Tuesday, August 01, 2006

தமிழ்முஸ்லிம் மன்றம் (மன்ற அறிவிப்புகள்)

மன்றத்தினைப் பற்றி

7 comments:

ஜுடுவா said...

இந்த தள நிர்வாகி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/உறுப்பினர் அல்லாதவர்கள் தங்களின் கருத்துகளை மறுமொழியாக பதியலாம். மறுமொழிகள் மட்டுறுத்தலுக்கு (moderation) உட்படுத்தி நிர்வாகம் விரும்பினால் மட்டுமே அனுமதிக்கும். அதற்கான காரணங்களை தெரிவிப்பதோ, மறைப்பதோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு./

நல்ல நிபந்தனை. எனக்கு தெரியாமல் போய்விட்டது.

சுதந்திரமான விவாத மன்றம் என்ற தலைப்பை பார்த்து வந்து மனதில் பட்ட சில தவறுகளை சுட்டிக் காட்டினேன். இவ்வாறு இந்த வலைப்பூவில் நான் வைத்த மூன்று கருத்துக்களை இது வரை அனுமதிக்கவில்லை.

காரணம் என்னவென்று இதுவரை புரியவும் இல்லை. ஒரு மரியாதைக்கு தனி மடலிலாவது காரணத்தைத் தெரிவித்திருக்கலாம். ஒரு சாதாரண முஸ்லிம் காட்டும் கண்ணியத்தை இப்பதிவில் நான் எதிர்பார்த்தது தவறு தான். மன்னிக்கவும்.

இந்த நிபந்தனை முதலிலேயே தெரிந்திருந்தால் நிச்சயம் இப்பக்கமே வந்திருக்க மாட்டேன்.

சமுதாயத்தில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய எந்த இயக்கமும் சாராதவர் என தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிற முஸ்லிம்களே அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் தவறு சுட்டிக்காட்டப்படும் பொழுது அதனை ஏற்றுக் கொண்டு ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்க முன் வராத போது ஒரு இயக்கத்தை நடத்துபவர்கள் எப்படி தங்கள் தவறுகளை ஒத்துக் கொள்வார்கள்.

இந்த நிலைபாடுடையவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்ட எவ்வித அருகதையும் இல்லை.

இஸ்லாம் இதனை வன்மையாக கண்டிக்கவும் செய்கிறது.

"முஃமின்களே நீங்கள் செய்யாத ஒன்றை சொல்லாதீர்கள்" என திருமறை அறிவுரை பகர்வதை இவர்கள் கண்களை திறந்து பார்க்கட்டும்.

உபதேசம் ஊருக்கு மட்டும் என்ற நிலைபாடு ஒரு உண்மை முஸ்லிமுக்கு சிறந்ததல்ல.

இந்த பின்னூட்டமும் அனுமதிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இருந்தாலும் மனதினுள் வருத்தம் இருந்ததால் அந்த வருத்தத்தை தெரிவிக்கும் முகமாக திரும்பவும் இங்கு பின்னூட்டம் வைக்கிறேன்.

இதையும் அனுமதிப்பதோ அனுமதிக்காமல் இருப்பதோ நீங்கள் கூறிய படி உங்கள் விருப்பம்.

ஆனால் இது சிறந்த முஸ்லிமின் பண்பல்ல என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

இப்பின்னூட்டத்தோடு சேர்த்து நான் நான்கு பின்னூட்டங்கள் இந்த வலைப்பூவில் வைத்துள்ளேன் என்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்கிறேன்.

ஒருவேளை இதை நீங்கள் மறக்கலாம்/மறைக்கலாம். ஆனால் என்னாளும் எல்லாவற்றையும் எல்லோராலும் மறைக்கவோ மறக்கவோ இயலாது என்பதையும் உங்களுக்கு நினைவு படுத்திகிறேன்.

நான் வைத்த பின்னூட்டங்களையும் அதற்கான காரணங்களையும் தொகுத்து மற்றொரு இடத்தில் என்னால் வைக்க இயலும். எனினும் நான் அதனை விரும்பவில்லை.

என்னால் உங்களுக்கு ஏதாவது மன வருத்தங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

இனி இந்த வலைப்பூவில் என்னுடைய பின்னூட்டம் வராது - என்னுடைய எல்லா பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படும் வரை.

இன்ஷா அல்லாஹ் நாம் சந்திப்போம் விரைவில்.....

விடைபெறுகிறேன்

வஸ்ஸலாம்.

நிர்வாகி said...

சகோதரர் திருவை தென்றலுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்..

உங்களின் முந்தைய மறுமொழியுடன் உங்களுக்கான பதிலை http://tamilmuslim.blogspot.com/2006/07/blog-post_30.html என்ற முகவரியில் இட்டிருந்தேன். அப்பதிவு திருத்தியமைப்பதற்காக பதியப்பட்ட உறுப்பினரால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Jul 10, 2006 அன்று tothiruvai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிய மின்னஞ்சலையும் அங்கு பதிவு செய்துள்ளேன். அத்தேதியில் உங்கள் மின்னஞ்சலையும் சற்று சோதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அபூ முஹை said...

மார்க்க சம்பந்தமாக வைக்கும் விமர்சனங்களை - பின்னூட்டங்களை - அது உறுப்பினரோ, உறுப்பினரல்லாதவரோ பதித்தாலும் அதைத் தடை செய்ய வேண்டாமென நிர்வாகி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

புதுப் பார்வை said...

**10. உறுப்பினர்களின் மறுமொழிகள் மட்டுறுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டாது.**

என்று குறிப்பிட்டுள்ளீர்கள். **சூனியம், சுயஇன்பம் விமர்சனங்கள் -ஃபாலோஅப்** என்ற கட்டுரையில் நான் இப்போது புதிதாக வைத்த கமாண்ட் மட்டுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த பதிவிற்குரியவரின் ஒப்புதலுக்காக தடுக்கப்பட்டு விட்டது. ஏன் விதியை மீறி திடீரென்று இந்த சென்சார் போர்ட்?

நிர்வாகி said...

கீழ்கண்ட வரிகளை படிக்கவும்.

//இயக்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் இம்மன்றத்தில் உறுப்பினராக இருப்பது தெரியவந்தால், உறுப்பினர் வசதி துண்டிக்கப்படும். அத்தகையவர்கள், இயக்கம் பற்றி எழுதினாலும் எழுதாவிட்டாலும் இந்த முறை கையாளப்படும்.//

தயவு செய்து நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

புதுப் பார்வை said...

நான் இயக்க உறுப்பினர் என்று முடிவு செய்து எனது உறுப்பினர் தகுதியை துண்டிக்க விரும்புகிறீர்களா..? தெளிவாக தெரிவித்து விட்டால் ஒதுங்கிக் கொள்ளலாம்.

புதுப் பார்வை said...

சர்ச்சைக்குரிய பதிவுகளை ஊக்குவிக்கும் விதமாக நீங்கள் தொடர்ந்து புதிய விதிகளை சேர்த்து வருகிறீர்கள். சேருங்கள்... சேருங்கள். ஆனாலும் அலைபேசி என்பது ஒருவருடைய தனிப்பட்ட வசதிக்கு உரியதாகும். அதை அவர் தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். இதை நீங்கள் தெளிவாக உணர்ந்த நிலையில் இஸ்லாம் பற்றிய வாத பிரதிவாதத்தில் அலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்று விதி வைத்துள்ளது நியாயம் தானா... பொதுமன்றத்தில் ஒருவருடைய மொபைல் நம்பர் வெளியிடப்படும் போது அவர் தேவையில்லாத அழைப்புகளை சந்திக்க வேண்டி வரும்.

தனி உரிமையை பொது உரிமையாக்க வேண்டும் என்று திணிக்கப்பட்ட விதியை மீண்டும் ஒரு முறை பரிசீலியுங்கள்.

கருத்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கூட தங்கள் மொபைல் நம்பர் வெளியில் தெரிய வேண்டிவரும் என்று எண்ணும் போது கருத்து வைக்காமல் ஒதுங்கலாம். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவே படுகின்றது.

சர்ச்சைக்குரிய பதிவுகளை யார் பதிக்கிறார்களோ அவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விதிகளை கடுமைப்படுத்துங்கள். அப்போது ஒழுங்கு சீரமைப்பு உருவாகும். பதிவின் மீது மறுமொழி இடுபவர்களுக்கு விதிகளை தளர்த்துங்கள். அப்போதுதான் மார்க்கம் பற்றிய கூடுதல் விளக்கங்கள் கிடைக்கும்.

நான் இன்னும் மார்க்கம் பற்றிய கருத்துக்களை துவங்கவில்லை. ஏனெனில் நிர்வாகத்திடமிருந்து ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான **ஒப்புதலை** எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.