Wednesday, November 26, 2008

இது எங்கள் நாடு!

இது எங்கள் நாடு

இஸ்லாமியத் தமிழன்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'எனது இந்தியா' கட்டுரைக்கு எதிர் வினை

எனது இந்தியா என்பவனே!
இது எங்கள் நாடு தெரியுமா?
பகதூர்சாவின் பரம்பரைக்கும்
பகத்சிங்கின் தோழர்களுக்கும்
கோட்சேவின் பேரனா
தேசபக்திப் பாடம் எடுப்பது?


நாங்கள்
சமூக நீதி, ஜனநாயகம்
மனித உரிமை, மதச்சார்பின்மை
சமத்துவம், நல்வாழ்வு
கூட்டாச்சி, நல்லரசு
என்றெல்லாம் பேசுகிறோம்
நீ வல்லரசுக் கனவில்
தேய்ந்து போன இசைத் தட்டாய்
தேசபக்தி வேதம் ஓதுகிறாய்


சமரசமும், விடியல் வெள்ளியும்
உனக்கு கசக்கிறது
விஜய பாரதம் மட்டும்
இனிக்கிறதோ?
உரக்கச் சொல்வேன்
பன்மைத்துவமே
இந்த நாட்டின் பண்பாடு


பச்சை, சிவப்பு வன்முறை மட்டும்
தேசவிரோதமா?
காவி நிற பயங்கரவாதம்
உனக்கு தேசபக்தியா?

நால்வர்ணத்தை
புதுப்பிக்கும்
நீயும் ஒரு
பயங்கரவாதியே!
ஆகப் பெரிய கொலைக்கருவி
உன் கையில் உள்ள
பேனா தான்

1 comment:

Unknown said...

சமரசம், விடிவெள்ளி போன்ற என்ற இஸ்லாமிய இதழ்களை....

இந்த முட்டாளின் அறிவுக்கூர்மைக்கு,ஒர் எடுத்துக்காட்டு..."விடியல் வெள்ளி" என்பதற்கு பதிலாய் விடி வெள்ளி என அரைகுரையாக எழுதியதே போதும் எடுத்துக்காட்டிற்கு... -அபு ஜுலைஹா. www.adiraipost.blogspot.com