Monday, February 28, 2005

அது ஒரு பொன் மாலைப் பொழுது!

கடந்த 17.02.05 வியாழன் மாலை ரியாத் வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு இனிய மாலைப்பொழுதாக அமைந்தது. ஆம் அன்று தான் ரியாத் தமிழ்(ச்) சங்கம்
தொடங்கப்பட்டது. சவூதி அரேபியாவிற்கான இந்தியத்தூதர் மேதகு எம்.ஓ.ஹெச். பஃரூக் மரைக்காயர் தலைமையில் நடைபெற்ற விழாவின் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து வந்திருந்தார்.

இந்த இனிய நிகழ்ச்சியின் அமைப்பாளராக அஹமது இம்தியாஸ் திறம்பட செயலாற்றியிருந்தார். உண்மையில் ரியாத் தமிழ் ச்சங்கம் என்பது ரியாத்-தில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த ஆறு தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கதாக தமிழ் கலாச்சாரக் கழகம். அதன் தலைவர் திரு. மாசிலாமணி என் இனிய நண்பர். ரியாத்திலுள்ள மன்னர் சவூத் பல்கலைக்கழகத்தில் லேசர் துறையில் பேராசிரியர்.நோபல் பரிசு ப்பெற்ற விஞ்ஞானிகள் சந்திரசேகர் அப்துஸ்ஸலாம் ஆகியோருடன் பணியாற்றியவர். சிறந்த கவிஞர். சிறந்த விஞ்ஞானி. எல்லாவற்றுக்கும் மேலாக மிகச்சிறந்த மனிதர். என் கவித்திறனை மேலும் மேலும் முன்னெடுத்து ச் செல்ல விழைபவர்.

ரியாத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவின் கவியரங்கத்திற்காக நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளுமாறு பெரிதும் என்னை கோரியிருந்தார். அதன்படி நானும் கலந்துக்கொள்ள, 65க்கும் மேற்பட்ட கவிஞர்களின் - ஏற்பாட்டாளர்களால் தரப்பட்ட தலைப்புக்கேற்ப எழுதப்பட்ட கவிதைகளில்-முதற்கட்ட ஆய்வில் பதினாறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். என் கவிதைக்கு இரண்டாம் நிலை என்று சொல்லப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பதினாறு பேரும் அவரவர் விரும்பும் தலைப்புகளில் 40 வரிகளுக்குள் கவிதை எழுதி கவியரங்க அமைப்பாளர் திரு. மோகனிடம் சமர்ப்பித்து விடவேண்டுமென்றும் அந்த பதினாறில் சிறந்த பத்து கவிதைகள் கவியரங்கத்திற்காக (திரு.வைரமுத்துவின் தேர்வின் அடிப்படையில்) தேர்ந்தெடுக்கப்படும் என்று சொன்னார்கள். நான் முதற்கட்ட த்தேர்வில் எழுதிய கவிதையையே ஒருசில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். காரணம் நேயர்களை வெகுவாக கவரத்தக்க பாடுபொருள் அது.- வெளிநாட்டு இந்தியனின் உள்மன க்கிடக்கைகள் குறித்தது. எதிர்பார்த்தப்படி , முதல் நிலை பெற்ற நண்பரும் அதே பாடு பொருளை கொண்டிருந்தார். (பாராட்டுப்பெற்ற அந்தக்கவிதையை வேறொரு தருணத்தில் என் பதிவிலிடுவேன்). கவிதையைச் சிலாகித்து 'வாழ்த்துக்கள்" என்று எழுதி வைரமுத்து கையெழுத்திட்டிருந்த சான்று அளித்தார்கள்.

நிற்க, - இந்தியத்தூதர் பஃருக் மரைக்காயருடைய இலக்கிய முகத்தை வெளிப்படுத்துவதாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது. நல்ல பேச்சாளர். கவிதைகளின் ரசிகர். உண்மையில் 'ரியாத் தமிழ்ச்சங்கத்தை" தொடங்கிட முதல் முயற்சியும் முழு முயற்சியும் எடுத்தவர்.

வைரமுத்துவின் பேச்சு பொதுவாக இருந்தது. சரளமான;நல்ல தமிழ்ப்பேச்சு. ரியாத் தமிழ்(ச்) சங்கத்தின் பெயர்பலகையை திறந்து வைத்து விட்டு 'இவ்வளவு சிறப்பான இந்த விழாவில் ஒரு குறையும் இருக்கிறது" என்று சொன்னவர், தமிழ் (ச்) சங்கம் என்ற பெயரில் 'ச்" விடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். சவூதி அரேபியாவில் பொது இடத்தில் 'இச்" கூடாது என்பதால் விடுபட்டிருக்கலாம் என்று சிலேடை பேசினார். 'தலைவர்' கலைஞர் தம் வாழ்த்துக்களை இந்தியத்தூதருக்கும் இந்தியர்களுக்கும் சொன்னதாக தெரிவித்தார்.

சவூதி மண்ணின் புனிதம் போற்றியவர், 'வாழ்க்கை தரும் இந்த மண்ணுக்கு நீங்கள் யாவரும் விசுவாசமாக இருக்கவேண்டும்" என்று அறிவுறுத்தினார். முஹம்மது நபிகளின் பொன்மொழிகளை நினைவு கூர்ந்தார். 'சதா வணங்கிக்கொண்டிருப்பதை விட உழைக்கவும் வேண்டும்- உழைத்துண்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளர்".

உலகம் கண்ட உன்னத தலைவர்களை வரிசைப்படுத்தும் போது மைக்கேல் ஹார்ட் என்கிற கிறிஸ்தவ அறிஞரே முஹம்மது நபியைத்தான் முதன்மைப்படுத்தினார் என்று குறிப்பிட்டார். (THE 100). காந்தியடிகளை விட, ஐன்ஸ்டீனை விட, இயேசு கிறிஸ்துவை விட முஹம்மது நபியை முதன்மைப்படுத்த க்காரணம் 'சொல்லுக்கும் செயலுக்கும் சிறிதும் இடைவெளி இல்லாத தன்மை" என்று ஹார்ட் குறிப்பிட்டிருப்பதை எடுத்துச்சொன்னார்.

தாம் சினிமா என்கிற பள்ளத்தில் விழுந்துக்கிடப்பதாக கூறுபவர்களுக்கு பதில் தரும் போது, 'நான் எழுதிய இலக்கிய நூல்கள் 100 பேரை ச் சென்றடைகிற நேரத்தில் சினிமாப்பாட்டு 10000 பேரைச் சென்றடைந்து விடுகிறது" என்றார். 'இலக்கியம் என் இதயத்துக்காக.. சினிமாப்பாட்டு என் வயிற்றுக்காக.." என்றார். உயர்தரமான கவிப்பூர்வமான ஒரு பாட்டு நிராகரிக்கப்பட்டதையும் பின் அதே இடத்தில் 'உப்புக்கருவாடு.. ஊறவச்ச சோறு" ருசிக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

அடிக்கடி இதுப்போல இலக்கிய விருந்தளிக்குமாறு ரியாத் தமிழ்ச்சங்கத்தை க்கேட்டுக்கொண்டார். தன்னைப்போன்ற நட்சத்திர படைப்பாளிகளை மட்டும் அழைப்பது என்றில்லாமல் பிற இலக்கிய வாதிகளையும் அழைத்து இலக்கிய விழாக்களை கொண்டாடவேண்டுமென்றார். அப்துல் ரகுமான்மு.மேத்தா தமிழன்பன் என்று சில பெயர்களையும் குறிப்பிட்டார். 'நட்சத்திரங்களை மிஞ்சிய சூரியர்களும் உண்டு" என்றவர் தத்தம் ஒருசில வரிகளிலேயே சில கவிஞர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுää எடுத்துக்காட்டாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" தொடங்கி 'இருட்டிலே வாங்கினோம் - இன்னும் விடியவே இல்லை" 'ஆண்களுக்கு பெண்களை விடச் சிறந்த ஆறுதல் இருக்கமுடியாது – பெண்களே இல்லாவிட்டால் ஆண்களுக்கு ஆறுதலே தேவைப்பட்டிருக்காது" என்று பெர்னார்ட் ஷாவையும் குறிப்பிட்டார்.

மறுநாள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்ததாம். இத்தகவல் ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே வாகன வசதி கருதி நான் அரங்கை விட்டு வெளியாகி இருந்ததால் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்த அஹமது இம்தியாஸ், பேரா.மாசிலாமணி, ரஹமத்துல்லா,ஜெயசீலன்,ராதா கிருஷ்ணன்,ரஷீத் பாஷா, ஹைதர் அலி, சுவாமி நாதன், ஆரிஃப் மரைக்காயர், சஜ்ஜாவுதீன் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே..!

ரியாத் தமிழ்ச்சங்க வலைமனை: http://riyadhtamilsangam.com

Saturday, February 26, 2005

தொழுகையில் கவனம் என்பது..

http://tamilmuslim.blogspot.com/2005/02/1.html

"ஆமாம் நீங்கள் அல்லாஹ்-வை வணங்கியதாக சொன்னீர்களே அப்படியானால் நான் குறுக்கே சென்றது உங்களுக்கு எப்படி தெரிந்தது..." என்று.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு.. அதாவது நாம் இறைவனை முறையாக தொழ வில்லை என்பது தான் அது.

தொழுகையில் இருக்கும் போது மணி எத்தனையென்று நேரம் பார்ப்பது, தலையை அண்ணாத்தி பார்ப்பது போன்ற செயல்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

அதே நேரத்தில், தன்னை மறந்து (அதாவது குறுக்கே யாராவது சென்றாலும் தெரியாத அளவுக்கு) தொழும்படி இஸ்லாம் காட்டித் தரவில்லை.

கீழே சொன்ன மூன்றும் ஹதீஸ்களின் கருத்துக்கள் மட்டுமே. ஆதாரத்துடன் கேட்டால் தேடி எடுத்து தர கடமைப்பட்டுள்ளேன்.

1. தொழுகையில் தடுப்பு (சுத்ரா) வைத்து தொழச்சொன்ன நபியவர்கள், அதனையும்
மீறி குறுக்கே செல்பவர்களை கைநீட்டி தடுக்க சொன்னார்கள்.

2. நபியவர்கள் ஜமாஅத் தொழுகையில் இருக்கும்போது குழுந்தையின் அழுகுரல்
கேட்டு தொழுகையை நீட்டாமல் சுருக்கிக்கொண்ட நிகழ்ச்சி.

3. தொழுகையிடத்தில் விஷ ஜந்துக்கள் வந்தால் அதனை அடித்துவிட்டு தொழவேண்டும் என்று நமக்கு ஏவியது.

இது போன்ற விஷயங்கள் நீங்கள் சொன்னவைகளுக்கு எதிரானதாகவே இருக்கிறது. காரணம் தன்னை மறந்து தொழுதால், குறுக்கே செல்பவனை கைநீட்டி தடுக்க முடியாது, குழந்தை அழுவது தெரியாது, சஜ்தா செய்யுமிடத்தில் பாம்பு படமெடுத்தாலும் தெரிய வாய்ப்பு இல்லை.

நான்கு வருடத்திற்கு முன்பு திருமணமான புதிதில், (புதிய லைலாவினால்) மஜ்னூனாக மாறியிருந்த சமயம், டவுன் பள்ளிக்கு தொழுகைக்கு போயிருந்த போது, ஒரு ஆள் திடீரென எனக்கு முன்னால் தோன்றி கோபமாக, "நான் தொழுதுக்கொண்டிருப்பது உனக்கு கண்ணு தெரியலையா", என்றார். அதாவது அவர் தொழுது கொண்டிருக்கும்போது நான் குறுக்கே சென்றுவிட்டேனாம்.

"நீங்கள் ஏன் கைநீட்டி தடுக்கவில்லை", என்று நான் கேட்டதற்கு, "யாராவது தொழும்போது கைநீட்டி தடுப்பார்களா?", என்றார்.

தொழுகையில் குறுக்கே செல்வது தவறு என்று தெரிந்தவருக்கு, கைநீட்டி தடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.

முறையாக, கவனத்துடன் அல்லது அக்கறையுடன் தொழுதால் மட்டுமே ஒருவருக்கு யாராவது குறுக்கே சென்றால் புரிந்துக்கொள்ள முடியும். இஸ்லாம் சொல்லும் தொழுகை பல நிலைகளை உள்ளடக்கியது. அதில் தக்பீர் உண்டு, ருக்ஹு உண்டு, சுஜுது உண்டு. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தொழுகைக்கும் ரக்அத் மாறுபடும். இதில் குறுக்கே செல்பவரை அறியாதவண்ணம் தொழுவதற்கு சாத்தியமில்லை.

தொழுகையில் தன்னிலை மறக்க முடியுமா?

தன்னிலை மறந்து இறைவனைத் தொழ வேண்டும். தொழுது கொண்டிருக்கும்போது தொழுகையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது, தொழுகையில் நிற்கும்போது எதிரே தெரியும் எதையும் பார்க்க முடியாத அளவிற்கு மெய்மறந்த நிலையில் தொழுகை என்ற இறைவணக்கத்தில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தில் இஸ்லாம் ஒரு போதும் உடன்பட்டதில்லை.

இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்னவென்பதை தெரிந்து கொள்வதற்கு முன் செயல் ரீதியாக மெய்மறந்த நிலை தொழுகையில் மனிதருக்கு சாத்தியப்படுமா? என்பதை பார்ப்போம்.

தொழுகையில் முதல் நிலை.
ஒருவர் தொழுகைக்காக தம்மைத் தயார்படுத்திக் கொண்டு முதல் தக்பீர் (தஹ்ரிமாவைக்) கூறி தொழுகையில் நுழைந்து தன்னிலை மறந்து - அதாவது மெய்மறந்த நிலையை அடைந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம், அதன் பின் ருகூவு, ஸஜிதா இந்நிலைகளுக்குச் சென்று மீண்டும் திரும்பி தொழுகையிலிருந்து விடுபடுவதுவரையுள்ள அடுத்தடுத்த நிலைகளைச் செய்து முடிப்பது சத்தியப்படுமா?

தொழுகையில் நுழைந்தவுடன் மெய்மறந்து இவ்வுலக வாழ்க்கை பற்றிய துளி சிந்தனை கூட இல்லாத மனிதர் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க முடியுமா? தொழுகையில் தான் ஓதவேண்டியதை ஓத முடியுமா? இவையெல்லாம் நடந்தேற நாம் தொழுகையில் இருக்கிறோம், இந்நிலை முடிந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்... பின் தொழுகையிலிருந்து விடுபடுவதுவரையுள்ள ஒவ்வொன்றையும் தொடர வேண்டும் என்றால் அவர் தன்னிலை மறக்காமல் இருந்தால்தான் சாத்தியப்படும்.

எனவே தொழுகையில் நிற்கும்போது இவ்வுலகத்தை மறக்க இஸ்லாம் சொல்லவில்லை. அது எவருக்கும் இயலாது.

இஸ்லாத்தைப் பற்றி.
இஸ்லாத்தின் வட்டத்திற்குள்ளிருந்தே இஸ்லாத்தைப் பற்றி எழுத வேண்டும். ''மஜ்னூன்'' கதை இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு புனைக்கதை. இறைவணக்கமாகிய தொழுகைக்கு ''மஜ்னூன்'' கதையிலிருந்து முன்னுதாரணம் சொல்லியிருப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.

தன்னிலை மறக்க முடியுமா?
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் வீட்டிற்குள் சென்று வீட்டிலிருந்தத் தங்கக்காசை எடுத்து தர்மம் செய்தார்கள். அந்தக்காசு வீட்டில் இருந்தது தொழுகையில் நினைவு வந்து அவர்களின் சிந்தனையை சிதறச் செய்ததாகக் கூறினார்கள் (நபிமொழியின் கருத்து)

தொழுகையில் நிற்கும்போது சில விஷ ஜந்துக்களைக் கண்டால் தொழுகையை விட்டு அவற்றை அடித்துக் கொல்லலாம் அதனால் தொழுகை முறியாது என்றும் நபிமொழி கூறுகிறது.

தொழுகையில் நிற்கும்போது இவ்வுலக சிந்தனைகள் ஏற்படலாம், ஏற்படும், தொழுகையில் நிற்கும்போது கண்னை மூடிக்கொண்டு உலகை மறந்து விடாமல், கண் திறந்து தமக்கு முன்னால் உள்ளவற்றைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். இவைகள் தவறு என்று இஸ்லாம் சொல்லவில்லை.
(தவறு என்றால் திருத்துங்கள்)

தொழுகை (பகுதி 2)

தொழுகையில் அக்கறை இல்லை என்பது சரி அல்ல ஏனெனில் நான் ஐந்து வேலையும் பள்ளிவாசலுக்கு செல்கிறேன்.. எனக்கு அக்கறை உண்டு.. ஆனாலும் எனக்கு கவனம் இல்லையே என்று கேள்வி எழுவது நியாயமே..ஆனால் பள்ளிகூடம் தவறாமல் செல்லும் மாணவன் பரீட்சையில் தேர்ச்சி பெறாமல் போவது மாதிரி தான் இதுவும். மாணவன் தவறாமல் பள்ளிக்குச் செல்கிறான்.. ஏன்?.. காசு கட்டி சேர்ந்தாச்சே.. வீட்டில் ம்மா வாப்பா(அத்தா) திட்டுவார்கள் என்று தான் செல்கிறான்.ஆனால் படிப்பில் கவனம் இல்லை.. அதனால் பரீட்சையில் தேர்ச்சி பெறாமல் போகிறான். ஆகவே பாடத்தில் கவனம் வைக்க வேண்டும்.அதற்கு பாடத்தில் பிரியம் ஏற்பட வேண்டும். ஆதமுக்கு இப்லீஸ் மட்டும் சஜ்தா செய்யாமல் போனது அவனது அன்பு போலியானது என்பது தான்.ஆகவே தொழுகையை இறைவனுக்காக நேசியுங்கள். கவனம் தன்னால் வரும் என்பதை கவனித்து தெரிந்து கொள்ளலாம்.

தொடரும்..

தொழுகை (பகுதி 1)

தொழுகையில் கற்க வேண்டியது

இஸ்லாத்தில் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது என்று சொல்ல தேவையில்லை. ஆனால் தொழுகையை முறையாக தொழுவதே இல்லை. இறைவன் கூட தனது திருமறையில் 'இறைவனை கண்ணியப் படுத்த வேண்டியவாறு கண்ணியப் படுத்த வில்லை' என்று கூறுகிறான்.மஜ்னூன் ஒரு முறை லைலாவை தேடி அலைந்து கொண்டிருக்கும் போது தொழுகின்ற ஒருவரை கடந்து சென்று விட்டான். அந்த தொழுகையாளி தொழுது முடிந்ததும் மஜ்னூனை பிடித்து, 'ஏன்பா.. நான் தொழுதுகிட்டிருக்கிறது தெரியாம குறுக்கே போறீயே இது தவறில்லையா?' என்கிற ரீதியில் கேட்க மஜ்னூன் சொன்னானாம், 'நான் லைலாவை தேடி சென்றேன்.. எனக்கு லைலாவை தவிர வேறு எதுவும் கண்ணுக்கு தெரிய வில்லை.. ஆமாம் நீங்கள் அல்லாவை வணங்கியதாக சொன்னீர்களே அப்படியானால் நான் குறுக்கே சென்றது உங்களுக்கு எப்படி தெரிந்தது..' என்று. இதில் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு.. அதாவது நாம் இறைவனை முறையாக தொழ வில்லை என்பது தான் அது. கவனம் என்பது அக்கறை சம்மந்தப்பட்ட விஷயம்.. தொழுகையில் அக்கறை இல்லை என்பது தான் உண்மையாக இருக்கும்.
தொடரும்..

Friday, February 25, 2005

நாட்டு நடப்புகள்

இணையத்தில் செய்தி பத்திரிகை வாசிப்பதைவிட, பத்திரிகை வாங்கி படிப்பது ரொம்ப நல்லதாக படுகிறது. போன வாரம் தினமணி பேப்பரை புரட்டியதில் "கொல்லப்பட்ட பலஸ்தீன தீவிரவாதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது" என்ற பட செய்தி போட்டிருந்தார்கள்.

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்லும் தினமணி, தீவிரவாதிகளை நல்லவர்களாக சித்தரிப்பதைதான் ஜீரணிக்க முடிவதில்லை. சொந்த வீடுகளை இடித்து தாய்மண்ணை கபளீகரம் செய்யும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக கல்லெரியும் 10-வயது பாலஸ்தீனிய சிறுவர்களை பிடித்து கொலை செய்யும் இஸ்ரேல் இராணுவத்தை அது தன் கடமையை செய்துவிட்டதுபோலவும் கொலை செய்யப்பட்ட சிறுவர்களை தீவிரவாதிகள் என்றும் வெளிப்படுத்துகிறார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், வாழைப்பழ ஜுஸில் ஊசி ஏற்றுவதை தினமணியில் பார்த்துக்கொள்ளலாம். நமக்கென்று தனி நாளிதழ் உருவாகும் வரை வேறு வழியில்லை.

அப்பு முதல் சங் பரிவாரத்தினை தூக்கிபிடிக்கும் போக்கு தினமணியில் நிரம்ப உண்டு. நடுநிலையாளராக நடித்தாலும் நாலு செய்தி தெரிந்துக்கொள்ள முடிகிறது. சேனலில் நமக்கு தேவையான குறிப்பிட்ட செய்தியை மட்டும் உள்வாங்கிக்கொள்ள முடியாது. நடிகை வழுக்கி விழுந்த செய்தியையும் தலையில் சேகரித்துக்கொள்ள வேண்டும். பத்திரிகை அப்படியல்ல, தேவையானதை மட்டும் படித்துக்கொள்ளலாம். ரிகார்டாகவும் இருக்கும். இந்த தேதி பத்திரிகையில் இந்த செய்தி இருக்கிறது என்று ஆதாரம் எழுத முடியும். ஆதாரத்திற்கு யாரும் சேனலை குறிப்பிடுவது இல்லையே.

பிளாக்கர் தளத்தில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே ஜிமெயில் இன்விடேஷன் வழங்கி வந்த ஜிமெயில் தற்போது எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுப்பதுபோல் தெரிகிறது. அதுவும் குறைந்தது 50 இன்விடேஷன்கள்.

2 எம்.பி அளவு மின்னஞ்சலை பயன்படுத்தும் ஹாட்மெயில் காதலர்கள் உஜாலாவுக்கு மாறுவதாக தெரியவில்லை. உங்கள் ஹாட்மெயில் மின்னஞ்சலின் அளவை அதிகரித்துக்கொள்ள விரும்புகிறவர்கள் எனக்கு மடலிடவும் (toabuumar@gmail.com). அதற்கான வழிமுறைகளை அனுப்பித்தருகிறேன்.

தமிழ்மணத்தில் "பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்" என்ற கட்டுரை செமப்போடு போடுகிறது. எனக்குதான் "டாலாக்கு டோல் டப்பிமா"-வுக்கு அர்த்தம் தெரியாது என்றிருந்தேன். இவர்களுக்கும் அர்த்தம் தெரியாதாம். தமிழ் பற்று பற்றி பேசும் சில மூத்த இலக்கியவாதிகள் தனது வலைப்பதிவுகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் இட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இன்னொரு பதிவு தமிழ்மணத்தில் சக்கை போடு போட்டது. "பொய்மை இகழ் - சோ" என்ற தங்கமணியின் கட்டுரைதான் அது.

20.02.2005-க்கான தினமணி கதிரில் தொழில் வெற்றிக்கு பிரத்யேக கன்சல்டிங் அளிக்கும் நெடுமாறன் அவர்களிடம் "நம் நாடு தொழிற்துறையில் பின்தங்கியிருக்க அதிக மக்கள் தொகையே காரணம் என்கிறார்களே?" என்று கேட்டதற்கு, கீழ்கண்டவாறு பதில் அளித்திருந்தார்.

இது தவறான கருத்து. உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இன்று பொருளாதாரத்திலும் அது உயர்ந்து நிற்கிறது. வளரும் நாடுகள் சீனாவின் தொழில் புரட்சியைப் பின்பற்றுகின்றன. அமெரிக்கா, சீனாவைக் கண்டு அலறுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில், நேருவைச் சந்தித்த டாடா, "பெருகி வரும் மக்கள் தொகை எதிர்காலத்தில் இந்தியாவைப் பாதிக்கும்" என்றார். அதற்கு நேரு, "பிறக்கும் ஒவ்வாரு குழந்தையும் வாயுடன் மட்டும் பிறப்பதில்லை. உழைப்பதற்கு இரு கைககளுடன்தான் பிறக்கின்றன" என்றார்.

அது போல நாம் கைகளுக்கு ஆக்கப்பூர்வமான வேலை கொடுக்க மறந்துவிட்டோம்.

Sunday, February 20, 2005

திருச்சி - கஸ்டமா? கஷ்டமா?

இவ்வருட விடுமுறையில் தமிழ் நாட்டில் இறங்குமிடம் திருச்சியா? சென்னையா? என்ற வழக்கமான சிந்தனையில் இம்முறை திருச்சிக்கு செல்வது என்று வழக்கத்திற்கு மாறாக முடிவெடுத்தேன்.

தோஹா - கொழும்பு - சென்னையை விட, தோஹா - கொழும்பு - திருச்சிக்கு கட்டணம் கூடுதல் என்றாலும் குடும்பத்துடன் பயணிப்பதால், எனது உள்ளூர் வாகன பயண நேரத்தினை கருத்தில் கொண்டு திருச்சிக்கு பயணித்தேன்.

விடிகாலையில் விமானம் தரையை தொட்டதிலிருந்தே தடபுடலான வரவேற்புதான் போங்கள். சுங்க அதிகாரிகள் நாட்டிற்கு மிகவும் தேவையான கேள்விகள் கேட்டார்கள்.

போன முறை எப்போ வந்தீங்க? (பாஸ்போர்ட் கையில் தன் வைத்திருந்தும் நான் தேதி கூறிய பின்பு தான் திருப்தி அடைந்தார்)

தோஹா-வில் எங்கே வேலை செய்றீங்க? கம்பெனி எப்படி?

தோராயமா என்ன சம்பளம் வாங்கறீங்க?

அத்தோடு ஓவர் என நினைக்கையில்,

பெண்கள் அணிந்திருந்த ஒவ்வொரு நகைக்கும் ரசீது எங்கே என்று குடைய ஆரம்பித்தனர்.

இந்தாம்மா...இவ்வளவு நகையும் "உன்துதானா"? என என் மனைவியையும்,

புதிய ஸ்கேனர் மெஷின் வந்திருக்கு. அதனால பொட்டிக்குள்ள என்னன்ன ஐட்டங்க மறைச்சி வச்சிருக்கீங்கன்னு நீங்களே சொல்லிட்டா "மரியாதையா" இருக்கும் என என்னையும்.

அவர் குறிப்பிட்ட அந்த ஸ்கேனர், கார்டூனில் பேக் செய்திருந்த எனது சிறிய டேபிள் டைப் ரைட்டரை டி.வி.டி ப்ளேயராக காட்டியது போலும். கார்டூனின் மேல்புறத்தில் சாக்பீஸால் டி.வி.டி என கொட்டை எழுத்தில் உற்சாகமாக எழுதப்பட்டிருந்தது.

அது டி.வி.டி அல்ல என்று எவ்வளவு கூறியும் மறுத்துவிட்டதால் ("மேற்படி"யை வெட்ட எனக்கும் மனமில்லாததால்) இறுகக் கட்டிய முழு பெட்டியையும் திறந்து காட்டி நிரூபிக்க வேண்டி இருந்தது. வேதனை என்னவென்றால் அது டி.வி.டி அல்ல என்று தெரிந்தும் சிறிய ஒரு சலனமும் இன்றி அம்போவென விட்டு விட்டு அடுத்த பயணியை மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

ஏன்யா...ஒரு ஃபார்ம் கூட சரியா ஃபில்லப் பண்ணத் தெரியல... நீ எல்லாம் எப்படி வெளிநாடு போன?? (என் பின்னால் யாரையோ காய்ச்சிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே, சிதறி கிடந்த எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக்கொண்டு மனம் வெறுத்து வெளியே வந்தேன்)

ஏமாளியாக தெரியும் பல பேரை சில்லறைக்காக, அல்லல் பட வைப்பதை அங்கே கண்கூடாக பார்க்க நேர்ந்தது.

என் மனதில் எழுந்த சில கேள்விகள்:
சுங்க பரிசோதனை சட்டத்தில் அணிந்திருக்கும் நகைகளுக்கு குறுக்கு விசாரணைகள் உண்டா? எனில் வரைமுறை என்ன?
எலக்ட்ரானிக்ஸ் கொண்டு வருவதில் தடை உண்டா? அதன் வரைமுறை என்ன?

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அதை செயல் படுத்த முனைவதற்குள் குறுகிய விடுப்பு கழிந்து விட தோஹா திரும்பி விட்டேன்.

சுங்க அதிகாரிகள், தங்கள் கடமைகளை மீறி மனம் புண்படும் விதத்தில் பயணிகளை நடத்துவது, அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? பயணிகளை அநாகரிகமாக இவ்வாறு நடத்துவதை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஊரைப் பிரிந்து, உறவைப் பிரிந்து வாடி வெளிநாடு நாடு சென்று ரத்தத்தை வியர்வை வடிவில் சிந்தி உழைக்கும் பணத்தை, ஏதோ தங்கம் காய்த்த மரத்தை லேசாக உலுக்கி அள்ளி எடுத்து வருவது போல் நினைக்கிறார்கள்.

திருச்சி கஸ்டத்தின் கஷ்டம் தாங்க முடியாமல், திருச்சியிலிருந்து அருகில் உள்ள தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், சென்னையிலிருந்து மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்கிறார்கள்.

பின்னர் விசாரித்ததில் பல பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிய முடிந்தது. உங்களுக்கு இது போல் அனுபவம் ஏதும் இருந்தால் எழுதவும்.

-------------------
இது பரவாயில்லீங்க! இந்த "கஸ்டம்"ல எல்லாம் மாட்டி விழி பிதுங்கி வெளியே வந்து மூச்சு விட்டாக்கா ரோட்டோரம் வண்டியை (டாப் கேரியர்ல பொட்டி கட்டின வெளிநாட்டு பார்ட்டி வருதுடோய்...) ஓரங்கட்டும் காக்கிசட்டை போட்ட திருடர்களுக்கு வேற தனியா வெட்டனும்ல... என்றபோது எம் இழிநிலை புரிந்தது.

Saturday, February 19, 2005

நமது நல்ல அனுபவங்கள் - பிறருக்கு கல்வி

எனது முந்தைய பதிவில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

கல்வியை தேடிச் சென்று பெற்றுக்கொள்கிறபோது, அதன் பயன் தேடிவரும் கல்வியைவிட நேர்த்தியாக இருப்பதை எண்ணி வியப்படைகிறேன்.


உறுப்பினர்கள் இதுசம்பந்தமான தங்கள் அனுபவங்களை தெரிவிக்கலாமே!

.

Thursday, February 17, 2005

கல்வியைத் தேடுங்கள்

யாஹு மடலாற்குழுவில் (Yahoogroups) அப்பொழுது புதிதாக தென்பட்ட RSS திரட்டியின் பயனை தெரிந்துக்கொள்ள கூகிலில் தேடியதில் வந்து மாட்டியது பிளாக்கர் தளத்தில் அமைக்கப்பட்ட ஒரு தமிழ் வலைப்பதிவு. ஏற்கனவே நண்பர் ஒருவர் இனி மார்க்கெட் வலைப்பூக்களுக்குத்தான் என்று சொன்னது அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

நானும் வலைப்பதிவு அமைக்க எண்ணி முயற்சித்து பிறகு யுனிகோடு கன்வர்ட்டரை தேடிப்பிடித்து விண்டோஸ் 98-ஐ பயன்படுத்துவதால் அதற்காக டைனமிக் எழுத்துரு அமைப்பு நிறுவ என ஒரு நீண்ட முயற்சி நடந்தது.

பிளாக்கர் வலைப்பதிவுகளில் முன்பெல்லாம் விளம்பரங்கள் வரும். விளம்பரங்கள் சில நேரத்தில் வில்லங்கமாக ஆவதும் உண்டு. நமது பதிவில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளுக்கு சம்பந்தமான விளம்பரத்தை காட்டும். எனது வலைப்பதிவில் இஸ்லாம் என்று குறித்திருந்தேன். அதனை வைத்து இஸ்லாம் சம்பந்தமான தளங்கள் என்று சில பட்டியலைத் தந்தது. போய் பார்த்தபோதுதான் தெரிந்தது அது கிருஸ்துவர்களின் இஸ்லாமிய போர்வை அழைப்பு என்று. இப்பொழுது இந்த விளம்பரங்கள் இல்லாமல் பிளாக்கர் வலைப்பதிவுகளை பார்க்க முடியும்.

இன்னொரு விளம்பரம் மட்டும் தொடர்கிறது. blogspot என்று எழுதும்போது blogpsot என்று எழுத்தில் தவறு செய்தீர்களானால் கிருஸ்துவ அழைப்பு பக்கத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடும். ஆனாலும் பிளாக்கர் அளிக்கும் வலைப்பதிவு வசதிபோல் வேறொன்றும் இல்லை என்கிற அளவுக்கு வந்துவிட்டது. இன்னும் பல வசதிகளை பிளாக்கரில் செய்து கொடுத்துள்ளார்கள். தற்பொழுது மறுமொழிகளிலும் சுட்டிகள் (Links) கொடுக்கும் வசதியும் வந்துவிட்டது.

கூகில் விளம்பரங்களை உங்கள் வலைப்பதிவில் அனுமதித்தால் காசு தருகிறார்கள்.

வலைப்பதிவு சம்பந்தமான இக்கல்வியை நானே தேடி பெற்றுக்கொண்டதால் புதிதாக வலைப்பதிவு அமைப்பதோ மாடல் மாற்றுவதோ ஒரு சிறு விஷயமாகவே எனக்குப்படுகிறது என்றாலும், நான் இவ்விஷயத்தில் இன்னும் மாணவனே!. நிறைய தேடுகிறேன். தேடியதை பிறருக்கும் சொல்கிறேன்.

கல்வியை தேடிச் சென்று பெற்றுக்கொள்கிறபோது, அதன் பயன் தேடிவரும் கல்வியைவிட நேர்த்தியாக இருப்பதை எண்ணி வியப்படைகிறேன்.

அன்புடன்
அபூ உமர்

சில குறிப்புகள்:
பிளாக்கர் தளத்தில் அமைக்கப்பட்டதுதான் இவ்வலைப்பதிவும்.
கூகில், பிளாக்கர், ஜிமெயில் ஆகியவை, ஒரே நிறுவனத்திற்குரியது.

Monday, February 14, 2005

முரசு அஞ்சல் மென் பொருள் உபயோகிக்கும் முறைகள்!

ஆங்கிலத் தட்டச்சாளர்களுக்கு வேகமாக எழுதுவதற்கு தோதான மென் பொருளே முரசு அஞ்சல் - முரசு அஞ்சல் பயன்படுத்தும் முறைகள் பற்றி சிறு விளக்கம்!

முரசு அஞ்சலை பதிவிறக்கம் செய்து கணனியில் பொருத்திக் கொள்ளுங்கள். 'நோட்பேட்" முரசு அஞ்சலில் எழுவதற்கு மிக வசதியாக இருக்கிறது - அது பற்றியே இங்கு விவரிக்கிறேன்.

நோட்பேடை சொடுக்கித் திறந்து அதில் +Murasu ஐ சொடுக்கி >Set keyboard >Anjal keyboard ஐ சொடுக்கி (ரைட் மார்க்கில்) வையுங்கள். மீண்டும் +Murasu ஐ சொடுக்கி >Set Encoding >Unicode Tamil ஐ சொடுக்கி (ரைட் மார்க்கில்) வையுங்கள்.

அடுத்து Format ஐ சொடுக்கி Word Wrap சொடுக்கி (ரைட் மார்க்) வையுங்கள். மீண்டும் Format >Font >TSCu_InaiMathi ஐ சொடுக்கி எழுத்துருவின் அளவையும் தேவைக்கேற்றாற்போல் சொடுக்கி OK கொடுத்து விடுங்கள். இப்போது யுனிகோட் எழுத்துரு தயார்!

உங்கள் கீ போர்டில் F12 ஐ அழுத்திவிட்டு tha த mi மி z ழ் என thamizil - தமிழில் எழுதலாம். மீண்டும் F12 ஐ அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுதலாம். சுருங்கச் சொன்னால் 'தமிங்கிலம்' எழுத வசதியான மென் பொருள்.

எழுதியதை சேமித்து வைக்கும்போது சேமிக்கும் இடத்தில் Encoding - Unicode அல்லது UTE-8 ஐ சொடுக்கி வையுங்கள். Encoding >ANSI ல் இருந்தால் சேமிக்க மறுத்துவிடும்.

இதே முறைதான் +Murasu >Set Encoding >TSCII 1.7 Tamil - TAB Tamil - TAM Tamil ஆகியவற்றை சொடுக்கி திஸ்கி(TSCII), டாப்(TAB), டாம்(TAM) எழுத்துருவில் எழுதலாம். முரசு அஞ்சலில் தமிழ் எழுதும் போது கண்டிப்பாக F12-ஐ ஒருமுறை அழுத்திக்கொள்ள வேண்டும்.

முரசு அஞ்சலை கணனியில் பொருத்தியபின் எப்போது கணனியைத் திறந்தாலும் விண்டோவில் வெளிப்படும் Murasu Anjal2000 னை Minimise செய்து கொள்ளுங்கள்.

கூடுதல் விபரம், மற்றும் எழுத்துக்கள் பற்றி விபரங்கள் தேவையெனில் எழுதுங்கள். (இதை முரசு அஞ்சல் யுனிகோடில் எழுதியுள்ளேன்)

Sunday, February 13, 2005

தமிழாக்கம் தேவை!

கீழே உள்ள ஆங்கில விபரங்கள் தமிழில் தேவை. நன்றி!

It is a dare devil effort to to do this kind of work now a days. Any how for the issues related to books is ineteresting, apart from which ever the subject.

http://

Saturday, February 12, 2005

சவுதி வாழ் இணைய பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி

ஈசி நெட் சேவை சவுதி அரேபியாவில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இணையத்தை பயன்படுத்த மணிக்கு 3 ரியால் வீதம் சவுதி டெலிகாம் சேவைக்கும் இணைய இணைப்பை வழங்கும் நிறுவனத்திற்கு சுமார் மணிக்கு 1 ரியால் வீதமும் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் தற்போது இணைய இணைப்பை வழங்கும் நிறுவனத்தின் கார்டு வாங்க அவசியமில்லை. இதோ உங்கள் டயல்-அப் வசதியை ப்ராக்ஸி(proxy) மற்றும் போர்ட்(port) செட்டப் எதுவும் செய்யாமல் கீழ்கண்டவாறு மட்டும் செய்தால் போதுமானது.

Dial : 3660011
User name: ஏதாவது (உதாரணம் My name)
Password: ஏதாவது (உதாரணம் 123)

Thursday, February 10, 2005

சக்தி பெற்றவருக்கே ஹஜ் கடமை!

கேள்வி:-
ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து வந்து நான்கு முறை உம்ரா செய்துவிட்டார், உங்கள் மீது ஹஜ் செய்வது கடமையாகிவிட்டது என்றால் அதற்கு அவர் ஹஜ் செய்வதற்கு உடல் நிலை ஒத்துக் கொள்ளாது என்கிறார். ஒரு கால் அவர் ஹஜ் செய்யாமல் இறந்து விட்டால் அவரின் நிலை என்ன? நபி வழியிலிருந்து விளக்கம் தேவை.

விளக்கம்:-
..இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான். (அல்குர்ஆன், 3:97)

பொருளாதார வசதியும், உடல் வலிமையும், பெற்றவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். ஒருவரிடமுள்ள பொருளாதாரத்தை வெளிப்படையாக ஓரளவு மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் உடல் வலிமை என்பது சம்மந்தபட்டவரைத் தவிர வேறு எவரும் அறிந்து கொள்ள முடியாது.

''ஹஜ் செய்வதற்கு உடல் நிலை ஒத்துக் கொள்ளாது'' என்பதே உங்கள் நண்பரின் உடல் நலக்குறைவு என்றால் அவரை ஹஜ் செய்ய எவரும் வற்புறுத்த முடியாது. அவர் ஹஜ் செய்யாமல் இறந்தாலும் இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். அல்லாஹ் தாங்கிக் கொள்ள முடியாத கஷ்டத்தை எவருக்கும் கொடுப்பதில்லை.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (அல்குர்ஆன், 2:286)

3:97வது வசனத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும் என்று கூறிவிட்டு, எவரும் நிராகரித்தால் அல்லாஹ் எத்தேவையும் அற்றவன் என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வதில் அல்லாஹ்வுக்கு எத்தேவையும் இல்லை. அதனால் ஹஜ் செய்பவரே அளப்பரிய பலன்களை பெற்றுக் கொள்கிறார் என்பதை கீழ் காணும் வசனத்திலிருந்து விளங்கலாம்.

''தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்.'' (திருக்குர்ஆன் 22:27, 28)

இன்னும் பல நபிமொழிகள் ஹஜ்ஜின் நன்மைகளை வலியுறுத்துகின்றன.
(மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எழுதவும்)

Monday, February 07, 2005

உம்ரா செய்தவருக்கு ஹஜ் கடமையா?

ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து வந்து நான்கு முறை உம்ரா செய்துவிட்டார், உங்கள் மீது ஹஜ் செய்வது கடமையாகிவிட்டது என்றால் அதற்கு அவர் ஹஜ் செய்வதற்கு உடல் நிலை ஒத்துக் கொள்ளாது என்கிறார் . ஒரு கால் அவர் ஹஜ் செய்யாமல் இறந்து விட்டால் அவரின் நிலை என்ன? நபி வழியிலிருந்து விளக்கம் தேவை.

ப.வி.ஸ்ரீரங்கனின் திண்ணை கட்டுரை

உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும் - மூன்றாம் உலகப்போராய் நடபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.

கட்டுரையை படிக்க என்னிடம் எழுத்துருவை கேட்காதீர்கள். திண்ணையிலேயே அதுவும் கிடைக்கிறது. இதுபோன்ற நமது கட்டுரைகள் நம் இதழ்களிலேயே முடங்கி கிடக்கிறது.

Sunday, February 06, 2005

The True Furqan

PLEASE READ BELOW, IT IS OF GREAT IMPORTANCE TO MUSLIMS:
The new AMERICAN Quran: a dangerous trickA new Quran is being distributed in Kuwait, titled"The True Furqan".
It is being described as the ayats of the Shaytan andAl-Furqan weekly magazine has found out that the twoAmerican printing companies;'Omega 2001' and 'WinePress' are involved in the publishing of 'The TrueFurqan', a book which has also been titled 'The 21stCentury Quran'!It is over 366 pages and is in both the Arabic andEnglish languages...it is being distributed to ourchildren in Kuwait in the private English schools!The book contains 77 Surats, which include Al-Fatiha,Al-Jana and Al-Injil. Instead of Bismillah, each Suratbegins with a longer version of this incorporating theChristian belief of the three spirits. And this socalled Quran opposes many Islamic beliefs. in one ofits ayats it describes having more than one wife asfornification, divorce bei! ng non-permissible and ituses a new system for the sharing out of the will,opposing the current one. It states that Jihad isHARAAM. This book even goes as far as attacking Allah,Subhanahu wa Tahala! All this is poisoning ourchildren at approx. $3.

Brothers and Sisters please make sure you forward thisemail to as many people as possible so that we canstop this dangerous trick. Please tell everyone youknow and may Allah reward you.

PS: If you still dont believe google for ''The True Furqan''They are selling it in amazon.com too.

செய்தி குறிப்புகள்

லாப்-டாப் கம்ப்யூட்டர் உபபோகிப்பவர்களுக்கு

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது விதைப்பை வெப்பநிலை. சமீப காலமாக விதைப்பை வெப்பநிலை உயர்வினால் கணிசமான சதவீத ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாவதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சூடான வெந்நீர் குளியல், இறுக்கமான உள்ளாடைகள் , வெப்பமான சூழ்நிலை, இரவு நேரப் பணி ஆகியவையும் விதைப்பை வெப்பநிலை உயருவதற்கான காரணங்களில் சில. இந்நிலையில் இந்த வாpசையில் லாப்-டாப் கம்ப்யூட்டர்களும் அடங்கும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. லாப்-டாப் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் ஆண்கள் பெரும்பாலும் வசதி கருதி மடியில் வைத்து பயன்படுத்துவதால் விதைப்பை வெப்பநிலை உயர்ந்து விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் அத்தகைய உயிரணுக்களால் கருவை உண்டாக்க முடியாது என்று அந்த செய்தி கூறுகிறது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சிறுநீரகவியல் துறை பேராசிரியர்கள் லாப்-டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தினர். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்களை அறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில் வைத்தனர். பிறகு அவர்களில் கொஞ்சம் பேருக்கு இயங்கும் லாப்-டாப் கம்ப்யூட்டர்களும், மீதிப் பேருக்கு இணைப்பு எதுவும் இல்லாத வெறும் லாப்-டாப் கம்ப்யூட்டரும் தரப்பட்டன. இதன்பின்னர் ஒவ்வொரு 3 நிமிடத்துக்கு ஒருமுறை விதைப்பையின் வெப்பநிலையை குறித்துக் கொண்டனர்.

பின்னர் குறிப்பிட்ட நேரம்; கழித்து இரு பிரிவு ஆண்களின் விதைப்பை வெப்ப நிலையை சோதனை செய்து பார்த்த போது லாப்-டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்கிய ஆண்களுக்கு வெப்பநிலை கணிசமாக உயர்ந்து இருந்தது. இதற்கு லாப்-டாப் கம்ப்யூட்டரை மட்டும் குறை சொல்ல முடியாது. லாப்-டாப் கம்ப்யூட்டர் தவறி விழுந்து விடாமல் இருக்க இரண்டு தொடைகளையும் இறுக்கமாக வைத்துக் கொள்ளும் போது, அவற்றின் வெப்பம் அப்படியே விதைப்பைக்கும் பரவுகிறது. இதுதான் இங்கு முக்கிய விஷயம். அடுத்து, லாப்-டாப் கம்ப்யூட்டர்கள் மூலம் உண்டாகும் வெப்பம், விதைப்பை வெப்பத்தை மேலும் அதிகாpக்கிறது.

இந்த வெப்பநிலை உயர்வு ஒரு ஆணை மலட்டுத்தன்மை வாய்ந்தவராக மாற்றுமா? என்று கேட்டால், ஆராய்ச்சியாளர்கள் எதையும் உறுதியாக சொல்ல மறுக்கிறhர்கள். இருப்பினும் விதைப்பை வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் கூடும் போது அந்த இடத்தில் விதைப்பையில் உற்பத்தி ஆகும் உயிரணுக்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைகிறதாம்.

லாப்-டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது 6 கோடி லாப் கம்ப்யூட்டர்கள் பயன்பட்டு வரும் நிலையில் அடுத்த 2005-ம் ஆண்டு வாக்கில் மேலும் 9 கோடி லாப்-கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப் படும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் லாப்- கம்ப்யூட்டர்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டியது அவசியம் ஆகிறது. இருப்பினும் தற்போது லாப்-டாப் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை அவைகளை மடியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

நிமோனியாவை உண்டு பண்ணும் பற்சிதைவு
பல் சிதைவு மற்றும் காரை ஆகியவற்றில் காணப்படும் நுண் கிருமிகள் நுரையீரலுக்குள் சென்று மிகக் கடுமையான நிமோனியா நோயை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமொpக்க ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட 49 நோயாளிகளை பரிசோதனை செய்து பார்த்த போது, அவர்களில் சாpப் பாதி பேருக்கு பல்சிதைவு மற்றும் காரையில் காணப்படும் நுண் கிருமிகளே நிமோனியா பிரச்சினைக்கு காரணமாக இருந்தது தெரிய வந்தது. மீதிப் பேருக்கு வேறு காரணங்களால் நிமோனியா வந்திருந்தது.

நிமோனியா எப்படி வருகிறது? என்று கூர்ந்து கவனித்த போது பல்நோய்களுக்கு காரணமான நுண் கிருமிகள் மெல்ல மெல்ல நுரையீரலுக்குள் புகுந்து பிரச்சினையை உண்டு பண்ணுவது கண்டுபிடிக்கப்பட்டது. பல்சிதைவுகளில் காணப்படும் நுண் கிருமிகள் இதய நோய்களுக்கும் காரணமாக இருப்பதாக ஏற்கனவே நிரூபிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, February 05, 2005

MASJID IS NOT A MOSQUE

மாற்று மதத்தவர்கள் ஏன், நம் முஸ்லிம் சகோதரர்கள் கூட தங்கள் பேச்சினூடாக பள்ளிவாசல் குறித்து குறிப்பிடும் போது MOSQUE என்று குறிப்பிடுவதுண்டு. MOSQUE என்பது MOSQUITO என்கிற ஸ்பானிய வார்த்தையிலிருந்து வந்ததாகும். சிலுவைப்போர்கள் என்று கிருஸ்தவ மதத்தினரால் குறிப்பிடப்படும் போரின் சமயம் ஸ்பானிய மன்னன் 'இந்த முஸ்லிம்களை கொசுக்களை அழிப்பதுபோல் அழித்துவிடுகிறேன்' என்று சொன்னதிலிருந்து தான் MOSQUE என்ற சொல் பெறப்பட்டதாம்.மஸ்ஜித் என்கிற அழகிய வார்த்தை (ஸஜ்தா செய்யும் இடம் என்கிற) சரியான அர்த்தத்தை சுட்டி நிற்க, நாம் ஏன் மற்ற மொழி வார்த்தைகளை நாட வேண்டும். (E MAIL வழி இத்தகவலை அனுப்பித்தந்த சகோதரர் ஹாஜா பக்ருத்தீனுக்கு நன்றி).

தமிழ்மணம் அரங்கில் உறுப்பினராக இருந்தால்

நீங்கள் தமிழ்மணம் வலைப்பதிவாளர் அரங்கில் உறுப்பினராக இருந்தால் உங்களின் வலைப்பதிவில் மதிப்பீட்டு முறை நிரல்துண்டை நிறுவி விட்டீர்களா? இது உங்கள் வசதிக்காக மட்டுமே தவிர கட்டாயம் இல்லை.

ப்ளாக்ஸ்பாட் வலைப்பதிவுகளுக்கான மேம்பட்ட மதிப்பீட்டு முறை நிரல்துண்டை எனது டெம்ப்லேட் பகுதியில் இணைத்த பிறகு, பக்கத்திற்கு ஒரு பதிவு மட்டுமே தெரியும் வண்ணம் இருந்ததை அதிகரித்தேன். தற்போது பழைய மூன்று பதிவுகள் தமிழ்மணம் வாசகர் பகுதியில்.

Thursday, February 03, 2005

இஸ்லாத்தின்பெயரால் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம்

சிலருக்கு எங்கு எதைப் பேசுவது என்று தெரியாது. ஏற்கனவே சுனாமியைப்பற்றி சுய ஆராய்ச்சி தமிழ்மணத்தில் வெளியிட்டு நபியவர்களையும், இஸ்லாத்தையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் எப்படியெல்லாம் கேளிசெய்ய வேண்டுமோ அதனை செய்தாகிவிட்டது.

சுனாமி வந்து மனிதர்கள் (குறிப்பாக குழந்தைகள்) இறக்கப்பட்டு எல்லாரும் சொந்த பந்தங்களை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அவ்வேளையில் "இது இறைவனின் தண்டனை என்றார்".

இப்பொழுது தமிழ்மணம் முஸ்லிம்வாசகர்கள் எல்லாம் பர்தா இல்லாமல் அலைந்து திரிந்துக்கொண்டிருப்பதால் பர்தாவின் அவசியத்தைப்பற்றி உணர்த்த வந்திருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்மணத்தில் முஸ்லிம்கள் வாசகர்கள் மிகக் குறைவு.

இவரைப்பற்றி முஸ்லிமல்லாதவர் சொன்ன ஒரு வார்த்தையை இங்கு சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும்.

"அல்லாஹ்வை கொடூரக்காரன் என்று சொல்வதற்கு ஜாஃபரைப்போன்று தைரியம் யாருக்கும் இல்லை" என்பதுதான் அது.

தமிழ்மணத்தில் இப்பொழுது சூடாக இருப்பது "முஸ்லிம் எதிர்ப்பு" கருத்துக்கள்தான். இதனை நீக்க திறமையை வெளிப்படுத்துவதை தவிர்த்து மற்றதையெல்லாம் செய்கிறார் சகோதரர் குவைத் ஜாஃபர் அலி.

மொத்தத்தில் தமிழ்மணம் வலைப்பதிவாளர் அரங்கத்தில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் ஒரே ஆள் இந்த சகோதரர்தான்.

இதனைப்பற்றி இங்கு ஜாஃபர் விவாதிக்க விரும்பினால் tamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு எழுதி இவ்விவாத அரங்கில் தன்னை இணைத்துக்கொள்ளச் சொல்லட்டும்.

இவர் சுனாமி பற்றி எழுதியது சரியா? தப்பா? என்று இங்கு விவாதம் நடத்தலாம்.

Wednesday, February 02, 2005

இஸ்லாம் - தவறான புரிதல்களும் விரோத பிரச்சாரங்களும்!

முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடையே இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் பற்றியும் காணப்படும் தவறான கருத்துக்களுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவதாக, இஸ்லாத்தைக் குறித்தும் அதன் தாத்பர்யம், கொள்கை கோட்பாடுகளைக் குறித்தும் அவர்களுக்கு எவரும் எடுத்துச் சொல்லவில்லை; முஸ்லிம்களே சொல்ல மறந்து விட்டனர்.

இரண்டாவதாக, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட ஆங்கிலேயர்கள் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டு தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்து விட்டனர். அதன் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது.

மூன்றாவதாக, வகுப்புவாதிகளும் பாஸிஸவாதிகளும் தொடர்ந்து இடைவிடாமல், சளைக்காமல் மேற்கொண்டு வரும் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரம்! இவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து தவறான கருத்தை வலிந்து திணித்து வருகின்றனர்.

நான்காவதாக, முஸ்லிம்களின் தவறான செயல்களே இஸ்லாத்துக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் இடையே தடுப்புச்சுவராக எழுந்து நிற்கின்றன. முஸ்லிம்கள் சரியான, உண்மையான இஸ்லாத்தை கடைப்பிடிக்கத் தவறியதும் ஒரு முக்கியமான காரணமாகும்.

இவற்றோடு ஊடகத்தின் பங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். எதிர்மறையான நிகழ்வுகளோடும், குணங்களோடும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இணைத்துச் சொல்வது ஊடகத்தினருக்கு வாடிக்கையாகிவிட்டது. போர், பயங்கரவாதம், கலவரங்கள், ஆள்கடத்தல், விமானக்கடத்தல், ஆடம்பரம், சர்வாதிகாரம், மூட நம்பிக்கை, பின் தங்கிய நிலை போன்ற எதிர்மறையான குணங்களோடுதான் முஸ்லிம்களை ஊடகம் அடையாளங்காட்டுகிறது.

அது மட்டுமின்றி, வரலாற்றுப் பாடநூல்களிலேயே முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகளும் அரைகுறையான உண்மைகளும் இடம் பெற்றிருப்பதும் சின்ன வயதிலேயே தவறான கருத்துகள் வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. (1)

இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாம் குறித்து நிலவும் தவறான புரிதல்களை அகற்றி சரியான முறையில் உண்மை இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

(1) “சத்தியப்பேரொளி” எனும் நூலிற்கு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதிய பதிப்புரையிலிருந்து..

Tuesday, February 01, 2005

Arimugam

Assalaamu Alaikum.. En peyar Mohamed Ismail.. kadantha 1400 varudangalaaga Islam patri thavaraana karuthukkal thavaraana nabargalaal valukkattaayamaaga thinikka pattu varugirathu. Ithil peria aacharyam enna endraal poi pirachaarangalaal konjam kuda paathikka padaamal valranthu varuvathu thaan. Perumaanaar kaalathil oru silar kaalaiyil Islaathil inainthu maalaiyil veliye vanthu antha maarkathil appadi ondrum visesam illai endranar visamigal. Aaga ithu pondra poli vesangal thodargirathu enbathai vaithu thaan naan naan saithaan hayaathoda thaan irukkiraan enbathaiye urithi paduthi kolvathundu.. Matrapadi pala nalla ullangalin santhegangalukku bathil solla muslim endra murayil kadamai pattu ullom enbathaiyum maruppatharkkillai.. (tamilil entha fontil type seivathu.. vilakkavum) ..Wassalaam Ismail

குர்பானி!

கேள்வி:-
தமத்து நிய்யத்தில் ஹஜ்ஜுக்கு வந்த ஹாஜிகளில் சிலர் உம்ரா செய்து விட்டு ஹஜ்ஜுடைய 10 வது நாளில் கொடுக்க வேண்டிய குர்பானியை இப்பொழுதே கொடுத்து விட்டர்கள். 10ஆம் நாளில் கொடுக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.

இதற்கான விளக்கம் குரான், ஹதீஸ் ஒளியில் தரவும்.

விளக்கம்:-
உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியபின், மக்காவில் தங்கியிருந்து ஹஜ்ஜூடைய நாள் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது இதுவே ''ஹஜ் தமத்துவ்'' எனப்படும்.

ஹஜ் பத்தாம் நாளில் மினாவையடைந்து முதல் வேலையாக ''ஜம்ரத்துல் அக்பா'' விற்கு கல்லெறிந்து விட்டு, பின் அறுத்து பலியிட்டு, பின் தலைமுடியைக் களைய வேண்டும். இதுவே நபிவழியாகும். நாமறிந்து உம்ராவை நிறைவேற்றியவுடன் குர்பானி கொடுக்க எவ்வித ஆதாரத்தையும் காணவில்லை.

ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'தல்பிய்யாவை உரத்த குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து பலியிடுவதும்," என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ பக்ர் (ரலி) ஆதாரம்: புகாரி (757)

அறுத்து பலியிடுவதே ஹஜ்ஜின் சிறந்த செயலாக நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

...யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழி - புகாரி)

ஹஜ் கடமையில் இல்லாதவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பு அறுத்தால் அது குர்பானியின் நன்மையில் சேராது என்ற சட்டத்தை ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு பொருத்த முடியுமா? என்பது தனி விசயம். ஹஜ் என்பதே அரஃபா நாள்தான் என வலியுறுத்துகிறது இஸ்லாம். ஹஜ் கிரியைகளில் ஒன்றாகிய அறுத்து பலியிடுதலை ஹஜ்ஜூடைய நாட்களில் நிறைவேற்றாமல் அதற்கு முன்போ, பின்போ நிறைவேற்ற தெளிவான வழிகாட்டல் வேண்டும்!

அல்லாஹ் மிக அறிந்தவன்.
தபகாத் இப்னு சஅது

அஸ்ஸலாமு அலைக்கும்,

திண்ணையிலும் தற்போது நேசகுமாரின் வலைப்பதிவிலும் பதியப்பட்டிருக்கும் இஸ்லாம் குறித்த விவாதங்களை நண்பர்கள் அறிந்திருக்கலாம். நேசகுமாரின் சமீபத்திய பதிவையொட்டி அவருக்கு விளக்கம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் தொடர்பாக, மேலே குறிப்பிட்ட தபகாத் இப்னு சஅது என்ற நூலைப்பற்றி யாரேனும் அறிந்திருந்தால் அதைப்பற்றி தகவல்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த நூல் தொகுக்கப்பட்ட காலம், அதன் நம்பகத்தன்மை, (ஆதாரபூர்வமானதா? அல்லது ஆதாரமற்றதும் கலந்துள்ளதா?), இந்நூலைப்பற்றிய மற்ற மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன.

என்னை இந்த மின் அஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
salahudn@yahoo.co.uk

நன்றி. வஸ்ஸலாம்

Salahuddin