
செய்தியைத் தெளிவாக படிக்க, படத்தின் மீது கிளிக்கவும்.
நன்றி: தினத்தந்தி (25-02-2006)






மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல் குர்ஆன்(2:45)


எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
அல் குர்ஆன்(7:206)

தமிழ் நாட்டுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தமிழ் நாட்டு முஸ்லிம்களும் தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. என் கணிப்பின் படி தமிழ் நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளைச் சாராத முஸ்லிம்களும் தி.மு.கவை ஆதரிப்பதை விட அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான நிலை எடுக்க வேண்டும் என்பதாலேயே த.மு.மு.க, தி.மு.க ஆதரவுடன் செயல் படுகிறதே தவிர அதன் தலைவர்களும் அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதையே விரும்புகிறார்கள் என்பது அவர்களது மேடைப்பேச்சில் இருந்து தெரிகிறது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பரிசீலனைக்கும், ஜெயலலிதா முஸ்லிம்களிடம் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதையும், இப்போதும் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும் நினைவூட்டுவதை என் கடமையாகக் கருதுகிறேன்.



தமிழ்நாடு தவுகித் ஜமாத் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாக்கர், பிரசிடண்ட் குரூப் தலைவர் பிரசிடண்ட் அபு, தமிழ்நாடு ஜமாத் துல் உலமா சபை தலைவர் அப்துல் காதர், ஜமாத் ஐ இஸ்லாமி மாநில செயலாளர் ஜமாலுதீன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பாரூக், ஜமாத்தே இஸ்லாமி செயலாளர் ஜமாலுதீன், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முகமது அலி, இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகமது கான், பொதுச்செயலாளர் தர்வேஷ் ரசாதி, மனித நீதிபாசறை குலாம் முகமது, தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் காஜா மஜித், காஜி சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.