Saturday, May 28, 2005

நடுநிலைச் சமுதாயம்

நடுநிலைச் சமுதாயம்
இறைவன் நடுநிலையைப் பேணச் சொல்லி நமக்கு அறிவுறுத்துகிறான். ஒவ்வொரு பிரச்சினையிலும் எது நடுநிலை என்பதை குர் ஆன், நபி வழி அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தை கூறுகிறேன். முஸ்லிம்கள் சிறுபாண்மையாய் வாழும் நாட்டில், அவர்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு தீர்வு காண மூன்று வழிகள் உள்ளன:

1. அயுதம் ஏந்தி அநீதியாளர்களுக்கு எதிராகப் போராடுவது. கோவையில் சில முஸ்லிம் சகோதரர்கள் எடுத்த முடிவு. பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவிகள்

2. அநீதீ இழைத்தவர்களுடன் சட்டப்படி வழக்காடுவது. குஜராத்தில் முஸ்லிம்களுடன் முஸ்லிமல்லாத நடுநிலையாளர்கள் எடுத்த முடிவு. தாமதமானாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பாபர் மஸ்ஜித் வழக்கிலும் முஸ்லிம்கள் சட்டப்படி நீதியை நிலை நாட்ட முயல்கின்றனர்.

3. அநீதி இழைப்பவர்களுடன் ஒரே கூட்டமாகச் சேர்ந்து கொள்வது. அல்லது சமரசமாகி விடுவது. இதனை உதாரணம் சொல்ல என் மனம் கூசுகிறது. செல்வந்தரகளில் சிலர் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான்.

என் அறிவுக்குப் பட்டவரை மூன்றாம் வழி எப்படி முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் அநீதியோ, அது போலவே முதல் வழியும் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் பெரும் தீங்கே. முன்னர் மறைந்த ஒரு முஸ்லிம் தலைவரும், தற்போது சிறையில் வாடும் ஒரு முஸ்லிம் தலைவரும் இத்தவறை செய்தனர். தற்போது, ஒரு குழுவினர் தாங்கள் மட்டுமே அழைப்பு பணி செய்பவர்கள் என்றும், மற்றவர்கள் எல்லாம் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் கூறி வருகின்றனர். நள்ளிரவில் மறைமுகமாகப் பயிற்சி செய்கின்றனர். ரகசியக் கூட்டம் போடுகின்றனர். இவர்களுக்கு நட்புரிமையோடு அறிவுறுத்துபவர்களையும் துரோகிகளாய் சித்தரிக்கின்றனர். இவர்களை முற்றிலுமாக முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு வல்ல இறைவன் நேர்வழி காட்ட பிரார்த்திப்போம்.

ஜகாத், சதகா - வேறுபாடுகள்

ஜகாத், சதகா - வேறுபாடுகள்

குர் ஆன், தொழுகையைப் பற்றி வலியுறுத்தும் பெரும்பாலான இடங்களில் ஜகாத்தையும் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)

மேற்கண்ட பிரிவுகளைத் தவிர மற்ற தர்மங்கள் சதகா என்னும் வகையைச் சேரும் . ஜகாத்தைப் போலவவே சதகாவும் குர் ஆனிலும், நபிவழியிலும் வலியுறுத்தப்படுகிறது. எனக்குத் தெரிந்த முஸ்லிம் செல்வந்தர்களில் சிலர் சதகா என்னும் வகையைச் சேர்ந்த தர்மங்களை தாராளமாகச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் ஜகாத் பூஜ்யமாகவோ அல்லது போதாததாகவோ உள்ளது. இதனை நியாயப் படுத்தி சுயதிருப்தி அடைகின்றனர். இவர்களுக்கு நாம் எப்படி புரியவைக்கப் போகிறோம்? அது போல ஹஜ்ஜை நிறைவேற்றும் செல்வந்தர்களில் சிலர் ஜகாத் கொடுப்பதில்லை. ஐந்து வேளை தவறாது தொழும் சிலர் ஜகாத் கொடுப்பதில்லை. இவர்கள் இறைவனைப் பற்றி அச்ச உணர்வற்று இருக்கிறார்களா? அல்லது அறியாமையில் இருக்கிறார்களா? நாம் எப்படி எடுத்துக் கொள்வது?

Thursday, May 26, 2005

பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா?

புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா? - பழனி பாபா : நூல் விமர்சனம்நூல்: புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா?
ஆசிரியர்: பழனி பாபா
பக்கம்: 80
விலை: ரூ. 15
கிடைக்குமிடம்: சாஜிதா புக் சென்டர், 248 தம்புச் செட்டி தெரு, சென்னை - 600 001

பைபிளையும், குர் ஆனையும் ஒப்பிட்டு தமிழில் பல நூல்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. மர்ஹும் பழனி பாபா, தன் விமானப் பயணத்தின் போது, அரபுக் கிறிஸ்தவ விமானப் பணிப்பெண்ணுடன் பைபிள் தொடர்பாக செய்த விவாதத்தை நூலாக வெளியிட்டு இருந்தார். இது அந்த நூலின் மறுபதிப்பு.

மறைந்த பழனிபாபாவின் அரசியல் அனுகுமுறையில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. எனினும் அவரின் பைபிள் ஆய்வு இன்றைய தினம் உலக அளவில் புகழ் பெற்றுள்ள பல இஸ்லாமிய அழைப்பாளர்களின் ஆய்வுக்கு இணையானது. இந்த நூல், சோர்வடையச் செய்யாத நடையுடன், விறுவிறுப்பாக உள்ளது.

Tuesday, May 10, 2005

படம் சொல்லும் கருத்து -2

Image hosted by TinyPic.com

இந்த படத்துக்கு ஏதேனும் கருத்து எழுதவேண்டும் என்று தோன்றுகிறதா?

Wednesday, May 04, 2005

தமிழ் இலக்கணம் கசக்குமா? (பகுதி 2)

அளித்தல் - ஈதல்
அழித்தல் - கெடுத்தல்

ஒலி - சப்தம்
ஒளி - வெளிச்சம்
ஒழி - நீக்கு

குலம் - சாதி
குளம் - நீர்நிலை

குளம்பு - Hoof
குழம்பு - Sauce

கொல் - கொன்றுவிடு
கொள் - பெறு

கோல் - கம்பு
கோள் - கோள் சொல்லல்

சூல் - கருப்பம்
சூள் - சபதம்

தோல் - Skin
தோள் - Soulder

புலி - Tiger
புளி - புளியம்பழம்

மூலை - Corner
மூளை - Brain
மூழை - அகப்பை

வலி - நோய்
வளி - காற்று
வழி - பாதை

வால் - Tail
வாள் - ரம்பம்
வாழ் - வாழி

விலா - விலா எலும்பு
விளா - விளாமரம்
விழா - திருவிழா

விலக்குதல் - நீக்குதல்
விளக்குதல் - Explanation

வெல்லம் - கரும்பு வெல்லம்
வெள்ளம் - நீர்ப் பெருக்கு

வேலை - தொழில்
வேளை - பொழுது

(படிக்கும் பாடங்கள் தொடர்ந்து எழுதுவேன்.. இறைவன் நாடினால்)

Sunday, May 01, 2005

படம் சொல்லும் கருத்து -1

Image hosted by TinyPic.com

குட்டிகள்: நாயம்மா நீதான் எங்களுக்கு தாய் மாதிரி.