Sunday, November 23, 2008

தலித்-பார்ப்பானர் கூட்டு

தலித்-பார்ப்பனர் கூட்டு தமிழ் நாட்டுக்கு வேட்டு
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், தலித் மாணவர்கள் தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல் மிகவும் கொடுரனான முறையில் நடந்ததை டிவி செய்தில் தமிழ் நாடே பார்த்தது. இதனை நேரடியாக கண்டிக்காமல் எழுத்தாளர் ஞாநி, எழுத்தாளர் வே. மதிமாறன் போன்றவர்கள் பழைய கதையைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழகம் தேவர் சாதி வெறிக்கு களமாக உள்ளது என்பதும், கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி போன்ற ஊர்களே அதற்கு சாட்சியாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதற்காக, தலித் சாதியினரின் ஆயுதம் தாங்கிய வன்முறைக்கு நாம் புரட்சிகரத் தகுதி தர வேண்டுமா? இந்த வன்முறையில் ஈடுபட்ட தலித் மாணவர்கள் தமிழ் நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள். மாயாவதி தலைமையில் உ.பியில் ஆட்சி அமைத்துள்ள இக்கட்சிக்கு, பார்ப்பனர்கள் பங்காளிகளாக உள்ளனர். தமிழ் நாட்டிலும் காலூன்றத் துடிக்கும் இக்கட்சி, ஆர்.எஸ்.எஸ் காரரான நடிகர் எஸ்.வி. சேகர், எம்.எல்.ஏவின் பிராமணர் பிரிவில் பொறுப்பு தருவதாக ஆசை காட்டி விலை பேசியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை இக்கட்சிக்குத் தாவி முதல் நாளே மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தலித் இலக்கியவாதியுமான சிவகாமி தன் பதவியில் இருந்து விலகி இக்கட்சியில் சேர உள்ளார். சிவகாமி பெரியார் எதிர்ப்பிலும், திராவிட இயக்க எதிர்ப்பிலும் ரவிக்குமாருக்கு அக்காவாக இருப்பவர். இவர்கள் பிற்படுத்தப் பட்ட சாதி வெறியை மட்டும் தான் கண்டிப்பார்கள். பார்ப்பனர்களுடன் கூடிக் குலாவுவார்கள். இவையெதுவும் தமிழ் நாட்டின் அரசியலுக்கு நல்ல அறிகுறிகள் அல்ல. முஸ்லிம்களில் எப்படி தீவிரப்போக்குடையவர்களை நம் அணி சேர்க்கையில் இருந்து விலக்கி வைக்கிறோமோ, அவ்வாறே தலித்களில் பார்ப்பனர்களிடம் கூடிக் குலாவும் கூட்டத்தையும், வன்முறையைக் கையாளும் கூட்டத்தையும் நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். மார்க்சியம், பெரியாரியம், திராவிட இயக்க அரசியல் ஆகியவற்றை ஏற்ற இரா. அதியமான் அவர்களின் ஆதித் தமிழர் பேரவை போன்ற தலித் அமைப்புகளுக்கு கை கொடுத்து நாம் அரசியல் அரங்கில் முன்னணிக்கு கொண்டு வர வேண்டும். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் ஆகிய முஸ்லிம் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்: தலித் அமைப்புகள் அனைத்தையும் ஒரே தரத்தில் மதிக்காமல் வன்முறை அமைப்புகளையும், பார்ப்பன அடிமைகளையும் தங்கள் அணியில் சேர்க்கக் கூடாது. அவர்களை தங்கள் மேடையில் ஏற்றக் கூடாது.

3 comments:

gnani said...

அன்புடையீர், தங்கள் பதிவில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் இரு ஜாதி மாணவர்களின் கொடூரமான மோதல் பற்றிய என் கட்டுரையைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது யாருடைய வன்முறையையும் நியாயப்படுத்தும் கட்டுரை அல்ல என்பது கட்டுரையைப் படிக்கும் எவர் மனசாட்சிக்கும் தெரியும். முழு கட்டுரை www.gnani.net இணைய தளத்தில் உள்ளது. இயலுமானால் அதை உங்கள் வலைப்பூவில் வெளியிடுங்கள். பழைய கதையைப் பேசாமல் இன்றைய கதையைப் புரிந்துகொள்ள முடியாது. பாபர் மசூதி இடிப்பும் பழைய கதைதான்.பேசாமல் இருந்துவிடுவோமா? ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் அனைத்தின் பெயராலும் யார் செய்யும் உடல்,உள்ளம் மீதான வன்முறைக்கும் எதிரான பகுத்தறிவாளன் என்பதே என் நிலை. நன்றி. ஞாநி

அருளடியான் said...

அன்புள்ள ஞாநி அவர்களுக்கு,

தங்கள் எதிர் வினைக்கு நன்றி! சட்டக்கல்லூரி மோதல் தொடர்பான உங்கள் கட்டுரையை தமிழ் முஸ்லிம் கூட்டு வலைப்பதிவில், நீங்கள் கேட்டவாறே மீள் பிரசுரம் செய்துள்ளேன். உங்கள் உள்ளத்தை நான் அறிவேன். அக்கட்டுரையை வன்முறைக்கு ஆதரவு என்ற பொருளில் உரியவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற கவலையில் தான் தலித்-பார்ப்பனர் கூட்டு என்ற கட்டுரையை எழுதினேன். தமிழ் முஸ்லிம்களில் வன்முறையில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு எதிராகவும் இதே வலைப்பதிவில் நான் சில பதிவுகளை எழுதியுள்ளேன். உங்கள் ஓய்வு நேரத்தில் படியுங்கள்.

அன்புடன்
அருளடியான்

தலித் முரசு வாசகன் said...

காலச்சுவடு, உயிர்மை, திண்ணை, தமிழ் மணம் போன்ற இலக்கிய பீடங்களில் பார்ப்பனர்-முஸ்லிம் கூட்டு உள்ளது. அதனால் தமிழ் நாட்டுக்கு கேடு இல்லையா?