Sunday, September 02, 2007

மவ்லவி பி.ஜெவை கைது செய்தது சரியா?

மவ்லவி பி.ஜெவை மலேசிய காவல் துறை கைது செய்தது சரியா?
மலேசியாவில் மவ்லவி பி.ஜெவும், பாக்கரும் மலேசிய காவல் துறையால் கைது செய்யப்பட்ட செய்தியை இணையத்தில் படித்தேன். இது கண்டனத்துக்குரிய செயல். மவ்லவி பி.ஜெ. அவர்களின் ஜகாத் கொள்கை, சஹாபக்களின் மீதான விமர்சனம், உடன் பொதுப்பணியாற்றியவர்களிடம் இருந்து பிரியும் போது அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்றவை எனக்கு உடன்பாடில்லை. அதற்காக மலேசியாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆலிம் கைது செய்யப்படுவதை நாம் ஆதரிக்க முடியாது. மலேசியாவில் வேறு மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் கைது செய்யப்பட்டிருந்தாலும் நாம் கண்டனம் செய்யவேன்டும். மலேசியாவில் வாழும் தமிழர்களில் முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகம். அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் பாணியில் பல அமைப்புகளை நடத்துகின்றனர். அவர்களுக்கு பல இணையத் தளங்களும், வலைப்பதிவுகளும் உள்ளன. அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து இந்து வெறி பேச்சாளர்கள் வருகின்றனர். இவர்களை எல்லாம் மலேசிய காவல் துறை கைது செய்வது கிடையாது. ஆனால் மவ்லவி பி.ஜெ அவர்களை மட்டும் கைது செய்ததை, தமிழ் முஸ்லிம்கள் மீது மலேசிய காவல் துறையின் காழ்ப்புணர்வாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

No comments: