Saturday, April 29, 2006

த.மு.மு.க வின் அந்தர் பல்டி

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..
த.மு.மு.க வின் அந்தர் பல்டி

த.மு.மு.க வின் அதிகாரபூர்வ இனையம் பா.ம.க போட்டியிடும் தொகுதிகளை புறக்கனிப்போம் - த.மு.மு.க அநிவிப்பு என்ற தலைப்பில் வாசகன் பதிந்த செய்தியையும் அதற்டகு சகோ. அருளடியான் இட்ட மறுமொழியையும் நினைவு கூர்கின்றேன். சிரிப்பு வருகின்றது.

இவர்கள் எந்த அரசியல் வாதிக்கும் சளைத்தவர்களிள்ளை. அருளடியான் தமீமுன் அண்சாரிக்கு கொடுத்த கைகுலுக்களை வாபஸ் பெருவாரா??

இப்படி ஒரு அந்தர் பல்டி இதுவரைக்கும் பார்த்ததில்லைப்பா !!
சுவடு காய்வதற்குள் மறப்போம் மன்ணிப்போம்.என்கின்றார் பெருந்தலைவர் ??? ஜவாஹிருல்லா

ஆஹா.. ஆஹா.. அருமையிலும் அருமை மறப்போம் மன்னிப்போம் பாடம் கலைஞர் கற்று கொடுத்ததா??? பக்கா அரசியல்வாதி எல்லாம் தோத்தாம்பா..

பாசங்களுடன்
முகவைத்தமிழன்




Thursday, April 27, 2006

ஆடாத ஆட்டமெல்லாம்

ஒரு கற்பனைச் சம்பவம்:
நடிகை ராதிகா, இயக்குநர் விசு ஆகியோரைத் தொடர்ந்து பெப்சி உமாவும் அ.இ.அ.தி.மு.கவில் சேருகிறார். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் அவரைக் காணவில்லை. சன் டிவியில் இருந்து விலகி ஜெயா டிவியில் சேர்ந்து விட்டதாக ஃபோனிலேயே தெரிவித்து விடுகிறார். சன் டிவி நிர்வாகம் பெப்சி உமாவின் இடத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை நியமிக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜயை இவர் ஒரு நிகழ்ச்சியில் பேட்டி எடுத்தது நினைவிருக்கலாம். நிகழ்ச்சி தொடங்குகிறது. அருளடியான் சன் டிவிக்கு தனக்கு பிடித்த பாடலைக் கேட்டு ஃபோன் செய்கிறார்.

அருளடியான்: ஹலோ! பெப்சி உமா இல்லையா?
தயாநிதி மாறன்: எங்க தாத்தா வெளியிட்ட பார் வியக்கும் தேர்தல் அறிக்கையைப் படித்தீர்களா? ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேளுங்கள்.
அருளடியான்: 'ஆடாதடா ஆடாதடா மனிதா! ரொம்ப ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா!' பாட்டைப் போடுங்க!
தயாநிதி மாறன்: அந்தப் பாட்டு ரொம்ப பழைய பாட்டு. வேற பாட்டைக் கேளுங்க!
அருளடியான்: 'ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்குத் தெரியுமா?'

அருளடியான் தொலைப் பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவரது தொலப்பேசி இணைப்பு சன் டிவியால் துண்டிக்கப் படுகிறது.

தயாநிதி மாறன்: இவர் பேசுவது தெளிவாக இல்லை. ஒரு வேளை இவர் பேசுவது டாடா டெலிகாமாக இருக்கலாம். எனவே நாம் அடுத்த காலரிடம் பேசுவோம்.

கற்பனை செய்யுங்கள் ஒர் உலகம்!


கற்பனை செய்யுங்கள் ஒர் உலகம்! ஓர் உலகம் பி.ஜெ இல்லாமல். ஜவாஹிருல்லாஹ் இல்லாமல். ஓர் உலகம் த.மு.மு.க இல்லாமல். தவ்ஹீத் ஜமாஅத் இல்லாமல். ஹைதர் அலி இல்லை. பாக்கர் இல்லை. முஸ்லிம் லீக் இல்லை. தேசிய லீக் இல்லை. எவ்வளவு இனிமையாக இருக்கும். கற்பனை செய்யுங்கள்.

Tuesday, April 25, 2006

பா.ஜ.க கூட்டணி





தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கட்சி, சுப்ரமணிய சாமி என்ற ஃபாசிச வக்கிரக் கோமாளி நடத்தும் ஜனதா கட்சி, தேவர் சாதி வெறியர் டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பிழைப்புவாத தலித் தலைவர் வை. பாலசுந்தரத்தின் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட சில சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ் நாடு பா.ஜ.கவுக்கு தனி இணையத் தளம் உள்ளது. இது தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ளது. இஸ்ரேல் தரகன் சுப்ரமணிய சாமியின் கட்சி இணையத் தளத்துக்கும் தமிழ் பதிப்பு இல்லை. இதுவும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. இவர்கள் தமிழின விரோதிகள் என்பது மட்டுமல்ல. பொது மக்களிடம் இருந்து அன்னியமானவர்கள். சுப்ரமணியசாமி, தன் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபாண்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க கூடாது என்றும், மதமாற்றத் தடைச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும், ராமர் கோயிலை பாபர் மசூதி நிலத்தில் கட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு வெளிப்படையாக முஸ்லிம் விரோதமாகச் செயல்படும் இவர் பல பத்து ஆண்டுகள் செக்குலர் முகமூடி மாட்டி அரசியல் நாடகமாடியது வியப்பாய் உள்ளது. இவரது கட்சிக்கு திருவாரூர் மாவட்டச் செயலாளராக பஷீர் என்ற முஸ்லிம் பெயர் தாங்கி இருப்பதாக இவரது இணையத் தளம் தெரிவிக்கிறது. இக்கூட்டணியை முஸ்லிம் விரோதிகள் என்ற அடிப்படையில் மட்டும் நாம் எதிர்க்க வில்லை. இவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கே விரோதிகள். இவர்கள் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறாமல் தோற்கடிக்கப் பட, சில தொகுதிகளில் நம் வாக்கை அறிவுபூர்வமாகச் செலுத்த வேண்டும். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் வலுவான பா.ஜ.க எதிர்ப்பு அணிக்கு தங்கள் வாக்கை செலுத்த வேண்டும்.

Monday, April 24, 2006

விண் "டிவி'க்கு திடீர் தடை

"விண் டிவி"க்கு பல மாவட்டங்களில் திடீர் தடை : வைகோ பேச்சை ஒளிபரப்பியதால் கடும் ஆத்திரம்

திருநெல்வேலி: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயினுல் ஆபிதீன் ஆகியோரின் பேச்சை ஒளிபரப்பிய விண் "டிவி" சேனல் பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சன் "டிவி', ஜெயா "டிவி', ராஜ் "டிவி', விஜய் "டிவி' என சில பிரதான சேனல்கள் உள்ளன. ஆனால், தற்போது செய்தி ஒளிபரப்பப்படுவது சன் "டிவி'யிலும், ஜெயா "டிவி'யிலும் தான். இவை தவிர விண் "டிவி' போன்ற சிறிய "டிவி'க்களிலும் ஒளிபரப்பாகிறது. தற்போது தேர்தல் பரபரப்பு துவங்கி விட்டதால் சன் "டிவி' தி.மு.க.,விற்கு ஆதரவாகவும், ஜெயா "டிவி' அ.தி.மு.க.,விற்கு ஆதரவாகவும் செய்திகளை ஒளிபரப்புகின்றன. ராஜ் "டிவி'க்கும், விஜய் "டிவி'க்கும் செய்தி வழங்கும் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவை வெறுமனே நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்புகின்றன. இருந்தாலும் விண் "டிவி' செய்தி ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ளதோடு அனைத்து தரப்புச் செய்திகளையும் ஒளிபரப்பி வருகிறது. இதனை பெரும்பாலான நேயர்கள் பார்க்கின்றனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் விண் "டிவி' நேற்று முன்தினம் முதல் தெரியவில்லை. நேற்று இரண்டாவது நாளாக விண் "டிவி' ஒளிபரப்பாகாததால் பலரும் அதனை விசாரித்தனர். இதுகுறித்து கேபிள் "டிவி' ஆபரேட்டர்களிடம் கேட்டால் மாஸ்டர் சேட்டிலைட் ஆபரேட்டர் எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் தான் இந்த ஒளிபரப்பை செய்கிறார்கள். அவர்கள்தான் இதனை நிறுத்தியிருக்கிறார்கள் என கூறப்பட்டது. இதுகுறித்து விண் "டிவி' நிர்வாகத்தினர் சுமங்கலி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அதெல்லாம் சென்னையில் எடுத்த முடிவு. எங்கள் கையில் எதுவும் இல்லை என கூறியுள்ளார்கள்.

விண் "டிவி' உரிமையாளர் தேவநாதன், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர். நெல்லையில் விண் "டிவி' இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "சன் "டிவி' நிர்வாகம் தங்களை தவிர வேறு யாருமே தமிழகத்தில் "டிவி' நடத்தக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறது. விண் "டிவி' அனுமதிக்காக மத்திய அரசுக்கு 40 கோடி ரூபாய் வரை செலவு செய்து இந்த சேனலை நடத்தி வருகிறோம். நாங்கள் நடுநிலையான செய்தி வெளியிடுவதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக ம.தி.மு.க., தலைவர் வைகோ, தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெயினுல் ஆபிதீன் ஆகியோரின் பேச்சை ஒளிபரப்புவதால் எங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள். விண் "டிவி'க்குப் பிறகு துவக்கப்பட்ட இமயம் "டிவி,' தமிழன் "டிவி' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் "டிவி'க்களை கேபிளில் வழங்குகிறார்கள். ஆனால், இவர்கள் செய்தி ஒளிபரப்பவில்லை. செய்தி ஒளிபரப்புவதால் விண் "டிவி'யை எதிரியாக பார்க்கிறார்கள். சுமங்கலி கேபிள் விஷன் ஆக்கிரமிப்பு செய்துள்ள மதுரை, திருச்சி,கோவை, தற்போது நெல்லை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் விண் "டிவி' ஒளிபரப்பை தடை செய்துள்ளார்கள். சுமங்கலியின் கட்டுப்பாட்டில் இல்லாத மற்ற மாவட்டங்களில் விண் "டிவி' இணைப்பு வழங்கப்படுகிறது. 100 ரூபாய் 150 ரூபாய் என கேபிள் "டிவி'க்கு பணம் கொடுக்கும் பொதுமக்களுக்கு எல்லா "டிவி"க்களையும் வழங்க வேண்டும். அதை விடுத்து இப்படி துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதைக் கண்டிக்கிறோம். இதுகுறித்து சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுப்போம். தமிழக முதல்வரிடமும், கவர்னரிடமும் இதுகுறித்து புகார் செய்வோம் இவ்வாறு தேவநாதன் கூறினார்.

நன்றி : தினமலர்

Sunday, April 23, 2006

இட ஒதுக்கீடு ஆணையம் உத்தரவு

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு ஆணையம் உத்தரவு

புதுடில்லி : "மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடியும் வரை பரிசீலிக்கக் கூடாது' என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட மத்திய அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில், அந்த மாநில மக்களை திருப்திப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அறிவிப்பை செய்ததாக தேர்தல் ஆணையம் அமைச்சர் அர்ஜுன்சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவரும் பதில் அளித்தார்.இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஐந்து மாநில தேர்தல்கள் முடிவதற்கு முன்னதாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அதுபற்றி பரிசீலிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடில்லி : "மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடியும் வரை பரிசீலிக்கக் கூடாது' என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட மத்திய அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நேரத்தில், அந்த மாநில மக்களை திருப்திப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அறிவிப்பை செய்ததாக தேர்தல் ஆணையம் அமைச்சர் அர்ஜுன்சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவரும் பதில் அளித்தார்.இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஐந்து மாநில தேர்தல்கள் முடிவதற்கு முன்னதாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அதுபற்றி பரிசீலிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமலர்

Monday, April 17, 2006

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா? சொல்லுங்கள்!

முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் போராட முஸ்லிம்கள் தங்களிடையே உள்ள ஷியா, சுன்னி வேறுபாட்டை மறந்து போராட வேண்டியுள்ளது. நபிவழியை நிலை நாட்ட மத்ஹப் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டியுள்ளது. இந்நிலையில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்றால் அவர்கள் ஒன்று த.மு.மு.கவாக இருக்க வேண்டும், இல்லை தவ்ஹீத் ஜமாஅத்தாக இருக்க வேண்டும் என சில அறிவீனர்கள் நினைக்கிறார்கள். த.மு.மு.கவை விமர்சிக்கும் அனைவரும் தவ்ஹீத ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கும் அனைவரும் த.மு.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள். என் கணிப்பின் படி தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்களில் 10 விழுக்காடு பேரே த.மு.மு.க, தவ்ஹீத் ஜமாஅத், பல்வேறு லீக் கட்சிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, மனித நீதிப் பாசறை, ஜாக் போன்ற அனத்து முஸ்லிம் அமைப்புகளிலும் இருப்பர். 10 விழுக்காடு பேர் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற பல்வேறு கட்சிகளில் இருப்பர். 80 விழுக்காடு பேர் எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினராக இல்லாதவர்கள். இந்த முஸ்லிம்கள் முஸ்லிம் அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை சகோதர வாஞ்சையுடன் விமர்சிக்கக் கூடாதா?

த.மு.மு.கவுக்கு ஒரு பகிரங்கக் கேள்வி
ஆணையம் அமைப்பதை த.மு.மு.க ஒருபோதும் கோரவில்லை என கூறிவந்தது உண்மையில்லை என்பதையும், ஆணையம் அமைக்கக் கோரி த.மு.மு.க செயற்குழுவில் தீர்மாணம் நிறைவேற்றியதையும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, த.மு.மு.கவின் அதிர்காரப் பூர்வ வார இதழான 'மக்கள் உரிமை' யில் வெளியான செய்தியுடன் நிரூபித்துள்ளது. த.மு.மு.கவின் பதில் என்ன?

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஒரு பகிரங்க கேள்வி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் த.மு.மு.கவில் இருந்து விலகவில்லை. அப்போது, த.மு.மு.க தி.மு.க கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் மாத இதழான 'ஏகத்துவம்' இதழில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை விமர்சித்து எழுதினீர்கள். இப்போது நீங்கள் அ.இ.அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதின் மாயம் என்ன?

மதமாற்ற தடைச் சட்டம் வாபஸ்

மதமாற்ற தடைச் சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு விட்டது!!
மதமாற்றச் சட்டம் குறித்து தி.மு.க., மறைமுக பிரசாரம் * உளவுத்துறை அவசர தகவல்கம்பம் : மதமாற்ற தடைச்சட்டம் பற்றிய பிரசாரத்தை, சிறுபான்மை மக்களிடம் தி.மு.க., மறைமுகமாக நடத்தி வருகிறது. அதனை முறியடிக்கும் விதமாக முதல்வர் தனது பிரசாரத்தில் பேச வேண்டும் என அரசுக்கு, உளவுத்துறை அவசர தகவல் அனுப்பியுள்ளது. மதமாற்ற தடை சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்தார். அந்த சட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்த சட்டத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.ஆனால் தற்போது தி.மு.க., தனது தேர்தல் பிரசாரத்தில், தமிழக அரசின் மதமாற்ற தடைச் சட்டம் பற்றி பேசி வருகிறது. தங்கள் கட்சி பேச்சாளர்களுக்கு மேலிடம் வழங்கியுள்ள ஆலோசனையில், பொதுக்கூட்டங்களில் குறிப்பாக சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் இதுபற்றி விரிவாக பேசவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள், அந்தந்த பகுதி சார்ந்த பிஷப்களை சந்தித்து, அவர்களிடம் மதமாற்ற தடைச்சட்டம் இன்னும் காலாவதி ஆகவில்லை என எடுத்துக் கூறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சிறுபான்மை மக்களிடம் மறைமுகமாக தி.மு.க., நடத்தும் இந்த பிரசாரம் குறித்து உளவுத்துறை, அவசர தகவல் ஒன்றை அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது. மதமாற்ற தடைச் சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு விட்டது என்றும், அதைப்பற்றி சிறுபான்மை மக்கள் கவலைப்பட தேவையில்லை என விளக்கம் அளிக்கும் வகையில் ஆளும் கட்சி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்றால், முதல்வர் தன்னுடைய பிரசாரத்தில் இந்த விஷயம் பற்றி பேசினால் தான், சிறுபான்மை மக்களை சென்றடையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.dinamalar.com/2006april17/general_tn7.asp
த.மு.மு.க வின் கலகம் ஒரு வழிக்கு நன்மையிலேயே முடிந்துள்ளது , இதே போன்று இடஒதுக்கீட்டிலும் நன்மை விளையும் என்று எதிர்பார்ப்போம். - முகவைத்தமிழன்.

ஆதிக்கச் சாதிகளின் அரசியல்

நாடார்கள்
நாடார் சாதியினரில் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் உள்ளனர். இவர்கள் ஒருவருக்கொருவர் உறவு முறை பாராட்டினாலும், இந்து நாடார்கள் தான் தமிழ் நாட்டில் இந்து முண்ணனியின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் காரணம். இன்றளவும், நாடார்கள் தான் இந்து முண்ணனிக்கு புரவலர்களாக உள்ளனர். மறைந்த தானுலிங்க நாடார் இந்து முண்ணனியில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.

தேவர்கள்
தேவர் சாதியினர் தென் மாவட்டங்களில், தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்களாக உள்ளனர். தாழ்த்தப் பட்டோருக்கு எதிராக வன்முறை தாக்குதல்களை தொடுக்கின்றனர். ஃபார்வார்டு பிளாக் ஓர் இடது சாரி கட்சி. அதுவே, தமிழ் நாட்டில் ஒரு தேவர் சாதி வெறிக்கட்சியாக உள்ளது. இதன் சித்தாந்தம் மார்க்சியமோ, லெனினியமோ அல்ல. இந்துத்துவத்தை தன் கொள்கையாக கொண்ட ஓர் இடது சாரிக் கட்சி உலகத்திலேயே இது ஒன்று தான். பெரியார் மீதான வெறுப்பு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு, தாழ்த்தப் பட்டோர் மீதான வன்கொடுமை போன்றவையே இக்கட்சியின் கொள்கைகள். தமிழ் நாட்டில் இதன் நிறுவனர் பொன். முத்துராமலிங்கம். இவர் இப்போதுள்ள இந்து வெறி, தேவர் சாதி வெறி ஃபார்வார்டு பிளாக் தலைவர்களுக்கு முன்னோடி. பெரியார் மிகவும் துணிச்சலாக, தென்மாவட்டக் கலவரங்களை அடக்க பொன். முத்துராமலிங்கத்தை கைது செய்யுங்கள் என்று அப்போதைய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த துணிச்சலை இப்போது வீரமணி, கொளத்தூர் மணி ஆகிய தலைவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? இணையத் தளத்தில் வாதாடும் இந்துத்துவ அறிவுக் கொழுந்துகள் பொன் முத்துராமலிங்கத்தின் மேற்கோள்களை எடுத்துக் காட்டுவதையும், அவரை மிகப்பெரிய தேசியவாதியாக சித்தரிப்பதையும் பார்க்கலாம்.

நடிகர் கார்த்திக் நடத்தும் 'அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சி' யில் சேர்ந்துள்ள சேதுராமபாண்டியன் என்ற தேவர் சாதித் தலைவர் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு சொல்லும் இரு காரணங்கள் 1. தேவர் சாதியினர் நடத்திய கந்து வட்டியை ஜெயலலிதா ஒழித்தார். 2. மணல் கொள்ளையை கட்டுப் படுத்தினார். இதிலிருந்தே இவர்கள் எந்த அளவு மக்கள் விரோதத் தண்மையில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அ.இ.அ.தி.மு.க, சசிகலா தொடர்பால் தேவர் சாதி வெறியர்களுக்கு புகலிடம் அளிக்கும் அமைப்பு என்று கருதப்பட்டாலும், நடிகர் கார்த்திக்கின் ஃபார்வார்டு பிளாக் அமைப்புக்கு ஓரிடம் கூட தராத ஜெயலலிதாவைப் பாராட்டலாம். ஆனால் , வேறு இரு தேவர் சாதி அமைப்புகளுக்கு ஆளுக்கு ஓரிடம் கொடுத்துள்ளார். அது போலவே, கருணாநிதியும், டாக்டர் சேது ராமனுக்கு இடம் கொடுக்காததால், அவர் கட்சி பா.ஜ.க கூட்டணியில் 5 இடங்கள் பெற்று தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இவர் ராமதாஸின் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்றவர். இவர் இயல்பிலேயே முஸ்லிம் வெறுப்புள்ளவர் என்பது பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்ததில் இருந்து தெரிகிறது.

வன்னியர்
வன்னிய சாதியினரின் சென்ற தலைமுறை, தாழ்த்தப்பட்டோரின் மீதான பகையுடன் இருந்தாலும், அது இந்துவெறியுடன் இருந்தில்லை. அப்படிப்பட்ட தலைவர்களும் இருந்ததில்லை. மாணிக்கவேலர் போன்ற வன்னிய தலைவர்கள் சமூக நீதி சிந்தனையுடனே இருந்தனர். பா.ஜ.கவுடன் பா.ம.க கூட்டணி அமைத்த போது தான் வன்னியர்களிடம் இந்துத்துவ சிந்தனைகளின் தாக்கம் ஏற்பட்டது. பா.ம.கவிலும், அதன் எதிர்ப்பு வன்னிய சாதி சங்கங்களிலும், வன்னிய சாதி அரசியல் கட்சிகளிலும் இந்துத்துவத் தாக்கம் எடுப்பாகவே தெரிகிறது. தீரன் போன்ற பெரியாரியவாதிகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற வன்னிய சாதிக் கட்சியை நடத்தும், ஜெகத் ரட்சகன் ஜெயலலிதாவின் மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து, காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய சென்னை கடற்கரைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பா.ஜ.க ஆட்சியின் போது, தாங்கள் விரும்பிய மந்திரி பதவியைப் பெற காஞ்சி சங்கராச்சாரியாரின் காலில் விழுந்து பரிந்துரை செய்ய கெஞ்சினர் டாக்டர் அய்யாவின் சார்பாக தூது சென்ற அவரது அடியாட்கள்.



தலித்
தமிழ் நாட்டின் தலித் தலைவர்களில் பா.ஜ.கவுடன் முதலில் கூட்டணி அமைத்தவர் வை. பாலசுந்தரம். இவரது அம்பேத்கார் மக்கள் இயக்கம், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது.

காட்டுமன்னார் கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் எழுத்தாளர் ரவிக்குமார், பெரியார் மீது காழ்ப்புணர்ச்சியும், பார்ப்பனர்கள் மீது அளவு கடந்த பாசமும், பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது பொருளற்ற வெறுப்பும் கொண்டவர். தமிழ் நாட்டு முஸ்லிம்கள், தலித்களோடு உள்ள உறவில் அவர்கள் ஆதிக்கச் சாதிகளால் ஒடுக்கப் படும் போது, தலித்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும். ஆனால் தலித் அறிவாளிகளில் ஒரு பிரிவினர் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மீது அளவு கடந்த வெறுப்பையும், முஸ்லிம்களிடம் பகைமையையும், இந்துவச் சக்திகளுடம் நெருங்கிய உறவும் கொள்ளும் போது அவர்களும் நமது விமர்சனத்துக்கு உரியவர்களே. இந்த புரிதல் த.மு.மு.க, தவ்ஹீத ஜமாஅத் உட்பட பல முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு இல்லை.

Sunday, April 16, 2006

சிதம்பரம்-தயாநிதி-அன்புமணி








லண்டன் நிறுவனத்தின் இயக்குநராக செயல்படும் மத்திய நிதியமைச்சர் திரு-.சிதம்பரம், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, ஜனதா கட்சித் தலைவர் திரு- .சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஊழல் புரிந்ததாக உலக வங்கியால் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சர் திரு .அன்புமணியை, டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். ஜனதா கட்சித் தலைவர் திரு.சுப்ரமணியன் சுவாமி, சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மத்திய கூட்டணி அரசில் அங்கம்வகிக்கும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மத்திய நிதியமைச்சர் திரு-.சிதம்பரம், லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் இயக்குநராக செயல்படுவதாகவும், அதன்மூலம் கிடைத்த சுமார் 15 லட்சம் ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல், மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் திரு.சுப்ரமணியன் சுவாமி புகார் கூறினார். குழந்தைகள் சுகாதார நலத் திட்டத்திற்காக இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதற்கு முன்வந்த உலக வங்கி, மத்திய சுகாதார அமைச்சர் திரு.அன்புமணியின் ஊழல் காரணமாக, அந்தக் கடனுதவியை ரத்து செய்துவிட்டதாகவும், இதுகுறித்து பிரதமருக்கு, உலக வங்கி கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை சீர்குலைத்த திரு.அன்புமணியை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றும் திரு.சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தினார். திரு. கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சியான சன் டி.வி. நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பது உலகமகா மோசடி என்று குற்றம்சாட்டிய திரு-.சுப்ரமணியன் சுவாமி, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்களை ஏமாற்ற முயலும் தி.மு.க.வின் கனவு பலிக்காது என்றும் திரு.சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

நன்றி: ஜெயா டிவி இணையத்தளம் 16 ஏப்ரல் 2006

குடந்தையில் கோ.சி.மணியை ஆதரிப்போம்!


அ.இ.அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்களில் இருவர் பார்ப்பனர் சங்க உறுப்பினர்கள். ஒருவர் மயிலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் நடிகர் எஸ்.வி.சேகர். மற்றவர் கும்பகோணம் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பூசாரி இராம.இராமநாதன். எஸ்.வி. சேகரைப் பற்றி ஏற்கனவே நான் எழுதி விட்டேன். பூசாரி இராம. இராமநாதன் காஞ்சி சங்கராச்சாரியிடம் நெருக்கமாக இருந்தவர். கும்பகோணம் மகாமகத்தின் போது ஜெயலலிதாவின் ஆடம்பரக் குளியலால் நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலில் இறந்த போது, அவர்கள் சொர்க்கம் செல்வர் எனத் திருவாய் மலர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ், இந்து முண்ணனி, பா.ஜ.க போன்ற அமைப்புகளோடும், இந்து முண்ணனி தலைவர் வீர(?) துறவி இராமகோபாலனோடும் நெருங்கிய தொடர்புடையவர். இவரை நாம் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

இவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கோ.சி. மணி நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களுக்கு நெருங்கிய நண்பர். தி.மு.க ஆட்சியமைத்தால் அமைச்சராக வாய்ப்புள்ளவர். தி.மு.க எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தாலும், சட்டமன்றத்தில் தன் தொகுதிக்காக வாதிடுவார். முஸ்லிம்கள் இவரை தங்கள் கோரிக்கைக்காக எளிதில் அனுகலாம்.

கும்பகோணம் தொகுதியில் வசிக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக் ஆகிய இரு முஸ்லிம அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்:

என் அன்புச் சகோதரர்களே! தயவு செய்து கும்பகோணம் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் இராம. இராமநாதனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யாதீர்கள். அவருக்கு வாக்களிக்காதீர்கள். இத்தொகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க வேட்பாளர் கோ.சி. மணிக்கு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைப்போம்.

ஒரு ஃபாசிஸ்டின் தோற்றமும் வளர்ச்சியும்




ஒரு ஃபாசிஸ்டின் தோற்றமும் வளர்ச்சியும்

வைகோவின் தந்தை வையாபுரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். வைகோவும் தன் கல்லூரி காலம் வரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார். மொழிப்போராட்டத்தின் போது, அதனை கேலி செய்து பேசினார். தி.மு.க வளர்ச்சியடைந்த காலத்தில் வைகோ அக்கட்சியில் சேர்ந்தார். குறுகிய காலத்திலேயே கலைஞரால் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். 18 ஆண்டு காலம் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது இவரை விட அனுபவமும், தகுதியும் வாய்ந்த தலைவர்களைப் புறக்கணித்து, இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது. அப்போது இவர் முரசொலி மாறனுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார். அல்லது விசுவாசமாக நடந்து கொள்வது போல் நடித்தார். நியமன பதவியில் இருந்த இவர் தி.மு.க சார்பாக சிவகாசி தொகுதியில் நின்ற போதும், தனிக்கட்சி தொடங்கி அத்தொகுதியில் நின்ற போதும் தோற்றார். தன் சொந்த தொகுதியான விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியிலும் தோற்றார். இதில் இருந்தே இவர் மக்கள் செல்வாக்கில்லாதவர் என்பதை அறியலாம். முதன் முதலாக அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தபோதே இவர் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தி.மு.கவில் இருந்து விலகிய போது தன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறக்கவில்லை. பதவிக்காலம் முழுதும் அனுபவித்தார். (தி.மு.கவில் இருந்து விலகியுள்ள சரத் குமார் என்ற நடிகனும் தன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறக்கவில்லை. தகுதியான பலருக்கு கொடுக்காமல் ராதிகா புருஷன் என்பதால் சரத்துக்கு கொடுத்த கலைஞருக்கு இது தேவை தான். ) அப்போதே, வாஜ்பாய், அத்வானி போன்ற இந்து வெறி தலைவர்களுடன் நெருங்கிய உறவும், மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் வெறுப்பும் கொண்ட அரசியல் பேச்சுகளை மாநிலங்களவையில் பேசினார்.


அ.இ.அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முதன் முதல் அமைய தரகர் வேலை பார்த்தார். கலைஞர், பா.ஜ.கவுடன் கூட்டணி சேரும் முன்னர், அவர்களை பண்டாரம், பரதேசிகள் என்று சொல்லி விட்டாராம். அதனை இந்த பா.ஜ.க விசுவாசி இப்போது சொல்லிக் காட்டுகிறார். பா.ஜ.கவை பண்டாரம், பரதேசிகள் என்று சொன்னதில் என்ன தப்பிருக்கிறது? அப்படிச் சொல்வதால் இல.கணேசனுக்கு வராத கோபாம் இவருக்கு மட்டும் எப்படி வருகிறது? பா.ஜ.கவும், ம.தி.மு.கவும் கோவையில் கணிணிப் பூங்கா அமைக்கப் படும் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளன. இது தற்செயலாக அமைந்ததாய் தெரியவில்லை.

வைகோ ஒரு ஃபாசிஸ மனபாண்மை கொண்டவர். இவர் ஹிட்லரின் எழுத்துக்களை புகழ்ந்து பேசியுள்ளார். வைகோ, டாக்டர் ராமதாஸ் இருவரும் தேர்தலுக்குப் பின் பா.ஜ.கவுடன் இணைந்து கூட்டணி அமைப்பார்கள். எனவே இவர்களை தமிழ் நாட்டு முஸ்லிம் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய இரு அமைப்புகளும் இது தொடர்பாக ஒருமித்து செயல்பட வேண்டும்.

Thursday, April 13, 2006

த.த.ஜ.வினரை அதன் தலைமை கண்டிக்குமா?

பொய்களை பரப்பும் த.த.ஜ.வினரை அதன் தலைமை கண்டிக்குமா?

கடந்த 06-ந் தேதி (ஏப்ரல் 2006) ஜித்தாவில் சகோதரர் பாக்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட புரோக்ராம் பற்றி நிகழ்ச்சி தொகுப்பாக தீன் முஹம்மது என்ற சகோதரர் எழுதியிருந்தார். அக்கடிதம் நிகழ்ச்சிக்கு மறுநாளே மின்னஞ்சலின் எனக்கு வந்தது. அதில் கீழ்கண்ட வாகசகங்களைப் படித்ததும் ஆச்சர்யத்தை உண்டாக்கிவிட்டது.

இடையில் ஜித்தாவில் அழைப்புப்பணி மையத்தில் பணிபுரியும் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது. அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சில மணித்துளிகளில் சென்று விட்டார்.

சகோதரர் முஜிபுர்ரஹ்மான் நிகழ்ச்சிக்கு வந்து சில மணித்துளிகளில் சென்றுவிட்டார். ஆனால், அவர் மேடையில் உட்காரவில்லை.

அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது.

கேமரா மின்னியது என்றால், முஜிபுர்ரஹ்மான் மேடையில் அமர்ந்த புகைப்படைத்தை சகோதரர்கள் காட்டுவார்களா?

மேடையில் அமராததால் அவரும் சொற்பொழிவாற்றுவார் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது. அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதரர்கள் எதிர்பார்த்தனர்.

முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் மேடையில்தான் வந்தமர்ந்தார் என்று சாட்சியம் கூறுவதுபோல், 'அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதரர்கள் எதிர்பார்த்தனர்' என்ற இவர்களின் வாசகம் அமைந்துள்ளது.

هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?

تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
(குர்ஆன் 26:221-222)


என்ற இறைவசனங்களை ஞாபகமூட்ட வேண்டிய தவ்ஹீது சகோதரர்கள் ஒரு பொய்யை சொல்லி அதன்மீது இன்னொரு பொய்யை தடவுவது எந்த வகையில் சரி என்பதை விளக்குவார்களா?

இதுபோன்ற பொய்களை பரப்பக்கூடிய சகோதரர்களை த.த.ஜாவின் தலைமை கண்டிக்குமா?

பாக்கர் கலந்துக்கொள்ள இருக்கும் ரியாத் மாநகர இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு மின்னஞ்சல் வழியே மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்த தீன் முஹம்மது என்ற இந்த த.த.ஜா சகோதரருக்கு அந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றக்கூடிய அறிஞர்கள், இஸ்லாத்தில் பொய் சொல்பவருக்கு மறுமையில் கிடைக்கக்கூடிய தண்டனையைப்பற்றி இறைவனின் வசனத்தைக்கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்களா?

குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட நம்மவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு இருந்தாலும் எதிரணியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பலர் இன்னும் சென்று வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்த ஒரு உண்மையை வைத்து சில பொய்களை புனைந்துரைக்கும் த.த.ஜ. சகோதரர்களின் இத்தகைய செயல்பாட்டால் இவர்களின் நிகழ்ச்சிக்கு மற்றவர்கள் வருவதற்கு அஞ்சக்கூடிய நிலையை இவர்களே ஏற்படுத்தி தருகிறார்கள் என்பதை த.த.ஜ. தலைமை நிர்வாகிகள் உணர்வார்களா?

பொய்களை எழுதக்கூடிய தீன்முஹம்மது போன்றவர்களை நம்பி அந்த பொய்யை மின்னஞ்சலின் வழியே பரப்பும் த.த.ஜா.வின் பிற சகோதரர்கள் உண்மையை அடையாளம் கண்டு தீன் முஹம்மது போன்ற பொய்யர்களை தனிமைப்படுத்துவார்களா?

அன்புடன்
அபூ முஹம்மத்

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு -சோலை

பெரிதாக பார்க்க கீழ்கண்ட Image மீது மவுஸினால் சொடுக்கவும்.



இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வானத்து நிலவா? -சோலை

இஸ்லாமிய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக, தமிழக அரசு ஓர் ஆணையம் அமைத்திருப்பதாக ஒரு பிரசாரம் நடைபெறுகிறது. அப்படி ஓர் ஆணையம் அமைத்ததே / அதற்கான ஆணை வெளியிட்டதே இட ஒதுக்கீட்டிற்கான முதல் வெற்றி என்றும் சிலர் சேதி சொல்கிறார்கள். அவர்கள் அழைப்பிதழைப் பறித்துக்கொண்டு திருமண வீடு சென்று வந்தவர்கள். பூசிக்கொண்ட சந்தன மணத்திலிருந்து அவர்கள் இன்னும் விடுபடவில்லை.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்ற அமைப்பு ஏற்கெனவே இயங்கி வந்தது. இறுதியாக, நீதிபதி ஆறுமுகம் தலைமையில் அந்த ஆணையம் செயல்பட்டது. 2005_ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதன் பதவிக்காலம் நிறைவு பெற்றது. உடனடியாக ஆணையம் உயிர்ப்பிக்கப்படவில்லை. மூன்று மாதங்கள் கழித்துத் தேர்தலை நினைவில் நிறுத்த, அந்த ஆணையத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.

அந்த ஆணையம் இதுவரை இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி சிந்தித்ததேயில்லை. காரணம், தமிழக அரசு அதுபற்றி கவலைப்படவில்லை. எனவே, ஆணையமும் அமைதி காத்தது.

புதுப்பிக்கப்பட்ட ஆணையத்திற்கு, இப்போது தமிழக அரசு ஒரு புதிய பணியை அளித்திருக்கிறது. இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களை, அந்த ஆணையத்தின் பரிந்துரைக்கு அரசு அனுப்பும். அதனை அந்த ஆணையம் பரிசீலிக்கும். அவ்வளவுதான்.

எனவே, இந்த ஆணையம் புதிதல்ல. இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி பரிந்துரைக்கும்படி, இந்த ஆணையத்தைத் தமிழக அரசு கேட்கவும் இல்லை. இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க ஆணையம் என்று சொல்கிறார்கள். சிறகே முளைக்கவில்லை. எப்படி சிகரத்திற்குப் பறக்க முடியும்?

இஸ்லாமிய மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்கும் சிந்தனையே தமிழக அரசிற்கு உருவானதில்லை. ஆந்திராவில் ஆட்சிப் பீடம் ஏறிய ராஜசேகர ரெட்டி அரசு, ஏற்கெனவே அளித்த வாக்குறுதிப்படி, இஸ்லாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்தது. இதனை பி.ஜே.பி. வன்மையாகக் கண்டித்தது. அதனோடு அண்ணா தி.மு.கழகமும் கண்டித்ததை மறந்துவிட முடியாது. இப்படி இட ஒதுக்கீடு அளித்தால், பிற சமுதாயத்தினரும் கேட்பார்களே என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

இன்றைய தமிழக அரசு, பி.ஜே.பி. உறவை முறித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், அந்த அரசு இந்துத்வா சிந்தனை கொண்டது என்பதற்கு, இந்த அறிவிப்பு ஓர் உதாரணமாகும்.
'இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?' என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் நிருபர்கள் கேட்டனர்.

'69 சதவிகித இட ஒதுக்கீடே வழக்குமன்றத்தில் இருக்கிறது' என்றார் தமிழக முதல்வர். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று எப்போதும் அவர் கூறியதில்லை.
1999_ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், சென்னை கடற்கரைப் பொதுக்கூட்டத்தில், இஸ்லாமிய மக்களுக்கு அவர் இரண்டு உறுதிமொழிகள் அளித்தார்.
'இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி மைய அரசிற்குக் கடிதம் எழுதுவேன்' என்றார்.

'இனி எக்காரணம் கொண்டும் பி.ஜே.பி.யோடு உறவு கொள்ளமாட்டோம்' என்றார்.
இரண்டு உறுதிமொழிகளுமே வங்கக்கடல் காற்றோடு கரைந்துவிட்டது. இன்றுவரை மத்திய அரசிற்கு அப்படி ஒரு கடிதம் எழுதவில்லை.

தேர்தல் தீர்ப்பு வெளிவந்ததும், மையத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வர பெரிதும் உதவினார். இஸ்லாமிய சமுதாயம் ஏமாற்றத்தால் நொறுங்கிப்போனது.

தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்ததும் வெகுவேகமாக இந்துத்வாத் திட்டங்களை செல்வி ஜெயலலிதா செயல்படுத்தினார். ஆலயங்களில் அன்னதானம் என்றார். அந்தத் தானம் இந்துத்வாவின் இதயநாதம். பின்னர், அதனை நியாயப்படுத்துவதற்கு இரண்டொரு இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகளிலும் அன்னதானம் என்றார். ஆனால், அதற்கான தேவையை அந்த அமைப்புக்களே நிறைவு செய்துகொள்ளவேண்டும் என்றார்.

எவரும் எதிர்பாராத நேரத்தில், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்தார். அதன்பின்னர்தான், அப்படி ஒரு சட்டம் கொண்டு வரும் எண்ணம் நரேந்திரமோடிகளுக்கே ஏற்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக்கூட்டத்தில் நியாயப்படுத்திய ஒரே தலைவி ஜெயலலிதாதான். அப்படி ஒரு துணிச்சல் தங்களுக்கு வந்ததில்லை என்று அத்வானி புகழாரம் சூட்டினார்.

அம்மாவின் அமைச்சரவையில் ஒரே ஒரு இஸ்லாமியர் அமைச்சராக வீற்றிருந்தார். இடையில் அவருடைய பதவியும் பறிக்கப்பட்டது. இறுதிவரை இஸ்லாமியர் இடம்பெறாத அமைச்சரவையை அமைத்து, பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டார்.
ஆந்திர அரசு இஸ்லாமியர்களுக்கு வழங்கிய ஒதுக்கீட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு எப்படி இட ஒதுக்கீடு அளிக்கமுடியும்? என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. நியாயமான கேள்விதான்.

ஆந்திராவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே, அங்கே பிரச்னை எழுந்தது. அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்தானா என்று கணக்கிட வேண்டியிருந்தது. ஆனால், தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்று விட்டனர். அன்சார், ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, சேக் என்று பல பிரிவினர், அந்தப் பட்டியலில் அடங்கி இருக்கின்றனர். உருதுமொழி பேசும் இஸ்லாமியர்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கலைஞர் இடம்பெறச் செய்தார். இவர்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை காணவேண்டும்.

எனவே, தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு, இன்னொரு ஆணையம் அமைக்கத் தேவையில்லை. அப்படி ஒரு ஆணையத்தை இன்றைய அரசு அமைக்கப்போவதும் இல்லை. எப்படி வன்னிய சமுதாய மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டார்களோ, அப்படி இஸ்லாமியர்களையும் இணைக்கமுடியும். மனம் இருந்தால் மார்க்கம் பிறக்கும்.

ஆனால், கடந்த ஐந்தாண்டுக் காலமாக தமிழக அரசு இந்தத் திசை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை. இஸ்லாமியர்களுக்குக் கேரளத்திலும் கர்நாடகத்திலும தனி இட ஒதுக்கீடு உண்டு. அந்த அடிப்படையில், ஒதுக்கீடு அளிப்பது பற்றி தமிழக அரசு சிந்தித்ததே இல்லை.

ஆனால், தேர்தல் நெருக்கத்தில் இஸ்லாமிய அமைப்புக்களுக்குத் தமிழக அரசு ஒரு தகவல் தந்துள்ளது. 69 சதவிகித இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதன்மீது தீர்ப்பு வந்தபின்னர், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி பரிசீலிக்கப்படும் என்று அந்தத் தகவல் கடிதம் தெரிவிக்கிறது. பொறுத்திருங்கள். கேழ்வரகில் நெய்வடியும் என்கிறார்கள்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அவசரம் அவசரமாக வாபஸ் வாங்கினார்கள். ஆனால், அதற்கு இன்றுவரை சட்ட வடிவம் கொடுக்கப்படவில்லை.

உண்மையிலேயே இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் எண்ணம் இருக்குமானால், எதற்காக ஆந்திர அரசு இட ஒதுக்கீடு அளித்தபோது எரிந்துவிழ வேண்டும்?
இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு என்பது தமிழகம் சார்ந்த பிரச்னை அல்ல. அனைத்து மாநிலங்களையும் தழுவிய பிரச்னைதான். அப்படி இட ஒதுக்கீடு தரமாட்டோம் என்பதில், மாநில பி.ஜே.பி. அரசுகளும் உறுதியாக இருக்கும். தமிழக அரசும் உறுதியாக இருக்கும். எனவே, இதற்கு அனைத்திந்திய அளவில் தீர்வு காணப்படவேண்டும்.
அதற்கான சரியான வழியில் மன்மோகன்சிங் அரசு முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை இன மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. செயல்படுத்தும் முறையில், அதனைப் பரிசீலிக்க ரெங்கநாத்மிஸ்ரா தலைமையில் ஒரு தனி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் பணி நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது.

இந்தியா விடுதலை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இஸ்லாமியர்களின் சமூகப் பொருளாதார கல்வி நிலை என்ன என்பதே, எவருக்கும் தெரியாது. அதனை ஆராய்வதற்காக நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைதித்திருக்கிறது. இந்தக் குழு செப்டம்பர் மாதத்திற்குள் பரிந்துரை வழங்கவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியர்களின் கல்வி நிலையை மேம்படுத்த, இன்னொரு குழுவையும் மன்மோகன்சிங் அரசு அமைத்துள்ளது.

ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஏன் செயல்படுத்த முடியவில்லை _ எதிர்நோக்கும் இடர்பாடுகள் என்ன _ அதனை எதிர்கொள்ள அரசியல் சட்டத்தில் என்னென்ன திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நீண்ட விளக்கங்களை அளித்திருக்கிறது. கலைஞர் மூலம் பிரதமருக்கு அளிக்கப்பட்ட அந்த விளக்க அறிக்கையும் மைய அரசின் ஆழ்ந்த பரிசீலனையில் இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், அப்படி ஒரு இட ஒதுக்கீட்டை இஸ்லாமிய மக்களோ, கிறிஸ்துவ மக்களோ எதிர்பார்க்கத் தேவையில்லை. சேதுசமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதுபோல் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைச் செயல்படுத்துங்கள் என்று அவர்கள் டெல்லியின் கதவுகளைத்தான் தட்டவேண்டும். அப்படித் தட்டினால், திறக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளும் அடையாளங்களும் தெரிகின்றன.

இட ஒதுக்கீடு கோரிக்கை எட்டிப்பிடிக்கமுடியாத வானத்து நிலவு அல்ல.

கட்டுரை: சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16-04-2006

Wednesday, April 12, 2006

தேர்தல் சிந்தனை -Dr T.S.ஜாஃபர் சாதிக்

நன்றி: நாகூர் ரூமியின் தமிழோவியம் வலைப்பதிவு

கண்ணியமிக்க இமாம் / முத்தவல்லி / நகர முக்கியஸ்தர் அவர்களின் மேலான சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும். முஸ்லிம் சமுதாயம் இன்று நல்ல முறையில் வழிகாட்டக் கூடிய ஒரு தலைமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொள்ளக் கூடிய ஒரு தன்னிகரற்ற தலைமையை யாரால் தர முடியும்?

மஹல்லா அளவிலும் நகர அளவிலும் அதன் தொடர்ச்சியாக தமிழக அளவிலும் ஒருங்கிணையும் மஸ்ஜித் இமாம்களின் கூட்டமைப்பும் சமுதாயத்தின்மீது அக்கறை எடுத்துக்கொள்வதற்காக ஒருங்கிணையும்போது அத்தகைய ஒரு தலைமை உருவாக முடியும். அந்தத் தலைமை மட்டுமே அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரம் பெற்ற / சமுதாயத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமையாக ஆகமுடியும். முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க - சமூக - அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் அந்தத் தலைமையின் மூலமாக மட்டுமே நடக்க வேண்டும். அத்தகைய ஒரு தலைமை தோன்றுவத்ற்காக் அல்லாஹுத்த்ஆலா எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளான். ஆனால் அதற்காக தமிழ்க மஸ்ஜித்களின் இமாம்களும் முத்தவல்லிகளும் நகர முக்கியஸ்தர்களும் இதுவரை ஏதாவது முயற்சியை மேற்கொண்டார்களா? இல்லையெனில், அத்தகைய ஒரு தலைமையை போர்க்கால முயற்சியாக உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அரசியல் களத்தில் இன்று ஒவ்வொரு குழுவும் கோபுர அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, முஸ்லிம் அரசியல் தலைமைகள் மட்டும் கைகளில் திருவோட்டை ஏந்தியவைகளாக வாயிற்படிகளில் காத்துக் கிடந்தன என்பதை நாம் வேதனையுடன் பார்த்தோம். பல கோடி மக்களைக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்து ஏங்குவதைப் போல, தாழ்விலும் தாழ்வாக தற்போது முச்சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏனிந்த அவலம்?

அல்லாஹுத்த்ஆலா பொருந்திக் கொள்ளும் அதிகாரப்பூர்வமான முறையில் முஸ்லிம் சமுதாயம் ஒருங்கிணையாததே இந்த அவலத்திற்குக் காரணம். இயலாமையில் விடப்பட்டுள்ள இமாம்களும், அலட்சியமாக இருக்கும் முத்தவல்லிகளும், இதைப்பற்றிய எண்ணமே இல்லாமலிருக்கும் நகர முக்கியஸ்தர்களும் விழிப்புணர்வு பெற்றுத் தமிழக அளவில் துரிதமாக ஒருங்கிணைந்தாலன்றி அவலத்திற்கு மேல் இழிவையும் முஸ்லிம் சமுதாயம் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டி வரலாம். அல்லாஹுத்த்ஆலா பாதுகாப்பானாக.

இத்துடன் தேர்தல் சிந்தனை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன். உடனடியாக ஆவன் செய்யுங்கள்.

தேர்தல் சிந்தனை

சேவல் சண்டையைப் பார்த்திருப்பீர்கள். ஆக்ரோஷமாக மோதவிடப்படும் இரண்டு சேவல்களும் கத்திக்குத்துப் பட்டு மயங்கி விழும். கத்திகள் அவற்றின் வயிற்றுக்குள் சமாதியாகும். இனி அங்கு சேவல்கள் இருக்காது. சுற்றி நிற்போர் அதைப்பார்த்து ரசித்து கைகொட்டிச் சிரிப்பர்.

நீங்கள் ஒரே சமுதாயத்தினர். நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள். -- இது முஸ்லிம் சமுதாயத்தைப் பார்த்து திருமறை கூறும் இறைவாக்கு.

ஒன்று என்ற இறைக்கோட்பாட்டிற்கு மாறாக, முஸ்லிம் சமுதாயம் பல கட்சிகளாகவோ, அல்லது இரண்டாகவோ பிரிந்துகொள்ள முடியுமா? அது இறைவனிடம் வரம்பு மீறும் செயல். வரம்பு மீறுபவர்களை அல்லாஹுத்த்ஆலா தடயமின்று அப்புறப்படுத்திவிடுகிறான்.

தமிழகத்தில் இன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் பலவாறாகப் பிரிந்திருப்பது அல்லாஹுத்த்ஆலாவிடம் வரம்பு மீறிய செயல். அவர்கள் இரு கட்சிகளுக்குள் பிரிந்து நிற்பது தடயமின்றி அழிந்து போகும் செயல். அந்த இரு சேவல்களைப் போல!

சிந்திப்பதற்குச் சில கேள்விகள்

இரு பெரும் முஸ்லிம் கட்சிகள் இரண்டு எதிர்க்கட்சிகளுக்குள் சங்கமமாகி ஒன்றுக்கொன்று நேர் எதிராக (வாணியம்பாடி) கத்தி கட்டப்பட்ட சேவல்க்ளைப் போல மோதிக்கொள்வதும், சுற்றி இருப்போர் கைகொட்டிச் சிரிப்பதும் முஸ்லிம் சமுதாயத்துக்குப் பெருமையா கேவலமா?

அந்தத் தொகுதியில் வாழும் முஸ்லிம் சமுதாயம் தன்னை அரசியல் கட்சிகள் கேவலப்படுத்துவதை அனுமதித்துக் கொண்டு ஒரு ஏமாளியைப் போல வாளாவிருக்க முடியுமா?

'இவர்கள் மேன்மையான சமுதாயத்தினர்' என்று நமக்கு சான்றிதழ் வழங்கும் அல்லாஹுத்த்ஆலாவின் கூற்றை நாம் நம்புகிறோமா? நிராகரிக்கிறோமா?

மேன்மையான சமுதாயமாக உருவாக வேண்டிய நமது உண்மையான தலைமை எது?

இந்தக் கேள்விகளை மஹல்லாவில் இருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் எண்ணீப் பார்க்க வேண்டும். தம்மீது திணிக்கப்பட்டுள்ள கேவலத்தை அகற்றுவதற்கும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள மேன்மையான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் முன்வர வேண்டும். அதற்காக அவர்கள் அல்லாஹுத்தஆலா அங்கீகரிக்கும் ஒரே தலைமையை உருவாக்கிக் கொள்வதற்கு விழிப்புணர்வு பெற வேண்டும்.

அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரத்தைப் பெறும் அத்தகையை ஒரே தலைமை எது? அது, ஒவ்வொரு மஹல்லாவிலும் மஸ்ஜித் இமாமும் முத்தவல்லியும் ஒருங்கிணைவதன் மூலமும்,அதனைத் தொடர்ந்து அவர்கள் நகர அளவில், மாநில அளவில் என ஒரே தலைமையின் கீழ் ஒருமைப்படுவதன் மூலமும் உருவாகிறது.

இந்தத் தலைமை மட்டுமே சமுதாயத்தின் மார்க்க, சமூக,பொருளாதார வளர்ச்சிப் பணிகளுக்கும், அரசியல் பணிகளுக்கும் அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரத்தைப் பெறும் தலைமையாகும். அத்தகைய ஒரு தலைமையை உருவாக்கிக் கொள்வதால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் இன்று தனக்கு நேர்ந்துள்ள கேவலத்தை அகற்ற முடியும். மேன்மையான சமுதாயமாக உருவாக முடியும்.

அத்தகைய ஒரு தலைமை இன்று உருவாகியிருக்கிறதா?

இல்லை. எனவேதான் மார்க்கப் பணிகள் பல ஜமாஅத்களிடம் பிரிந்திருக்கின்றன. சமூக,பொருளாதாராப் பணிகள் பல தொண்டு இயக்கங்களிடம் விரிந்திருக்கின்றன. சமுதாயத்திற்கென உருவாக வேண்டிய ஒரே அரசியல் தலைமை பல கட்சிகளிடம் சிதைந்திருக்கிறது.

மேலே விவரித்தது போன்ற ஒரு தலைமையை போர்க்கால அடிப்படையில் வாணியம்பாடியில் உருவாக்க வேண்டிய கட்டாயத்தை அங்கு வாழும் முஸ்லிம்கள்மீது அல்லாஹ் இன்று சுமத்தியுள்ளான். கீழ்க்காணும் தீர்வுகளில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்:

1. நேருக்கு நேர் மோதும் இரண்டு அரசியல் கட்சிகளையும் தொடர்பு கொண்டு உங்கள் வேட்பாளர்களை விலக்கிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட வேண்டும். அவ்வாறு விளக்கிக்கொள்ள வேண்டும் என்ற் சமுதாய உணர்வை அவ்விரண்டு கட்சிகளின் தலைமைகளும் பெற வேண்டும்.அந்த இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் சுயேட்சையாக அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரம் பெற்ற சமுதாயத் தலைமையின் பிரதிநிதியாக களத்தில் நிற்க வேண்டும். இதற்கு அவர்கள் உடன்பட மறுத்தால் --

2. அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரம் பெற்ற முஸ்லிம் தலைமை தமது தொகுதி வாக்குச் சீட்டில் வாக்களிக்க விருப்பமில்லை என்ற கலத்தில் முத்திரை குத்துமாறு மஸ்ஜித்களின் வாயிலாக சமுதாய மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். இதற்குரிய தைரியத்தைப் பெற வேண்டியது அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரத்தைப் பெற்ற சமுதாயத் தலைமையின்மீது காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பு : பாளையங் கோட்டையிலும் அரவக் குறிச்சியிலும் சமுதாயம் அங்கு நிற்கும் முஸ்லிம் லீக்கை ஆதரிக்க வேண்டும்.

மீதமுள்ள 230 தொகுதிகளில் முஸ்லிம் சமுதாயம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய தேர்தல் சூழல் ஐந்து முனைப் போட்டியாக வடிவெடுத்திருக்கிறது. இது ஆறு முனைப் போட்டியாக ஆவதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நகரிலும் இமாம் மஸ்ஜித் நிர்வாகிகளைக் கொண்டு அல்லாஹுத்த்ஆலாவின் அங்கீகாரத்தைப் பெற்ற தலைமையை போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும். நகரங்களின் தலைமைகள் மாநில அளவில் ஒருங்கிணைய வேண்டும். அந்தத் தலைமை ஒவ்வொரு தொகுதியிலும் தனது வேட்பாளரைக் களத்தில் இறக்க வேண்டும். அதற்குப் பின் அவர்கள் எந்த வேலையையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. களத்தில் வேட்பாளர்க்ள் இறக்கப்பட்ட செய்தியை ஜும்ஆப் பிரசங்கம் மூலம் சமுதாயத்துக்கு அறிவித்தால் போதும். மற்ற வேலைகளை அல்லாஹுத்த்ஆலா பார்த்துக்கொள்வான். அடுத்த சட்ட மன்றத்தில் ஆட்சியிலேயே பங்கு கொடுக்க அவன் போதுமானவனாக இருப்பான்.

நினைவுறுத்தல்

சென்னையில் வசிக்கும் ஒரு விஜயகாந்த தமிழகம் முழுவதும் 234 தொகுதிக்ளில் நிற்கும் தைரியத்தைப் பெற்றுள்ளபோது தமிழகம் முழுவதும் பரவியுள்ள முஸ்லிம் சமுதாயம் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே தலைமையின்கீழ் நிற்கும் தைரியத்தைப் பெற முடியாதா? நீங்கள் 100 பேர் ஒன்று சேர்ந்தால் 200 மலக்குகளைக் கொண்டு உதவி செய்வேன் என்று அல்லாஹுத்த்ஆலாவால் வாக்களிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் நிச்சயமாக அனைத்துத் தொகுதிகளிலும் நிற்கும் தைரியத்தைப் பெற வேண்டும்.

ஒரே தலைமையின்கீழ் சமுதாயம் ஒருங்கிணைய அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புதான் இந்தத் தேர்தல். இதை சமுதாயம் உதாசீனப் படுத்திவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் அருள் புரிவானாக!

முஸ்லிம் சமுதாயத்துக்காக

இறுதியாக முஸ்லிம் சமுதாயத்திற்காகவும், மஹல்லாவின் மஸ்ஜித் தலைமைகளுக்காகவும் சில இறைவசனங்களை நினைவுபடுத்துகிறேன்:

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை மிகைப்பவர் எவருமில்லை. உங்களை அவன் விட்டுவிட்டாலோ உங்களுக்கு உதவி செய்வோர் யார்? விசுவாசிகள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும் (3:160)

மஹல்லா மஸ்ஜித் தலைமைக்காக

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையை நிலைநாட்டி ஜக்காத்தைக் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவருக்கு அஞ்சாதவர் மட்டுமே அல்லாஹ்வுடைய மஸ்ஜித்களை பரிபாலனம் செய்யக் கூடியவர்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் (9:18)

இருவருக்குமாக

நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். உங்கள்மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள் (3:103)

நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மையடைவீர்கள். (3:139)

டாக்டர் T.S.ஜாஃபர் சாதிக்
சாந்தம் பிரச்சார அறக்கட்டளையின்
சமூக நல, சமய நல்லிணக்க, மனிதகுல அமைதி விழிப்பூட்டு இயக்கம்
வாணியம்பாடி.


இப்பதிவை முழுமையாக படிக்க இங்கு சொடுக்கவும்

Monday, April 10, 2006

மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி -Jeddah

'சுவனப்பாதை'-மாத இதழ் நடத்தும்
மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி!

பரிசு விபரங்கள்!
முதல் பரிசு
SR.500 மதிப்புள்ள மொபைல் ஃபோன்

இரண்டாம் பரிசு
SR.300 மதிப்புள்ள மொபைல் ஃபோன்

மூன்றாம் பரிசு
ஸஹீஹுல் புகாரி ஒன்று முதல் ஏழு பாகங்கள்

மற்றும்
ஆறுதல் பரிசுகள் : பத்து நபர்களுக்கு

விதிமுறைகள்
1. கட்டுரைகள் 3மூன்று முதல் ஐந்து பக்கத்திற்குள் எழுதப்பட்டிருக்கவேண்டும்
2. தட்டச்சு செய்யப்பட்டிருந்தால் கட்டுரையும், எழுத்துருவும் (Font) ஒரு ஃபிளாப்பியில் சேமிக்கப்பட்டு பிரிண்ட் செய்யப்பட்ட கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும். கட்டுரை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. சொந்தமான ஆக்கங்கள் தவிர்த்து வேறு எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
4. மூலப்பிரதி மட்டுமே போடிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். கட்டுரைகள் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது.
5. புரட்சிகரமான கருத்துகள், புதுவிதமான அணுகு முறைகள், மார்க்கத்திற்கு முரண் இல்லாமை மற்றும் ஆதாரங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் அளிக்கப்படும்
6. கட்டுரையை மூடிய உறையிலிட்டு, பெயர் மற்றும் புனைப்பெயர் ஆகிய விபரங்கள் உறையில் மட்டும் எழுதி அனுப்பவேண்டும். கட்டுரைத்தாளில் பெயர் குறிப்பிடக்கூடாது
7. வெளிநாட்டில் வசிக்கக்கூடியவர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்
8. கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்:
(1) இஸ்லாமிய அழைப்பகம் (2)ஸனாய்யியா, துறைமுக நூலகம் - துறைமுகம் (3) அல்ஹுதா நூலகம் - பலத் (Jeddah)
9. கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்:
பிறை 30 ரபிவுல் அவ்வல் 1427 (ஏப்ரல் 28, 2006)

10. சிறந்த கட்டுரைகள் சுவனப்பாதை மாத இதழில் வெளியிடப்படும். (மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய ஆசிரியருக்கு உரிமை உண்டு).
11. பரிசளிப்பு நாள் பின்பு அறிவிக்கப்படும்.
12. சுவனப்பாதை பத்திரிக்கை குழுவினர்களின் குடும்பத்தினர்கள் இப்போட்டியில் கலந்துககொள்ள அனுமதி இல்லை.
13. ஒருவர் ஒரு தலைப்பின் கீழ் மாத்திரம் கட்டுரை எழுதமுடியும் மற்றும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தலைப்பு மற்றவருக்கு வழங்கப்பட மாட்டாது.
14. கட்டுரை எழுத விரும்புவோர் தலைப்புகளை பதிவு செய்தபின்பே எழுதவேண்டும் மேலும் பதிவு செய்யாமல் எழுதப்படுகின்ற கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
15. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

தலைப்புகள்
1. குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு
2. நீங்கள் ஒரு நல்ல மனைவியா?
3. நீங்கள் ஒரு நல்ல கணவரா?
4. நீங்கள் ஒரு நல்ல பெற்றறோரா?
5. தனிக்குடித்தனம் தரமானதா?
6. கருப்பை சுதந்திரம் பெண்ணுரிமையா?
7. இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்?
8. விவாகரத்து ஒரு கழுகுப்பார்வை
9. பெண்கல்வியின் முக்கியத்துவம்
10. தஃவாவில் பெண்களின் பங்கு
11. பெண்களும் உடற்பயிற்சியும்
12. அழகு சாதனப் பொருட்கள் - ஒர் ஆய்வு
13. கொடுப்பதும் எடுப்பதும் (மஹர், வரதட்சணை)
14. நமக்கென்று தனி நாளிதழ் - அவசியமும் அவசரமும்
15. பத்திரிக்கை தர்மம்
16. தொடரும் தொலைக்காட்சி அவலங்கள் (மெகா சீரியல்)
17. இயக்க வெறியும் இஸ்லாமும்
18. பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப்பணி
19. இணையம் (Internet) ஒரு கழுகுப்பார்வை
20. இணையத்தில் இஸ்லாம் (சாதகங்களும் பாதகங்களும்)
21. கல்வியில் கணினியின் பங்கு
22. செல்ஃபோன் சிந்தனைகள்
23. உலக பொருளாதாரம்
24. வியாபார நுணுக்கங்கள்
25. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் - ஓர் ஆய்வு
26. தவணைமுறை வியாபாரங்கள் - ஓர் ஆய்வு
27. முதல் உதவி மருத்துவங்கள்
28. மருத்துவமும் மனோதத்துவமும்
29. அறிவியல் சாதனைகளில் முஸ்லிம்கள்
30. இறைவனின் அருட்கொடை [ஃபைபாஸ் சர்ஜரி]
31. டென்ஷன் ஆவது ஏன்?
32. அழைப்புப்பணியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு
33. முஸ்லிம்களின் நவீன எழுச்சியும் வீழ்ச்சியும்
34. தனிமனித வழிபாடு - ஓர் ஆய்வு
35. நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள்
36. கற்காலத்தை நோக்கி மனிதன்
37. வெளிநாட்டு வாழ்க்கை (சாதகமும் பாதகமும்)
38. ஷியாயிசம் ஓர் ஆய்வு
39. மேற்குலகு தான் முன்னோடியா?
40. ஈராக் - ஒரு வரலாற்றுப் பார்வை
41. சவுதி அரேபியா - ஒரு வரலாற்றுப் பார்வை
42. இலங்கையில் இஸ்லாம் (வரலாற்றுப் பார்வை)
43. கிரிக்கெட்
44. ஷேர் மார்க்கெட்
45. சமுதாய உளவியல் பாதிப்புகள்
46. நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி

தலைப்புகளைத் தேர்வு செய்ய கீழ்கண்ட எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
0506096740 (+966 50 6096740)
(ஹாஜா முகையிதீன்)
மின்னஞ்சல் முகவரி: suvanam@gmail.com

உங்கள் தலைப்பை இன்றே பதிவு செய்வீர்!

இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா (ஸனாய்யியா), சவூதி அரேபியா

Sunday, April 09, 2006

பா.ம.க. தொகுதிகளை புறக்கணிப்போம்: -TMMK

பா.ம.க., போட்டியிடும் 31 தொகுதிகளை புறக்கணிப்போம்: த.மு.மு.க., அறிவிப்பு

தஞ்சாவூர்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் தமீம் அன்சாரி தஞ்சாவூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். எட்டு ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

பா.ம.க., போட்டியிடும் 31 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட சிறுபான்மை இன வேட்பாளரை நிறுத்தவில்லை. சிறுபான்மை இனத்துக்கு பாடுபடுவதாக கூறிக்கொள்கிறது. வரும் 13ம் தேதிக்குள் சிறுபான்மை இனத்தவருக்கு வாய்ப்பளிக்காவிட்டால் பா.ம.க., போட்டியிடும் 31 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை செய்ய மாட்டோம்.

இது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்ததுக்கு வருத்தம் தெரிவித்தார். பா.ம.க., ராமதாஸிடம் தெரிவித்தோம். அவர் மாநில தலைவரிடம் பேசினார். அப்போது எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டோம். 13ம் தேதி வரை கெடு விதித்துள்ளோம்.

பூம்புகார், திருவிடைமருதூர், பண்ருட்டி, புவனகிரி இவற்றில் ஒரு தொகுதியிலாவது சிறுபான்மை இன வேட்பாளரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

தி.மு.க.,வில் ஐந்து பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருப்தியில்லா விட்டாலும், பரவாயில்லை. காங்கிரஸ் ஒரே ஒரு வேட்பாளருக்கு வாய்ப்பளித்துள்ளது. அதனால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளோம். இதுகுறித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Courtesy: http://www.dinamalar.com

DMK முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை -வைகோ

தி.மு.க., முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை
கரூர் மாவட்ட பிரச்சாரத்தில் வைகோ குற்றச்சாட்டு

கரூர்: "தி.மு.க., என்றுமே முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை," என்று தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ கடுமையாக சாடினார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் மொஞ்சனூர் ராமசாமியை ஆதரித்து தென்னிலையில் வைகோ நேற்று (5ம் தேதி) பிரச்சாரம் துவக்கினார்.

பிரச்சாரத்தின் போது வைகோ பேசியதாவது:

வாழ்நாள் முழுவதும் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளின் எழுச்சியை பார்க்கும் போது அரவக்குறிச்சியின் தேர்தல் தீர்ப்பு இன்றே முடிவாகிவிட்டது. ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடங்களில் மக்கள் கூட்டம் சாரை, சாரையாக வருகிறது. '71-க்கு பிறகு இத்தகைய கூட்டத்தை காண முடிகிறது. அண்ணன் கருணாநிதி சொல்வதை ஏற்க மக்கள் தயாராக இல்லை.

கலர் "டிவி" தருகிறோம் என்று சொல்வதே மக்களை ஏமாற்றத்தான். பொய் சொல்லாதீர்கள். நான்கு முறை முதல்வராக இருந்த போது ஏன் தரவில்லை?

கருணாநிதி ஆட்சியில் ரேஷன் கார்டு ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேருக்குதான் வழங்கப்பட்டது. ஜெ., ஆட்சியில் ஒரு கோடியே 88 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உழவர் பாதுகாப்பு திட்டத்தை நல்ல திட்டமாக விவசாயிகள் நினைக்கின்றனர்.

கிராம விவசாயிகள், நகரங்களில் வசிக்கும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர். நம் குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஜெயலலிதா நினைப்பதாக எண்ணுகின்றனர்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரிசி விலை உயர்வை ஏற்றுக் கொண்ட அமைச்சர் தயாநிதி மாறன், இங்கு வந்து ரூ.2க்கு அரசி வழங்குவோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்? மத்திய அரசிடம் ரூ.8.30க்கு அரிசி வாங்கி ரூ.3.50க்கு ரேஷனில் விற்பதன் மூலம் ரூ.ஆயிரத்து 300 கோடி மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இவர்கள் எப்படி ரூ.2க்கு அரிசி கொடுக்க முடியும்?

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர்வதையே பெண்கள் விரும்புகின்றனர். அவர் செல்லும் பகுதிகளில் பெண்களின் வரவேற்பு அதிகமாக உள்ளது. அமைதி, பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கை முறை அமைவது ஜெயலலிதா அரசில்தான் என்பதால் தான் பெண்கள் கூடுகின்றனர்.

இவ்வாறு வைகோ பேசினார்.

பள்ளப்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் பேசியதாவது:

கடந்த '98ல் பா.ஜ., மத்திய அரசில் பொது சிவில் சட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டபோது பல கட்சிகள் ஆதரவு அளித்தன. நான் மட்டுமே முதலில் எதிர்த்தேன். பின்னர் தான் தி.மு.க., ஆதரவு அளித்தது. தீர்மானத்தை பார்லிமெண்டில் விவாதத்துக்கு கொண்டு வந்தபோதும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஓட்டு எடுப்பு கொண்டுவர முயற்சித்தபோது மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். உடனே பிரமோத் மகாஜன், "நீங்களும் அமைதியாக இருந்தால் சட்டம் நிறைவேறும்" என்றார். நான் மறுத்தேன்.

முஸ்லிம்களுக்கு ஆதரவு என்று கூறிவரும் கருணாநிதியின் தி.மு.க., மற்றும் பா.ம.க., தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தது. அப்போதும் அ.தி.மு.க., எதிர்த்தே ஓட்டளித்தது. ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோதும், பார்லிமெண்டில் எதிர்ப்பு தெரிவித்து நான் பேசினேன்.

தி.மு.க., ஆட்சி காலத்தில் "டிசம்பர் 6" தோறும் சோதனை என்ற பெயரில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டனர். தி.மு.க., என்றுமே முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததேயில்லை.

இவ்வாறு வைகோ ஆவேசமாக பேசினார்.

Courtesy: www.dinamalar.com

இடஒதுக்கீடு விவகாரம் [கி.வீரமணி பேட்டி]

அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பைக் காட்டியுள்ளார்கள்..

முதலமைச்சர் ஜெயலலிதா சீரமைத்ததாகக் கூறப்படும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் முஸ்லிம்களின் வாழ்வு ஒளிரப் போகிறது என சில திடீர் அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆணையம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை தெளிந்த நீரோடையாக மக்கள் உரிமைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த சிறப்பு பேட்டியில் விவரிக்கிறார்.

கேள்வி: மார்ச் 1 அன்று தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான ஒரு ஆணை யத்தை புதுப்பித்திருக்கிறது. இந்த பிற்படுத் தப்பட்டோர் ஆணையம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்துவிடும், முஸ்லிம்களின் நீண்டகால ஜீவாதாரக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பரப்பப் படுகிறது. உண்மையிலேயே தமிழக அரசு புதுப்பித்துள்ள இந்த ஆணையம் முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதார கோரிக்கையை நிறைவேற்றுமா?

கி. வீரமணி: இந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நீதிபதி குமார ராஜரத்தினம் தலைமையில் இன்னும் சிலரை உறுப்பினர்களாகப் போட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் வழங்கிய ஆணையைப் பார்த்தால், அதிலே சிறுபான்மை சமுதாய மக்களால் நீண்டகால இடஒதுக்கீடு எங்களுக்குத் தேவை, எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் இல்லை, எங்கள் சமூகம் கீழாகச் செல்லக்கூடிய நிலை இருக்கிறது என்பதை அவர்கள் வலியுறுத்துகிற நேரத்தில், அழுத பிள்ளைக்கு நிலாவைக் காட்டுவது போல இதை அவர்கள் சொல்கிறார்கள். நான் அந்த ஆணையைப் பார்த்தேன். அதிலே, குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கோ, மற்ற சிறுபான்மையினருக்கோ இடஒதுக்கீடு செய்யப் படும் என்பதற்குரிய Terms of Reference அல்லது குறிப்புகளோ இல்லை.

அடுத்தபடியாக, இந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலமாகத்தான் இதைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. பொதுவாக இதை சொல்ல வேண்டுமானால், தனியே இதை செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. முதலாவதாக இந்த இடஒதுக்கீட்டை சிறுபான்மை சமுதாய மக்களாக இருக்கக்கூடிய இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்காகக் கேட்பது புதிதல்ல. ஏற்கனவே அவர்களுக்கு இருந்த சலுகை இடையிலே பறிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, பறிக்கப்பட்ட அந்த சலுகையை மீண்டும் அவர்கள் கேட்கிறார்கள் என்கிற வரலாறு ஆளுங்கட்சி உட்பட பலருக்குத் தெரியாது.

நீதிக்கட்சியினுடைய ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சியிலும் ஏற்பட்ட ஒன்று வகுப்புவாரி உரிமை. இந்த வகுப்புவாரி உரிமைதான் இந்த அரசியல் சட்டத்தில் சமூக நீதிக்கு வித்திட்ட ஒன்றாகும். அந்த வகுப்புவாரி உரிமை என்பதிலேயே எல்லாருக்கும் எல்லாமும் என்பதைப் போல முன்னேறிய ஜாதியினர் என சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் உட்பட சிறுபான்மை சமுதாயமாக உள்ள முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு இருந்திருக்கிறது.

மத்திய அரசுகளிலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே இருந்திருக்கிறது. எனவே இழந்த ஒன்றை, அதுவும் இடையில் இழந்த ஒன்றை தங்களது வாழ்வுரிமைக்காக, நான் ஏன் இந்த சொல்லை திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால், அவர்கள் (முஸ்லிம்கள்) மிகப்பெரிய அளவிலே நாங்கள் ஆள வேண்டும், மற்றவர்களையெல்லாம் (பெரும்பான்மையினரை) கீழே தள்ளிவிட்டு என்றுகூட அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் ஆளட்டும், நாங்கள் வாழ வேண் டும் என்ற அளவிலேயே கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதிலே தவறொன்றும் இல்லை. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழ்நிலை யில்தான் இந்த நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் இந்த ஆட்சியினருக்கு இருந்திருக்குமா? அப்படி இருந்திருக்குமேயானால் அது ஆட்சிக்கு வந்த ஐந்தாவது ஆண்டு முடியப் போகிற நேரத்திலே, கடைசி மணியடித்த பிற்பாடு நாம் எல்லாம் முடிந்தது என்று சொல்லக்கூடிய நிலையிலே இதைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

1999-ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜெயலலிதா தெளிவாக இரு விஷயங்களைச் சொன்னார். ஒன்று: பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார். மற்றொன்று: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி நிச்சயமாக ஆவணம் செய்வேன் என்றார். இந்த இரண்டையும் அவர் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்தாரா? அல்லது மீறினாரா?

ஆங்கிலத்திலே ஒன்றைச் சொல்வார்கள். More observed in bleech can in practice என்று சொல்வார்கள். அதுமாதிரி அதை நடைமுறையில் சிதைத்துதான் இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து பாடம் கற்றார்கள். இப்போது தங்களோடு யாரும் வரவில்லை என்ற உடனேயே இஸ்லாமிய சமூகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இருப்பதுபோல் நடிக்கிறார்கள்.

எனவே சொல்லுகிறவர்கள் எந்த சூழ்நிலையிலே, எந்த மனநிலையிலே சொல்லு கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஏமாற்றுகிறவர்கள் முயற்சி செய்யலாம். அது அவர்களுக்குத் தேவையாகவும் இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் ஏமாறலாமா? காலங்காலமாக தமிழக வரலாற்றிலே சிறுபான்மையாக சமுதாய மக்களாக இருக்கக்கூடிய சிறுபான்மையிலேயே பெரும்பான்மை உள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அமைச்சராக இருந்திருக்கிறாரா இல்லையா? எவ்வளவு காலம் இருந்தார்? இப்போது ஏன் இல்லை?

ஜெயலலிதா ஆட்சியில் சிறுபான்மை சமூகத்திற்கு இடஒதுக்கீடு முதலில் அமைச் சரவையிலேயே இல்லையே. இடையில் போட்டார்கள், பிறகு வெளியே அனுப்பி விட்டார்கள். ஏன் அமைச்சராவதற்குரிய தகுதி இஸ்லாமிய சமுதாயத்தில் வேறு யாருக்கும் இல்லையா? இதையெல்லாம் மறந்துவிட்டு உடனடியாக 'எல்லாம் செய்துவிட்டார்கள்' என்று தங்களைத் தாங்களே ஒருசிலர் ஏன் ஏமாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு விளங்காத ஒன்றாக உள்ளது.

கேள்வி: தங்களுடைய கொள்கை அளவிலே ஏற்றுக் கொண்ட, தங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் ஏற்றுக் கொண்ட ஒரு செய்தியை நிறைவேற்றுவதற்கு ஐந்தாண்டு காலம் முடிந்து ஆட்சியினுடைய அந்திம காலத்திலே ஒரு ஆணையத்தை புதுப்பித் திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டீர்கள். அந்தக் காலத்திலேயே போடப்பட்டு, இப்போது புதுப்பிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் நிலை என்ன? சட்டம் பயின்றவர் என்ற முறையில் அதன் சட்டப்பூர்வமான நிலையை கூறுங்கள்?

கி. வீரமணி: நிச்சயமாக சர்ச்சையை உண்டாக்கும். அதிலே இரண்டு வகையான சர்ச்சை இருக்கிறது. இது தேர்தல் நேரத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒன்று. இந்த ஆணையம் அனைத்து முஸ்லிம்களும் பிற்படுத்தப் பட்டவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டு இது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதா? அதிலே சில வேறுபட்ட வர்களும் இருக்கிறார்களா? எனவே இதுவே சிறுபான்மை நலக் கமிஷன் என்று இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை, அதனுடைய பங்கு பணியாக இது சுட்டிக்காட்டப்படவில்லை, அப்படி இருக்கையில் இதை மட்டும் எப்படி சொல் கிறீர்கள்? என்று இதையே ஒரு சட்டப்பிரச்சினையாக ஆக்கி வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு அதில் (ஆணையத்தில்) ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. எனவே, பசியில் அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பை காட்டுவதைப் போல இந்த ஆணையத்தை அமைத்துள்ளார்கள்.

பசியில் அழுகிற குழந்தைக்குத் தேவை பால்தானே தவிர, கிலுகிலுப்பை அல்ல. ஆகவே அதுதான் மிக முக்கியம். அவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை. ஏனோ அவர்களுக்கு மனமில்லை. ஏன் அவர்களுக்கு மனமில்லை என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறலாம்.

கேள்வி: எந்த வகையான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?

கி. வீரமணி: பாஜகவோடு அவர்கள் நேரடியாக கூட்டு சேர்ந்திருக்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதாவினுடைய சிந்தனையும், செயல்பாடுகளும் அதனை நோக்கி எழுதப்படாத ஒரு உடன்பாடு போல்தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

இந்தியாவிலேயே மிகக் கொடுமையாக இந்துத்துவா என்று சொல்லக்கூடிய தத்துவத்தை ஒரு ஹிட்லரைப் போல நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஒரு இடம் உண்டு என்று சொன்னால் அது குஜராத் தான். குஜராத்திலே, மோடியுடைய ஆட்சியிலே பேக்கரி எரிப்பு வழக்கில் எப்படியெல்லாம் சாட்சிகள் கூட விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்று இன்றைக்கு உலகம் முழுவதும் எள்ளி நகையாடுகிறது. நல்லவேளையாக உச்சநீதிமன்றத்திலே இருந்த நீதிபதிகள் தலையிட்டதற்குப் பிறகு அந்த வழக்கை வேறொரு மாநிலத்திற்கு மாற்றி அங்கு வழக்கு நடந்த பொழுது அந்த வழக்கிலும் கூட சாட்சிகளைக் கலைத்து அவர்களை விலைக்கு வாங்குகிற வேலையெல்லாம் செய்தார்கள். பாவம் அப்பாவியாக இருந்த சாட்சி கள் சிறைச்சாலைக்குப் போயிருக்கிறார்களே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை. அப்படிப்பட்ட மோடி தன்னுடைய அத்துனை தில்லு முல்லுகள், அச்சுறுத்தல்களை செய்து, குந்தகம் விளைவித்து, தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். அதற்காக இந்தியாவிலேயே பிஜேபி அல்லாத ஒரே முதல்வராக ஜெயலலிதா மோடியின் பதவியேற்பில் கலந்து கொண்டு மோடிக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். வேறு எந்த முதலமைச்சரும் மோடியை வாழ்த்தவில்லை. ஆகவே, இதிலேயே ஜெயலலிதா தான் யார் என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டார்.

அடுத்தபடியாக போப் இரண்டாம் ஜான்பால் வந்தார். போப்பை பொறுத்தவரையில் அண்ணா அவர்கள் கூட போப்பை சந்தித்தார்கள். எதற்காக வேண்டியென்றால், ஆசிர்வாதம் வாங்குவதற்காக அல்ல, மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய உயர்பதவியிலே அவர் இருந்தார் என்பதற்காகத்தான் அண்ணா அவரை சந்தித்தார். ஆனால் இன்று போப்பை பற்றி பிஜேபி என்ன நிலைப்பாடு எடுத்ததோ அதே நிலைப்பாட்டைத்தான் ஜெயலலிதா எடுத்தார்.

இன்னொரு விஷயம் போப் ஒரு மதத்தலைவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவர். அப்படிப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவரை தேவையில்லாமல் விமர்சனம் செய்தார். அவர் சிறுபான்மை சமுதாயத்தின் மதகுரு என்பதை மறந்துவிடுங்கள். இது நாகரீகமா? இது ஜெயலலிதாவின் மனப்போக்கையே காட்டுகிறது.

அதேபோல் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக இன்றைக்கு பானர்ஜி அறிக்கை வந்து அதைப் பொய்யென்று ஆக்கியுள்ளது. ஆனால் ஜெயலலிதா ரயில் எரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் "சிறுபான்மை மக்களைப் பற்றியே கவலைப்படும் தலைவர்கள் பெரும்பான்மை மக்களை மதிப்பதில்லை" என்றார். உடனே சோ போன்றவர்கள் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள். இப்படியாக ஜெயலலிதா, தான் யார் என்பதை தெளிவாகவே உணர்த்தி வந்திருக்கிறார்.

அதேபோல், எங்களைப் போன்றவர்களெல்லாம் கடுமையாக எதிர்த்ததற்குப் பிறகும் 'மதமாற்ற தடைச் சட்ட'த்தைக் கொண்டு வந்தார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் படுதோல்வியை சந்தித்த பின்னரே அச்சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆனாலும் வாபஸ் பெறவில்லை. அவசர சட்டம் நவம் பரில் காலாவதியாகி விட்டது. உடனே என்ன செய்திருக்க வேண்டும்? தெளிவாக சட்டமியற்றி இருக்க வேண்டும். சட்டமன்றத்திலே எத்தனை சட்டங்களை நிறை வேற்றியிருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டிய தனி நபர்களுக்குத் தேவையான 'ஆயுள் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்' என்பன போன்ற சட்டங்களை சட்ட மன்றத்திலே இயற்றினார்கள். இது செல்லாது என உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது வேறுவிஷயம்.

கேள்வி: இடைக்காலத்தில் மனமாற்றம் ஏற்படுவதற்கு தோல்வி தந்த பாடம் கூட உதவவில்லையா?

கி. வீரமணி: மனமாற்றம் கிடையாது. ஓட்டு எந்தளவு வந்துள்ளது என்பதில்தான் இந்த மாற்றம். ஒருவரைப் பற்றி அறிய அவருடைய செயல், சிந்தனையைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் சிந்தனை, செயல் எப்படிப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே ஜெயலலிதா ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் பழைய நிலைமைக்குப் போக மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இன்னொரு விஷயம். காந்தியைக் கொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பது வரலாறு. இதை கோட்சேயே தனது மரண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளான். கோட்சேயின் தம்பி கோபால் கோட்சேயும், தாங்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெளிவாகப் பேட்டியளித்திருக்கிறார். அப்படியிருக்க, கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்ற பிஜேபியினரின் கூற்றை ஜெயலலிதா நியாயப்படுத்தி, அதை தமிழக அரசின் பாடத்திட்டத்திலேயே மாற்றி அமைப்பதற்கு உதவுகிறார்.

அடுத்தபடியாக, பார்ப்பனர்களைப் பற்றி நீதிக் கட்சியின் வரலாறு பாடத்தில் சொல்லப்படுகிறது. வரலாறு சொல்லப்படுவதால் அந்த பாடத்திட்டதையே நீக்க வேண்டும் என பார்ப்பன சங்கம் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதுகிறது. அங்கேயும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பார்ப்பன சங்கத்தின் மாநாட்டிலேயே ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். 'இந்த பாடத்திட்டத்தை நீக்கிவிட வேண்டும்' என்று தீர்மானம் போட்டு 'நாங்கள் உங்களை சங்கடப்படுத்தவில்லை' என்று தீர்மானம் போட்டார்கள்.

இதன் பொருள்: 'நாங்கள் உங்களை வலியுறுத்தவில்லை, நீங்களே அதை செய்து விடுங்கள்' என்று கூறுகிறார்கள். எனவே பார்ப்பனர்கள், ஆர்எஸ்எஸ், இந்துத் துவா என இதிலே அத்தனையும் சேர்ந்திருக்கிறது.

இன்னொரு விஷயம் சங்கராச்சாரியாரைக் கைது செய்ததன் மூலம் நாங்கள் எல்லோரையும் சமமாகத்தான் மதிப்போம் என்றார்கள். ஆனால் சங்கராச்சாரியார் கைது பற்றி எந்த பார்ப்பனரும் பேசுவதில்லை. அதில்தான் மர்மம் அடங்கி யிருக்கிறது. தேர்தலின்போது அது வெளிப்படும்.

கடந்த முறை நாங்களும் சேர்ந்துதான் அந்த அம்மையாரை ஆட்சியில் அமர்த்தி னோம். மதவெறி சக்திக்கு மாற்றாக நாம் அன்று எடுத்த முடிவு அது. இப்போதும் கூட நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் ஜெயலலிதாவை விமர்சிக்கிறோம். குன்றக்குடி அடிகளார் அற்புதமாக சொல்லுவார்: "தமிழனிடம் ஒரு குணம் இருக்கிறது. அவன் நேற்று விழுந்த அதே இடத்தில்தான் மீண்டும் விழுவான்" என்று. அதுபோலவே தற்போது ஜெயலலிதாவிடம் சேர்ந்தவர்களின் நிலையும் உள்ளது.

கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்தவித மதவாத சாதிய மோதல் கள் நடைபெறவில்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்த காரணத்திற்காக இதை ஆதரிக்கலாம் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

கி. வீரமணி: மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுத்ததற்கு காரணம் நம்மைப் போன்ற இயக்கங்களே தவிர சட்டம் அல்ல. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் கலவரம் நடந்தது. ஆனால் தமிழகத்தில் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் பெரியார் போன்ற தலைவர்கள் உருவாக்கிய மண். மகாத்மா காந்தி இறந்தபோது கூட பல இடங்களிலே கலவரம் நடந்தது. இங்கேயும் சில விஷமிகளால் வதந்தி பரப்பப்பட்டதே தவிர, கலவரம் நடைபெறவில்லை.

காந்தியை சுட்டுக் கொன்றவர் பார்ப்பனராக இருந்தாலும் இங்கே பார்ப்பனர்களுக் குக் கூட ஏதும் நடைபெறவில்லை. காரணம் இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டிருக் கிறது. எத்தனையோ மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடைபெறவில்லை. அங்கே யெல்லாம் நாங்கள்தான் ஆளுகிறோம் என்று சொல்ல முடியுமா? எனவே, மதக் கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மதங்களைப் பின்பற்றக்கூடிய மக்கள் காரணமே தவிர சட்டம் அல்ல.

கேள்வி: மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுப்பது இன்னொரு பாகிஸ்தானை உருவாக்கி விடும் என்று பா.ஜ.க. கூறிவருகிறது. இது அறிவுக்கு ஏற்புடையது தானா?

கி. வீரமணி: இங்கே மதத்திற்கு உள்ள உரிமை உண்டு. மதச்சிறுபான்மையினரை அங்கீகரித்திருக்கிறார்கள். எனவே மத உரிமை, மத சிறுபான்மையினர் என்று கூறும்போது அதை கலாச்சார ரீதியாகப் பார்க்க வேண்டும். ஆகவே வெறும் மதம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கொடுக்கக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறார்களே தவிர வேறொன்று மில்லை.

சிறுபான்மை மக்கள் மத்தியிலே அவர்களுக்கு மதம் என்பது ஒரு அடையாளமே தவிர அவர்கள் அந்த மதத்தில் பிறந்து விட்டதினால் இடஒதுக்கீடு கேட்க வில்லை. எங்கள் சமுதாயம் இவ்வளவு படிக்கவில்லை, கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளோம், எங்கள் சமுதாயத்திற்கு பசி இருக்கிறது, எனவே சோறு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு அடையாளமாகப் பயன்படுகிறதே தவிர, அந்த அடையாளத்தையே கொச்சைப்படுத்துவது தேவையற்ற ஒன்றாகும்.

கேள்வி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவிக்கு வந்தவுடன் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலே ஆணையத்தைப் போட்டார்கள், அதேபோல் ராஜேந்திர சச்சார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவிலே அமைக்கப்பட்ட இந்த ஆணையம் தற்போது ஜெயலலிதா அமைத்துள்ள ஆணையத்தை விட வலிமை குறைந்தது என்று பிரச்சாரம் செய்யப் படுகிறதே?

கி. வீரமணி: இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் பெயரென்ன? அதன் Terms & Conditions என்ன? சிறுபான்மை ஆணையம் என்றுதான் தேசிய அளவில் போட்டிருக்கிறார்கள். அதன் நடவடிக்கையும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆணையம் காய்த்து, கனிந்து, பழம் போல் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா அமைத்த ஆணையம் இப்போதுதான் விதை போடப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் ஜெயலலிதாவை நம்புகிறவர்களை எச்சரிக்கத்தான் முடியும். தூங்குபவர்களைத்தான் எழுப்ப முடியுமே தவிர, தூங்குவதைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஆகவே அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது? அதிலும் இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதற்கு இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. இன்னும் சொல்லப் போனால் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கே ஒரு ஆற்றலும் இல்லை, அதற்காக நாங்க ளெல்லாம் போராடிக் கிட்டிருக்கிறோம். இப்படியிருக்கையில், மாநில அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் மதிப்பு என்னவாக இருக்க முடியும்?

கேள்வி: பலமுறை தமிழக அரசை சந்தித்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்கும்பொழுது 69 சதவீததிற்கான இடஒதுக்கீடு வழக்கு இப்போது நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்ததும் அதுபற்றி பரிசீலிக்கலாம் என்ற பதிலை முதல்வர் தந்துள்ளார். ஆனால் இஸ்லாமியர்கள் கேட்பது 69 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பல்வேறு சாதியினரோடும் போட்டிவிட முடியாது என்பதால் அதனுள் உள் இடஒதுக்கீடு தரவேண்டும் எனக் கேட்கிறார்கள். இது சாத்தியமா?

கி. வீரமணி: மற்ற மாநிலங்களில் உள்ளபோது தமிழகத்தில் ஏன் கொடுக்கக் கூடாது? கேரளாவில் எவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை ஜெயலலிதா பார்வையிட வேண்டும். இந்த 69 சதவீத இடஒதுக்கீடு தனி சட்டமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறது. 9 அட்டவணை பாதுகாப்பிலே வைக்கப்பட்டு 76வது இந்திய சட்ட திருத்தமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம்தான் இதற்கான ஏற்பாட்டை செய்தது. அதனால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. ஆகவே இது சாக்குப் போக்கு ஆந்திராவில் கூட முறைப்படியாக இடஒதுக்கீடு கொடுக்கப் படவில்லை என்றுதான் சொல்ல முடிந்ததே தவிர, கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆகவே கொடுக்க நினைத்தால் உடனே கொடுக்க முடியும். அவர்கள் கொடுக்க விரும்பவில்லை.

கேள்வி: இடஒதுக்கீடு கொடுப்பதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது பற்றி உங்கள் கருத்து?

கி. வீரமணி: இதை திராவிடர் கழகமும் வலியுறுத்துகிறது. இப்போதுள்ள 69 சதவீதம் நாளைக்கு 72 சதவீதமாக மாறலாம். மற்ற மாநிலங்களில் உள்ளது. ஏனென்றால் மண்டல் கமிஷன் தொடர்பாக 9 பேர் கொண்ட நீதிபதிகள் வழக்கு உச்சநீதிமன்றத்திலே நடந்தபொழுது பீஹார் மற்ற மாநிலங்களுக்கு ராம்ஜெத் மலானி வழக்கறிஞராக வாதாடினார். அப்போது நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர். ''நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் 100 சதவீதம் கேட்பீர்கள் போல் தெரிகிறதே'' என நீதிபதிகள் கேட்டனர். ''ஏன் கேட்கக்கூடாது?'' என ராம்ஜெத் மலானி கேட்டார். பல இடங்களில் வாழுகிற மக்கள் தொகை, கலாச்சாரம் மாநிலத் திற்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே, இடஒதுக்கீடு கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கு வழங்குவதுதான் சரியானதாக இருக்கும். ஏனென்றால் இது ரொம்ப நாளைக்கு தேவைப்படுவதாக உள்ளது. இது சமூகநீதிக்கு ரொம்ப முக்கியம். சமூகநீதி சட்டங்களெல்லாம் 9 அட்டவணையிலே வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ போதிய பிரதிநிதித்துவம் கிடையாது.

மற்றவர்களாவது நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கூட நீதிபதியாக இல்லை. இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒருவர்தான் இருந்தார். அவர் ரத்தினவேல் பாண்டியன். அவருக்குப் பின்னால் இதுவரையில் யாரும் நீதிபதியாக இல்லை. மாவட்ட அளவிலே நீதிபதியாக இருக்க அனுமதிக்கப்படக்கூடிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றப் பதவிகளிலே அனுமதிக்கப்படுவதில்லை. எனவே இடஒதுக்கீடு என்பதே நீதிமன்ற வளாகத்திலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்.

கேள்வி: ராஜேந்திர சச்சார் தலைமையிலே உள்ள உயர்மட்டக்குழு ராணுவத்தில் முஸ்லிம்கள் கணக்கெடுப்பு நடத்துகிறது. விமானப்படை, கப்பற்படை கணக்கெ டுப்பை கொடுத்துவிட்ட நிலையில் தரைப்படை அந்த எண்ணிக்கையைத் தர மறுக்கிறது. இதுபற்றி சர்ச்சை எழுந்துள்ளதே.. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

கி. வீரமணி: கணக்கெடுப்பு நடத்துவதால் எந்த விளைவும் வரப்போவதில்லை. இருப்பதைத்தான் கணக்கெடுக்கிறார்கள். இது பெரிய நிகழ்வே அல்ல. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எந்த விதத்திலும் முன்னேறக் கூடாது என்பதால் பதறுகிறார்கள். அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் தான் இதுபோன்ற பதற்றத்திலும், குழப்பத்திலும் ஈடுபடுகிறார்கள். இந்த கணக் கெடுப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது அல்ல. இந்தியா இந்துத்துவா நாடாக வேண்டும் என்ற கோல்வால்க்கரின் கூற்றை ஆதரிப்பவர்கள்தான் கொக்கரிக் கிறார்கள்.

கேள்வி: வரக்கூடிய தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் அந்த மக்களுக்கு விடுக்கக்கூடிய செய்தி என்ன?

கி. வீரமணி: வரக்கூடிய தேர்தலில் நண்பன் யார்? எதிரி யார்? என்று பிரித்துப் பார்த்து தெளிவாக செயல்பட வேண்டும். முஸ்லிம்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். உங்களை நினைக்காமல் உங்கள் சந்ததியரை நினைக்க வேண்டும்.

சந்திப்பு: ஹாஜாகனி, தொகுப்பு : அனீஸ்

நன்றி: www.tmmkonline.org

Saturday, April 08, 2006

முஸ்லிம்கள் யார் பக்கம் ?- ஜூனியர் விகடன்















முஸ்லிம்கள் யார் பக்கம்? தேர்தல் விளையாட்டில் இட ஒதுக்கீடு?


திருமணத்துக்குத் தாலி என்பது போல், அரசியல் கூட்டணி என்றால் ஒரு முஸ்லிம் இயக்கம் அதில் இருக்க வேண்டும் என்பது தமிழகத்தில் பலகாலமாகவே வழக்கத்தில் இருக்கிறது. முஸ்லிம்களைத் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக கருதுவதால், முஸ்லிம் இயக்கத்தினர் மீது அரசியல்வாதிகள் தனிப் பாசம் காட்டுவதும், இஃப்தார் விருந்துகளில் வலியப்போய் பங்கேற்று, தொப்பிப் போட்டுக் கஞ்சிக் குடிப்பதும் நடக்கும். எல்லாமே ஓட்டுக்காகத்தான்!

ஆனால், இன்றைய நிலவரப்படி முஸ்லிம் சமூகத்துக்கு முன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே சாயம் வெளுத்து நிற்கின்றன என்பதுதான் உண்மை. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரண்டு கட்சிகளுமே பெரிதாகக் கண்டுகொள்ளாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் தூசு தட்டுவதால், பொதுவாகவே இரண்டு இயக்கங்கள் மீதும் இந்த சமூகத்தினருக்குத் தாளாத கோபம் இருக்கிறது. மேடைபோட்டு அவ்வப்போது அதை அவர்கள் காட்டவும் தவறவில்லை. இதை வைத்தே... த.மு.மு.க. எனப்படும் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழக தவ்ஹீத் ஜமா&அத் ஆகிய இரண்டு அமைப்புகள், தங்கள் பக்கம் முஸ்லிம் மக்களைத் திரட்டி வைத்திருக்கின்றன. தேர்தலில் போட்டியிடாதவை, இந்த இரண்டு இயக்கங்களும். அதனால், இந்தத் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த இயக்கங்கள் எடுக்கக் கூடும் என்ற பேச்சிருந்தது. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. என்று ஆளுக்கொரு பக்கமாக இந்த இரண்டு இயக்கங்களும் சாய்ந்துவிட்டன. ஏன் ஆதரிக்கிறோம் என்பதற்கு ஏகப்பட்ட காரணங்களை இரண்டு இயக்கங்களுமே தங்கள் சமூக மக்களிடம் பட்டியல் போட்டபடியிருக்கின்றன. இதற்கெல் லாம் எந்த அளவுக்குப் பலன் இருக்கும்? முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்கப் போகி றார்கள்? என்ற கேள்விகளோடு, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களிடமே கேட்டோம்.

முதலில் இஸ்லாமிய எழுத்தாளர் ஒருவரிடம் பேசினோம். அவர், ‘‘அண்ணா காலத்தில் முஸ்லிம் லீக்கின் தலைவராக இருந்த காயிதே மில்லத், தி.மு.க&வோடு கூட்டணி அமைத்துத் தேர்தல்களை சந்தித்தார். அவருக்குப் பிறகு அப்துல் சமதுவும், லத்தீப்பும் முஸ்லிம் லீக்கை வழி நடத்தினார்கள். லத்தீப் தனியாகப் பிரிந்துபோய் தேசிய லீக் கட்சியை நடத்தினார். இருவருமே இரண்டு திராவிடக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ§டன் கூட்டணி அமைத்துத் தேர்தல்களை சந்தித்தனர். பல காலமாக இதுதான் முஸ்லிம் இயக்கங்களின் நிலையாக இருந்தது.

ஆனால், 1991&ல் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னால் முஸ்லிம் மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் முஸ்லிம் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இருந்தால் போதும் என்கிற நிலை மாறியது. 1999&ல் இட ஒதுக்கீடு கேட்டு சென்னை கடற்கரையில் பிரமாண்டமான வாழ்வுரிமை மாநாடு நடத்தியது, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம். அதன் பின்னரே இடதுக்கீடு விஷயம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து, இன்றைக்கு அரசியல் கட்சிகளுக்கு சரியான நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு இந்த விஷயம் வளர்ந்திருக்கிறது’’ என்றார் அவர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகத்தில் லெப்பை (மரைக்காயர், ராவுத்தர் உட்பட), அன்சார், தக்னி, ஷேக், செய்யது என்ற ஐந்து பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் வருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முஸ்லிம்களை மட்டும் தனியாகப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கை. தமிழக மக்கள் தொகையில் 13 சதவிகிதம் முஸ்லிம்கள் இருப்பதால், அதே அளவுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.

ஆந்திராவில் 2004 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், முஸ்லிம்களுக்கு தனி இடதுக்கீட்டை அறிவித்தது காங்கிரஸ் (இந்த உத்தரவினை பின்னர் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது). சமீபத்தில் பாண்டிச்சேரியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சேர்த்து 13 சதவிகித தனி இடஒதுக்கீட்டை அறிவித்தார்கள். இதனால் இப்பொழுது முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்கவே பலம் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், தவ்ஹீத் ஜமா&அத்தின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீனிடம் முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பது குறித்துப் பேசினோம். ‘‘முஸ்லிம்கள் இன்றைக் கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் பின்தங் கிய சமுதாயமாகவே இருக்கிறார்கள். அதனால்தான் தனி இட ஒதுக்கீட்டை முன் வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவெடுத்தோம். ஒவ்வொரு தேர்தலிலும் இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்து வருகிறோம். ஆனால், தேர்தல் முடிந்ததும் அரசியல் கட்சிகள் எங்களை ஏமாற்றி விடுகின்றன.
சமீபத்தில் கும்பகோணத்தில் நாங்கள் நடத்திய மாநாட்டில் ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்வோம் என்று முதலில் யார் அறிவிக்கிறார்களோ அவர்களுக்குதான் எங்கள் ஆதரவு’ என்று தீர்மானம் போட்டோம். அதையடுத்து, இடஒதுக்கீடு செய்வது தொடர்பாக கமிஷனை நியமித்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. அதனால் அவர்களுக்குதான் எங்கள் ஆதரவு’’ என்று சொன்னார்.
‘‘ஆட்சி முடியும் தறுவாயில் கமிஷனை போட்டிருக்கிறது இந்த அரசு. இதன் அறிக்கை வருவதற்கு ஒரு வருடம் ஆகலாம். இதை நம்பி எப்படி ஆதரவு தந்தீர்கள்?’’ என்ற கேள்வியை எழுப்பினோம்.

‘‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடுக்கான அடித்தளமாவது அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. அதற்கான விதை இப்போது தூவப்பட்டிருக்கிறது. அடுத்துவரும் ஆட்சியாளர்கள் இந்த கமிஷனை கிடப்பில் போட்டால் சிறுபான்மையினர் மீது அவர்கள் காட்டும் பாசம் வெறும் வேஷம் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், இடஒதுக்கீட்டுக்காக மத்திய அரசை அவர்கள் வலியுறுத்த தவறிவிட்டார்கள். அந்தந்த மாநிலங்களே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை நிர்ணயித்துக்கொள்ள வழி செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்பதைக்கூட தி.மு.க. வலியுறுத்தவில்லை. சேது சமுத்திரத் திட்டம், தமிழ் செம்மொழி என்று மத்திய அரசிடம் கேட்டு வாங்க முடிந்த கருணாநிதியால் இதைக்கூட செய்ய முடியவில்லைÕÕ என்று குற்றச்சாட்டுக்களை வீசியவர்,
ÔÔபாண்டிச்சேரியில் காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்திருப்பதால், அங்கே தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம்’’ என்று தங்களது நிலைப்பாட்டை எடுத்துவைத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே தி.மு.க. கூட்டணியில் தோழமைக் கட்சியாக இருந்து வருகிறது த.மு.மு.க. இதன் தலைவர் ஜவாஹிருல்லா என்ன சொல்கிறார்? ‘‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அ.தி.மு.க வழங்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்தே செய்தி பரப்பினார்கள். உடனே இடஒதுக்கீடு கோரிக்கையோடு, குண்டு வெடிப்பில் கைதான அப்பாவி முஸ்லிம்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தோம். ‘தேர்தலில் எங்கள் அமைப்பு போட்டியிடுவது கிடையாது. அதனால் உங்களிடம் ஸீட் எதுவும் கேட்கமாட்டோம். கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தால் ஆதரவு தருகிறோம்’ என்று சொன்னோம். அ.தி.மு.க அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, அந்தக் கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரையில் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பின்னால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட சமயத்தில் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடஒதுக்கீட்டை சேர்த்தார்கள். மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் இருக்கிறது. அதற்கான பணிகளை அவர்கள் துவக்கி விட்டார்கள். மத, மொழி சிறுபான்மையினருக்காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ரஜீந்தர் சச்சார் தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசுத் துறைகளில் முஸ்லிம்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை இந்த கமிட்டி கணக்கெடுத்து வருகிறது. கமிட்டி தரும் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு விரைவில் சட்டம் நிறைவேற்றும்.

ஆனால், அ.தி.மு.க. சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வந்த நேரத்தில் ஜெயலலிதா, ‘இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டும்தான் சிறுபான்மையினராக இருக்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்பினார். இதை வைத்தே அவருக்கு முஸ்லிம்கள் மீது அக்கறை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தார்... அதை வாபஸ் வாங்கிவிட்டதாக ஜெயலலிதா அறிவித்தாலும், அது இன்னும் நடைமுறையில்தான் இருக்கிறது. அதனால் இந்தத் தேர்தலில் நாங்கள் தி.மு.க&காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்தோம். தேர்தலிலும் கடும் பிரசாரம் செய்வோம்’’ என்றார் ஜவாஹிருல்லா.

முஸ்லிம் கட்சிகளில் நூறாண்டு கண்ட இயக்கமான முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது. அதேசமயம் தேசிய லீக் கட்சி, அ.தி.மு.க. கூட்டணியில் களம் காண்கிறது. இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தல் பாதையில் இருக்கும் கட்சிகள். மாநிலம் முழுக்கவே பரவலாக ஆதரவை பெற்றிருக்கும் இந்தக் கட்சிகளின் வாக்குகள் சந்தேகமில்லாமல் சம்பந்தப்பட்ட அணிக்குதான் போகும். அதேசமயம், பொதுவாக இருக்கும் மக்களின் மனநிலை என்ன என்பதுதான் முக்கியம்!

இஸ்லாமிய எழுத்தாளரான உமறு புலவருக்கு மணிமண்ட பம் கட்ட உத்தரவிட்டிருப்பது, ஜெயலலிதாவுக்கு நல்லபெயர் வாங்கிக் கொடுத்தாலும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யாதது, அமைச்சரவையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்காதது போன்ற பிரச்னைகள் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கமிஷன் போட்டதும் ஓட்டுகள் வாங்கதான் என்கிற குரல்களும் கேட்காமல் இல்லை.

இதுபோன்ற விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒவ்வொரு பகுதிகளில் இருக்கும் Ôஜமா&அத்Õ எடுக்கும் முடிவுக்குதான் அந்தப் பகுதி முஸ்லிம்கள் கட்டுப்படுவார்கள். இந்த ஜமா&அத்கள் யாருக்கு வாக்களிக்க முடிவு எடுக்கப் போகிறார்களோ அவர்களுக்குதான் முஸ்லிம்கள் ஓட்டுகள் விழும் என்பது மறுக்க முடியாத உண்மை.

எம்.பரக்கத் அலி
படங்கள்: கே.கார்த்திகேயன், வி.செந்தில்குமார்

நன்றி: ஜூனியர் விகடன்

விஜயகாந்தின் குலக்கல்வி திட்டம்

நடிகர் விஜயகாந்த், தன் கட்சியான, தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், 'காலையில் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாத மாணவ-மாணவிகளுக்கு மாலை நேர பள்ளிக்கூடங்களை இயக்குவது மூலம் அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.' என்று கூறியுள்ளார். இது வர்ணாசிரமத்தை தமிழ் நாட்டில் நிலை நிறுத்த ஆட்சி செய்த, இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பு அல்லவோ? எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி என்றும், குழந்தைகளை வேலைக்கு வைக்கும் தொழிற்சாலைகளின் லைசன்ஸ் பறிப்பு என்றும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோரின் ரேஷன் கார்டு பறிப்பு என்றும் அல்லவா அவர் அறிவித்து இருக்க வேண்டும்.

Thursday, April 06, 2006

வெளியேற இ.யூ.மு.லீக் தீர்மானம்

தி.மு.க, கூட்டணியில் இருந்து வெளியேற இ.யூ.மு.லீக் தீர்மானம்

திருச்சி: "தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்' என தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திருச்சி மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட தலைவர் மன்னான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சையது ஜாபர் வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஹாசீம், மாவட்ட துணைத்தலைவர் பாரூக் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் நீடிக்கும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு முதலில் பாளையங்கோட்டை, வாணியம்பாடி, அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது பாளையங்கோட்டையில் தி.மு.க., வேட்பாளரை அறிவித்திருப்பது தொகுதி உடன்பாட்டை மீறியதாகும்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு பெரும் ஏமாற்றம் ஏற்படுத்துவதாக உள்ளது. கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாத தி.மு.க., தலைவர் கருணாநிதி, முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியதை எப்படி நம்ப முடியும். தி.மு.க., கூட்டணியில் இருந்து முஸ்லிம் லீக் கட்சி வெளியே வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலாளர் சலீம் நன்றி கூறினார்.

Courtesy: www.dinamalar.com

Wednesday, April 05, 2006

அளவு கடந்து கேள்வி கேட்பதென்றால்..

ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (அவசியமில்லாமல் - அளவு கடந்து) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப் படுமானால், உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும். மேலும், குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் - அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்;. (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.

உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார், (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.

(அல்குர்ஆன் - 5:101,102 - சூரதுல் மாயிதா)

அளவு கடந்து கேள்வி கேட்பதென்றால் என்ன..?
இதோ ஓர் உதாரணம்..

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம்,

'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள்;

'(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்;.

(அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல், அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்.

'அது எத்தகையது..? என்பதை எங்களுக்கு விளக்கும்படி, உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!' என்றார்கள்.

'அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக' (மூஸா) கூறினார்.

'அதன் நிறம் யாது..? என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!'
என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்;

'திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு;. கெட்டியான நிறம்;. பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்' என்று மூஸா கூறினார்.

'உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது..? என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்'
என்று அவர்கள் கூறினார்கள்.

அவர்(மூஸா)'நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடு இல்லாதது - என்று இறைவன் கூறுகிறான்' எனக் கூறினார்.

'இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்'
என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.

(அல்குர்ஆன் - 2:67-71 - சூரதுல் பகரா)

- தொகுப்பு : முஹம்மது மஸாஹிம்

Monday, April 03, 2006

தவறுக்கு மேல் தவறு செய்யும் த.மு.மு.க















1. சில நாட்களுக்கு முன் த.மு.மு.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தி.மு.கவின் தேர்தல் பிரச்சார மேடையில் நின்று கொண்டு, அ.இ.அ.தி.மு.கவை ஆதரிக்கும் முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் லெட்டர் பேடு அமைப்புகள் என்று பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத் தக்கது. முஸ்லிம் லீக்கை விமர்சித்த தாவூது மியாகானின் பேட்டியை மக்கள் உரிமையில் வெளியிடும் போதும், த.மு.மு.க கணக்கு காட்டும் நிகழ்ச்சியில் அவர் முன்னிலை வகித்த போதும், அது லெட்டர் பேடு அமைப்பு என்று பேராசிரியருக்குத் தெரியாதா?

2. சர்ச்சைக்குரிய மவ்லவி பி.ஜெ கூட, பிற அமைப்புகளுடன் இணைந்து சென்று முதல் அமைச்சரைச் சந்திக்க சம்மதிக்கிறார். ஆனால் அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் தாங்கள் தான் பிரதிநிதி என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பிற முஸ்லிம் அமைப்புகளுடன் எந்த ஒரு பொதுக்காரியத்திலும் இணைந்து செயல்பட மறுப்பது ஏன்?

3. தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளுக்கு முன்பே உள்ள கோரிக்கை. அக்கோரிக்கை ஏற்கப்பட்டது சமீபத்தில் தான். அது போலவே, முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கை த.மு.மு.க தோன்றுவதற்கு முன்பே உள்ள கோரிக்கை. முஸ்லிம் லீக் மாநாடுகளில் இது தொடர்பாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, த.மு.மு.க மட்டும் தனிப்பெருமை தேடுவதில் என்ன நியாயம்?

4. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மவ்லவி பி.ஜெ, முதல்வரிடம் பேசும் போது, இந்திய தேசிய லீக்கிற்கு அதிக இடங்களைக் கொடுங்கள் என்று கேட்டார். ஆனால், தி.மு.க கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு அளிக்கப் பட்ட பாளையங்கோட்டை தொகுதியை த.மு.மு.க, மவ்லவி ஃபழ்லுல் இலாஹிக்காக கேட்டதாகவும், அதனால் அத்தொகுதியை முஸ்லிம் லீக், த.மு.மு.க ஆகிய இருவருக்குமே இல்லாமல் தி.மு.கவே எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுவது உண்மையா? இச்செய்தி உண்மையென்றால், த.மு.மு.க செய்தது ஒரு சமுதாயத் துரோகமே.

5. மவ்லவி பி.ஜெ அவர்களிடம் எனக்கு மார்க்கம் தொடர்பாகவும், அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் பல கருத்துகளில் வேறுபாடு உண்டு. எனினும் அதே போன்று சர்ச்சைக்குரிய மவ்லவி ஃபழ்லுல் இலாஹியை த.மு.மு.க முன்னிறுத்துவது ஏன்? த.மு.மு.க எது செய்தாலும் சமுதாயம் எந்தக் கேள்வியும் கேட்காது என நினைக்கிறார்களா?

6. தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுப்பதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைக்காக சிறுபாண்மையினர் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட பேராயர் எஸ்ரா. சற்குணமும், த.மு.மு.கவும் தானே காரணம்? சிறுபாண்மையினர் கூட்டமைப்புக்கு தேர்தல் நிலைப்பாடு எடுப்பது தவிர வேறு எந்த வேலையும் கிடையாதா?

7. சுனாமி கணக்கை தனி கூட்டம் நடத்தி பொது மக்கள் முன் சமர்ப்பித்த த.மு.மு.கவைப் பாராட்டுகிறோம். எனினும், விமர்சனம் என வந்த பிறகு முஸ்லிம் சமாதானக் குழுவிடம் கணக்கு காட்டச் செல்லாததும், அக்குழுவில் இடம் பெற்ற அமைப்புகளையெல்லாம் விமர்சித்து அதன் தலைவருக்கு களங்கம் கற்பித்ததும் இஸ்லாமிய வழிமுறை அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது உள்ள அளவு கடந்த வெறுப்பு த.மு.மு.கவின் கண்ணை மறைத்து விட்டது.