Saturday, October 14, 2006

ஹெச். ஜி. ரசூல் - ஒரு கிறிஸ்துவக் கைக்கூலி

கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் பிறப்பால் முஸ்லிம். தமிழ் கவிஞர். இவரது 'மைலாஞ்சி' கவிதைத் தொகுப்பிலேயே, இஸ்லாத்தின் அடிப்படையோடு முரண்படும் பல கவிதைகளை எழுதியிருந்தார். இவரது உலறல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவர் தன்னை ஒரு மார்க்சிய ஆய்வாளராகக் காட்டிக் கொண்டாலும், பின் நவீனத்துவ அடிப்படையில் இஸ்லாத்தை அணுகி கட்டுரைகள் எழுதுவதாகக் கூறிக் கொண்டாலும், ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. தர்கா வழிபாட்டை ஆதரித்தும், இஸ்லாத்தின் ஓரிறைக் கோட்பாட்டை விமர்சித்தும் எழுதுகிறார்.

தர்கா வழிபாடு, கோயில் வழிபாட்டை ஒத்திருப்பதாக முஸ்லிம் அறிஞர்கள் விமர்சிப்பதற்கு, இவர் 'ஹஜ்ஜில் ஒட்டகங்களை பலி கொடுப்பது, கோயில்களில் ஆடு பலியிடுவதை ஒத்திருப்பதாக உலறுகிறார். இவர் தர்கா வழிபாட்டையும், இஸ்லாத்துக்கு முரணான பல அநாச்சாரங்களையும் நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையிலேயே கை வைக்கிறார். ஹெச் .ஜி.ரசூல் 'திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்... ' என்ற தலைப்பில் திண்ணை இணைய இதழின் 12 அக்டோபர் 2006 பதிப்பில் திருக்குர் ஆன், முஹமது நபி(ஸல்) அவர்கள் தன் உள் மனத்திலிருந்து வெளிமனத்துக்குப் பேசியது தான் என்று கூறுகிறார். திருக்குர் ஆன், இறைவன் அருளியது அல்ல. முஹமது நபி(ஸல்) அவர்களின் சொந்தச் சரக்கு என்பது தானே இதன் பொருள்? நவூதுபில்லாஹ். இப்படிப் பட்ட கருத்தை வெளியிடும் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பதை இஸ்லாமிய அறிஞர்களிடம் அறிய விரும்புகிறேன். இது போன்ற கருத்து, கிறிஸ்துவர்கள் மூலமாக இணையத்தில் பரப்பப்படுகிறது. அக்கருத்துக்கு கவிஞர் ஹெச். ஜி. ரசூல் அடிமையாகி இருக்கலாம். அல்லது இவர் ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாகவே இருக்கக் கூடும்.

5 comments:

புதுப் பார்வை said...

நான் அந்தக் கட்டுரையைப் படித்தேன் அவரது பெயரில் வேறு யாரும் எழுதுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. யார் எழுதினாலும் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும்.

வெளிமனம் - உள்மனம் என்றெல்லாம் கூறி தூதுத்துவத்தை ஒரு முஸ்லிம் சந்தேகிக்க மாட்டான்.

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இந்த பதிவை வாசிப்பதற்கு மின்னஞ்சல் மூலம் சட்டி அனுப்பிய அன்பின் அருளடியானுக்கு நன்றிகள். இந்த பதிவை இங்கு இட்ட உடனேயே நான் வாசித்து விட்டேன். அத்துடன் ஹெச்.ஜி ரசூலின் குர்ஆன் சம்பந்தப்பட்ட கட்டுரையும் வாசித்தேன்.

அதில் ஒன்றும் அவர் புதிதாக எழுதிவிடவில்லை. சல்மான் ருஸ்ட்டியின் நாவலான சாத்தானின் வேதத்தை கொஞ்சம் உல்டா செய்து தனது சரக்காக இரக்கிவிட்டுள்ளார். இவரின் இந்த கட்டுரையால் இஸ்லாத்திற்கு அவ்வளவு பாதிப்பு ஓன்றும் ஏற்ப்பட்டு விடாது. சல்மான் ருஸ்ட்டியின் நாவலுக்கு கொடுத்த பதிலே இவருக்கு போதுமானது.

ஹெச்.ஜி. ரசூல் போன்றவர்கள் தங்களை இஸ்லாத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்தி விட்டதால் இவர்களால் அத்தனை பாதிப்பு ஒன்றும் இஸ்லாத்திற்கு ஏற்படாது. மக்களும் இவர்களின் வாதங்களை நம்பப்பNபுhவதில்லை.

ஆனால் இன்னும் இஸ்லாத்திற்குள் இருந்துகொன்டு மார்க்க அறிஞராகவும் குர்ஆன் மொழிபெயர்ப்பாளராகவும் வேடமிட்டு குர்ஆனில் ஸஹீகான ஹதீஸ்களை மறுத்தும் குர்ஆனுக்கு மாற்றம் ஏற்படக்கூடிய வகையிலும் தனது சுயகருத்துக்களை மொழியாக்கம் என்ற பெயரில் புகுத்தி மக்கள் மத்தியில் உலவ விட்டு ஒரு மாபெரும் ஆபத்தான தாக்குதலை இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ளார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் பி. ஜெயினுல்லாபுதீன்.

இஸ்லாத்திற்குள் இருந்துகொண்'டு இவர் செய்யும் இந்த காரியம் இவரது குர்ஆன் பிரதிகளை படிப்பவர்கள் மத்தியில் குர்ஆனைப்பற்றி பெரும் ஐயப்பாட்டினை எழுப்பும். இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளை சிதைத்து இறுதியில் இவரது குர்ஆன் தர்ஜீமாக்களை படிப்பவர்கள் இஸ்லாத்தை விட்டு விலக ஹெச்.ஜி. ரசூல் போன்று உறுவாகும் நிலை ஏற்படும்.

இதை மார்க்க அறிஞர் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் சகோ. பீ.ஜே. அவர்களின் அல்குர்ஆன் விரிவுரையும் விபரீதங்களும் என்ற தலைப்பில் மிக அருமையாக விளக்கியுள்ள்hர். இந்த வீடியோ இஸ்லாம் கல்வி டாட் கோமில் உள்ளது. தற்போது நமது கடமை ஹெச்.ஜி. ரசூல்களை பற்றி எழுதுவதை நிறுத்தி இன்று உள்ளுக்குள் இருந்து ஊடறுப்பு வேலை செய்யும் பி.ஜே யின் தாஜீமா விபரீதங்களையும் இவரின் ஆபத்தான் ஹதீஸ்களை பற்றிய விளக்கங்களையும் நம் சகோதர மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று நம் மக்களிடம் பி.ஜே யின் விபரீத தர்ஜீமா குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்த வேண்டும்.

அத்துடன் இது குறித்து மிக்த்தெளிவாக இதன் ஆபத்துக்களை விளக்கியுள்ள மார்க்க அறிஞர் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் சகோ. பீ.ஜே. அவர்களின் அல்குர்ஆன் விரிவுரையும் விபரீதங்களும் என்ற சிடி யை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இதுதான் நமது தற்போதைய கடமை.

நன்றி
முகவைத்தமிழன்

அருளடியான் said...

சகோதரர் முகவைத் தமிழனுக்கு,

அலைக்கும் ஸலாம் (வரஹ்)

உங்கள் மறுமொழிக்கு நன்றி. உங்கள் ஓரம்சத் திட்டத்தால், ஆற்றல் வீணாகி விடக்கூடாது. உங்கள் எழுத்துத் திறமையை இன்னும் விரிவாக பயன்படுத்துவது பற்றி யோசியுங்கள். உதாரணமாக, உங்கள் வலைப்பதிவின் தலைப்பு 'தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை'. ஆனால், அங்கு தமிழ் முஸ்லிம்களின் அரசியல் தொடர்பாக பன்முகச் செய்திகள் தகவலாகவோ, அல்லது விவாதமாகவோ இருப்பதில்லை. ஓர் அமைப்பைப் பற்றிய விமர்சனம் மட்டுமே 80 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது. அது போல, சமீபத்தில் உங்கள் வலைப்பதிவில் காணப்படும் சில கட்டுரைகள் தொடர்பாக சில சகோதரர்கள் உங்களிடம் வருத்தப்பட்டதாக எழுதியுள்ளீர்கள். நானும் அவ்வாறு தான் நினைக்கிறேன். உங்கள் படிப்பையும், எழுத்துக்கு ஒதுக்கும் நேரத்தையும் கண்டு வியக்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க துஆ செய்கிறேன். நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

நன்றி! வஸ்ஸலாம்.
அருளடியான்

Abul Faiz said...

இக்கட்டுரை தொடர்பாக ஹெச்.ஜி.ரசூலுக்கு இந்த வார திண்ணையில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610191&format=html

2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610193&format=html

muslimeen said...

BISMILLAHIRRAHUMANIRRAHEEM

H.G.RASOOL IS AN ENEMY OF ISLAM.MANY MUSLIM PEOPLE DONT KNOW HIM.SO WE IDENTIFY HIS MISINERFRETATION OF ISLAM.