சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை ஜித்தா, துறைமுகம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, "சமரசம் இதழின் இணைய பதிப்பு இமேஜ் கோப்புகளாக பதிக்கப்படுகின்றன" என்றும் "அதனை மாற்றி யுனிகோடு எழுத்துருவில் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இணைய தேடல்களில் மற்றவர்களுக்கும் கிடைக்கும்" என்று தெரிவித்தபோது, அதற்கு KVS அவர்கள் "யுனிகோடுவின் பயன் பற்றி விளக்கமாக எழுதி தனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். (தற்போது சமரசத்தின் இணைய பதிப்பு, இமேஜ் கோப்புகளிலிருந்து எழுத்துருவாக மாற்றப்பட்டிருந்தாலும்கூட, இன்னும் யுனிகோடு எழுத்துருவாக பரிணாமம் அடையவில்லை என்பதை இங்கு பதியவைத்துக் கொள்கிறேன்)யுனிகோடு பற்றி நாம் புதிதாக எழுத வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு பல தளங்களில் காணக் கிடைக்கின்றன. மறைந்த யுனிகோடு உமர் அவர்களின் இது குறித்த கட்டுரைகளும் ஏராளம். ஆனால், அவைகளையெல்லாம் இணையம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாத சகோதரர்களுக்கு புரிய வைக்கும்படி எழுத முடியுமா? என்பது போன்ற தயக்கங்களுடன் எனது வேலைப் பளுவும் சேர்ந்துக்கொண்டதால், நான் ஏற்றுக்கொண்ட அந்த பொறுப்பை பல மாதங்கள் செய்யமுடியாமல் கையை கட்டிப்போட்டுவிட்டன.
வேறு பல தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகளை மேயும்போதெல்லாம், பொதுவாக அனைவருக்கும் பயன்படும்படி எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு கட்டுரை வரைய வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் கட்டுரையை ஒரே மூச்சில் எழுதுவதற்கு தொடர்ச்சியான நேரமின்மை காரணமாக, நேரம் கிடைக்கும்போது தொடராக கொடுக்கலாம் என்று எண்ணி எழுத ஆரம்பித்துள்ளேன்.
ஆக, பொதுவானதாக இருப்பதால், இதில் மற்ற இயக்கங்களின் இணையதளங்களில் உள்ள விஷயங்களும் சுட்டிக்காட்டப்படலாம். அதன் நோக்கம் குறிப்பிட்ட பிரச்னைகளை உரியவர்களுக்கு (இக்கட்டுரை மூலம்) தெரிவிப்பதோடு, மற்றவர்களும் அதில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
தொடரும்..
1 comment:
அபு உமர், நல்ல, பயனுள்ள பணி.
வாழ்த்துக்கள்
Post a Comment