சமரசம் இதழில் அடிக்கடி இதயங்களை வெல்வது தான் நமது நோக்கமே தவிர வாதத்தில் வெல்வதல்ல என எழுதுவார்கள். இஸ்லாத்துக்கெதிரானப் பிரச்சாரங்களுக்கு நமது வலைப்பதிவர்கள் உரிய பதில்களை அளிக்க தங்கள் நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறார்கள். அவர்களது பதில்களில் அவர்களது பொது அறிவையும், இஸ்லாமிய அறிவையும் அறிய முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு இவ்வுலகத்திலும், மறுமையிலும் அனைத்து சிறப்புகளையும் அருள துஆ செய்கிறேன்.
அவ்வாறு இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு உரிய பதில் அளித்து முடித்த பின்னும், அவதூறாக தொடரும் பிரச்சாரங்களுக்கு நமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டுமா? என்பதையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.
நபி முஹமது(ஸல்) அவர்களிடமே இறைவன், தூதுத்துவத்தை மக்களுக்கு விளக்குவதோடு அவர்களது பணி முடிந்ததாக கூறுகிறான். இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களில், நாத்திகப்பிரச்சாரம், கிறித்துவப் பிரச்சாரம், இந்துத்துத்துவ பிரச்சாரம் என பல பிரச்சாரங்களும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதை உணர முடிகிறது.
இவர்களுக்கு நாம் பதில் அளித்த பின்னும் தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்கும், நம் நேரத்தையும் உழைப்பையும் செலவளிக்கத் தேவையில்லை. இஸ்லாமிய மகளிர் தொடர்பான விவாதங்களுக்கும் இது பொருந்தும். இறைவனின் சட்டத்துக்கான காரணங்கள், குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளது தவிர நாம் கூறும் காரணங்கள் எல்லா நேரங்களிலும் பொருத்தமாக இருப்பதில்லை. உரிய காரணங்களை இறைவனே அறிவான். சில சட்டங்களை நாம் ஏற்க வேண்டும். இறைவன் அவற்றை நம் நன்மைக்கே வகுத்துள்ளான் என நம்ப வேண்டும். அவ்வளவு தான்.
என் கருத்தை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதனை மீண்டும் சுருக்கித் தருகிறேன். நாம் இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரங்களுக்கு விரிவான அளவில் உரிய பதில் அளித்த பின்னும் தொடரும் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்க நம் நேரத்தையும், உழைப்பயும் செலவளிக்க வேண்டியதில்லை.
Monday, July 25, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உறுப்பினர்கள் புதிய பதிவுகளை இடும்போது html என்ற வசதியை தேர்ந்தெடுத்து செய்திகளை Paste செய்யுங்கள்.
Compose வசதியை தேர்ந்தெடுத்தால் பல Paragraph-கள் ஒன்றாக இணைந்துவிட வாய்ப்பு உள்ளது.
//இவர்களுக்கு நாம் பதில் அளித்த பின்னும் தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்கும், நம் நேரத்தையும் உழைப்பையும் செலவளிக்கத் தேவையில்லை//
தேவையானதை தேவையான அளவுதான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
//வெல்லத் தான் வேண்டுமா?//
ஆகவே இதைச்
சொல்லத்தான் வேண்டுமா?
Post a Comment