Sunday, September 02, 2007
தஸ்லிமா நஸ்ரினை தாக்கியது சரியா?
ஆந்திராவில் ஆபாச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் தாக்கியுள்ளனர். இச்செயல் முஸ்லிம்களின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆர்.எஸ்.எஸ், சிவ சேனா ஆகிய வன்முறையாளர்களின் வழிமுறைக்கும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. நாம் ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தஸ்லிமா நஸ்ரினுக்கு நம் எதிர்ப்பை சட்டரீதியான வழிகளில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இது போன்ற வன்முறை வழிகளைக் கையாளக் கூடாது. வன்முறையாளர்களை நம் ஆலிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு கண்டிக்க முன்வர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நான் பக்கத்து வீட்டுக் காரனோடு படுக்கப் போகிறேன்; வரட்டுமா?" என்று தஸ்லீமா சொல்லி விட்டு மட்டும் சென்று விட்டால் எவரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், "உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் என்னைப் போல் சுதந்திரம் தேவை; அவர்களையும் அனுப்பி வையுங்கள்" என்று அழைப்பு விடுக்கும்போதுதான் அங்கு முடிச்சு விழுகின்றது.
ஒரு பர்தாவைக் கடையிலிருந்து வாங்கி(யாவது) தன் வீட்டுக்குமுன் தீயிட்டால் தஸ்லீமாவை யாரும் கேட்கப் போவதில்லை.
"உங்கள் வீட்டிலுள்ள எல்லாப் பெண்களின் பர்தாவையும் கொளுத்தப் போகிறேன்" என்று அறைகூவல் விடுக்கும்போது இன்னொரு முடிச்சு விழுகின்றது.
'சுற்றுலாப் பயணி' விசாவில் நம் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள தஸ்லீமா, தாராளமாக ஊர் சுற்றிப் பார்க்கட்டும். அதை விடுத்து, விளம்பரத்தோடு 'தொழில்' செய்ய முனையும்போது - அதுவும் விலைபோகாத ஊரான ஹைதராபாதில் - அடுத்த முடிச்சு விழுகிறது அழுத்தமாக.
தஸ்லீமாவைத் தாக்கியதாக எம் ஐ எம் கட்சியைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களோடு 15 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர். மேற்கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்யும்; செய்யட்டும். "நான் அச்சமற்றவள். இந்தியாவை விட்டு எங்கும் போக மாட்டேன்" என்று வசனம் பேசிய வீராங்கனை, அழுத்த முடிச்சின் இறுக்கலால் "என் மரணம் வெகு தொலைவில் இல்லை" என்று இப்போது புலம்புகிறார். 'அளவற்ற வெகுமதி' அறிவிப்பால் தஸ்லீமாவுக்குக் காவல் வலுப் படுத்தப் பட்டுள்ளதாம் [சுட்டி-2]. தஸ்லீமாவின் காவலுக்கு வேண்டுமானால் நம் வரிப் பணத்திலிருந்து செலவு செய்து கொள்ளட்டும்; ஆனால், தம் குடும்பத்துப் பெண்கள் கற்புநெறியோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் வைத்துள்ள எவரும், "தஸ்லீமாவுக்கு ஆதரவு தருகிறேன்" என்று கூறுவது வெறும் பேச்சாகத்தான் இருக்கும்; அல்லது அதற்கு வேறு உள்நோக்கம் இருக்கும்
Post a Comment