Saturday, February 18, 2006

த.மு.மு.க - தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமைகள்













த.மு.மு.கவும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இப்போது ஒருவருக்கொருவர் பகை பாராட்டினாலும், இரு அமைப்புகளுக்கும், அவற்றின் தலைமைக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அது ஒன்றும் நன்மையான அடிப்படையில் அல்ல. சமீபத்தில், சுனாமி நிவாரண நிதி வசூலிக்கப் பட்டது போல, தமிழ் நாட்டில் முன்பு கோவை கலவரத்தில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. அப்போது, த.மு.மு.கவைத் தவிர அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஜமாஅத்தே இஸ்லாமியிடம் தங்கள் நிதியை அளித்தன. ஆனால், த.மு.மு.க மட்டும் அவ்வாறு செய்யாமல், தனியாக வசூல் செய்தது. அவ்வாறே, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் நிவாரன நிதிக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் பணம் அனுப்பிய போது, த.மு.மு.க வேறு அமைப்புக்கு நிதி அனுப்பியது. அப்போது, தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் தமுமுகவிலும் தலைமைப் பொறுப்பில் இருந்தனர். விருப்பு, வெறுப்பு இன்றி சிந்திக்கும் முஸ்லிம்கள் இவ்விரு அமைபினரிடமும் உள்ள பிறரிடம் ஒத்துழையாமை, தனக்கும் தன் அமைப்புக்கும் மட்டுமே பெயர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆணவம் போன்றவை மூன்றாந்தர தேர்தல் அரசியல் கட்சிகளின் குணங்களே அன்றி இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டவையல்ல என்பதை உணரலாம். நடுநிலையான முஸ்லிம்கள் அனைவரும் இவ்விரு முஸ்லிம் அமைப்புகளும் தங்களிடம் நிதி கேட்டு வரும் போது, இக்குறைகளை அவர்களிடம் துணிந்து சுட்டிக் காட்ட வேண்டும். ஜவாஹிருல்லாஹ், பி.ஜெ ஆகிய இருவரின் வழிகாட்டலை விட நமது தலைவர் முஹமது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலே நமக்கு இவ்வுலகில் வெற்றியையும், மறுவுலகில் ஈடேற்றத்தையும் தரும் என்பதை ரசிகர் மன்ற மனப்பான்மையில் உள்ள இவ்விரு அமைப்புகளில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

1 comment:

Jafar ali said...

அதுமட்டுமா! முஸ்லிம்களை இயக்கவாரியாக பிரித்து இந்த சமுதாயத்தை கூறுபோட்டது. யார் எந்த இயக்கத்தை சார்ந்து இருக்கிறாரோ அவர் தன் மனசாட்சியை மறந்து அந்த இயக்கத்தின் அனைத்து செயல்களையும் குர்ஆன்,ஸுன்னாவின் அடிப்படையில் ஆராயமல் நியாயப்படுத்துவதின் மூலம் இஸ்லாத்தின் மூலத்தை சிதைப்பது. ஒரு பிரிவினரால் ஆரம்பிக்கப்படும் இயக்கம் கொஞ்ச காலத்திலேயே கருத்து வேற்றுமை என்று சொல்லிக் கொண்டு இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்து, அது தன்னுடைய முந்தைய இயக்கத்தை தரம் தாழ்ந்து வசைபாடுவது இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த இயக்க மாயையிலிருந்து முற்றிலுமாக விலக அல்லாஹ் அருள் பாலிக்க வேண்டும்.