றாவது அறிந்து நடைமுறைப்படுத்திக் கொள்வது சிறந்து.

நகரத்து மக்களிடத்திலேயே இந்த உடற்பயிற்சிப் பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 16 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகமாக உடற்பயிற்சியை செய்பவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 29 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆர்வம் உடற்பயிற்சியிலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விளையாட்டுகளிலும் அதிகமாகியே வருகிறது.

உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஒரு நவீன பழக்கமுமாக மாறிவருகிறது. நகரத்து மக்கள் பலர் உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று உடற்பயிற்சியை செய்யவில்லையெனினும் சாதாரணமாக நேரத்தை ஒதுக்கி நடக்கவோ அல்லது சைக்கிள் ஓட்டுவதோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சைனா, நெதர்லாண்ட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அலுவலக வேலைக்குச் செல்பவர்கள் பலர் வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வதையோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடைபயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்ததும் தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். நடைபயிற்சியை தினமும் பழக்கமாக்கிக் கொள்வதால் உடல் இரத்த ஓட்டமானது சீராகிறது, நுரையீரல் சுவாசம் சீராகிறது, உணவு செரிமானம் சீராகிறது மேலும் இது உடலை வலுப்படுத்துவதோடல்லாமல் மூளையை நன்றாக புத்துணர்ச்சியாக்குகிறது. பிறறிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது.

நடை பயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கிலோமீட்டர் வரை செல்வதாகும். நான்கு மணிநேரம் நீந்துவதும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்குச் சமமானதே. அல்லது 20 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பதும் இதற்குச் சமமானதே.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் இருப்பவர்கள் லிப்ட்டைப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடை பயிற்சியின் தேவையை சற்று சமன் செய்து கொள்ளலாம்.

நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைபயிற்சியின்போது உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லாபாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.

நாள்தோறும் நடைபயிற்சியை செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்குகிறது.

நடை பயிற்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது. குறிப்பாக முதுமையடைந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது.

அலுவலகம், வேலை, உறக்கம் மீண்டும் அலுவலகம், வேலை, உறக்கம் என்று சக்கரம்போல தினசரி வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்களுக்கு உடற்பயிற்சி என்பது மறந்தே போய்விட்டது. சில கனமான பொருட்களை இடம்மாற்ற வேண்டுமெனினும் பிறர் உதவியை நாடுபவர்களாகிவிடுகிறார்கள்.


எனவே நடைபயிற்சியை (Walking) மேற்கொள்வோம்! இத்தகைய நிலையைத் தவிர்ப்போம்! ஆரோக்கியம் காப்போம்!

மாலிக் கான்.

Sunday, March 13, 2005

பன்றிக் கொழுப்பு.. உஷார்..

கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்குமுகமாகவே இருந்தது…அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி…

அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக… E-904, E-141 என்று.

இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது “உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்” என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.

சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?

உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.

இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.

பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.

பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு (யுniஅயடள குயவ) அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.

இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.

இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.

E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிhPம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes) , டோஃபி (Toffees) , டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.
பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்ந்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.

இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.

E100, E110, E120, E 140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475,E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்-குர்ஆன்-2:173)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம் : அனஸ்(ரலி))

இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!

சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்;பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.

இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்;துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி “சிப்பாய்க் கலகம்” என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.

சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பிடங்களிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.

தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அத்தமான முறையில் இறந்துகிடப்பபர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச் செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.

''நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். ''அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)

நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.

-மாலிக் கான்

விவாதங்களில் வெற்றி பெறுவது எப்படி?

விவாதங்களில் வெற்றி பெற நிறையப் படிக்க வேண்டும் - அருளடியான்

திண்ணை இணைய வார இதழில் இஸ்லாத்தைப் பற்றி விமர்சித்து நிறைய கட்டுரைகள் பிரசுரமாகின்றன. அக்கட்டுரைகளில் சில வரிகளை ஆசிரியர் குழு நீக்கங்கள் செய்தும் வெளியிடுகிறது. எனவே, அக்கட்டுரையாளர்கள் தங்களுக்கு தனி வலைப்பக்கங்கள் தொடங்கி இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் விமர்சனங்களை எழுதி வருகின்றனர். இவ்விமர்சனங்களை 1. முஹமது நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்து தனிப்பட்ட வாழ்க்கை மீதும் விமர்சனம். 2. இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் மீதான விமர்சனம்-குறிப்பாக பெண்களுக்கான சட்டங்கள் மீது விமர்சனம் 3. முஸ்லிம் நாடுகளின் சட்டதிட்டங்கள் மீதான விமர்சனம் 4. பர்தா முறை மீதான விமர்சனம் 5. முஸ்லிம்களிடம் நிலவும் ஃபிக்ஹு கருத்து வேறுபாடுகள் மீதான விமர்சனம் 6. ஷியா-சன்னி வேறுபாடு பற்றிய விமர்சனம் எனப் பிரிக்கலாம். எனக்குத் தெரிந்த வரை வகைப்படுத்தியுள்ளேன். மேலும் பல பிரிவுகளாகவும் பிரிக்கலாம். தமிழ் நாட்டில் இஸ்லாத்தைப் பற்றி விமர்சிப்பவர்கள், பத்தாண்டுகளுக்கு முன் இருந்ததைப் போல இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே புரியாமல் விமர்சிக்கவில்லை. குர் ஆன் தமிழாக்கம், முஹம்து நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு, ஹதீஸ் நூல்கள், இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் - இவற்றைப் படித்து விட்டு விமர்சிக்கிறார்கள். இவர்களது மேற்கோள்களில் சில நேரங்களில் பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றாலும், இஸ்லாத்தைப் பற்றிப் படிக்க இவர்கள் எடுத்துக் கொள்ளூம் நேரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஒருவர் ஹாருண் யஹ்யாவின் அறிவியல் கட்டுரைகளை விமர்சித்து திண்ணையில் தன் எதிர்வினையைப் பதிவு செய்தார். ஹாருண் யஹ்யாவின் படைப்புகளை படிக்காமல் எதிர்வினையைப் பதிவு செய்யமுடியாது. அது போல முஸ்லிம் நாடுகளின் செயல்பாடுகளை இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூர்ந்து நோக்குகிறார்கள். முஸ்லிம் நாடுகளின் செயல்பாடுகள் மீது நமக்கும் கூட ஆதங்கம் உள்ளது என்றாலும், இவர்களுடைய பார்வைக்கும் நமக்கும் வேறுபாடு உள்ளது.

இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது, விவாதங்களில் ஈடுபடுவோர், ஜாகிர் நாயக்கைப் போல இந்து வேதங்களைப் பற்றிய அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். இந்திய சமூகத்தைப் பற்றி பெரியார், ராகுல்ஜி, ஈ.எம்.எஸ் ஆகியோர் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும். அதனால் நம் எழுத்து வலிமை பெறும். சங்பரிவார எழுத்தாளர்களைப் போல நாமும் நீண்ட கட்டுரைகளைத் தான் எழுத வேண்டும் என்பதில்லை. உரிய சான்றுகளுடன் சுருக்கமான கட்டுரைகள் எழுதினாலே போதும்.