Friday, December 02, 2005

ஜனாஸா குளிப்பாட்டுபவர் கவனத்திற்கு

1. மூன்று முறை குளிப்பாட்டுதல் வேண்டும். தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம்.

2. ஒற்றைப் படையாகவே குளிப்பாட்டுதல் அமைய வேண்டும்.

3. குளிப்பாட்டும் நீரில் இலந்தை இலை அல்லது உடலை சுத்தப்படுத்தக் கூடிய சோப்பு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

4. கடைசித்தடவையாக குளிப்பாட்டும் தண்ணீரில் ஏதாவது வாசனைப் பொருட்களை உபயோகிக்கலாம். (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியநிலையில் மரணித்தவரைத்தவிர)

5. கொண்டைகளை அவிழ்த்துவிட்டு நன்றாக கழுவவேண்டும்.

6. தலைமுடியை தொங்க விட வேண்டும்.

7. பெண்களுக்கு மூன்று பின்னல் போட்டு தொங்க விடவேண்டும்.

8. வலது பக்கமிருந்து குளிப்பாட்டுதலை தொடங்க வேண்டும்.

9. ஏதாவது நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர ஆண் ஜனாஸாவை ஆண்களும் பெண் ஜனாஸாவை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். (கணவன் மனைவி இதற்கு விதிவிலக்கு)

10. மரணித்தவரின் எல்லா ஆடைகளையும் நீக்கி ஒரு துணித் துண்டினால் தேய்த்து கழுவ வேண்டும்.

11. ஆண் ஆண்களுடன் இருக்கும் போது மறைக்கவேண்டிய மற்றும், பெண் பெண்களுடன் இருக்கும் போது மறைக்கவேண்டிய உருப்புகளை மறைத்து அதில் கண்படாது, கைபடாது கவனமாக இருக்க வேண்டும்.

12. மையத்திடம் காணும் குறைபாடுகளை பகிரங்கப்படுத்தக்கூடாது.

13. குளிப்பாட்டுவதற்காக இறைவனின் திருப்பொருத்தத்தை தவிர கூலியை எதிர்ப்பார்க்கக்கூடாது.

14. குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்ளுதல் சுன்னத் ஆகும். (கட்டாயமல்ல)

15. குளிப்பாட்டும் முன்பு குளிக்கதேவையில்லை. கைகளை கழுவிக்கொண்டாலே போதும்.

இன்னும் பல விஷயங்களை அருகில் உள்ள மார்க்க அறிஞர்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி: COCG

1 comment:

நிர்வாகி said...

//ஏதாவது நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர ஆண் ஜனாஸாவை ஆண்களும் பெண் ஜனாஸாவை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். (கணவன் மனைவி இதற்கு விதிவிலக்கு)//

"ஏதாவது நிர்பந்தம் ஏற்றாட்டாலே தவிர" என்ற வார்த்தையை வரியின் கடைசியில் போட்டு படித்தால் புரிந்துவிடும்.

அதாவது:
ஆண் ஜனாஸாவை ஆண்களும் பெண் ஜனாஸாவை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும், ஏதாவது நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர (கணவன் மனைவி இதற்கு விதிவிலக்கு)