Saturday, August 19, 2006

அரண் - ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரப் படம்

நேற்று 'அரண்' என்ற திரைப்படம் பார்த்தேன். இப்படத்தைப் பற்றிய என் விமர்சனத்தை எழுதப் போவதில்லை. இப்படத்தில் வரும் சில காட்சிகளை மட்டும் எழுதுகிறேன். சமீபத்தில் வந்த படங்களில் முஸ்லிம்களை மிகவும் கேவலமாக சித்தரித்த படம் இது தான். முந்தைய முஸ்லிம் விரோதப் படங்களை விட பல மடங்கு துவேஷமும், விஷமும் அதிகம். இப்படத்தில் வரும் காட்சிகளை எழுதவே என் கை கூசுகிறது. எனினும், நமக்குள் விழிப்புணர்வு வேண்டும் என்ற அடிப்படையிலேயே எழுதுகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நம் எதிர்ப்பை எப்படி தெரிவிக்கலாம் என சக வலைப்பதிவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

1. காஷ்மீர் போராளிகள், வரிசையாக வரும் ஆண்களின் பிறப்புறுப்பை பார்த்து முஸ்லிமாக இருந்தால் விடுவித்து இந்து ஆண்களை சுட்டுக் கொல்கின்றனர். கதாநாயகனாக வரும் பாத்திரம் ஒரு இராணுவ அதிகாரி. அவன், காஷ்மீர் போராளிகளை சுட்டுக் கொன்று இந்துக்களை காப்பற்றுகிறான் நமக்குத் தெரிந்து ஆணுறுப்பைப் பார்த்து சங்பரிவாரங்களால், முஸ்லிம் இளைஞர்கள் தான் ஷஹீதுகளாகியுள்ளனரே, தவிர இது போன்ற ஒரு சம்பவம் எங்கும் நடந்ததாக கேள்விப் பட்டதில்லை.
2. காஷ்மீரில் ஒரு பள்ளிவாசல் இமாம் ஆயுதங்களை, பள்ளிவாசலில் பதுக்கி வைத்து இருக்கிறார்.
3. காஷ்மீர் போராளி பள்ளி மாணவனிடம் வெடிகுண்டை மறைத்து கொடுத்தனுப்பி, பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் பேருந்தை வெடிக்கச் செய்கிறார்.
4. காஷ்மீர் போராளிகள், இந்திய முஸ்லிம்களை முஸ்லிம்களே இல்லை என கூறுகின்றனர். இவர்கள் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்ததாகக் காட்டப் படுகின்றனர்.
5. காஷ்மீர் போராளி ஒருவன் ஒரு முஸ்லிம் பெண்ணை கெடுத்து விட்டு அதுவும் ஜிஹாத் தான் என வசனம் பேசுகிறான்.
6. நாட்டில் குழப்பம் ஏற்படுத்த கடைசிக் காட்சியில் முஸ்லிம் போராளிகள் ஒரு பள்ளிவாசலை ஏவுகணை வீசி தகர்க்க முயற்சி செய்கின்றனர். கதா நாயகனின் உயிர் தியாகத்தால், பள்ளிவாசல் காப்பாற்றப் படுகிறது.
7. இறுதிக் காட்சியில் முதிய முஸ்லிம் பெண்மணி, நாங்கள் முஸ்லிம்கள் இல்லை. இந்தியர்கள் என வசனம் பேசுகிறாள்.
8. இப்படத்தில் போராளிகளை காட்டிக் கொடுக்கும் ஒரு முஸ்லிம் மட்டும் நல்லவனாக காட்டப் படுகிறான்.
9. காஷ்மீர் போலீஸாரைப் பற்றி காஷ்மீரில் பணியாற்றும் இராணுவ அதிகாரி மிகவும் கேவலமாகப் பேசுகிறான்.
10. இப்படத்தில் வரும் மனித உரிமை இயக்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, இராணுவ அதிகாரியின் கடமைக்கு இடையூறு செய்ய வருபவராக காட்டப் படுகிறார்.

2 comments:

புதுப் பார்வை said...

இத்தகைய மீடியா வன்முறைப் போக்கு அவ்வப்போது தமிழ் படங்களில் இஸ்லாத்திற்கெதிராக தலை தூக்கவே செய்கின்றது. இதற்கு முன் 'ஒற்றன்' என்றொரு படம் வந்தது. அதிலும் முஸ்லிம் பயங்கரவாதிகளை ஒரு ஹிந்து அதிகாரி அழிப்பது போன்று காட்டியது மட்டுமில்லாமல், முஸ்லிம் பயங்கரவாதி?களை சட்டத்தின் முன் நிறுத்தினால் அவர்கள் தப்பி விடுவார்கள். அதனால் பொதுமக்களே அவர்களை நடுத்தெருவில் வைத்து தண்டனை கொடுத்து சாகடிக்க வேண்டும் என்ற தொணியை இறுதி காட்சிகளில் சொல்லி இருந்தார்கள். கடின எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் முஸ்லிம் அமைப்புகள் கூட வாய் திறந்ததாக தெரியவில்லை. மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் மட்டுமே அந்தப் படத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதித்தனர். இப்போது அதே பாணியில் அடுத்தப்படம். அமைப்புகளோ முஸ்லிம் அறிஞர்களோ இதை எதிர்த்து களமிறங்கமாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்களுக்குள் சண்டைப்போட்டுக் கொள்வதற்கே நேரம் போதவில்லையே...!

அட்றா சக்கை said...

//நமக்குத் தெரிந்து ஆணுறுப்பைப் பார்த்து சங்பரிவாரங்களால், முஸ்லிம் இளைஞர்கள் தான் ஷஹீதுகளாகியுள்ளனரே, தவிர இது போன்ற ஒரு சம்பவம் எங்கும் நடந்ததாக கேள்விப் பட்டதில்லை.
//

உண்மை தான். பம்பாய் கலவரங்களின் போது காவிக்கூட்டம் ஜோகேஸ்வரி என்ற பகுதியில் தேடித் தேடி முஸ்லிம்களை இப்படித்தான் கருவறுத்தது. இந்தப் பட இயக்குநர் விஷமத்தோடு தான் இப்படிக் காட்சி அமைத்துள்ளார்.