Saturday, July 29, 2006

தமிழ் இதழ்கள் - ஆய்வுக் கட்டுரைகள்

தமிழ் திணை இணைய இதழ் ஆதித்தனார் நூற்றாண்டு விழாவையொட்டி, பல்வேறு வகையான தமிழ் இதழ்களையும் பற்றி பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து மலர் வெளியிட்டுள்ளது. அச்சு வடிவிலும், சிடி வடிவிலும் வெளியிடப்பட்ட இந்த மலரின் கட்டுரைகளை இணையத்திலும் படிக்கலாம்.

தமிழ் இதழ்கள் - ஆய்வுக் கட்டுரைகள்

Wednesday, July 26, 2006

சமுதாய ஒற்றுமைக்கு சரியான வழி

அல்லாஹ் இப்புவியில் வாழும் மக்கள் மீது சொரிந்திருக்கும் அருட்கொடைகள் ஏராளம். மக்கள் நேர்வழி பெற வேதங்களை வழங்கி இறைத் தூதர்கள் மூலம் வாழும் முறைகளை தெளிவாக்கி தன் படைப் பினங்கள் இப்புவியில் வாழும் காலமெல்லாம் வல்லோனின் கட்டளைகளை ஏவல் விலக்கல்களை விளங்கி நடக்க வேண்டும். மறுமையில் நல்லடியார்களின் தங்குமிடமாகிய நிரந்தர சுவனத்தைப் பெற வேண்டும் என்ற உயரிய கருணைக் கொண்டு மனிதனுக்கு வழங்கிய அவகாசமே இப்பூவுலக வாழ்க்கை. ஆனால் மனிதனோ தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகி மார்க்கம் கூறும் வழிகாட்டுதல்களை துச்சமென மதித்து தூக்கி எறிந்து விட்டு மயக்கும் மனோஇச்சையால் மதி மயங்கி வசந்தமான வாழ்க்கையை வறண்ட பாலைவனமாக்குகிறான். நேர்வழி என்று அறிந்த பின்னரும் வழிகேட்டில் வீழ்ந்து இம்மையில் அவன் ஆற்றும் இக்கருமங்களின் பிரதிபலனை மறுமையில் காணவிருக்கிறோம் என்பதை மறந்து செயல்படுகிறான்.

அல்லாஹ் வழங்கிய அருள்மறையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் தெள்ளத் தெளிவாக இச்சமுதாயத்துக்கு விளக்கப்பட்ட பின்னரும் கூட பிரிவுகளில் பிளவுகளில் குளிர் காயும் நிலையையும் பிற சமுதாய மக்களைப் போல ஜாதி குலம் கோத்திரம் என்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பதுடன் ஒருபிரிவு மற்ற பிரிவை தரம் தாழ்த்தி விமர்சிப்பது சண்டையிட்டுக் கொள்வது வரை நடக்கிறது.

இஸ்லாமியர்களைத் தீவிரவாதி என ஊடகங்கள் சித்தரிக்க முற்பட்டிருக்கும் இவ்வேளையில் பிரிவுகளில் ஊறித் திளைக்கும் இச்சமுதாய சகோதரர்கள் மற்றொரு பிரிவினரை நாகூசாமல் தீவிரவாதிகள் என்றும் புல்லுறுவிகள் என்றும் தூற்றும் நிலையைக் காண்கிறோம். மாற்றார் செய்யும் தப்புப் பிரச்சாரங்களுக்கு முறையே பதில் கூற வேண்டிய மார்க்க முன்னோடிகள் கூட இச்செயலை முன்னின்று நடத்துவதுதான் விந்தையிலும் விந்தை.

இப்படி பிளவு பட்டு பல பிரிவுகளாக அமைப்புகளாக ஆகிவிட்ட இந்த சமுதாயம் இனியாவது மேலும் பிளவுபடாமல் இணைந்து ஒற்றுமையாக வாழுமா? என்ற ஆதங்கம் சமுதாயத்தின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இதற்காக என்ன முயற்சிகள் செய்வது?.. அந்த முயற்சிகளின் அடிப்படை எப்படி இருக்க வேண்டும்?.. என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

போலியான ஒற்றுமை நாடகங்கள்..

பிளவு பட்டுப் போன இச்சமுதாயத்தின் முன்னோடிகளில் சிலர் முஸ்லீம்கள் என்ற பெயரளவில் மட்டும் ஒருங்கிணைந்த ஒரு கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் இழந்த உரிமைகளைப் பெறுவோம். இருக்கும் உரிமைகளைப் பாதுகாப்போம். இனி ஒருபோதும் எங்கள் மேல் எந்த உரிமை மீறலும் நிகழ அனுமதிக்க மாட்டோம் என்ற கோஷங்களை முன்னிறுத்தி போலியான ஒற்றுமை நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். மாற்றாரின் அரசு பிற சமுதாய மக்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தம் வலிமையையும் பெருந்திரளான மக்கள் சக்தியையும் காட்டி முஸ்லீம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு விட்டனர் என ஊருக்குக் காட்ட நடத்தப்படும் போலி மாயைதான் ஒற்றுமை நாடகம்.

அரசைப் பணியவைக்க ஆளுவோரை மிரட்டகையில் எடுத்த ஆயதம்தான் இந்தப் போலி ஒற்றுமை நாடகம். இந்நாடகத்தால் போலியான பொய்க்கூட்டத்தை உருவாக்க முடியுமே தவிர உள்ளத்தால் ஒன்று பட்டஉயரிய ஒற்றுமை சார்ந்த ஒரு கூட்டத்தை ஒருக்காலும் உருவாக்கவே முடியாது என்பதை இட ஒதுக்கீடு சம்மந்தமாக முதல்வரைச் சந்திக்கும் முன்பு ஒற்றுமை விரும்பிகள் கூறிய கருத்துக்கள் பின்னர் முதல்வரைச் சந்தித்த பின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகள் தொலைக்காட்சி களில் ஒருவரை ஒருவர் கடிந்து கூறிய காரசாரமான கருத்துக்கள் எந்த அளவுக்கு இந்த போலி ஒற்றுமை நாடகம் மக்கள் மத்தியில் முகத்திரை கிழிந்து போனது என்பதற்குச் சான்றுகள். 12அமைப்புகளின் ஒற்றுமைச் சங்கமம் எங்கள் கூட்டம் என்று தம்பட்டமடித்தோர் ஒருவரையொருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டு திட்டித் தீர்த்து தமது ஒற்றுமையின் வலிமையை ஊருக்கு உணர்த்தினர். அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமையின் தீபங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் கூறிக்கொண்டு களமிறங்கி அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அநாகரீகமாகச்செயல்பட்டன.

தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல தேர்தல் முடிவுகள் தோல்வியாய் முடிந்ததை மறைக்க முஸ்லீம்கள் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்திகள் அல்ல என்ற உயர்ந்த தத்துவத்தைக் கூறி சமுதாயத்தின் முதுகில் குத்திய முன்னோடிகள்தான் இந்த போலி ஒற்றுமைவாதிகள்.

அரசியல் சாக்கடையில் மூழ்கி அழைப்புப் பணியின் அடிப்படையையே மறந்து அண்ணல் நபிகளாரையும் அம்மாவையும் ஒப்பீடு செய்து தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக்கு மார்க்கத்தை தாரை வார்த்த மகான்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் என்றும் நினைவு கூறக்கூடிய பத்ர் உஹது யுத்தங்கள் இந்த அறிவு ஜீவிகளின் தேர்தல் வெற்றியை உரசிப்பார்க்கும் உறைகல்லானது. ஹுதைபியா உடன்படிக்கை அம்மாவுடனான இவர்களின் உடன்படிக்கைக்கு உதாரணமாகிப் போனது. இப்படி ஏகப்பட்ட சாதனைகள் புரிந்த இவர்கள்தான் இந்த போலி ஒற்றுமையின் அடித்தளங்கள்.

உண்மையிலேயே நமக்குள் ஒற்றுமை மலர வேண்டுமானால் நம்மிடம் இருக்கும் வேறுபாடுகள் நீங்க வேண்டும். இன்றைய நிலையில் ஒருவரின் தோற்றத்தைப் பார்த்தே அவர் எந்த இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர் செய்யும் வணக்க வழிபாடுகளில் பல்வேறு பிரிவுகள். அவர் செய்யக் கூடிய அமல்கள் (காரியங்கள்) செய்யும் முறையில் பல்வேறு வித்தியாசங்கள். இப்படி முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய நம்மிடமே இபாதத் அமல் தோற்றம் என்ற ஒவ்வொரு அம்சத்திலும் நாம் கடைபிடிக்கக் கூடிய நடைமுறைகள் முரணானதாக உள்ளது. நம்முடைய தோற்றங்கள் நம்மை அடையாளங் காண என்பதை விட நாம் சார்ந்துள்ள இயக்கங்களை அறிந்துகொள்ள என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டது. ஒற்றுமைக்கு எதிரான வேறுபாடு இத்துடன் முடியவில்லை. அல்லாஹ்வின் ஆலயங்களுக்குத் தொழச் சென்றால் அங்கு 4 மத்ஹபுகளை பின்பற்றாதோர் இப்பள்ளியில் தொழ அனுமதியில்லை என்ற வாசகம் தாங்கிய அறிவிப்புகள் தொங்கவிடப் பட்டுள்ளன. அவர்கள்தான் தவறிழைத்து விட்டார்கள் மற்றவர்கள் அறிவாளிகள் என்று பார்த்தால் இவர்கள் தங்கள் பங்குக்கு கொம்பு சீவி விடும் பணியைக் குறைவின்றிச் செய்பவர்கள் என நிரூபித்தனர். மத்ஹபுகளைப் பின் பற்றுவோர் தரீக்காவாதிகள் முஷ்ரிக்குகள் இமாம்களைப் பின்பற்றித் தொழாதே என்ற மார்க்கத் தீர்ப்பை மக்களுக்குத் தந்து தனிப்பள்ளி தனி ஜமாஅத் தனி நிர்வாகம் என தங்களுக்கென கூட்டம் சேர்க்கும் சமுதாயப் பிளவுக்கு வழிவகுத்தனர்.

இவை ஜமாஅத் அமைப்புகள் இயக்கங்கள் என்ற பெயரால் சமுதாயத்துக்கு கிடைத்த போலி ஒற்றுமை முத்திரைகள். அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதனைகள் பேரழிவுகள் ஒட்டு மொத்த சமுதாயத்தைத் தாக்கும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகளை அகற்றும் பணியில் கூட இவர்களின் இயக்கவெறி சராசரி அரசியல்வாதியை விட ஒரு படி மேலே போய் சகோதர இயக்கங்களை .. .. திருடர்கள் கொள்ளையடித்தவர்கள் என கரிந்து கொட்டி தங்கள் காழ்ப் புணர்ச்சியைத் தீர்த்துக்கொள் வதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நாங்கள்தான் தஃவாவுக்கு ஒட்டு மொத்த குத்தகை குர்ஆனும் ஹதீஸூம் எங்களின் அடிப்படை என ஊருக்கு ஊர் பிரச்சாரம் செய்யும் இவர்கள் மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடிய மார்க்க அறிஞர்களை விட மிக மோசமாக ஒத்த கொள்கையையுடைய குர்ஆனை ஹதீஸைப் பின்பற்றக்கூடிய பிற இயக்கங்களைச் சார்ந்த மார்க்க அறிஞர்களுடன் ஒரே மேடையில் அமர்வதைக் கூட தீண்டாமையாக கருதி வெறுத்து ஒதுக்கக் கூடியவர்கள் தேர்தல்களில் அரசியல் பேசும் போது தரீக்காவினை மத்ஹபுகளை ஆதரிக்கும் அவ்லியா விரும்பிகளை அரவணைக்கும் அற்புதம் எழுத்தில் வடிக்க இயலாது. இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகளுடன்தான் இந்த போலி ஒற்றுமை நாடகம் அரங்கேறுகிறது.

ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் சக்திகள்

பெயருக்கு முஸ்லீமாக இருந்து கொண்டு ஷரீஅத்தின் அடிப்படைச் சட்டங்களைக் கூட அறிந்திராத சிலர் சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் நிலைகளை இன்றும் நாம் காணலாம். பெண்ணுக்கு மஹர் வாங்கி கல்யாணம் செய்யாமல் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துவிட்டு சீதனங்கள் சீர் செனத்தியில் குறை என்று குற்றம் பெருகி விவாகரத்தில் முடிந்த விஷயங்கள் நீதிமன்றங்களில் ஜீவனாம்சம் கேட்டு அலையும் அவல நிலை ஒருபுறம். பெண்கள் பர்தா அணிவது அவர்களுக்கு வழங்கப் பட்ட ஆடை சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என நம் சமுதாயப் பெண்களிலேயே சில பெயர்தாங்கிகள் பெண்கள் சுதந்திரத்துக்குப் பாடுபடுகிறோம் என்ற கூப்பாட்டுடன் சமூக ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கின்றனர். ஆண்கள் ஒரு மனைவியிருக்கும்போது மற்றொரு பெண்ணை மணந்து மனைவியாக்கும் போது பெண்கள் ஏன் கணவன் இருக்கும் போது மற்றொரு ஆணை மணந்து கணவனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? என்ற கேள்வியை அறிவுப் பூர்வமானது எனக் கேட்டு சீர்திருத்தக் கருத்துக்களை விதைக்கும் அறிவுஜீவிப் பெண் மணிகள் மற்றொரு புறம். இப்படி பல்வேறு தரப்பிலும் சமுதாய மக்களிடையே ஒற்றுமைக்கு ஊனமேற் படும் நிலைகள் மார்க்கமறியாத மக்களால் நடந்துகொண்டிருந்தாலும் மார்க்கத்தை நன்கு விளங்கிய மார்க்க அறிஞர்கள் கூட ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பணியில் மும்முரமாகத் திகழ்வதைக் கண்டால் ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்? என நம்மை திகைக்கவைக்கிறது. இயக்க வெறியில் இந்த அல்லாஹ்வின் பள்ளி யாருக்குச் சொந்தம்? என போட்டியில் இறங்கி நீதிமன்றத்து கதவினைத் தட்டும் பரிதாபநிலை. பள்ளிக்குப் பூட்டு ஒற்றுமை முயற்சிக்கு வேட்டு என்பது இன்றைய சூழ்நிலை.

ஒற்றுமை குலைவதற்குறிய காரணங்கள்..

ஒற்றுமை என்பதன் எதிர்பதம் வேற்றுமை. ஒற்றுமை குலைந்து வேற்றுமை நிலவ முக்கிய காரணியாகத் திகழ்வது கருத்து வேறுபாடு. இதன் பின்னணிகள் அமைப்புகளாகவும் இயக்கங்களாகவும் இருந்தாலும் ஒற்றுமை குலைய அடிப்படை கருத்து வேறுபாடுதான். ஓற்றுமை தகர்ந்து வேற்றுமை தலை தூக்க 4 கட்ட நிலைகள் நிகழ்கின்றன. அவையாவன:

1. கருத்து சுதந்திரம்
2. எதிர் கருத்து
3. கருத்து திணிப்பு
4. கருத்துப் புறக்கணிப்பு.

இனி முதல் நிலையிலிருந்து இறுதி கட்டம் வரையிலான பரிணாம வளர்ச்சியை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு மார்க்க அறிஞர் ஆய்வில் ஈடுபட்டு ஒரு பிரச்சினைக்குறிய தீர்வை மக்கள் மன்றத்தில் வைக்கிறார். இத்தீர்வுக்கு அவர் தரப்பில் சில நியாயங்களை அவர் குறிப்பிடுகிறார். அவரின் இக்கருத்தை ஏற்பவர்களும் இருப்பார்கள். மறுப்பவர்களும் இருப்பார்கள். ஆய்வு செய்து கூறியவர் யார் என்று பார்க்காமல் என்ன கருத்தைக் கூறுகிறார்? என்று பார்க்க வேண்டும். அது குர்ஆன் ஹதீஸூடன் ஒன்றிப்போனால் ஏற்றுக் கொள்வது. இல்லையேல் சரியான கருத்தை அவருக்குத் தெரிவிப்பது. இம்முடிவுதான் ஒற்றுமை நிலைக்க வழிவகுக் கும். ஆனால் நடப்பு நிலைஎப்படியிருக்கிறது? ஆய்வைச் செய்தவர் அவர் தீர்வைச் சொன்னவுடன் இவர் ஒரு சிறந்த மார்க்க மேதை. இவர் சொன்னால் சரியாக இருக்கும். இவர் கூறும் கருத்துக்களை மறுப்பவர்கள் மார்க்கம் அறியாதவர்கள் என்ற நிலை நிலவுகிறது. இதன் விளைவு அந்த அறிஞரின் கருத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துகள் சரியாக இருந்த போதும் புறக்கணிக்கப் படுகின்றன. மேலும் யார் மாற்றுக் கருத்து கூறினாரோ அவர் தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமாக விமர்சிக்கப் படுகின்றார். அவரும் அவரின் தாயார் மனைவி போன்றோர் பகிரங்கமாக அசிங்கமாக தூற்றப்படுகிறார்கள். மேலே குறிப்பிட்ட 4 நிலைகளும் சுருக்கமாகக் குறிப்பிட்ட இந்த விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆக ஆய்வின் தீர்வு சரியா தவறா? ஏன்பதைக் கூட விவாதங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்ற சவடால்கள் பிசுபிசுத்துப் போனது. தரீக்காவாதி அவ்லியா விரும்பிகளை நோக்கி விடும் விவாத அறைகூவலில் ஒரு சிறு அளவைக்கூட விவாத விற்பன்னர்கள் ஜக்காத் விஷயத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி இயக்க வெறியில் உழலும் இவர்கள்தான் போலி ஒற்றுமை நாடகத்தின் தூண்கள். மாற்றுக் கருத்துக் கூறுவோரை கண்ணியமின்றி சல்லிக் காசுக்கு சோரம் போனவர்கள், மார்க்கத்தை விட்டு ஓரம் போனவர்கள், கருத்து வாந்தி யெடுத்தவர்கள் என காரசாரமாக விமர்சித்து தங்களைத் தவ்ஹீதின் தென்றல் என வெளிச்சம் போட்டுக் காட்டும் விளம்பர விரும்பிகள்தான் தம்மை சாந்தி மார்க்கம் இஸ்லாத்தின் சகோதரத்துவம் பேணும் நல்லவர்களாக நடித்துவருகிறார்கள். சொல்லப்படுகிற கருத்துக்கு மாற்று கருத்து வராத எந்தப் பிரச்சினையும் நாம் காண்பது அரிது. கருத்து வேறுபாடு என்பது சகஜமான ஒன்றுதான் என்பதற்கு கீழ் காணும் ஆதாரங்கள் சான்றுகளாகும்.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் கருத்து வேறுபாடுகள்..

வல்ல அல்லாஹ் இப்பூவுலகில் மனிதர்களைப் படைக்க நாடி மலக்குகளிடம் கூறியபோது மலக்குகள் அக்கருத்துக்கு மாற்றமாக தங்களின் ஆட்சேபனையை எப்படித் தெரிவித்தார்கள் என்பதையும் அல்லாஹ் அவர்களுக்கு கூறிய பதிலையும் அருள் மறை ஒளியில் காண்போம்.

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி ''நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்'' என்று கூறியபோது, அவர்கள் ''(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார் கள்; அ(தற்கு இறை)வன் ''நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்'' எனக் கூறினான்.(2:30).

இவ்வசனத்தில் வல்லோன் அல்லாஹ் தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறிய மலக்குகளுக்கு
பதிலாக நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் நிச்சயமாக நன்கறிந்தவன் என இரத்தினச்சுருக்கமாகக் கூறுகிறான். (மலக்குகள் தவறிழைக்க மாட்டார்கள். மனிதர்கள் தவறிழைப்பர். தவ்பாச் செய்வார்கள்.)

அல்லாஹ் ஆதமைப் படைத்து பின்னர் அவருக்குச் சிரம்பணியக் கட்டளையிட்ட போது அங்கிருந்த இப்லீஸ் சிரம்பணிய மறுத்ததையும் அவன் ஏன் மறுத்தான் என்பதையும் பார்ப்போம்..

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன் பின், ''ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)'' என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்கு)சிரம் பணிந்தார்கள்; அவன் (மட்டும்) சிரம்பணியக் கூடியவர்களில்ஒருவனாக இருக்கவில்லை..

''நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?'' என்று அல்லாஹ் கேட்டான்; ''நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:11-12).

அல்லாஹ்வின் கட்டளை இப்லீஸால் புறக்கணிக்கப் பட்டதன் காரணத்தை அல்லாஹ்வே தெளிவு படுத்துகிறான். தான் படைக்கப்பட்ட மூலம் மனிதனின் மூலத்தை விடச் சிறந்தது என்ற பெருமை, கர்வம் அவனை சிரம்பணியத் தடுக்கிறது.

(நெருப்புமேல் நோக்கி எரியும். மண் மேல் நோக்கிச் செல்லாது. அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் சிரம்பணியக் கூடாது. அதை அல்லாஹ்வே சொன்னாலும் கூட ஏற்கமாட்டேன் என்பது இப்லீஷின் லாஜிக்.)

பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூ பக்ர்(ரலி), '(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இல்லை. அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (உமர்(ரலி) அவர்களிடம்), 'நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்'' என்று சொல்ல, உமர்(ரலி), 'உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்ல'' என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக் கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே,

'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 49:1வது) வசனம் அருளப்பட்டது. (புஹாரி :4367 அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி).)

நபி (ஸல் ) அவர்கள் மரணச்செய்தி மக்களிடம் சென்றடைந்த போது நபித் தோழர்களில் சிலர் நபி (ஸல்)அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்று உறுதியாக எண்ணினர். அவர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்கள் ஆவார்கள்.எவர் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார் என்று கூறுகிறாரோ அவரைக் கொன்று விடுவேன் எனப் பிரகடனம் செய்கிறார்கள். இந்நிலையில் நபிகளாரின் மரணச் செய்தியறிந்த அபூபக்கர் (ரலி) அங்கு வந்து சரியான கருத்ததைக் கூறியதை கீழ் காணும் நபி மொழி நமக்கு உணர்த்துகிறது.

நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைந்து விட்டீர்கள்' என்று கூறினார்.(புஹாரி:1241 ஆயிஷா(ரலி)).

மற்றொரு அறிவிப்பில் இச்சம்பவம் குறித்து

(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்:

முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்'' (திருக்குர்ஆன் 3:144)

என்றார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். (புஹாரி :1242 இப்னுஅப்பாஸ்(ரலி).

இச்சம்பவத்துக்குப் பின் இறந்த நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது? என்ற பதிய பிரச்சினை தலைதூக்கியது. கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகள் நடந்தன. இந்நிலையில் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபிமார்கள் எந்த இடத்தில் மரணித்தார்களோ அவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியதும் பிரச்சினை தீர்ந்தது என்பதை நபிமொழிகள் நமக்குணர்த்துகின்றன.

அதன் பின் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரை ஆட்சித் தலைவராக்குவது? என்ற புதிய பிரச்சினை தலைதூக்கியது. நபித்தோழர்கள் முஹாஜிர்கள் அன்ஸாரிகள் என இரு பிரிவுகளாகி ஆட்சித் தலைமைக்கு உரிமை கொண்டாடினர்.

மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூசாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்'' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம். அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்'' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)'' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்'' என்று கூறிவிட்டு நடந்தோம். பனூ சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.
அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள், 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது'' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, 'பின்னர், நாங்கள் (அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர்தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்'' என்று கூறினார்.

(உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்து விடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நிதானத்தைக் கையாளுங்கள்'' என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை. இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்'' என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)'' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்'' என்றார். உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)'' என்று கூறினேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம். (புஹாரி :6830 உமர்(ரலி)கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி).

நபிமார்கள் கூட பிரச்சினைகளை அணுகுவதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்பதற்கு கீழ் காணும் நபிமொழி சான்றாகும்.

(தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட)நபி ஆதமும்(அலை) நபி; மூஸாவும்(அலை) தர்க்கித்தார்கள். ஆதமிடம் மூஸா, 'உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?' என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூஸாவிடம், 'நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்த மூஸா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் நீங்கள் பழிக்கிறீர்களே!'' என்று கேட்டார்கள். 'இதை கூறிய பின் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆக, ஆதம் விவாதத்தில் மூஸாவை வென்றுவிட்டார்கள்' என்று இருமுறை கூறினார்கள்'' என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.(புஹாரி: 3409).

இவ்வாறு கருத்து வேறுபாடுகள் என்பது ஒரு பிரச்சினையை அணுகும்போது எழுவது இயற்கைதான். ஆனால் அதைத் தீர்த்துக்கொள்வதில் எழும் மற்ற நோய்களாகிய கர்வம் பெருமை இயக்க வெறி சத்தியத்தை மறுத்தல் வழிகேட்டுக்கு அநீதிக்குத் துணைபுரிதல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எழும் பிரச்சினைகளை நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மையில் பார்த்தாலோ பெரும்பான்மையாக உள்ள நாங்கள் சொல்வதுதான் சரி என்று கூறுவதாலோ பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக விரோதமும் வெறுப்பும்தான் வளரும். ஒற்றுமை குலையும். ஆகவே கருத்து வேறுபாடுகள் நீங்க, ஒற்றுமை மலர, இருக்கும் பிரிவுகள் மென்மேலும் கூடாமல் இருக்க, சமுதாயத்தில் சாந்தியும் சமாதானமும் பூத்துக் குலுங்கி சகோதரத்துவம் தழைக்க, அல்லாஹ் கூறும் அழகான வழியைப் பாருங்கள்.

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை விட்டுப் பிரிந்து விடாதீர்கள்.மேலும் அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் நிஃமத்துக்களை (அருட்கொடைகளை) நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.(3:103).

இங்கு அல்லாஹ்வின் கயிறு என அருள்மறை வசனம் கூறுவது அல்குர்ஆன் கூறும் உபதேசங்களாகும். ஒற்றுமைக்குச் சான்றாக நபி மொழி கூறும் நல்லுபதேசத்தைக் காணுங்கள்.
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (புஹாரி:6064 அபூஹூரைரா (ரலி).

மற்றொரு அறிவிப்பில்

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:6065 அனஸ்(ரலி).

அருள்மறைக் குர்ஆனும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் போதனையும் நமக்கு ஒற்றுமை பற்றி வழங்கிய உபதேசங்களைக் கண்டோம். ஆகவே அல்லாஹ்வின் நல்லடியார்களே நமக்குள் எழும் பிரச்சினைகள் எதுவாகயிருந்தாலும் கருத்து வேறுபாடுகள் எதுவாகயிருந்தாலும் நாம் அதனைத் தீர்த்துக்கொள்ளும் அடிப்படை குர்ஆன் ஹதீஸாக இருக்கவேண்டும். ஒற்றுமைக்குத் தடைக்கல்லாகயிருக்கும் தனிமனித வழிபாடு அகம்பாவம் கர்வம் பெரும்பான்மை அநீதி அட்டகாசம் போன்றவற்றைத் தூர வீசிவிட்டு சொல்வது யார்? என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்? என்பதைப் பார்ப்பதுடன் சொல்லும் கருத்துக்கள் சரியா தவறா என்பதை ஆய்ந்து சரி என்றால் அதை ஏற்றுக் கொள்வதும் தவறென்றால் அதை கண்ணியமாக நளினமாகச் சுட்டிக் காட்டுவதும் சரியான அணுகுமுறையாகும். இவன் என்ன சொல்வது? இவனை விட நான் என்ன மார்க்க அறிவில் குறைந்தவனா? என்ற வரட்டுக் கௌரவமும் திமிரும் ஆணவப் பேச்சுக்களும் அறிவீனர்களின் நடத்தையாகும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நமக்குள் இருக்கும் குரோதங்கள் வெறுப்புகள் ஆகியவற்றை நீக்கி ஒற்றுமை மலர வழிவகுப்பானாக. ஆமீன்.

- நெல்லை. இப்னு கலாம் ரசூல்

Sunday, July 23, 2006

சகோதர வலைப்பதிவரின் சிந்தனைக்காக

முத்துப்பேட்டை வலைப்பதிவில் "டான் டிவியில் ததஜவின் பொய்யான அறிவிப்பு" என்ற தலைப்பில் வெளிவந்த பதிவைப் படித்தேன். எனவே, சகோதர வலைப்பதிவர் என்ற முறையில் முத்துப்பேட்டை வலைப்பதிவருக்கு சில விஷயங்களை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

//.. ததஜ எனும் அரசியல் கட்சி டான் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. வளைகுடா ஐரோப்பாவில் வசிக்கும் மக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நடுவே ததஜவின் நிர்வாகிகளுள் ஒருவரான நாகூர் ஏ.எஸ்.அலாவுதீன் தோன்றி இராப்பிச்சை எடுத்து வருகிறார்.//

மேற்கண்ட விஷயத்தை சொல்லிவிட்டு, கடைசியில் தமுமுகவுக்கு கீழ்கண்டவாறு நன்கொடைகளை கேட்கிறார் இப்னு ஃபாத்திமா அவர்கள்..

//தமுமுக நடத்தும் நிகழ்ச்சியில் பாவம்! எந்த விதமான நன்கொடை கேட்டு விளம்பரம் ஏதும் இடம் பெறுவதில்லை. ஆனால் எமது ஆலோசனை என்னவென்றால், பிச்சை கேட்காத தமுமுகவிற்கு தான் உங்கள் நன்கொடைகள் சென்று சேர வேண்டும். //

ஒருவரை ஒரு காரணத்தினால் இராப்பிச்சை என்று சொன்னவர், மற்றவருக்கு அதே விஷயத்தை செய்யச் சொல்வது நல்ல ஆலோசனையாக இருக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

//அதற்கும் முன்பாக வரக்கூடிய அரை மணிநேர நிகழ்ச்சி தமுமுக நடத்தும் 'பிளாக் அன்ட் ஒயிட் கம்யூனிகேஷன்' நிகழ்ச்சியில் நான்கே விளம்பரங்கள் மட்டும் தான். அவர்களால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிகிறது. ஏராளமான விளம்பரங்கள் குவிந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற கூப்பாடு வேறு.//

நான்கே விளம்பரங்களை வைத்து பிரச்னையில்லாமல் புரோக்ராம் செய்வதாக எழுதியதால் என்னுடைய கேள்வியில் உள்ள நியாயத்தை சகோதரர் இப்னு ஃபாத்திமா அவர்கள் புரிந்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.


சகோதரரின் சிந்தனைக்காக:

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61-2-3)

..நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன் இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (என்று ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்). (11:88)

நான் நபி(ஸல்)அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன், கியாமத் நாளில் ஒரு மனிதனைக் கொண்டுவரப்படும். அவனை நரகில் போடப்படும். அப்பொழுது அவனது வயிற்றிலுள்ள குடல்கள் வெளியே வந்து விடும். அக்குடல்களுடன் அம்மனிதன், செக்கில் கழுதை சுற்றுவது போலச் சுற்றுவான், நரக வாசிகள் அவனிடம் ஒன்று சேருவார்கள். அவர்கள் அவனிடம் கேட்பார்கள்: நீர் நன்மையை ஏவித் தீமையை தடுத்துக் கொண்டிருப்பவராக இருக்கவில்லையா? ஏன்று. அதற்கு அம்மனிதன் கூறுவான்,(ஆம்) நான் நன்மையை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்யவில்லை. நான் தீமையைத் தடுப்பவனாக இருந்தேன். ஆனால் நான் அதனைவிட்டு விலகவில்லை. (புகாரி, முஸ்லிம் : அபூ ஜைது உஸாமா பின் ஜைது பின் ஹாரிதா(ரலி)

மற்ற சகோதரர்களின் சிந்தனைக்கு:

பொதுவில் வைக்கப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டி பொதுவில் எழுதுகிறேன். இப்பதிவிலிருந்து உங்களுக்கு ஏதாவது படிப்பினை கிடைக்கிறதா என்று பாருங்கள். அதுவே உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் செய்த நற்பயன்களாக இருக்கும்.

Sunday, July 16, 2006

மோடியை தடைவோம் - ஆஸ்மி.

மும்பை - குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மும்பையில் நுழைவதை தடைவோம் என சமாஜ்வாடி கட்சி மஹாராஷ்டிரா மாநில தலைவர் அபூ அஸிம் ஆஸ்மி கூறினார். பிஜேபி மும்பையில் நடத்தவிருக்கின்ற "தீவிரவாத எதிர்ப்பு பேரணி"யில் பங்கெடுக்க திங்கள் கிழமை மோடி மும்பை வரவிருக்கிறார். மோடியின் மும்பை வருகைக்கு எதிராக களமிறங்குவோம் என்றும் மோடி மும்பை வந்தால் அவரை கெரோ செய்வோம் என்றும் ஆஸ்மி கூறினார்.
குஜராத் வதோதரா புகைவண்டி தீவைப்பு சம்பவத்திற்குப் பின் அங்கு நரேந்திரமோடி தலைமையில் நடந்த பேரணிக்குப் பிறகே முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரம் குஜராத்தில் நிகழ்ந்தது என்பதும் அதில் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஹிந்துத்துவவாதிகள் இனசுத்தீகரிப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற ஓர் சம்பவத்தை மும்பையிலும் நிகழ்த்த நரேந்திரமோடியின் மும்பை வரவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ஏற்றாற் போன்றே சங்க்பரிவாரின் தலைமையான ஆர் எஸ் எஸ்ஸின் இந்திய தலைவர் சுதர்சன் ஆர் எஸ் எஸ்ஸின் இதழான பாஞ்சஜன்யாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகளைக் குறித்து எழுதியுள்ளார். நாட்டில் நடக்கும் எந்த அசம்பாவிதத்தையும் தங்களது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் சீரழிந்த போக்கை பிஜேபியும் அதற்கு துணை போகும் ஆர் எஸ் எஸ்ஸும் இவ்விஷயத்திலும் தெளிவாக கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அதன் முதல்படியே பிஜேபி நடத்தப்போகும் மும்பை பேரணி.

இதனை எதிர்த்து தான் சமாஜ்வாடி மஹாராஷ்டிரா மாநில தலைவர் ஆஸ்மி களமிறங்கியுள்ளார். முஸ்லிம்களை மட்டும் குற்றவாளிகளாக கருதிக் கொண்டு நடத்தும் காவல்துறை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். "முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக கருதிக் கொண்டு நடத்தும் விசாரணைகளால் பலன் ஒன்றும் விளையப்போவதில்லை. 20 கோடி முஸ்லிம்கள் வீதியில் இறங்கினால் ஏற்படும் பின்விளைவுகளை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தமுடியாமல் போகும்." என மேலும் அவர் கூறினார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைக் குறித்தும், புகைவண்டி கலவரங்களைக்குறித்தும், பால்தாக்கரேயின் மனைவி சிலையை களங்கப்படுத்தியதை எதிர்த்து நடந்த சம்பவங்களைக் குறித்தும் மேல்மட்ட புலன்விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

சவூதி அரேபியாவின் லேபர் லா

சவூதி அரேபியாவின் திருத்தியமைக்கப்பட்ட புதிய லேபர் லா (தொழிலாளர் சட்டங்கள்) அமலாக்கம்

கடந்த ஏப்ரல் மாதம் 2006, சவூதி அரேபியாவின் புதிய திருத்தி அமைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இந்த புதிய லேபர் லா – வின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. புதிய லேபர் லா-வின் சில அம்சங்கள் பின்வருமாறு.

வெளிநாட்டு பணியாளர்கள் அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் வரையிலான செலவுகள், இகாமா புதுப்பித்தல், வொர்க் பர்மிட் மற்றும் அதைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிப்பிக்கத் தவறினால் அதற்கான தண்டத் தொகை போன்ற அனைத்தும் வெளிநாட்டு பணியாளர்களைச் சார்ந்தது ஆகும். இதற்கான செலவுகளை நிறுவனம் பொறுப்பேற்காது.

ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது (Sponcership Transfer) அதற்கான செலவுகளை புதிய நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கு இறந்துவிட்டால், அவர்கள் உடல்களை சொந்த நாட்டிற்கு அனுப்பும் செலவு நிறுவனத்தைச் சார்ந்தது. இது குறித்து அவர்களின் ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

புதிதாக பணியில் சேர்ந்தவர்களின் பயிற்சி காலமானது, எல்லா வேலை நாட்களும் கணக்கிடப்படும். இதில் பண்டிகை விடுமுறைகள், நோய் விடுப்பு மற்றும் வாரவிடுப்புகளும் கணக்கிடப்பட்டு பயிற்சி காலத்தில் சேர்ப்பிக்கப்படும்.

உடல் ஊனமுற்றோர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் சதவிகிதம் 2 முதல் 4 ஆக உயர்த்தப்படுகிறது.

புதிய லேபர் லா-வின் படி பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60 ஆகவும், பெண்களுக்கு 55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணியானர்களின் வருட விடுப்பு நாட்கள் 21 லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இச்சலுகை 5 வருடம் ஒருவர் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் மட்டுமே ஆகும்.

ஒரு நிறுவனத்தில் 2 வருடம் ஒருவர் பணியாற்றியிருந்தாரேயானால் அவர் ஹஜ் என்ற புனித யாத்திரை செல்ல 10 முதல் 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுப்பதற்குத் தகுதிபெற்றவராவார்.

நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே படிப்பவர்களுக்கு, அவர்களின் தேர்வு காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிறுவனம் அளிக்க வேண்டும்.

மேலும் பணியாளர்கள் ஒரு வருடத்தில் 20 நாட்கள் சம்பளம் இல்லாமல் நிறுவனத்தின் ஒப்புதலுடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டால் தக்க மருத்துவச் சான்றிதழுடன் 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய நோய் விடுப்பு (Medical Leave) எடுத்துக்கொள்ளலாம். 60 நாட்கள் நோய் விடுப்பு எடுக்க நேரிட்டால் மூன்றில் ஒரு பகுதி சம்பளம் கொடுக்கப்படும். 60 நாட்கள் நோய்விடுப்பில் 30 நாட்களுக்கு சம்பளம் இல்லாமலும் இருக்கலாம்.

இப்புதிய லேபர் லா - பெண்களுக்கு அதிக சலுகைகளை அளிப்பதாக உள்ளன. அவை, ஒரு நிறுவனத்தில் பெண்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டால் அவர்களுக்குண்டான ஈட்டுத்தொகை நிறுவனம் அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் திருமணத்தின் போதும், மகப் பேறுகாலத்தின் போதும் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும்.

50 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அவர்கள் குழந்தைகளைப் பராமரிக்க குழந்தைக் காப்பகங்கள் அந்த நிறுவனம் அமைத்துத்தர வேண்டும். 100 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தொழிலாளர் அமைச்சகம் (Ministry Of Labour) தலையிட்டு குழந்தைகள் காப்பகம் அமைத்துத்தரும்.

லேபர் லா- 14வது பிரிவின் படி கிழக்குப் பிராந்திய தொழிலாளர் அலுவலக இயக்குனர் முஹம்மது அல் ஹம்தான் கூறுகையில் தொழிலாளர் சங்க அலுவகங்களுக்கு (Labour Offiice) அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தார். லேபர் அலுவலகங்களில் பெண்களையும் வேலைக்கு நியமனம் செய்யலாம் என்ற புதிய விதியையும் தெரிவித்தார்.

கவுன்சிலர் யாஸிர் இமாம் அல்-கந்தூர் கூறுகையில் இப்புதிய லேபர் சட்ட திருத்தங்கள் முதலில் இருந்த பிரிவு – 16ன் கீழ் அமைந்த 245 ஷரத்துக்கள் அனைத்தையும் இது நிறைவு செய்யும் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தப் புதிய லேபர் சட்டத்திருத்தங்கள் பணிபுரிபவருக்கும், பணியில் அமர்த்துபவருக்கும் இடையே பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

-மணவை. அஜீஸ். M.A.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

Saturday, July 15, 2006

2006 உலககோப்பை கால்பந்துப் போட்டி

2006 உலககோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இதன் முந்தைய சாம்பியன் பட்டங்கள் 1934, 1938, 1982 ஆகிய வருடங்களில் ஆகும். எதிர்த்து விளையாடிய பிரான்ஸ்-வுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலையை தாண்டமுடியவில்லை. கூடுதல் நேரத்திலும் புதிய கோல் எதுவும் இல்லாததால், பெனால்டி சூட் மூலம் வெற்றியை நிர்ணயிக்க வேண்டிய நிலையில், இத்தாலி 5க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி உலக சாம்பியன் ஆனது.

மோதிய அணிகளின் விபரங்கள்

ஜூன் 9
ஜெர்மனி 4-2 கோஸ்டா ரிக்கா
போலந்து 0-2 ஈக்குவடார்

ஜூன் 10
இங்கிலாந்து 1-0 பராகுவே
டிரினிடாட் & டொபாகோ 0-0 ஸ்வீடன்
அர்ஜெண்டினா 2-1 ஐவோரி கோஸ்ட்

ஜூன் 11
செர்பியா & மொன்டெநெக்ரோ 0-1 நெதர்லாந்து
மெக்ஸிகோ 3-1 ஈரான்
அங்கோலா 0-1 போர்ச்சுகல்

ஜூன் 12
ஆஸ்ட்ரேலியா 3-1 ஜப்பான்
அமெரிக்கா. 0-3 செக் குடியரசு
இத்தாலி 2-0 கானா

ஜூன் 13
தென் கொரியா 2-1 டோகோ
பிரான்ஸ் 0-0 ஸ்விட்சர்லாந்து
பிரேசில் 1-0 குரோவேஷியா

ஜூன் 14
ஸ்பெயின் 4-0 உக்ரெய்ன்
துனிஸியா 2-2 சவுதி அரேபியா
ஜெர்மனி 1-0 போலந்து

ஜூன் 15
ஈக்குவடார் 3-0 கோஸ்டா ரிக்கா
இங்கிலாந்து 2-0 டிரினிடாட் & டொபாகோ
ஸ்வீடன் 1-0 பராகுவே

ஜூன் 16
அர்ஜெண்டினா 6-0 செர்பியா & மொன்டெநெக்ரோ
நெதர்லாந்து 2-1 ஐவோரி கோஸ்ட்
மெக்ஸிகோ 0-0 அங்கோலா

ஜூன் 17
போர்ச்சுகல் 2-0 ஈரான்
செக் குடியரசு 0-2 கானா
இத்தாலி 1-1 அமெரிக்கா.

ஜூன் 18
ஜப்பான் 0-0 குரோவேஷியா
பிரேசில் 2-0 ஆஸ்ட்ரேலியா
பிரான்ஸ் 1-1 தென் கொரியா

ஜூன் 19
டோகோ 0-2 ஸ்விட்சர்லாந்து
சவுதி அரேபியா 0-4 உக்ரெய்ன்
ஸ்பெயின் 3-1 துனிஸியா

ஜூன் 20
ஈக்குவடார் 0-3 ஜெர்மனி
கோஸ்டா ரிக்கா 1-2 போலந்து
ஸ்வீடன் 2-2 இங்கிலாந்து
பராகுவே 2-0 டிரினிடாட் & டொபாகோ

ஜூன் 21
போர்ச்சுகல் 2-1 மெக்ஸிகோ
ஈரான் 1-1 அங்கோலா
நெதர்லாந்து 0-0 அர்ஜெண்டினா
ஐவோரி கோஸ்ட் 3-2 செர்பியா & மொன்டெநெக்ரோ

ஜூன் 22
செக் குடியரசு 0-2 இத்தாலி
கானா 2-1 அமெரிக்கா.
ஜப்பான் 1-4 பிரேசில்
குரோவேஷியா 2-2 ஆஸ்ட்ரேலியா

ஜூன் 23
சவுதி அரேபியா 0-1 ஸ்பெயின்
உக்ரெய்ன் 1-0 துனிஸியா
டோகோ 0-2 பிரான்ஸ்
ஸ்விட்சர்லாந்து 2-0 தென் கொரியா

ஜூன் 24
ஜெர்மனி 2-0 ஸ்வீடன்
அர்ஜெண்டினா 2-1 மெக்ஸிகோ

ஜூன் 25
இங்கிலாந்து 1-0 ஈக்குவடார்
போர்ச்சுகல் 1-0 நெதர்லாந்து

ஜூன் 26
இத்தாலி 1-0 ஆஸ்ட்ரேலியா
ஸ்விட்சர்லாந்து 0-0 உக்ரெய்ன் - உக்ரெய்ன் வெற்றி 3-0 பெனால்ட்டி முறையில்

ஜூன் 27
பிரேசில் 3-0 கானா
ஸ்பெயின் 1-3 பிரான்ஸ்

ஜூன் 30
ஜெர்மனி 1-1 அர்ஜெண்டினா - ஜெர்மனி வெற்றி 4-2 பெனால்ட்டி முறையில்
இத்தாலி 3-0 உக்ரெய்ன்

ஜூலை 1
இங்கிலாந்து 0-0 போர்ச்சுகல் - போர்ச்சுகல் வெற்றி 3-1 பெனால்ட்டி முறையில்
பிரேசில் 0-1 பிரான்ஸ்

ஜூலை 4
ஜெர்மனி 0-2 இத்தாலி

ஜூலை 5
போர்ச்சுகல் 0-1 பிரான்ஸ்

ஜூலை 8
ஜெர்மனி 3-1 போர்ச்சுகல்

ஜூலை 9
இறுதிச் சுற்று: இத்தாலி 1-1 பிரான்ஸ் (இத்தாலி வெற்றி 5-3 பெனால்ட்டி முறையில்)உலக கோப்பை முந்தைய வெற்றிகள் சில:
2002 லிருந்து 1970 வரை மட்டும்

2002: நடைபெற்ற இடங்கள்: ஜப்பான்-தென்கொரியா
இறுதி சுற்றில் : பிரேஸில் 2 ஜெர்மனி 0
அதிக கோல் எடுத்தவர்: ரொனால்டோ (பிரேஸில்) - 8 கோல்கள்

1998: நடைபெற்ற இடம்: பிரான்ஸ்
இறுதிச் சுற்று: பிரான்ஸ் 3 பிரேசில் 0
அதிக கோல் எடுத்தவர்: Davor Suker (குரோவேஷியா) - 6 கோல்கள்

1994: நடைபெற்ற இடம்: அமெரிக்கா
இறுதிச் சுற்று: பிரேசில் 0 இத்தாலி 0 (பிரேசில் வெற்றி 3-2 பெனால்ட்டி முறையில்)
அதிக கோல் எடுத்தவர்: Hristo Stoichkov (பல்கேரியா), Oleg Salenko (ரஷ்யா) - 6 கோல்கள்

1990: நடைபெற்ற இடம்: இத்தாலி
இறுதிச் சுற்று: மேற்கு ஜெர்மனி 1 அர்ஜெண்டினா 0
அதிக கோல் எடுத்தவர்: Salvatore Schillaci (இத்தாலி) - 6 கோல்கள்

1986: நடைபெற்ற இடம்: மெக்ஸிகோ
இறுதிச் சுற்று: அர்ஜெண்டினா 3 மேற்கு ஜெர்மனி 2
அதிக கோல் எடுத்தவர்: Gary Lineker (இங்கிலாந்து) - 6 கோல்கள்

1982: நடைபெற்ற இடம்: ஸ்பெயின்
இறுதிச் சுற்று: இத்தாலி 3 மேற்கு ஜெர்மனி 1
அதிக கோல் எடுத்தவர்: Paolo Rossi (இத்தாலி) - 6 கோல்கள்

1978: நடைபெற்ற இடம்: அர்ஜெண்டினா
இறுதிச் சுற்று: அர்ஜெண்டினா 3 நெதர்லாந்து 1
அதிக கோல் எடுத்தவர்: Mario Kempes - 6 கோல்கள்

1974: நடைபெற்ற இடம்: மேற்கு ஜெர்மனி
இறுதிச் சுற்று: மேற்கு ஜெர்மனி 2 நெதர்லாந்து 1
அதிக கோல் எடுத்தவர்: Gregorz Lato (போலந்து) - 7 கோல்கள்

1970: நடைபெற்ற இடம்: மெக்ஸிகோ
இறுதிச் சுற்று: பிரேசில் 4 இத்தாலி 1
அதிக கோல் எடுத்தவர்: Gerd Muller (மேற்கு ஜெர்மனி) - 10 கோல்கள்

ஹதீஸ் முறைமையும் தொகுப்புகளும்

நூல்: ஹதீஸ் முறைமையும் தொகுப்புகளும்
ஆசிரியர்: டாக்டர் முஹம்மத் முஸ்தஃபா அஸமி
தமிழாக்கம்: அப்துல் ஜப்பார் முஹம்மத் ஜனீர்
பக்கங்கள்: 168
விலை: ரூ. 65

வெளியீடு: மெல்லினம்
முகவரி: 9 மாதா கோவில் தெரு
கே புதூர்
மதுரை - 625 007
தொலைப்பேசி: +91 (0452) 256 9930
மின் அஞ்சல்: mellinam@yahoo.com

பின்னட்டைக் குறிப்பு:
ஹதீஸ் தராதரம் பற்றி தமிழ் முஸ்லிம்களிடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வரும் இவ்வேளையில் கற்றல், கற்பித்தலுக்கான கல்வியியல் (academic) ஒழுங்குடன் வெளிவருகிறது இந்நூல். ஹதீஸ் என்றால் என்ன அவை பதியப்பட்ட, பாதுகாக்கப்பட்ட முறைகள், புனைந்துரைகள், புகுந்த விதம், ஹதீஸ் கற்கும் போது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகள், ஆசிரியர் மாணவர் தகைமைகள், அறிவிப்பாளர்களின் தரங்கள் போன்றவை குறித்து விரிவாகப் பேசுகிறது இந்நூல். ஹதீஸ்களை தொகுத்த பன்னிரண்டு அறிஞர்கள் பற்றிய தகவல்களுடன் ஆரம்ப கால ஹதீஸ் நூல்களுக்கு நிகழ்ந்ததென்ன என்ற அத்தியாயம் இயல்பாக எழும் பல ஐயங்களுக்குத் தீர்வையும் சொல்கிறது. பல்வேறு நாடுகளில் ஹதீஸ் பாடத்திட்டத்தில் உள்ள் இந்நூல் டாக்டர் அஸமி அவர்களின் பெரும் பங்களிப்பு. தமிழ் மொழி மூலம் இஸ்லாமிய அறிவைத் தேடுபவர்களுக்கு புதியதொரு வரவு.

Monday, July 10, 2006

தெரியுமா? தெரிந்துக்கொள்வோமா?

1.ஃபிர்அவ்னின் மனைவி பெயர் என்ன?
(அ) ஆசியா. (ஆ) பௌசியா (இ) பல்கீஸ் (ஈ) சாரா
(விடை. அ )

2. இறைவன் மூஸா நபியின் வணக்க நாளாக எந்த நாளை அருளினான்?
(அ) ஞாயிற்று கிழமை (ஆ) திங்கட்கிழமை (இ) சனிக்கிழமை (ஈ) வெள்ளிக்கிழமை
(விடை. இ )

3. முதலில் அருளப்பட்ட குர்ஆன் வசனங்கள் எந்த ஸூராவில் அமைந்துள்ளன?
(அ) ஸூரா அலக். (ஆ) ஸூரா பாத்திஹா (இ) ஸூரா நிஸா (ஈ) ஸூரா நாஸ்
(விடை. அ )

5. கஃபத்துல்லாஹ்வை முதன் முதலில் நிர்மாணிக்கும் பணி யாரிடம் விடப்பட்டது?
(அ) இப்ராஹீம் நபி (ஆ) முஹம்மது நபி (ஸல்) (இ) ஆதம் நபி (ஈ) சுலைமான் நபி
(விடை. அ )

10. நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஒதுக்கிய ஒரு நாளை ஆயிஷா (ரலி) அவர்களுக்காக விட்டுக் கொடுத்த நபி (ஸல்) மனைவி யார்?
(அ) ஜைனப் (ரலி) (ஆ) ஸவ்தா(ரலீ) (இ) கதீஜா(ரலி)
(விடை. ஆ)

11. ஓ இரட்சகா! எனக்கு கல்வி ஞானத்தை அதிகமாக்குவாயாக! எனப் பிரார்த்தித்தவர் யார்?
(அ) மூஸா (அலை) (ஆ) நூஹ்(அலை) (இ) முஹம்மது (ஸல்)
(விடை. 20.114)

12. நம்மில் பெரும்பாலோர் வீடுகளிலும் கடைகளிலும் ஹாதா மின் ஃபழ்லி ரப்பி (இது எனது இரட்சகனின் அருட்கொடையாகும்) என ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருப்பதைக்; காணலாம். இதனைக் கூறியவர் யார்.
(அ) முஹம்மது(ஸல்) (ஆ) சுலைமான்(அலை) (இ) இப்றாஹீம்(அலை)
(விடை.27.40)

12. உம்மி நபி ரசு10ல் எனச் சிறப்பிக்கப்பட்டவர் யார்?
(அ) முஹம்மது(ஸல்) (ஆ) யூசுப்(அலை) (இ) ஹூது(அலை)
( விடை. 7. 157 62. 2)

13. இறைவனுக்கு இணைவைப்பதைத் தவிர வேறு எந்தப் பாவத்தையும் ஏகன் அல்லாஹ் மன்னிப்பான் எனக் கூறும் இறை வசனங்கள் யாவை?
(அ) 46.28 (ஆ) 6.108 (இ) 4.48)
(விடை. 4.48 116)

14. முழு மனித சமூதாயத்திற்கும் தலைவராக (இமாமாக) இறைவனால் பிரகடனப் படுத்தப்பட்டவர் யார்?
(அ) யாகூப்(அலை) (ஆ) இப்றாஹீம்(அலை) (இ) இஸ்மாயீல்(அலை)
(விடை.21.24)

14. நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? என்ற இறை வசனங்களில் கூறப்படும் இரு சாரார் யார் யார்?
(அ) ஆண் பெண் (ஆ) யூதர் கிருத்தவர் (இ) ஜின் மனிதன்.
(விடை. 55.16 33 34 )

15. சிலந்தியின் வீடு யாருக்கு ஒப்பிடப்படுகிறது?
(அ) முஸ்லீம் (ஆ) முஷ்ரிகீன் (இ) வேதம் கொடுக்கப்பட்டவர்.
(விடை. 29. 41)

16. தொட்டிலிலிருந்து பேசிய பாலகன் யார்? என்ன போசினார்?
(அ) மூஸா(அலை) (ஆ) ஈஸா(அலை) (இ) சாலிஹ்(அலை)
(விடை. 19.30)

17. மீனை வழியில் தவறவிட்டவர் யார்?
(அ) இஸ்மாயீல்(அலை) (ஆ) தாவூத்(அலை) (இ) மூஸா(அலை)
(விடை. 18.63)

18. தீய ஒழுக்க அவதூறில் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டுச் சிறைத் தண்டனை அனுபவித்தவர் யார்?
(அ) யூசுப்(அலை) (ஆ) ஈஸா(அலை) (இ) யாகூப்(அலை)
(விடை. 12.32 33)

19. இரும்புப் பாளங்களுக்கிடையில் செம்பை ஊற்றித்தடுப்புச் சுவர் எழுப்பியவர் யார்?
(அ) சுலைமான்(அலை) (ஆ) துல்கர்னைன்(அலை) (இ) எஹ்யா(அலை)
(விடை. 18.96)

20. நபி(ஸல்) அவர்களின் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என இறைவனால் வாக்களிக்கப்பட்ட வசனம் எது?
(அ) 15.10 (ஆ) 5. 4 (இ) 48. 2
(விடை. 48.2)

21. இரு நல்லடியார்களின் துணைவியர்கள் கெட்டவர்கள். நரகவாசிகள் என்பது இறை வாக்கு அவர்கள் யார்? யார்?
(அ) மூஸா(அலை). ஹாரூன்(அலை) (ஆ) இப்றாஹீம்(அலை) . இஸ்மாயீல்(அலை) (இ) நூஹ்(அலை) . லூத்(அலை)
( விடை. 66.10)

22. இப்லீஸ் ஷைத்தானுக்குள்ள வேறு பெயர்களில் மூன்றினைக் குறிப்பிடுக?
(அ) வஸ்வாஸ் . கன்னாஸ். (ஆ) ரஜீம் . தாகூத். (இ) அதூஉ . குரூர்.
விடை. அனைத்தும் ஷைத்தான் பெயர்தான். (114.4) (15.34) (2.256) (9.114) (17.64)

23. குர்ஆனில் பெயர் இடம் பெற்றிருக்கும் ஒரு நபித்தோழர் யார்?
(அ) அபூபக்கர் (ஆ) ஹப்பாப் (இ) ஜைது இப்னு ஹாரிஸ்
(விடை. 33.37)

24. ஜகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனை வகையினர்?
(அ) ஆறு வகையினர் (ஆ) நான்கு வகையினர் (இ) எட்டு வகையினர்
(விடை. 6.90)

25. ஸகர் என்பது என்ன?
(அ) நரகம் (ஆ) செர்க்கம் (இ) கவ்ஸர் தடாகம்.
(விடை. 74.43 44)

26. பிறந்த குழந்தைகளுக்குரிய பால்குடிக் காலம் எவ்வளவு?
(அ) ஒரு வருடம் (ஆ) இரண்டு வருடம் (இ) மூன்று வருடம்
(விடை. 2.233 31.14)

27. அன்னை ஆயிஷா (ரலி) மீது கூறப்பட்ட வீண் அவதூறை அகற்றி அவரது பரிசுத்தத்தை வெளிப்படுத்திய இறைவாக்கு எது?
(அ) 3. 15 (ஆ) 2. 215 (இ) 24.12
(விடை. 24.12)

28. மாதவிடாய் நின்று விட்ட பெண்களுக்கான இத்தா காலம் எவ்வளவு?
(அ) நான்கு மாதம் (ஆ) ஒரு வருடம் (இ) மூன்று மாதம்
(விடை. 65.4)

29. எங்கள் இரட்சகா! நீ எங்களுக்கு இவ்வுலகில் நன்மையை நல்குவாயாக! மறுமையிலும் நன்மையை நல்குவாயாக! நரக நெருப்பிலிருந்து பாதுகாத்தருள்வாயாக! என்ற பிரார்த்தனை குர்ஆனில் எங்கு இடம் பெற்றுள்ளது?
(அ) 3.10 (ஆ) 7.92 (இ) 2.201
(விடை. 2.201)

30. தமது முஸ்லிம் சகோதருக்கும் விரும்பாத வரை ஒருவர் ஈமான் கொண்டவர் ஆகமாட்டார்கள் என்று நபிகளார் (ஸல்) குறிப்பிட்டது எதனை?
(அ) அல்லாஹ் ஹலால் ஆக்கியதை (ஆ) அனைத்திலும் சிறப்பானதை (இ) தான் வெறுக்ககாததை (ஈ) தனக்கென எதனை விரும்புவாரோ அதனை.
(விடை. ஈ )

(தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்)

நன்றி: தொகுத்தவருக்கு

அக்னி 3 ஏவுகணை சோதனை தோல்வி!

3500 கி. மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக்கூடியது
வெற்றிகரமாக பறந்த 'அக்னி-3' ஏவுகணை
'திடீர்' கோளாறு காரணமாக நடுக்கடலில் விழுந்தது


பாலசோர், ஜுலை.10-

இந்தியாவின் அதிநவீன 'அக்னி-3' ஏவுகணை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை 'திடீர்' கோளாறு காரணமாக நடுக்கடலில் விழுந்தது.

அக்னி ஏவுகணை

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பறந்து சென்று தாக்கக் கூடிய 'அக்னி' ஏவுகணைகளை இந்தியா பறக்க விட்டு வருகிறது. கடந்த 1989-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி அக்னி ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் சண்டிபூர் கடல் தளத்தில் இருந்து 5 முறை இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.

பின்னர் அதே மாவட்டத்தில் தாம்ரா என்ற இடத்தின் அருகில் உள்ள வீலர் தீவுக்கு இந்த ஏவுதளம் மாற்றப்பட்டது. இங்கிருந்து அக்னி-1 மற்றும் அக்னி-2 ஏவுகணைகள் தலா 2 முறை செலுத்தப்பட்டது.

நவீன ஏவுகணை

நேற்று அதி நவீன முறையில், முதன் முதலாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'அக்னி-3' ஏவுகணை இந்த தீவில் இருந்து காலை 11 மணி 5 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டே இந்த ஏவுகணை செலுத்தப்பட இருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்போது தள்ளி வைக்கப்பட்டு, 2005-ம் ஆண்டுக்கு இந்த ஏவுகணையை செலுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் மீண்டும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஏவுகணை செலுத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன் பிறகுதான் திட்டமிட்டபடி நேற்று இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த ஏவுகணை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு சென்று தாக்கக் கூடியது. அத்துடன் 1000கிலோ வெடி பொருளை இந்த ஏவுகணை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அணுகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் பறந்து சென்று தாக்கக்கூடியது இந்த ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

கண் இமைக்கும் நேரத்தில்

இந்த ஏவுகணை பறந்ததை நேரில் பார்த்த ஒருவர் கூறும் போது "ஏவுகணை செலுத்தப்பட்டதும் பயங்கர சத்தத்துடன் மஞ்சள் புகையை கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது. ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் மேகங்களுக்கு இடையே மறைந்து விட்டது" என்று தெரிவித்தார்.

அதிநவீன கம்ப்ïட்டர் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை, 16 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் சுற்றளவும் கொண்டது ஆகும். வீலர் தீவில் இருந்து செங்குத்தாகப் பாய்ந்து சென்ற இந்த ஏவுகணை மீண்டும் வங்காளவிரிகுடா கடலில் நிகோபார் தீவு அருகே குறிப்பிட்ட இடத்தில் விழும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டு இருந்தது. நிகோபார் தீவில் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பலில் இருந்தும், ஏவுகணை செலுத்தப்பட்ட இடமான தாம்ரா, சண்டிபூர், அந்தமான் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன 3 ரேடார்கள், 6 எலெக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங், மற்றும் 3 டெலிமெட்ரிக் நிலையங்கள் மூலமும் இந்த ஏவுகணையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திடீர் கோளாறு

இந்த ஏவுகணை 2 பகுதிகளை கொண்டது. ஏவுகணை செலுத்தப்பட்டதும் முதலில் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு செங்குத்தாகச் செல்லும். பின்னர் மீதி தூரத்தை படுக்கை வசத்தில் பறந்து சென்று இலக்கை தாக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

திட்டமிட்டபடி முதலில் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதும் 12 கி.மீட்டர் தூரம் செங்குத்தாகப் பறந்தது. பின்னர் ஏவுகணையின் 2-வது பகுதி முதல் பகுதியில் இருந்து பிரியவில்லை. திடீரென ஏற்பட்டகோளாறு காரணமாக ஏவுகணை குறிப்பிட்ட இலக்கான நிகோபார் தீவில் சென்று விழாமல் நடுக்கடலிலேயே விழுந்து விட்டது. வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தோல்வி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. "ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் இடையிலேயே கடலில் விழுந்து விட்டதற்கான காரணம் இன்னும் இரண்டொரு நாளில் தெரிய வரும்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராணுவ மந்திரி

முன்னதாக ஏவுகணை செலுத்தப்பட்ட நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி, ராணுவத்தின் அறிவியல் ஆலோசகர் எம்.நடராஜன், 'அக்னி-3' ஏவுகணை திட்ட இயக்குனர் அவினாஷ் சந்திரா, மற்றும் ராணுவத்தளவாடங்கள் ஆராய்ச்சி மைய என்ஜினீயர்கள் 300 பேர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

700 கிலோ மீட்டர் முதல் 800 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக்கூடிய 'அக்னி-1', 2ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக்கூடிய 'அக்னி-2' ஆகிய ஏவுகணைகள் வெற்றிகரமான சோதனைக்குப் பின்னர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டன.

ஜனாதிபதி அப்துல்கலாம்

இதுவரை இந்தியா 10முறை அக்னி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

"இந்திய ஏவுகணை வளர்ச்சியின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த வாரம் 3நாள் சுற்று பயணமாக ஒரிசா சென்றிருந்த போது வீலர் தீவுக்கு சென்று ஏவுகணை தளத்தை சுற்றிப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினத்தந்தி

Tuesday, July 04, 2006

இதுதான் சவூதி அரேபியா

சவூதி அரேபியா நாட்டைப் பற்றிய விவரங்கள்

· பெயர் : அல்மம்லக்கா அல் அரேபியா அஸ்ஸவூதியா (கிங்டம் ஆஃப் சவூதி அரேபியா)
· பரப்பளவு 2,250,000 சதுர கிலோ மீட்டர்கள் (868,730 சதுர மைல்கள்)
· பாலைவனங்களும், உயர்ந்த சமவெளிகளும், மலைகளும் அடங்கியது.
· உயர்ந்த இடம் : ஜபல் சவ்தா
· மக்கள் தொகை : 20.8 மில்லியன் (2000 வருடக் கணக்குப்படி)
· சவூதி குடிமக்கள் 74.8%; மற்ற நாட்டவர் 25.2%
· மொழி : அரபி
· மதம் : இஸ்லாம்
· கொடி : பச்சை நிறம் "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற சொற்றொடர் பொறிக்கப்பட்டிருக்கும். போர் வெற்றியைக் குறிப்பதற்காக வாள் 1906-ல் சேர்க்கப்பட்டது.
· தேசிய கீதம் : சாரே லில் மஜ்த் வலயாஸ்
· நாணயம் : சவூதி ரியால்
· தலைநகரம் : ரியாத் (மக்கள் தொகை 2000ஆம் ஆண்டு கணக்குப்படி 4.7 மில்லியன்)
· நாட்டின் தலைவர் : மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ்
· உயர் நீதித்துறை : சுப்ரீம் கவுன் சில் ஆஃப் ஜஸ்டிஸ்
· நிர்வாக மண்டலங்கள் : அல் பாஹா, அல்ஜுஃப், அஸிர், கிழக்கு மண்டலம், ஹைல், ஜிஜான், மதினா, மக்கா, நஜ்ரான், வடக்கு எல்லை, கஸிம், ரியாத் மற்றும் தபுக்.

அரசாங்க அலுவலக நேரம்
சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை (ஒரு சில அலுவலகங்கள் மட்டும் வியாழன் காலை வரை)

நேரம் : காலை 7.30 முதல் மாலை 2.30 வரை.

சவூதி குடும்பத்திலிருந்து வந்த முதல் ஆட்சியாளர்
சவூத் குடும்பத்திலிருந்து வந்த முதல் ஆட்சியாளர் முஹம்மத் பின் சவூத் அவர்கள்.

முதன் முதலில் அத்-திரை யாவை தலைநகரமாகக் கொண்டு ஆளத் தொடங்கிய பிறகு, சிறந்த மதத் தலைவரான முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களோடு ஒருங்கிணைந்து கி.பி. 1744ஆம் ஆண்டில் (ஹிஜ்ரி 1157 ஆண்டு), அரபுப் பிரதேசத்தில் பல்வேறு வகையில் பிரிந்து, சிதறுண்டு கிடந்த அரபுகளையெல்லாம் உண்மையான இஸ்லாத்தினுடைய நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைத்தார்.

சவூதி அரேபிய மன்னர்கள்
· மன்னர் அப்துல் அஜீஸ் (இப்னு சவூத்)
· மன்னர் சவூத், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்
· மன்னர் பைஃஸல், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்
· மன்னர் காலித், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்
· மன்னர் ஃபஹத், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்
· மன்னர் அப்துல்லாஹ், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்.

கலாச்சார அரேபிய உடைகள்
ஆண்கள்: தோப் : நன்றாக தாராளமாக வுள்ள, நீண்ட கை களையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. கோடை காலத்தில் வெள்ளை நிறத்தில் காட்டன் துணியிலும், குளிர்காலத் தில் அடர்ந்த நிறத்தில் சற்று தடித்த துணியிலும் (Wool).

தகியா : வெள்ளைத் தொப்பி.
குத்ரா : காட்டன் அல்லது பாலியெஸ்டரினாலான சதுர துண்டுத் துணி. தலையை மறைக்க தொப்பிக்கு மேல் அணியப்படுவது. முகத்தோடு காதுகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி பாலைவன மணற்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படும்.

அகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும்.

பெண்களுக்கான உடைகள்

தோப் : நன்றாக தாராளமாகவுள்ள, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. ஆனால், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் எம்பிராய்டரி மூலம் அழகுபடுத்தப்பட்டிருக்கும்.

அபயா : கறுப்பு நிறத்திலான, நீண்ட, தாராளமாக, உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி. சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.

போசியா : கறுப்பு நிறத்திலான, லேசாகவுள்ள, கண்ணை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை மறைக்கும் துணி.

சவூதி அரேபியாவின் பூகோள அமைப்பு
மொத்த அரேபிய தீபகற்பத்தில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்ட, பரந்த நிலப்பரப்பில் அமைந்த இந்நாடு, செங்கடலை வடபுறமாகவும், இந்தியப் பெருங்கடலை தெற்குப் புறமாகவும், அரேபிய வளை குடாவை கிழக்குப் புறமாகவும் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 2,250,000 சதுர கிலோ மீட்டர்கள் (868,730 சதுர மைல்கள்) பரப்பளவில் அமைந்த இந்நாட்டினுடைய வடபுறத்தில் ஜோர்டான், குவைத், இராக் நாடுகளும், கிழக்கில் வளைகுடா, பஹ்ரைன், கதார், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளும், தெற்கில் ஓமன், யேமன் நாடுகளும் மற்றும் மேற்கில் செங்கடலையும் கொண்டிருக்கிறது.

மக்கள் தொகை
1974ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சவூதி அரேபியாவின் மக்கள் தொகை சற்றொப்ப 7 மில்லியன். ஆனால், பிறகு மக்கள் தொகை குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டது.

1987ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி 13.6 மில்லியன். 1992ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 16.9 மில்லியன். இதில் 12.3 மில்லியன் சவூதிகளாவர்.

2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 20.8 மில்லியன்.

மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 54.3 சதவீதமும், பெண்கள் 45.7 சதவீதமும் உள்ளனர்.

சவூதி அரேபியா நாட்டிலுள்ள ரியாத் நகரம் பற்றி

ரியாத் மத்திய மண்டலத்திலுள்ள இந்நகரம் சவூதி அரேபிய நாட்டின் தலைநகரமாக விளங்கு கிறது. இன்றைய நகரம் 1600 சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்கு விரிவடைந்து, 4.7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறது. ரியாத் "ரவ்தா" (பொருள் தோட்டங்களும் மரங்களும் உள்ள இடம்) என்ற அரபி வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும்.

ரியாத் உயிரியல் பூங்கா

இது ரியாத்தில் மிகவும் பிரபலமடைந்த பொழுதுபோக்கு இடமாகும்.

முதல் மூன்று சவூதி மன்னர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட விலங்குகளைக் கொண்டு 1957இல் ஆரம்பிக்கப்பட்டது. 1987இல் முழு வதுமாக சீரமைக்கப்பட்டு, விலங்குகள் சுதந்திரமாக உலாவும் வகையிலும், சவுகரியமாக ஒய்வு எடுக்கும் வகையிலும் புதிய வடிவமைப்பில் திறக்கப்பட்டது. இன்று இது 40 வகைப் பிராணிகளைக் கொண்டதாக உள்ளது.

இங்கு கரடி, ஒட்டகம், யானை கள், சிறுத்தைப் புலிகள், சிங்கங்கள், குரங்குகள், காண்டாமிருகம் மற்றும் விதவிதமான பறவைகள் எல்லாம் பார்க்க வரும் நபர்களை கவரக்கூடிய வகையில் இருக்கின்றன.

பெண்கள், குழந்தைகளுக்கு ஒரு பார்வையாளர் நேரமும், ஆண்களுக்கு ஒரு பார்வையாளர் நேரமுமாக அனுமதிக்கப்படுகின்றது.

ரியாத் அருங்காட்சியகம்
இன்றைய புதிய சவூதி அரேபியா வின் வரலாற்றின் மையமாக விளங்கும் மஸ்மாக் கோட்டை ஒன்று அச்சு அசலாக இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை அன்றைய சவூதி மன்னர் அப்துல் அஜீஸ் மற்றும் அவரது படைகளால் 1902 இல் கைப்பற்றப்பட்டு, பின்னர் மன்னர் அல்சவூத் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

அரபுக் கலை மற்றும் கலாச்சாரத் தைப் பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் எட்டுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வரலாறு, தொல்பொருள் ஆய்வு மற்றும் கட்டமைப்பு, பழமை வாய்ந்த ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஆயுதங்கள், கற்காலம் முதல் தற்காலம் வரையுள்ள ஆபரணங்கள், கலாச்சார சிறப்புமிக்க பழமை வாய்ந்த சமையல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அரபு அரசாட்சிகள், இறைத் தூதர்களின் குறிக்கோள், ஹஜ், மக்கா / மதீனா பள்ளிவாசல்கள் கட்ட மைப்பு பற்றியும் இங்கு மேலும் சில பகுதிகள் உள்ளன.

மையமாக விளங்கும் அறையில், பார்வையாளர்களுக்குப் புரியும்படியாக அரபியிலும் ஆங்கிலத்திலும் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. கற்காலம் முதல் இஸ்லாமிய ஆட்சிக்கு சற்று முன்னர் வரையுள்ள காலம் வரை குறிப்புகள் உள்ளன.

முதன் முதலில் சவூதி அரேபியா நாடு எப்படி கைப்பற்றப்பட்டது என்பதைப் பற்றிய ஒளி/ஒலி காட்சி, 3ஈ அனிமேஷன் வடிவமைப்பில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, சிறிய தியேட்டரில் காண்பிக்கப்படுகிறது.

குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் மிருகத் தோலிலும், எலும்புகளிலும் எழுதப்பட்டதற்கான சான்றுகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. எழுத்து வடிவ முறை எப்படி பற்பல நூற்றாண்டுகளாக, பல்வேறு சமுதாயங்களில் மாற்றம் பெற்று, இன்றைய எழுத்து வடிவத்துக்கு வந்தது என்பதற்கு சான்றாக நிறைய கல்வெட்டுகள், எழுத்துருக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

பார்வையாளர்களுக்கு 15 சவூதி ரியால் அனுமதிக் கட்டணம்.

அருங்காட்சியகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் திறந்தவெளி, ரியாத் நகர மக்களுக்கு, குறிப்பாக, குடும்பத்துடன் இருப்பவர்களுக்குச் சிறந்த ஒரு பொழுது போக்கு இடம். ரியாத்தின் உயரமான, கண்கவரும் வகையில் வண்ணமிடப் பட்ட, பழமையான தண்ணீர் தொட்டியும் இங்கே இருக்கிறது.

நன்றி: சமரசம்