Sunday, April 03, 2005

முஸ்லிம்களும் மீடியாவும் - விவாதம்

தலைப்பின் விளக்கம்:
முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்.. .. ..

நோக்கம்:
உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கமான இஸ்லாத்தில், அதனை பின்பற்றுபவர்கள், கல்வி, மீடியா போன்ற விஷயங்களில் தூரநோக்கு பார்வை இல்லாமல் பின்தங்கியே இருப்பது கசப்பான விஷயமாகும். அதிக நாட்களுக்கு பிறகு "அல்-ஜஸீரா" என்ற அரபி செய்தி சேனல் வந்தாலும் அதனையும் முடக்குவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. அப்படியிருந்தாலும் தற்போது அரபிமொழி சேனல்கள் பல வந்துவிட்டன.

ஆனால், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இதுவரை முழுநேர ஆங்கில சேனல் இல்லை. மீடியா என்பது சேனலோடு இல்லாமல் இணையம் மற்றும் இன்னும் பல்வேறு வழிகளில் வியாபித்து இருப்பதும் இனி வியாபிக்க இருப்பதும் அனைவரும் அறிவர். ஆகவே முஸ்லிம்களை தற்போதைய துயில் நிலையிலிருந்து எழுப்பி தன்னைத்தானே சீர்தூக்கி பார்த்து பட்டை தீட்டிக்கொள்வதற்காக நாம் விவாதிக்கலாமா?

கருத்துகளை பதிவு செய்யும் முறை:
1) ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளை பல மறுமொழிகளாக இடலாம்.
2) கருத்துகளை தனி பதிவாக இடவேண்டாம். மறுமொழியாக மட்டுமே இடவேண்டும்.
3) மற்றொருவர் இட்ட கருத்துகளை மறுக்கலாம் அல்லது ஆமோதித்து அதற்கான மேலும் ஆதாரங்களை கொண்டுவந்து வலு சேர்க்கலாம்.
4) ஒரே காரணத்தைப் பிடித்துக்கொண்டு தொங்காமல் பல காரணங்களை முன்வைக்கலாம்.
5) கருத்துகளை தாக்கலாம். கருத்து தெரிவித்தவரை அல்ல.
6) நகைச்சுவைக்கு அனுமதி உண்டு. அளவுக்கு மீறினால் மறுமொழியில் கத்தரி வைக்கப்படும்.
7) கருத்துகளை வைப்பது மட்டுமே உங்களின் பணி. தீர்ப்பு மக்கள் கையில்.

இனி உறுப்பினர்கள் தங்கள் வாதத்தை தொடங்கலாம்.

Notes:
1) தமிழ்முஸ்லிம் விவாத அரங்கில் உறுப்பினராக இணைந்து எழுது விரும்புகிறவர்கள் tamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும்.
2) வாசகனாகவே கருத்து தெரிவிக்க விரும்புகிறவர்கள் தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து tamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். தேர்வு செய்யப்பட்டால் "வாசகன்" என்ற பெயரில் அக்கருத்துகள் பதிவு செய்யப்படும்.

31 comments:

Abu Umar said...

இத்தலைப்பின்கீழ் விவாதம் நல்லதொரு முயற்சி.

நமது மீடியா வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று, முஸ்லிம்கள் புதிய தொழிற்நுட்பங்களை விரைவில் அங்கீகரிக்காததாகும்.

ஆடியோ கேஸட் மக்கள் புழக்கத்தில் இருந்தபோது,

பதினாரடி வேங்கைப்புலி
படுத்திருக்க கண்டிடவே
சங்கைவுள்ள ஃபாத்திமாவே
பாலை திடுக்கிட்டு ஊத்திடுவார்
டன்டனுக்கு டன்டனுக்கு

அலி(ரலி) புலியாக மாறி நடுத்தெருவில் படுத்து ஃபாத்திமா நாயகி(ரலி) அவர்களை பயங்காட்டினாராம். இந்த கட்டுக்கதையைதான் இஸ்லாம் என்று தலையில் துணிபோட்டு நம் பெண்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு ஃபாத்திமா நாயகி கிஸா, நூறுமசாலா, வெள்ளாட்டு மசாலா என்று சாஹுல்ஹமீது அன்டு (மண்டு) சன்ஸ் மூலம் அவிழ்த்துவிட்டார்கள்.

இதே சமயத்தில்

என் மச்சானை பாத்தீங்களா
மடல்வாழை தோப்புக்குள்ளே

என்ற பாடலை பார்த்து ஏங்கியவர்கள் அதில் கொஞ்சம் சோடா கலந்து,

கப்பலுக்கு போனமச்சான்
கண்ணிரண்டு ஆசை மச்சான்
எப்பத்தான் வருவிங்கென்று
எதிர் பார்க்கிறேன்
நான் இரவு பகலும்
தொழுது தொழுது கேட்கிறேன்.

அன்னமே அடிக்கரும்பே.. ஆசை என்னை மீறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து.. என் உள்மனசு வாடுதடி

என்று இஸ்லாமிய கீதங்கள்?!?! இசைக்க ஆரம்பித்திருந்தனர்.

அடுத்தது டீவி-வீடியோ வந்தது
தப்லீக் காரர்கள் டீவியை தஜ்ஜாலாக ஆக்கி ஹராம் என்றார்கள். (காரணம் தஜ்ஜாலைப்போல் ஒற்றை கண் இருக்கிறதாம். ஹராத்தை ஹலால் என்றும் ஹலாலை ஹராம் என்றும் மக்களை நம்பச்செய்கிறதாம்).

இந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் குர்ஆன் சுன்னா புரட்சி வந்து "அபூர்வ சகோதரர்கள்" பாடல் கேஸட்டுகள் "ஹதீஸ்" கேஸட்டுகளாக மாறின. ஆனால் மீடியா நமக்கென்று நிற்கவில்லை. அது சேனலையும் சி.டியையும் நெருங்கியிருந்தது. பிறகு நாம் வீடியோ கேஸட்டை தஃவாவிற்கு கையில் எடுத்தோம். அதிலும் பல பிரச்சினைகள் இருந்தது. அதாவது தெளிவில்லாத ரிக்கார்டிங், தேய்ந்துப்போன நகல், டீவிக்கு உள்ளே சென்றால்தான் ஆடியோவை கேட்கமுடியும் என பல பிரச்சினைகளால் வேறு வழியில்லாமல் சி.டிக்கு தாவினோம். அப்பொழுது மீடியா டி.வி.டி-க்கு தாவியிருந்தது.

இன்னொரு பக்கத்தில் சத்தமில்லாமல் "இணையம்" என்ற ஒரு விரல் பரிசத்தில் உலகம் முழுவதும் இணைய ஆரம்பித்திருந்தது. இணையம் பலருக்கு எட்டாத கனியாக இருந்தாலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு சிலரை இணையத்துக்கு அழைத்துச்சென்றது. ஆங்கில இணையத்திற்கு பிறகு மெல்ல மெல்ல தமிழ் இணையமும் பிறந்தது. இது சம்பந்தமாக என் நண்பர் என்னிடம் சொன்ன வார்த்தை:

"இன்றுதான் நாம் இணையத்தில் காலடி வைத்திருக்கிறோம்". ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இணையம் தோன்றியவுடனேயே அந்த வாய்ப்பை பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை பதிய ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் அது.

தமிழில் அது குறைவு என்றாலும், பல செய்தி தளங்களின் "மின் மன்றத்தில்" இஸ்லாம் கேளி செய்யப்பட்டது. கண்ணில்பட்டதை விஷயம் தெரிந்தவர்கள் எதிர்கொண்டார்கள்.

தமிழ் இணையம் ஒருசில வந்தாலும் எழுத்துரு பிரச்சினைகள் ஓய்ந்த பாடில்லை. ஆனால் தமிழ்பேசும் நல்லுலகம் யுனிகோடு என்னும் புதிய பட்டினத்திற்கு கைபிடித்து அழைத்துச்சென்றார்கள். ஆனால் நம்மில் பலருக்கு "யுனிகோடு எந்த கடையில் கிடைக்கும்?" என்ற நிலைமைதான்.

நம்மவர்களிடம் யுனிகோடு தட்டச்சு செய்ய எ-கலப்பை 2-ஆம் பதிப்பை பயன்படுத்தச் சொன்னால், சாருகேசியில்தான் முரசு கொட்டுவேன் என்கிறார்கள்.

தமிழ் வலைப்பதிவுகள் Rediff-ல் ஆரம்பிக்கப்பட்டு அது பிளாக்கருக்கு மாறிய பின்னர்தான் இஸ்லாமிய தமிழ் வலைப்பதிவுகள் தொடங்கப்பட்டன.

நமது "ஒலி ஒளி" தஃவா பல பரிணாமங்களை அடைந்து விண் டீவி, டான் என வந்திருந்தாலும் சில மணித்துளிகள் வாடகைக்குதான் இவையெல்லாம். ஆனால் அவர்கள் பல மொழி சேனலுக்கு எப்போதே உரிமையாளர்களாக ஆகிவிட்டார்கள்.

நான் இதுவரை சொல்லியவற்றை கவனித்தீர்களென்றால் ஒன்று புரியும். ஒவ்வொரு மீடியா பரிணாமமும் முடியும் தருவாயில்தான் முஸ்லிம்கள் அதனை பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள் என்பதுதான் அது.

புதிய தொழிற்நுட்பங்களை உள்வாங்க எடுத்துக்கொண்ட கால தாமதத்தினால், இன்று அதற்கான விலையை கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

வாசகன் said...
This comment has been removed by a blog administrator.
வாசகன் said...
This comment has been removed by a blog administrator.
வாசகன் said...
This comment has been removed by a blog administrator.
அபூ முஹை said...

அடப் போங்கப்ப! நானே இப்பத்தான் லுங்கியிலிருந்து முழுக்கால் சட்டைக்கு மாறியுள்ளேன். ஆங்கிலம் கற்பது (ஹராம்)விலக்கப்பட்டது, முழுக்கால் சட்டை போடுவது (ஹராம்) தடுக்கப்பட்டது என்று வெள்ளையனின் மொழியையும், ஆடைகளையும் தீவிரமாக எதிர்ப்பதாகச் சொல்லி, இந்த சமுதாயத்தின் தலை மீது வண்டி வண்டியாய் மண்ணள்ளி போட்டார்கள். இப்போ மீடியாவா! அப்படின்ன.?

புகைப்படம் எடுப்பது மார்க்கத்தில் விலக்கப்பட்டது(!?) என்று முல்லாக்களால் முளைச் சலவை செய்யப்பட்ட(நம்ம)வர்களுக்கு, தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்ப்பதும், இணையத்தளத்தில் ஊடுருவுவதும் சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தது - இருக்கிறது. அறிவுப்பூர்வமான இஸ்லாம் மார்க்கத்தில், அறிவின் அணு அளவும் தொடர்பில்லாத சட்டங்களை கையால் எழுதி வைத்துக்கொண்டு அதையே மார்க்கம் எனவும் இந்த சமுதாயத்தின் மீது திணித்து மடமையாக்கி வைத்திருந்தார்கள். அறிவோடு சம்மந்தப்படாத முல்லாக்களின் சட்டங்களில் சில..

''ஒருவனுக்கு மூக்கில் தொடர்ந்து இரத்தம் வந்தால், 'அல்ஹம்து' சூராவை மூத்திரத்தால் அவனது நெற்றியில் எழுதலாம்.'' ஆதார நூல்: துர்ருல் முக்தார்.

''எவருடைய பிராணியையும் அபகரித்து குர்பானி கொடுப்பது தவறில்லை.'' ஆதார நூல்: ஷரஹூல் விகாயா.

''எந்தப் பிராணிகளைச் சாப்பிடுவது ஹலாலோ, அவற்றின் முத்திரத்தை சர்வ சாதாரணமாகக் குடிக்கலாம். ஆதார நூல்கள்: துர்ருல் முக்தார், ஹிதாயா, ஷரஹூல் விகாயா.

''ஒன்பது கிண்ணங்கள் மது அருந்திவிட்டு பத்தாவது கிண்ணம் குடிக்கும் போது, போதை வந்தால் பத்தாவது கிண்ணம்தான் ஹராம். ஏனைய கிண்ணங்கள் ஹராமல்ல.'' ஆதார நூல்: துர்ருல் முக்தார்.

''இமாமோ, கலிஃபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு 'ஹத்' தண்டனை கிடையாது.'' ஆதார நூல்கள்: துர்ருல் முக்தார், ஹிதாய, ஆலம்கீரி, கன்ஸூ.

''இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் வட்டி வாங்குவது கூடும்.'' ஆதார நூல்கள்: ஆலம்கீரி, ஷரஹூல் விகாயா.

''இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் ஒரு முஸ்லிம் பன்றி இறைச்சி, மது போன்றவைகளை மாற்று மதத்தவர்களுக்கு விறபது கூடும்.'' ஆதார நூல்: ஆலம்கீரி.

''அடுத்தவன் மனைவியை ஒருவன் திருமணம் செய்து அவளோடு வாழ்ந்தால் 'ஹத்' தண்டனை இல்லை.'' ஆதார நூல்: துர்ருல் முக்தார்.

''ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில் 120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து பின்னர் அவளுக்கு வேறு திருமணம்(?) செய்ய வேண்டும்.'' ஆதார நூல்: ஹிதாயா.

இதையெல்லாம் அறுத்தெறிந்து வெளியேற முஸ்லிம் சமுதாயத்து நிறையவே அவகாசம் வேண்டியிருந்தது - இருக்கிறது. வெளியேறி எட்டிப்பார்த்தால், எல்லோரும் செய்தி ஊடகங்களில் பட்டதாரியாக இருக்கிறார்கள், முஸ்லிம்கள் ஆனா, ஆவன்னா என்று பாலர் பாடத்திலிருந்து இனிமேல்தான் துவங்க வேண்டும்.

(மற்றவை, மற்ற சகோதரர்களின் கருத்துக்குப் பின்..)

Abu Umar said...

//அறிவின் அணு அளவும் தொடர்பில்லாத சட்டங்களை கையால் எழுதி வைத்துக்கொண்டு அதையே மார்க்கம் எனவும் இந்த சமுதாயத்தின் மீது திணித்து மடமையாக்கி வைத்திருந்தார்கள்//

இஸ்லாத்தின் பெயரால் இவர்கள் கட்டிவிட்ட கட்டுக்கதைகளும், கப்ஸா சட்டங்களும் முஸ்லிம்களின் முன்னேற்றத் தடைகற்களில் ஒன்றுதான்.

ஆனால் இன்னும் பல தடைகற்களை ஆராய்ந்து நீக்க வேண்டியிருக்கிறதே!

Abu Umar said...

//சேனலோ, இணையமோ வேணும்னா துட்டு இல்லாம முடியுமா சார்.//

உண்மைதான். சேனலோ, இணையமோ வேண்டுமேன்றால் பொருளாதாரம் இல்லாமல் முடியாது.

ஒரு கோடி பட்ஜெட்டில் பள்ளிவாசல் கட்ட முடியும். ஆனால் முஸ்லிம்களுக்கென்று உருப்படியான தினசரியோ சேனலோ உண்டாக்கமுடியாதா?

பள்ளிவாசல் அவசியம் என்று தெரிந்த நமக்கு முஸ்லிம்களின் செய்திகளையும், இறைத்தூதர் நம்மிடம் அமானிதமாக ஒப்படைத்த விஷயங்களையும் மற்றவர்களுக்கு தெரிவிக்க மீடியா அவசியம் என்று ஏன் உணரமுடிவதில்லை?.

வணக்கத்தில் ஈடுபடுவது, அறிவை(கல்வி) கற்று கொடுப்பது இவையிரண்டில் நபியவர்கள் முக்கியத்துவம் கொடுத்தது இரண்டாவதைத்தான். காரணம் நபியவர்கள் அனுப்பப்பட்டதன் முக்கிய நோக்கம் மக்களுக்கு அறிவை போதிக்கவேயாகும். ஆனால் அவை இன்று முஸ்லிம்களிடமிருந்து திருட்டுபோய்விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

திருடவந்தவர்கள் அலமாரியில் உள்ள துணிமணிகளை திருடிக்கொண்டு அதே அலமாரியில் வைக்கப்பட்ட விலைமதிப்புள்ள வைரங்களை சாதாரண பளிங்கு கற்கள் என நினைத்து விட்டுச்சென்றதை போலத்தான்.

வைரம்போன்ற மதிப்புமிக்க ஈமானும், இபாதத்துகளும் நம்மிடம். இஸ்லாம் கற்றுக்கொடுத்த நற்பண்புகள் என்றும் ஆடைகள் சிலவற்றை அவர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.

நமது கடமை தொழுகையோடு நின்றுவிட்டது என நினைக்கிறோம். ஆனால் அவர்கள் எதைச்செய்தாலும் தூரநோக்கு பார்வை, கவனம், திட்டமிடல் என்று இஸ்லாத்திற்குறிய பண்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

ஆகவே பொருளாதாரத்துடன் தூரநோக்கு பார்வை, திட்டமிடல், அறிவு(கல்வி) போன்ற இத்தகைய விஷயங்களை (அவர்களிடம் இருந்து திருடவேண்டாம்) மீண்டும் சம்பாதித்து மீடியாவை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

வாசகன் said...

இணையவாதிகளின் இஸ்லாமியர் பார்வை.

இணையத்தில் முஸ்லிம்களும் மீடியாவும் - விவாதம் என்ற விவாத கட்டுரையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இஸ்லாத்தை பரப்ப இணையம் மற்றும் செய்தி ஊடகங்களில் முஸ்லிம்களின் ஈடுபாட்டை வலியுருத்தும் நோக்கில், சகோதரர் அபூ உமர் "தப்லீக்" காரர்களை சாடி விட்டு சென்றுள்ளார்.

என்னமோ தப்லீக்வாதிகள்! (தவ்ஹீத்வாதிகளின் எதிரி?) கட்டுக்கதைகளையும், வெட்டிவேலையையும் செய்து கொண்டு ஊர் சுற்றுவது மாதிரியும். இண்டர்நெட் அறிந்த தவ்ஹீதுவாதிகள்தான் மார்க்கத்தை கட்டிக் காப்பது போலவும் போகிற போக்கில் சீண்டி விட்டு சென்றுள்ளார்.

ஐயா அபூஉமர் அவர்களே, கையில் பையையும் தலையில் சாப்பாட்டு மூட்டையையும் சுமந்து கொண்டு, பேரூந்து இல்லாத ஊர்களுக்கும் மார்க்கத்தை எடுத்து சென்று குடும்பம் குட்டிகளை பிரிந்து அல்லாஹ்விற்காக புனிதபயணம் செய்யும் இவர்களை கொச்சை படுத்தாதீர்கள்.

உங்கள் பார்வையில் தப்லீக்காரர்கள் கட்டுக் கதைகளை பரப்புபவர்களாகத் தெரியலாம். ஆனால் அவர்களின் பணி அல்லாஹ் காட்டியது. உங்களில் ஒரு கூட்டத்தார் நன்மையை ஏவி தீமையை தடுக்கட்டும் என்ற கொள்கையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை போட்டி இன்றி, மீடியா வசதி இல்லாத காலம் முதல் இன்றுவரை எந்த வசூலோ அல்லது CD, பத்திரிக்கை மற்றும் எந்த நிதிஉதவியும் இன்றி சொந்த பணத்தை செலவு செய்து அல்லாஹ்விற்காக பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மார்க்கத்தில் கலந்துவிட்ட சில அனாச்சாரங்களுக்கு தப்லீக்காரர்கள் மட்டும் எவ்வாறு பொறுப்பாவார்கள். உங்களை மாதிரி லேப்டாப்பில் ஹதீசையும், குர் ஆனையும் வைத்துக் கொண்டு இணையத்திலும் சாடிலைட் சேனலிலும் நேருக்கு நேர் மற்றும் விவாதம் செய்துவிட்டு இதற்கு ஆதாரம் உள்ளதா? அதற்கு ஆதாரம் உள்ளதா? என்று நேரத்தை வீணடிக்கும் கலை அவர்களுக்கு தெரியாதுதான்.

நீங்கள் செய்தபடி இணையத்தில் மட்டும் இஸ்லாத்தை எடுத்து சொல்லி விடலாம் என்று தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளாதீர்கள். இணையத்திலும் ஊடுருவரல்கள் செய்து வழி கெடுக்க முடியும். உம். நேசகுமாரின் உளரல்கள்).

நல்லதை எடுத்து சொல்வதும் அல்லதை சாடுவதும் இஸ்லாமிய வழி. அதில் தப்லீக் காரர்கள் நல்லதை எடுத்து என்று சொல்கிறார்கள். நீங்கள் அல்லதை சாடுகிரீர்கள். அவ்வளவுதான்.
ஆகவே தப்லீக்வாதிகள் மீதான உங்கள் பார்வையை கொஞ்சம் மாற்றிக் கொண்டு உங்கள் இணைய சேவையை தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள். முடிந்தால் ஒரு மூன்று நாள் பல்லை கடித்துக் கொண்டு தப்லீகில் சென்று பாருங்கள்.

சகோதரர் P.J. அவர்களின் பேச்சாற்றலில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். அதேசமயம் கண்ணை மூடிக் கொண்டு அவர் சொல்லவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள அவர்மீது முற்றும் பற்று கொண்ட தவ்ஹீதுவாதி அல்ல.

கடந்த பத்து வருடம் வரை ஒரே இயக்கத்தில் இருந்து விட்டு, சில காரணங்களை சொல்லி வெளியேறி/வெளியேற்றி விட்டு இன்று ஒருவருகொருவர் வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்கள் சொல்வதில் யார் சொல்வதாவது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவர்களைப் பின்பற்றியவர்களை கடந்த 10 ஆண்டுகளாக முட்டாளாக்கி வைத்திருந்திருகிறார்கள். பத்து வருடம் கூட ஒன்றாக இருக்க முடியாதவர்களிடமா ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற தன்மையை எதிர் பார்க்க முடியும்?

உங்கள் தலைப்புக்கு வருகிறேன். இஸ்லாம் ஒரு இறை மார்க்கம். பாது காக்கப் பட்ட மார்க்கம். அதில் ஊடுருவல் செய்தவர்களே பின்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள செய்யும் ஈர்ப்பு உடையது. முஸ்லிம்களுக்கு மீடியா அவசியம்தான். அது மட்டும் இஸ்லாத்தை காக்காது.
மீடியாவைப் பார்த்து இஸ்லாத்தில் ஈர்க்கப் பட்டவர்கள் பிறகு வேறு தகவல் கிடைத்தால் அதன் மீதும் பற்று கொள்வார்கள். அவர்களுக்கு தகவல் மட்டும்தான் தேவை. உண்மையில் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றும் வழி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு SEARCH Engine மட்டும் உதவாது.

முதலில் முஸ்லிம்கள் தங்கள் நடை உடை பாவணையை இஸ்லாமிய முறையில் வைத்துக் கொள்ளட்டும். விவாதங்களும் மேடைப் பேச்சுகளும் மட்டும் இஸ்லாமிய மீடியா வளர்ச்சிக்கு உதவாது. (விவாதம் செய்யட்டும் இஸ்லாத்தை பற்றி குறை கூறி திரிபவர்களுடன்). போகிற போக்கில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து இஸ்லாத்தை காத்து வருவபவர்களை சீண்டி கொண்டிருக்காதீர்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடருவேன். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். வஸ்ஸலாம்.

-அதிரைக்காரன்-


http://vettippechu.blogspot.com/2005/04/blog-post.html

அபூ முஹை said...

சகோதரர் அதிரையார் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, மற்றும் தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகத் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது.

உண்மை உட்கார்ந்த இடத்திலிருந்து எழுவதற்கு முன், பொய் இந்த உலகத்தையே சுற்றி வந்து விடுகிறது. அந்த அளவுக்கு சுருங்கிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியவில்லையே ஏன்? இதை ஒவ்வொருவரும் அசை போட்டு தங்களின் கருத்துக்களை முன் வைக்கவும் நிர்வாகி கேட்டிருந்தார்.

இது ஒரு முயற்சிதான், ஆழ்கடல் சென்று வலை விரிக்கும் முயற்சியல்ல. வந்தால் வரட்டும் என்று கரையில் அமர்ந்து தூண்டிலைப்போட்டு மிதப்பில் கண் வைத்திருப்பவரின் முயற்சி.

தொலைக்காட்சிப் பெட்டியைத் தஜ்ஜாலாக ஒப்பிட்டு தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்ப்பது (ஹராம்) மார்க்கத்தில் விலக்கப்பட்டது என்று தப்லீக் இயக்கத்தினர் தீர்ப்பு வழங்கினார்கள். இதைத்தான் சகோதரர் அபூ உமரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இதை அறியாமலேயே சகோதரர் அபூ உமர் தப்லீக்கைத் தாக்கி எழுதி விட்டதாக, சகோதரர் அதிரையார் அவர்கள் தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்றே நாம் கருதுகிறோம்.

தஜ்ஜால் ஒற்றைக் கண்ணன் என்றாலும் இருகண்ணில் ஒன்று குருடாக இருக்கும், இரு புருவத்தின் நடுவில் காஃபிர் என்று அரபியில் எழுதப்பட்டிருக்கும் என்பதும் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும். இதையெல்லாம் பரிசீலிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டியை ஒற்றைக் கண்ணாக சித்தரித்து அதைப் பார்ப்பது ஹராம் என்று தப்லீக் இயக்கத்தினர் அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்கியது இஸ்லாம் நவீனங்களைத் தடை செய்கிறது என்ற அவலத்தைத்தான் இஸ்லாத்தின் மீது சுமத்தியது.

தொலைக்காட்சிப் பெட்டியை பார்க்கக்கூடாது என்று பல காரணங்களை சொல்லிக்கொண்டு பல அறிஞர்கள் பலதரப்பட்ட மார்க்கத் தீர்ப்புகளை வழங்கினார்கள் - இன்னும் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல் இணையத்திலும் ஊடுருவுவதும், ஆ.. இண்டர் நெட்டா? அது ''ஹராம்'' என்றும் தீர்ப்பு வழங்கும் மார்க்க அறிஞர்களும், அதைப் பின்பற்றும் மனிதர்களும் இன்றும்வரை இருக்கிறார்கள். இவர்கள் வரும் காலங்களிலும் இருப்பார்கள்.

இவையெல்லாம் இஸ்லாத்தோடு உரசிப் பார்க்காமல், இஸ்லாம் தடை செய்த ''நவீனங்கள்'' என்ற பொய் முத்திரை குத்தப்பட்டதாகும். முஸ்லிம்கள் செய்தி ஊடகங்களில் முன்னேறாததற்கு இந்தப் பொய் முத்திரைகளும் காரணமாக இருக்குமோ? என்ற கண்ணோட்டமும் சகோதரர் அபூ உமர் அவர்கள் முன் வைத்த கருத்தில் தொக்கியிருப்பதை விளங்கிக் கொண்டால் சரியாகிவிடும்.

அதிரையார் தவறாக விளங்கிக் கொண்டதால் அதன் வெளிப்பாடாகிய கீழ்கண்டது போன்ற மற்றக் கருத்துக்களை விட்டும் விலகியிருக்கிறோம்.

//என்னமோ தப்லீக்வாதிகள்! (தவ்ஹீத்வாதிகளின் எதிரி?) கட்டுக்கதைகளையும், வெட்டிவேலையையும் செய்து கொண்டு ஊர் சுற்றுவது மாதிரியும். இண்டர்நெட் அறிந்த தவ்ஹீதுவாதிகள்தான் மார்க்கத்தை கட்டிக் காப்பது போலவும் போகிற போக்கில் சீண்டி விட்டு சென்றுள்ளார்.//

குறிப்பு:- முழுக்க முழுக்கப் பின்பற்றத் தகுதியான ஒரே மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. எவ்வளவு பெரிய மார்க்க அறிஞராக இருந்தாலும் அவர் பின்பற்றத் தகுதியானவரல்ல. அறிஞர்களின் விளக்கங்களை குர்ஆன், சுன்னவோடு ஒப்பிட்டு ஏற்க வேண்டும் என்பதே நாங்கள் கொண்டதும், பிறருக்கு எத்தி வைக்கும் கொள்கையாகும். இங்கே P.J தாசன்கள் யாருமில்லை.

அபு யாசிர் said...

ஆசிரியர் அவர்களுக்கு,
நம் சமுதாயத்தில் எந்த ஒரு இயக்கமும் முழுமையான முறையில் இஸ்லாத்தை பின்பற்றி மார்க்க விசயத்தை நடைமுறை படுத்துவதில்லை. எல்லா இயக்கத்திலும் ஏதாவது குறை இருக்கிறது, ஆதலால் நாம் நடு நிலையுடன் இருந்து எந்த ஒரு இயக்கத்தையும் சாடாமல் நல்லதை எடுத்துக் கொள்வதுதான் நன்மை பயக்கும் என்பது என் கருத்து.

அபு யாசிர், அதிரை.

மாலிக் said...

உலகின் இரண்டாவது மிகப் பெரிய மார்க்கம் என்று ஏன் இஸ்லாத்திற்கு பச்ச குத்துறீங்க..? மார்க்கம் எங்கிற பதம் இஸ்லாத்துக்கு மட்டுமே பெருந்தும். அதன் அடிப்படையில் பார்த்தால் உலகில் முதன் முதலில் தோன்றிய மார்க்கமும், பெரும்பான்மையான மக்களால் கவரப்பட்டும், பின்பற்றப்பட்டும் வரும் மார்க்கம் 'இஸ்லாம்' மட்டுமே ஆகும்.

சரி விஷயத்துக்கு வர்ரேன்... படிக்கிற போது என்னோட வாத்தியாரு அடிக்கடி சொல்லுவாறு "ஊதுற சங்கை ஊதிட்டேன்.. விடிந்தால் விடியுது, விடியவில்லை என்றால் போகுது" இன்னொண்ணு "பாப்பாத்தியம்மா மாடு வந்துருச்சு, கட்டுனா கட்டு, கட்டாட்டி போ" என்னு, உண்மையிலேயே நம்ம சமுதாயம் தூங்கிட்டுதான் இருக்கு.. தட்டி எழுப்பவில்லை எனினும் உங்கள் முயற்சி சுரண்டியாவது விட்டு தூக்கத்தை கலைத்துவிடும் எங்கிற நம்பிக்கையிருக்கு..

ஏன் முஸ்லிம்கள் பரவலா மீடியாவில் தவறா சித்தரிக்கப்படுறாங்க? கல்வியில் பின்தங்கியிருக்காங்க? என்று கேட்டால், நீங்களே சொல்லிட்டீங்களே நம்ம சமுதாய மக்கள் தூங்கிட்டு இருக்காங்க என்று, அது மறுப்பதற்கில்லை.

இதைப்பற்றிய விரிவான கண்ணோட்டம் இன்றைய உலகத்துல தேவைப்படுகிறது.

இதுக்கெல்லாம் காரணங்கள் என்று பார்த்தால்

1) மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும் கல்வி நிலையங்கள் அளவிற்கு நம் சமுதாய மக்களால் நடத்தப்படும் கல்வி நிலையங்கள் இல்லை. ஏதோ விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுல வைத்துக்கொண்டு என்னா பண்றது?

நம்ம புள்ளைங்களை நல்லா படிக்க வைக்கனுமா? பக்கத்தில இருக்கிற செயின்ட் ஜோஸப், ஹோலி கிராஸ், ராமகிருஷ்ணா, வித்யாலயா இந்த மாதிரி இருக்கிற மிஷினரி ஸ்கூல் தானே தேவைப்படுது.

கல்வியில் முன்னேறாத ஒரு சமுதாய மக்களா நாங்க இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும்? மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறா சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக்கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்.

2) நம் சமுதாய மக்களிடத்தில் தொலைக்காட்சி சேனல்களோ அல்லது தினசரி பத்திரிக்கைகளோ உலக விஷயங்களை அறிந்து கொள்கிற இணையதளங்களோ அளவுக்கு அதிகமா இருக்கின்றதா? என்று பார்த்தால் அதுவும் இல்லையே.

தினசரி நாட்டு நடப்புச் செய்திகளைத் தெரிஞ்சுகலாம் என்றாலும் பத்திரிக்கையாயிருந்தாலும், இன்டர்நெட்டா இருந்தாலும் தினமலர், ஹிந்து இந்த மாதிரி மாற்று மதத்தவர்களால் நடத்தப்படுகின்ற செய்தி ஊடகங்களைத்தானே தேடிப்போக வேண்டியது இருக்கு..

3) அரசியலில் நம்ம முஸ்லிம்கள் முன்னேற வேண்டியது இருக்கு, அரசியல் என்றாலே அலர்ஜியாய் ஓடுறவங்க கூட இருக்காங்களே.. அடுத்து எப்படி படிச்சிருக்கிற கொஞ்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.. இதனால் அரசு வேலைவாய்ப்புகளிலும் பின்தங்கிதான் இருக்காங்க..

முஸ்லிம் சமுதாயம் கல்வியில் முன்னேறும், வேலைவாய்ப்பில் முன்னேறும், ஊடகங்களில் முன்னேறும் எப்பொழுது என்றால் அதற்கான வாய்ப்புகளும், வசதிகளையும் அமைத்துக் கொடுக்கப்படும்போது.. எத்தனை பேர் அதுக்கு முன்வருவாங்க? இருக்கிறவங்களே ஜமாத், ஜமாத்தா பிரிஞ்சு போனா எப்போ நாங்க ஒன்று கூடுறது.. இந்தப்பிரச்சனைகளுக்கு எல்லாம் போராடுறது?

இப்னு ஹம்துன். said...

இப்போது தான் பார்த்தேன். இது நல்லதொரு விவாதக்களம். பொறுமையாக பின்னர் வந்து கலந்துக்கொள்கிறேனே.

அபூ முஹை said...

//எல்லா இயக்கத்திலும் ஏதாவது குறை இருக்கிறது, ஆதலால் நாம் நடு நிலையுடன் இருந்து எந்த ஒரு இயக்கத்தையும் சாடாமல் நல்லதை எடுத்துக் கொள்வதுதான் நன்மை பயக்கும் என்பது என் கருத்து.//

அபூ யாசிர், சரியாகச் சொன்னீர்கள்!

மாலிக் said...

//முஸ்லிம்களுக்கு மீடியா அவசியம்தான். அது மட்டும் இஸ்லாத்தை காக்காது//
என்று அதிரைக்காரர் சொல்லியிருக்காரு..

நீங்க சொல்றதைப் பார்த்தால் ஊர், ஊரா அலைந்து சென்று சொல்லனும் என்கிறீர்களா?

மீடியாவெல்லாம் இந்த மாதிரி ஊரு, ஊரா பிரச்சாரத்துக்குப் போற முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதத்தைப் பரப்புறாங்க, இவங்க பள்ளி பள்ளியாகச் சென்று மக்களிடத்தில் வன்முறைக் கிளர்ச்சிகளை ஏற்படுத்துகிறார்கள். அதனால பள்ளிகளில் யாரும் இரவில் தங்கவிடக்கூடாது, என்று ஜமாத்தார்களுக்கு உத்தரவு எல்லாம் போட்டாங்களே மறந்துட்டீங்களா? இதுக்கெல்லாம் என்ன காரணம்? மீடியா வேண்டாம் என்றால் இன்னும் பல விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே..

மதரஸாக்களில் எல்லாம் வெடிகுண்டுகள் வைத்திருக்காங்க என்று சில வருடங்களுக்கு முன்னால் மீடியா எங்கிற கருவியைப் பயன்படுத்தித்தானே முஸ்லிம்களுக்கு எதிரா மதரஸாக்களை எல்லாம் மூடனும் என்று சூழ்ச்சி செய்தார்கள்.

ஊடகங்களில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகவில்லை என்றால் சமுதாய வளர்ச்சி என்பது பின்தங்கியேதான் இருக்கும்.

அரசியல், ஆட்சி இவையெல்லாம் தக்க வைத்துக்கொள்ளுவதற்கு எவ்வாறெல்லாம் சன் டி.வி, ஜெயா டி.வி போன்ற தொலைக்காட்சிகளின் செய்திகள் அமைந்துவிட்டன, என்று கவனித்துப் பார்த்தால் தெரியும்.
கட்சி செய்திகளும், கழகப்பணிகளும் நாங்க அதைச் செஞ்சோம், இதைச் செஞ்சோம் என்று பிலிம் காட்டி ஓட்டுகளை வாங்கிட்டுப் போயிடுறாங்க. இதையெல்லாம் அவர்களின் சுயலாபத்திற்குச் செய்யும்போது முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் இந்த அரசால் வஞ்சிக்கப்படுகின்றார்கள் நம் மக்களுக்கு எடுத்துரைக்க நாம் மீடியாவில் முன்னேற வேண்டாமா? உங்கள் வாதங்களை ஆக்கப்பூர்வமா மக்களுக்குப் பயனுள்ள வகையில் எடுத்து வைய்யுங்க.

ஒன்று பட்டால், உண்டு வாழ்வு என்று சொல்லுவாங்க. அதன் அடிப்படையில் பார்த்தோமானால் முஸ்லிம்களின் பிரச்சனைகள் என்று வந்துவிட்டால் சகோதர உணர்வோடு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து அணிதிரண்டால் மட்டுமே நம் நாட்டு அரசியல் சூழலில் வெற்றி வாகை சூடமுடியும். அதை விட்டு இவர் அப்படிப்பட்டவர், அவர் அப்படிப்பட்டவர் என்று ஆளாளுக்கு குற்றம்பிடித்துக்கொண்டு இருந்தால் மாற்றானால் நகைக்கப்படுவதுதான் மிச்சம்.

ரம்ஜான் நோன்பு மாதத்தில் அரசியல்வாதிகள் பள்ளிகளுக்குள் வருகிறார்கள். கஞ்சி குடிக்கிறார்கள், எல்லாம் எதற்கு பத்திரிக்கையில் தன் பெயர் வரனும், தன்னுடைய படம் வரனும், சகோரதர உணர்வோடு நான் முஸ்லிம் சமுதாயத்தில் எப்படி இருக்கின்றேன் பார்த்தியா.. என்று முஸ்லிம்களுக்கு ஊடகம் மூலம் போலி முகத்தைக் காட்டி அரசியல் லாபம் அடைய அவர்கள் ஊடகத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். வெற்றிக்குப்பின் மறந்துவிடுகிறார்கள்.

முஸ்லிம்கள் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்சனைகளை இதுபோன்று எப்போதாவது ஊடகங்களில் கொண்டு வந்திருக்கிறார்களா? ஏதோ சில வாழ்வுரிமை மாநாடுகளை நடத்தியதன் மூலம் ஓரளவிற்குக் கொண்டுவர முடிந்தது. இந்த வளர்ச்சி மட்டும் போதுமா? இதைவைத்து முன்னேறிவிட்டோம் என்று சொல்லமுடியாது.

தினசரிப் பத்திரிக்கைகளில் மாவட்டச் செய்திகள், தொகுதிப் பிரச்சனைகள் என்று சில பகுதிகள் உண்டு. அதில் தங்கள் தொகுதிப் பிரச்சனைகள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் பொது மக்களுக்கும் அதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கும் எடுத்து வைக்கலாம். ஆனால் இதை சரியாகப் பயன்படுத்தி பலன் அடைபவர்கள் யார் என்று பார்த்தால் நம் சமுதாயம் இல்லை. எல்லாம் அடுத்தவர்கள். வளைகுடா பணம் இருக்கு என்பதால் சின்னச் சின்ன விஷயங்களை நாம் கணக்கில் கொள்வதில்லை. இந்த நிலை மாற்ற வேண்டும்.

ஊடகங்களில் எங்கெல்லாம் தொகுதிப் பிரச்சனைகள் அரசுக்கு எடுத்து வைக்க முடியுமோ அங்கெல்லாம் தங்களின் கருத்துக்களை முஸ்லிம்கள் பதிவுசெய்யவேண்டும். அதன் மூலம் பலன் உண்டா என்றால் கண்டிப்பாக உண்டு.

மீடியாவில் மற்றவர்கள் எப்படியெல்லாம் முன்னேறிப்போயிருக்கிறார்கள், என்றாவது நாம் சிந்திக்கின்றோமா?

தமிழீய விடுதலை இயக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நம் நாட்டை இணைத்துப் பார்க்கும் போது பரப்பளவில் சிறிதான ஒரு துண்டு. தனி நாடு வேண்டும் என்று விடாப்புடியா போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று சேனல்கள், பத்திரிக்கைகள், இணையத்தளங்கள்..

ஆனால் நம் நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள், நீ முஸ்லிமா? பாக்கிஸ்தான்காரன், நீ இந்தியன் அல்ல, என்பதுபோல இந்தியாவை தனது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல் அவதூறான களங்கத்தைச் சுமந்த்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா? சிந்தித்தால் மட்டும் போதாது. இவற்றிற்கெல்லாம் ஊடகங்கள் மூலம் எதிர்கொள்ள சந்தர்ப்பங்கள் வரும்போது எதிர்த்தே ஆகவேண்டும்.

பிரபல்யமான மீடியா என்கிற சக்தி நம்மிடத்தில் இருந்திருக்குமேயானால் பாபர் மசூதிப் பிரச்சனை இவ்வாறு இழுத்துக்கொண்டு இருக்குமா? ஒவ்வொறு டிசம்பர் 6 அன்றும் போராட்டங்கள் நடத்துவதும், மனு கொடுப்பதும் தொடர்ந்திருக்குமா? என்றோ முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். முஸ்லிம் சமுதாயத்திற்கு வைக்கப்பட்ட கரும்புள்ளியல்லவா? பாபர் மசூதி இடிப்பு. அதை நாம் இன்று வரை மீட்டியிருக்கின்றோமா? அரசியல் தீய சக்திகள் அதை தங்கள் ஓட்டு வங்கிக்காக ஆயுதமாக்கியிருக்கிறார்களே? அந்தப் பாவிகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது...

குஜராத் கலவரம், மும்பைக் கலவரம், கோவைக் கலவரம் போன்றவைகளின் போது முஸ்லிம்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து வேடிக்கை பார்த்த கயவர்களை உலகிற்கு நம்மால் அடையாளம் காட்ட முடிந்ததா? அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடிந்ததா? இல்லையே!

அத்தகைய சூழ்நிலையிலும் அப்பாவி சகோதரர்களான முஸ்லிம்களைத்தானே தீவிரவாதி என்று பிடித்துச் சென்று அரக்ககுணம் கொண்டு கொடுமைப்படுத்தினார்கள். இத்தகைய நிலை நாளை நம் மீது வராது என்று சொல்ல என்ன நிச்சயம்.

இதுமட்டுமல்ல அரசு உதவிகள் என்று எடுத்துக்கொண்டால் ஆதி திராவிடர்களுக்கென்று எத்தனை கல்வி நிலையங்கள், மாணவர் விடுதிகள் அரசு மானியத்தில் இருக்கின்றன. நம் சமுதாய மக்களால் நடத்தப்படும் கல்வி நிலையங்களின் நிலை என்ன? அரசு உதவிகளை நம் சமுதாயம் முழுமையாகப் பெற்றிருக்கின்றதா? இல்லை. ஏன் நாம் இந்த அரசுக்கு வரி கட்டவில்லையா? அல்லது நாங்கள் இந்நாட்டுப் பிரஜைகள் இல்லையா? இத்தகைய நிலை மாற வேண்டும் (மாற்ற வேண்டும்)

மீடியாவில் வளர்ச்சி என்ற கருத்துப்படிவம் என்னவென்றால் இவ்வாறான முன்னேற்றங்களில் நம் சமுதாய மக்கள் வளர்ச்சியடைந்துவிட்டார்களா? என்பதுதான். இறைவனின் துணைகொண்டு முயன்றால் வெற்றி நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்)

-மாலிக்-

Abu Umar said...

மீடியாவில் "ஏன் பின்தங்கியிருக்கிறோம்" என்ற தலைப்பின் ஊடே "ஏன் அவசியம்" என்ற தலைப்பும் சேர்ந்துவருவதால் தலைப்பை விட்டு விலகுவது போன்று தோன்றலாம்.

என் முதல் வாய்ப்பில், ஒரு குறிப்பிட்ட மீடியாவை, அதன் அடுத்த பரிணாமத்தில் கால் எடுத்துவைத்த பிறகுதான் தாமதமாக அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அடைகிறோம் என்றும் அதற்கு காரணம் மீடியா பற்றி தவறான எண்ணம் முஸ்லிம் சமூகத்தில் விதைக்கப்பட்டதும் என குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டாவது வாய்ப்பில், ஒரு முஸ்லிம் என்பதால் நமக்கு இருக்கவேண்டிய திறமை, திட்டமிடல் போன்ற உயர்ந்த குணங்கள் இல்லாததால் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வருமுன் காப்போம்

மூன்றாவதாக நமது மீடியா முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நம்மிடம் உள்ள அலட்சிய குணங்களும் ஒன்று.

இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும் பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.

மாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை.

குஜராத் போன்ற கலவரங்களை உண்டாக்கி அக்கலவர நேரத்தில் முஸ்லிம்களுக்கு நடுநிலை சகோதரர்கள்கூட உதவ முன்வரக்கூடாது என்ற பாசிச நோக்கில் இஸ்லாத்தைப்பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தவறான கருத்துகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

இப்படியே போனால் நம் நிலைமைதான் என்ன?
இந்திய முஸ்லிம்களும் அகதிகளாக ஆக்கப்பட்டப்பிறதுதான் கண்விழிக்க வேண்டுமா?
இதற்கு ஸ்பெயின், பாலஸ்தீனம், குஜராத் படிப்பினைகள் நமக்கு போதாதா?
நாம் நமது குழந்தைகளுக்கு சேர்த்து வைப்பது சொத்த மட்டும்தானா? பாதுகாப்பு வேண்டாமா?

தமிழ் ஈழ போராளிகள் அகதிகளாக ஆக்கப்பட்ட பிறகும் அவர்களின் பாதிப்பின் ஆழம் அவர்களை கூனி குறுகிபோய்விடாமல் மீடியாவில் முன்னேறச் செய்கிறது. ஏன் நாம் வரும்முன் காக்கக்கூடாதா?

ஆகவே நமது அலட்சியங்களை கைவிட்டு நம்மீது கட்டவிழ்த்துவிடப்படும் அநியாயங்களை உலகிற்கு பறைசாட்டவும், இஸ்லாம் மீதான தவறான குற்றச்சாட்டுகளை களையவும் மீடியாவில் முன்னேறலாமா?

-அபூ உமர்-

மாலிக் said...

நிர்வாகி தொடக்கத்தில் சொல்லியிருப்பது,
//'அல்-ஜஸீரா' என்ற அரபிச் செய்தி சேனல் இருந்தாலும் அதனையும் முடக்குவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது//

//உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இதுவரை முழுநேர ஆங்கில சேனல் இல்லை.//

அல்-ஜஸீரா தொலைக்காட்சி முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை படம் பிடித்தும் உலக அளவில் அம்பலப்படுத்தி அமெரிக்காவின் முகத்திரையைக் கிழிக்க முற்படும் போது, அமெரிக்கா அதனை பல்வேறு வழியில் முடக்க முன்வருகின்றது. அல்-ஜஸீரா அரபி மொழி தொலைக்காட்சி என்பதால் வளைகுடா நாடுகளில் இருக்கும் அரபிதெரிந்தவர்களுக்கு மட்டுமே அதைப்பற்றிய செய்திகள் அறிந்துகொள்ள முடிகின்றது. அல்-ஜஸீரா சேனலைப்போன்று முழுநேர முஸ்லிம் சேனல் இருந்தால் உலக அளவில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் தாக்குதல்களை மக்களுக்கு வெளிச்சப்படுத்தலாம்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படையினர்களை எதிர்த்து மனிதநேய அடிப்படையில் அந்த நாட்டின் மக்களே பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு முழுச்செய்தியும் அவர்கள் மொழியிலேயே சென்று அடைந்திருக்குமேயானால் அவை இன்னும் மேலோங்கியிருக்கும். முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிக்கும் சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகள் அவிழ்த்துவிடும் பொய்ச்செய்திகள் மக்கள் மத்தியில் வெளிச்சப்பட்டுப்போயிருக்கும்.

அதே சமயம் முஸ்லிம்களிடத்தில் ஆங்கிலச் சேனல்கள் இருந்திருக்குமேயானால் இஸ்லாத்தில் பொதிந்திருக்கும் பொக்கிஷக் கருத்துக்களும் அவர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கும். மீடியாவின் வளர்ச்சியில் ஆங்கிலம் என்ற மொழிக் கருவியை பயன்படுத்தினால் உலக அளவில் மீடியாவில் முஸ்லிம்கள் முன்னேறுவார்கள்.

விவாதத்தின் தொடக்கத்தில்
//நமது மீடியா வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று முஸ்லிம்கள் புதிய தொழிற்நுட்பங்களை விரைவில் அங்கீகரிக்காததாகும்// என்று அபூ உமர் குறிப்பிட்டிருந்தார்.

உங்க கருத்து ஏற்றாக வேண்டிய ஒன்றுதான். ஆனால் மீடியாவில் எந்த ஒரு நவீனக் கண்டுபிடிப்பு வந்தாலும் அதைத் தவறான வழியில் பயன்படு(பயன்படுத்தப்படுவ)தால் அது ஹராம் என்று பிரச்சாரம் செய்யிற அளவிற்குச் சென்றுவிடுகிறது. காரணம் அதை எவ்வாறெல்லாம் நல்ல வழியில் பயன்படுத்துவது, அதைக்கொண்டு மனித வளர்ச்சிக்கும், ஆக்கப்பூர்வ செயல்களுக்கும் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி முஸ்லிம்கள் சிந்திக்க மறந்துவிட்டனர்.

இதுக்கு மாற்று வழிதான் கண்டுபிடிக்க முயலுனுமே ஒழிய, ஹராம் என்று சொல்லிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.

மீடியாவின் வளர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்தி வராததன் காரணம்தான் இன்றைக்கும் பலபேராலும் இஸ்லாமும், முஸ்லிம்களும் தவறா சித்தரிக்கப்படுகின்றார்கள்.

இந்த அடிப்படையில்தானே இஸ்லாம் மற்றவர்களுக்கும் டாண் டி.வி, விண் டி.வி மூலமா எத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தச் சேனல்களும் நமக்குச் சொந்தமா? ஆயிரத்தெட்டு விளம்பரங்கள் வாங்குனாதான் ஒரு மணிநேர நிகழ்ச்சியை நடத்த முடிகின்றது. எத்தனைபேர் விளம்பரங்கள் வேண்டாம் நிகழ்ச்சி நடந்தால் போதும் என்று நன்கொடையளிக்க முன்வருகிறாங்க?

அதே டாண் டி.வியில் கிருஸ்துவர்கள் நிகழ்ச்சிகள் மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று மாறி மாறி கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் ஒளிபரப்பாகுதே. அவங்க முயற்சிக்கு முன்னாடி நம்ம சமுதாய மக்கள் முயற்சி சிறியது மாதிரிதான் இருக்கு.

டாண் டி.வி புரோகிராம் இன்று உலகம் முழுவதும் பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது. மலையாளிகள் உட்பட இந்த முயற்சியை பாராட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ரமலான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் மட்டும் சில செய்திகளை மட்டும் ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த நிலை இன்று மாறி தினமும் ஒரு மணிநேரம் என்ற அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கு. ஆனால் இது ஆமை வேகம்தான் என்று சொல்லலாம்.

முஸ்லிம்களிடம் இருக்கும் பெரிய பெரிய ஸ்தாபனங்கள் தங்கள் விளம்பரங்ளை இந்தமாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தால் அதற்கான ஏற்பாடு செய்து முழு நேர சேனல்கள் தமிழில் ஏன் தொடங்க முடியாது? தாராளமாகத் துவங்கலாம். அதற்கான முயற்சி தனி ஒரு மனிதனால் முடியாத ஒன்று. இந்த விஷயங்களை முஸ்லிம் அமைப்புகளிடத்தில் எடுத்து வைத்தால், அதற்கு அவர்கள் முன்வந்தால் முஸ்லிம்கள் மீடியாவில் பின் தங்கியிருப்பது ஓரளவிற்குச் சரிகட்டலாம்! என்பது என் கருத்து.

சேனல்களைப் போன்று அடுத்து உலகத்தையே உருண்டு வரும் ஒரு மீடியாதான் இணையம். இந்த வளர்ச்சியில் நம் சமுதாயம் மிகவும் பின் தங்கித்தான் இருக்கு. இணையத்தில் இருக்கின்ற இஸ்லாமிக் இணையதளங்களைத் திறப்பதைவிட முஸ்லிம்களில் பலர் மற்ற கில்மாக்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

தமிழ் இஸ்லாமிய இணையங்களைப் பற்றி அபூ உமர் சொல்ல வரும் போது எழுத்துருக்கள் சிக்கல் பற்றியும் சொல்லியிருந்தார். தமிழ்முஸ்லிம், இதுதான் இஸ்லாம், இஸ்லாமிக் தாஃவா போன்ற இணையங்கள் எல்லாம் சாருகேசி எழுத்துக்களைவிட்டு யுனிகோட் எழுத்துருக்களுக்கு மாறினால் தற்போது அது பயன்படும் அளவைவிட பத்து மடங்கு அதிகமாக மக்களுக்குப் பயன்படும் என்பதில் ஐயமில்லை. செய்தி சிறியதா இருந்தாலும் இதுவும் மீடியா வளர்ச்சியின் ஒரு படிக்கல் என்றே கொள்ளலாம்.

-மாலிக் கான்-

வாசகன் said...

முஸ்லிம்கள் மீடியாவில் முன்னேறாமல் இருப்பதன் காரணங்கள்:

1. கல்வியில் பின்தங்கியிருப்பது
2. வியாபாரத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம். மற்ற சிந்தனைக்கு இடமில்லாமல் இருப்பது அல்லது அதற்கு நேரம் பற்றாக்குறை. (மீடியாவாவது கீடியாவாவது)
3. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் மற்றதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்ற மனநிலை.
4. படித்தவர்களும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிலர் மீடியாவில் இருந்தாலும் அவர்களால் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
5. குடும்ப சூழ்நிலை - எதற்கு இந்த ஊர் வம்பெல்லாம் என்ற கட்டுப்பாடு
6. முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒருசில மீடியாவுக்கும் மற்ற முஸ்லிம் சகோதரர்களின் ஒத்துழைப்பு இல்லை.

-முஹம்மது அலி-

வாசகன் said...

முஸ்லிம் மீடியா - பின்னடைவுக்கு காரணங்கள்:
1. கல்வியில் பின்தங்கியிருப்பதுதான் முதல் பிரச்சினையே
2. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் முஸ்லிம் நாடுகளின் இயலாமை.
3. பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நிலையில் இருக்கும் நாடுகள், மீடியாவை அதன் இஷ்டத்துக்கு விட்டால் தனது பதிவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைத்து கட்டுப்படுத்துதல்.
4. படித்தவர்கள் தங்கள் வியாபார நோக்கில் மட்டுமே மீடியாவை அணுகுகிறார்கள். அதனால் முஸ்லிம்கள் அடிப்பட்டாலும் இஸ்லாம் தாக்கப்பட்டாலும் அவர்களுக்கு கவலையில்லை.
5. மற்ற மீடியாவின் போட்டியை சமாளிக்க முடியாமை.
6. ஒரு சில விஷயத்தில் மற்ற மீடியாவின் தவறான போக்குகளை தட்டிகேட்டால் குரல்வளை நெறிக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கை.
7. டீ.வி, வீடியோ, சி.டி., இணையம் இவையெல்லாமே ஹராம் என்ற தவறான முடிவு.
8. மதரசாக்களில் கொடுக்கப்படும் கல்வியின் தரம்.
இன்னும் இது போன்றவை.

-ஷரஃபுதீன்-

Abu Umar said...

இஸ்லாம் சம்பந்தமான மீடியா என்றாலே "குர்ஆன், ஹதீஸ்" மட்டும்தான் இருக்கவேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள்.

இதுதான் நமது மீடியாக்கள் மண்ணை கவ்வுவதற்கு இன்னொரு காரணம். அப்படியென்றால் சினிமாவும், பாட்டும், சிம்ரனின் பேட்டியும் போடலாம் என்கிறீர்களா? என்ற கேள்வி வரும்.

ஏன் டாகுமென்டரி காட்டக்கூடாது.
சி.என்.என்., பி.பி.சி, அல்ஜஸீரா போன்று சேனல் தொடங்கினால் என்ன?

மருத்துவ குறிப்புகள், செய்திகள், ஆராய்ச்சி கட்டுரைகள், வியாபார குறிப்புகள், விஞ்ஞான செய்திகள், மாணவ செய்திகள், சிறுவர் கதைகள், சுற்றுலா தகவல்கள், கணினி கட்டுரைகள் போன்ற செய்திகள் அடங்கிய இணையதளம் இருக்கக்கூடாதா?

இஸ்லாமிய தளம் என்றால் "கதை", "கவிதை" இவற்றிற்கு என்ன வேலை என்று கேட்பவர்களும் உண்டு.
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை திட்டம் என்கிறோம். ஆனால் வணக்க வழிபாடு மட்டுமே இஸ்லாம் என்பதுபோல் தனிப்பட்ட வாழ்விலும், நமது மீடியாக்களிலும் நடந்துக்கொள்கிறோம். இப்படி இருந்தால் வெற்றி எப்படி வரும்?

-அபூ உமர்-

அபு யாசிர் said...

நண்பர் மாலிக்
//டாண் டி.வி புரோகிராம் இன்று உலகம் முழுவதும் பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது. மலையாளிகள் உட்பட இந்த முயற்சியை பாராட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள்//

இவ்வாறு நம் சமுதாயத்தில் ஒரு சில மணி நேரங்கள் புரோகிராம் கூட விளம்பரம் என்ற பெயரில் இசை, பெண்களை சரியான பர்தா இல்லாமல் காட்டக் கூடிய காரணங்களால் அதையும் பார்ப்பதற்கும் நம்மில் சிலர் குறை சொல்கிறார்கள், அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருந்தாலும், நல்ல விசயங்களை கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுது இடையில் விளம்பரம் திசை திருப்புகிறது, அது இல்லாமல் நிகழ்ச்சியை நடத்துவதும் முடியாத ஒன்று. ஆக ஒரு முழுமையான இஸ்லாமிய நிகழ்ச்சியை பார்ப்பதென்பது இன்றைய சூழ் நிலையில் அறிதாகதான் இருக்கிறது.

இணையம் என்பது பலருக்கும் இன்னும் எட்டாக் கணியாக தான் இருக்கிறது, ஊடகம் மட்டுமல்லாமல் பல இஸ்லாமிய இயக்கங்கள் செய்யக் கூடிய பணிகளும் இன்றைய காலக்கட்டத்தில் 2ம் (ஊடகம்/பணி) தேவைதான்.

எல்லா (இயக்கங்களும்) ஒரே காரியத்தை செய்வது என்பது முடியதா ஒன்று ஆதலால் பலரும் பல காரியங்களில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது.

அபு உமர் எழுதியதைப் போன்று நமக்கு என்று இணைய தளம், பத்திரிக்கைகள் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் டி வி என்று வரும் பொழுது அல்ஜஸீரா போன்ற சேனல்களில் கூட இசை மற்றும் இஸ்லாத்திற்கு மாற்றமான காட்சிகள் போன்றவை இடம் பெற ஏதுவாகிறது.
-அபு யாசிர்.

Abu Umar said...

தேவையான பயிற்சி இல்லாமை
இதுவும் ஊடகத்துறையில் நாம் பின்தங்கியிருப்பதன் காரணத்தில் ஒன்றாகும். உலகம் மிகச்சுருங்கி விட்டது. இன்று உங்களின் ஊடகத்தில் வெளிப்படுத்திய செய்தி, இன்னொரு ஊடகத்தில் விவாதமாக நடந்துக்கொண்டிருக்கும். முடிந்தவரை இதனை எதிர்கொள்ளவேண்டிய முறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

டார்வினின் பரினாமக்கொள்கை நிரூபிக்கப்படாத ஒன்று என்று அனைவரும் அறிந்ததே. இதுதான்இஸ்லாம்.காம் தளத்தில் இது சம்பந்தமாக வந்த கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து டார்வினுக்கு ஆதரவாக ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு சரியான கோணத்தில் மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனக்கும் இதில் அனுபவம் உண்டு. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம்கள் செய்த உதவிகளைப் பார்த்து முஸ்லிமல்லாதவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளும் அமைப்புகளும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டன. இந்த நேரத்தில் அதனைப்பற்றி எனது வலைப்பதிவில் எழுதியிருந்ததற்கு, நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று மறுப்பு எழுதியிருந்தார். அடுத்த சில மணிநேரங்களில் இணையத்திலிருந்தே தேடி அவருக்கு ஆதாரத்தை எழுதினேன்.

இதுபோன்றவர்களை எதிர்கொள்ளவும் தெரிந்திருக்கவேண்டும். அப்படியில்லையென்றால் உங்களின் ஊடகத்தை பாடையில் ஏற்றிவிடுவார்கள்.

இப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் நடத்தும் வார/மாத இதழ்களில் இதழியல் பயிற்சி பற்றிய விளம்பரங்களை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது.
-அபூ உமர்-

அதிரைக்காரன் said...

சகோதரர் மாலிக் சொல்கிறார்:
//நீங்க சொல்றதைப் பார்த்தால் ஊர், ஊரா அலைந்து சென்று சொல்லனும் என்கிறீர்களா? //
பின்னிட்டிங்க போங்க. ஊர் ஊரா இல்லை சகோதரரே தேவைப்பட்டால் தெருத்தெருவாக கூட போயி சொல்வதுதான், தஃவா (இஸ்லாமிய அழைப்பு) என்று பெயர். அவ்வாறுதான் இஸ்லாம் அரேபியாவிலிருந்து இந்தியாவரை எடுத்து வரப்பட்டது.
T.V.யை தஜ்ஜாலாக ஒப்பிட்டது அறியாமையின் வெளிப்பாடு மட்டுமின்றி ஆடல்களும் பாடல்களும் தான் T.V. யின் பிரதான நிகழ்சிகளாக இருந்த கால கட்டத்தில் சொல்லப் பட்ட உவமை. இதுதான் சாக்கு என்று தப்லீக் காரர்களை போட்டு தாக்குவதுதான் ஏன்? என்பதுதான் என் வாதம்.
மீடியா என்பது விசுவலாக ஒரு செய்தியை சொல்லும் ஊடகம். டைனோசாரைப் பற்றி சொன்னால், Stephen Spielberg கின் Jurassic Park டைனோசார்தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு மீடியாவின் தாக்கம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
மீடியாவில் முஸ்லீம்கள் முன்னேறி இருந்தால் இத்தகைய இழி நிலைக்கு ஆழாகி இருக்க மாட்டோம் என்பது ஒரு புறம் உண்மையாக இருந்த போதிலும், மீடியா இல்லாத கால கட்டத்திலும் இஸ்லாம் சர்வ சாதாரணமாக பரவி வந்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
யூதர்கள் கையில் தான் பிரபலமான மீடியாக்களெல்லாம் இருக்கின்றன. எனினும் யூத மதம் எத்தனை நாடுகளில் பரவி விட்டது? கிறிஸ்தவர்களும் மதப் பிரச்சாரத்தை மீடியாவில் செய்த போதிலும், கிறிஸ்தவர்களான ஜார்ஜ் புஸ்ஸும், டோனி பிளேயர் போன்ற அரசியல்வாதிகள் செய்த கொடுமைகள் நியாயப் படுத்தப் படவில்லை.
இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்க மீடியா அவசியம் என்றால் இஸ்லாத்திலிருந்து உலகமயமாக்களாலும் இன்னும் பிற காரணங்களாலும் வெளியேறிக் கொண்டிருப்பவர்களை யார் எடுத்து சொல்லி தடுப்பது? முஸ்லிம்களுக்குள்ளேயே இஸ்லாத்தை எடுத்து சொல்லி வருவதைதானே தப்லீக்வாலாக்கள் செய்து வருகிறார்கள்.
கல்வியும் அதிகாரமும் இருக்கும்போதே சங்கராச்சாரிகளிடம் மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்கும் முஸ்லிம் ஜனாதிபதிகளை எந்த மீடியாவால் திருத்த முடியும்? அவர்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியேறி விட்டார்கள் என்று பரிகசித்து விட்டு ஒதுங்கி விடுவதா? அவர்களுக்கும் மீண்டும் மீண்டும் இஸ்லாத்தை எடுத்து சொல்வது யார்?
என் அபிப்ராயம் என்னவெனில், முஸ்லிம்கள் மீடியாவில் மட்டுமல்ல எந்த துறையிலும் முன்னேறாமல் இருப்பது, மஸாயில்களில் தர்க்கம் செய்து கொண்டிருப்பதால்தான். முதலில் இருக்கும் முஸ்லிம்கள், முழு முஸ்லிமாக இருக்காவிட்டாலும், இஸ்லாத்திலிருந்து விலகாமால் இருந்தால் அதுவே போதும்.
நாம் இந்த அளவாவது இஸ்லாத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டைருப்பது யாரோ சிலர் நமக்கு எடுத்து வைத்ததால்தான். ஓட்டையாகிப் போன படகை சரி செய்கிறேன் பேர்வழி என்று, அறியாமல் ஓட்டை போட்டவனை நடு ஆற்றில் இறக்கி விடுவது என்ன நியாயம்?வந்தமாட்டையும் கட்டாமல் போன மாட்டையும் தேடாமல் இருப்பது அறிவுடைமை ஆகாது. தப்லீக் காரர்களை வந்த மாட்டை கட்டுபவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போன மாட்டை தேடுங்கள். தயவு செய்து வந்த மாட்டை கட்டமாட்டேன் போன மாட்டை மட்டும் தேடுவேன் என்று சொல்லாதீர்கள்.
இஸ்லாத்தை பரப்ப மீடியா அவசியம் என்றால் அதற்கு சாடிலைட் சானல்கள் மட்டும் அவசியமில்லை சகோதரரே, அதைவிட குறைந்த செலவில் ஒரு ஈமெயில் போதும். முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் காலம் காலமாக இருந்து வருகிறது. அதற்கு மீடியா மூலம்தான் பதில் தரவேண்டும் என்பது சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது போல்தான்.
எதார்த்தமாக சொல்வதென்றால், முஸ்லிம்களே கூட இஸ்லாமிய நிகழ்சிகளை பார்க்க மாட்டார்கள். பிறகு எப்படி மாற்று மதத்தவர்களிடம் எடுபடும்?. ஏனெனில் தற்கால மீடியா என்பது சந்தைப் பொருளாதாரத்தின் கோர முகம்தான். அறைகுறை ஆடைகளுடன் வந்தால்தான் அழகு படுத்தும் சாதனங்கள் கூட விளம்பரப் படுத்த முடியும். எயிட்ஸ் ஒழிக்க கூட ஒரு சினிமா நடிகை சொல்ல வேண்டிருக்கிறது.
முஸ்லிம்கள் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய காலங்களில் அவர்கள் துறை விற்பன்னராக மட்டுமின்றி உண்மையான முஸ்லிமாகவும் இருந்தார்கள். நாம் என்று உலக கல்வியிலும் உலக அரசியலிலும் கவனம் திருப்பப் பட்டர்களோ, அன்றுதான் முஸ்லிகளின் வீழ்ச்சி தொடங்கியது.
மாற்றுக்கருத்து சொல்பவர் அறியாமையில் இருக்கிறார் அல்லது தவராக புரிந்து கொண்டுள்ளார் என்று ஒதுக்கி/ஒதுங்கி விடாதீர்கள். அது கருத்து திணிப்பாகும். அல்லது விவாததிற்கு தயாரா என்று சவால் விட்டு உங்கள் ஆளுமையை காட்ட முயற்சிக்காதீர்கள். நமது குறிக்கோல் கடலைக் கடப்பது மட்டுமல்ல, பயணமும் வெற்றியாக வேண்டும்.
சகோதரர்களே, விவாத தலைப்பு "முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்" சில சகோதர்கள் விவாத பாதையிலிருந்து வேறு விவாதங்களுடன் குழப்பிக் கொண்ட்டுள்ளார்களோ என நினைக்கிறேன்.

மாலிக் said...

முஸ்லிம்கள் மீடியாவில் பின் தங்கியிருப்பதன் காரணங்கள் மட்டுமே இந்த விவாதத்தில் அலசிவிட்டுச் சென்றால் முன்னேற்றம் என்பது தற்பொழுது எந்த வேகத்தில் இருக்கின்றதோ அதே ஆமை வேகத்தில்தான் இருக்கும். முஸ்லிம்களின் கல்வி, இட ஒதுக்கீடு, தனி நபர் பாதிப்பு இவ்வாறான நிகழ்வுகளின்போது சகோதர உணர்வோடு களம் இறங்கினால் மட்டுமே வெற்றிகாணமுடியும்.

நடைமுறை வாழ்க்கையில் இது சாத்தியமாகுமா? ஒற்றுமை என்ற பண்பு நம் சமுதாய மக்களிடமிருந்து எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.

உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள், முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்காக ஜெயலலிதாவுடனும் நம்மவர்கள் மேடையேறினார்கள். சிறுபான்மை மக்கள் நலனுக்காகவும், மக்கள் நலப் பணிகளுக்காகவும் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற கொள்கையுடையவர்களுடனும் மேடையேறியிருக்கின்றார்கள்.

பண்பாட்டைச் சீரழிக்கும் காதலர்தினக் கொண்டாட்டங்கள், செக்ஸ் தொலைபேசிகள் போன்றவைகள் இந்தியாவில் நுழையும்போது அதை எதிர்த்துக் கண்டனக்குரல் எழுப்பியது பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுச் சீரழிவை கருத்தில் கொண்டு நம் சமுதாயத் தலைவர்களும் அவர்கள் பங்கிற்கு ஆதரவுக்குரல் கொடுத்தார்கள். அங்கே கொள்கைகளோ மாற்றான் என்ற மனநிலையோ முன் நிறுத்தவில்லை.

முஸ்லிம் சமுதாயத்தைப் பலவழிகளில் கருவறுக்கும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள் ஆனாலும் சரி, கடவுள் என்ற கொள்கை காட்டுமிராண்டித்தனம் என்று வாதிடும் கூட்டமாயினும் சரி, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதியாயினும் சரி, பொதுவான பிரச்சனையென்றால் நாம் ஒன்று பட்டு அவர்களுடனும் மேடையேறுவோம் என்று முன்மொழிந்த சமுதாயத் தலைவர்களின் இன்றைய நிலை என்ன?

காவிரிப் பிரச்சனையில் அனைத்துக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதமோ அல்லது கண்டன ஆர்ப்பாட்டமோ செய்ய வேண்டிய சூழலில் அவர்கள் தங்களுக்குள் பகைமை பாராமல் ஒன்று திரளுகிறார்கள்.

இந்தப் பண்பு நம் சமுதாயத் தலைவர்களிடத்தில் தற்பொழுது எதிர்பார்க்க முடிகின்றதா? அல்லது இத்தகைய சூழலை நம்மால் கற்பனையாவது செய்துபார்க்கத்தான் முடிகின்றதா?

டிசம்பர் 6, முஸ்லிம்களின் பொதுப்பிரச்சனைதானே, ஏன் அதிலும் வேறுபட்டு, வெவ்வேறான போராட்டங்கள்தான் நடத்தவேண்டுமா? தனித்தனியேதான் மனு கொடுக்கவேண்டுமா?

இவர்களின் பிரிவு மீடியாவின் வளர்ச்சிக்கும், முஸ்லிம் சமுதாயப் பணிகளுக்கும் மிகப்பெரிய பின்னடைவு இல்லையா? இதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்?

2003-ல் ஜெனீவாவில் நடந்த சிறுபான்மையர்களின் மாநாட்டில் முஸ்லிம்கள் பிரச்சனைகள் குறித்து உலக அரங்கில் எடுத்துவைக்க முடிந்தது என்றால், தனி ஒரு நபரின் முயற்சியா அது? எத்தனை சகோதரர்களின் தியாகங்கள். மீடியாவில் அந்நிகழ்வு ஒரு முன்னேற்றம்தானே. அதற்கு வித்திட்டது எது? முஸ்லிம்களின் ஒற்றுமைதானே.

வெள்ளையனை எதிர்த்துப் போராடி இன்னுயிர் நீத்த முஸ்லிம்களின் தியாக வரலாறுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனது எதனால்? மீடியா என்ற வளர்ச்சியில் நாம் பின்தங்கியிருந்ததால்தானே!

கார்கில் போரை எடுத்துக்கொள்ளுங்கள், பாகிஸ்தானியர்களின் படை இந்திய எல்லையில் அத்து மீறி நுழைந்துவிட்டதன் பின் விழிப்படைந்த இந்திய ராணுவம் எதிர்த்துப் போராடியது. அந்தப் போரிலும் முஸ்லிம்கள் தங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக வீர மரணம் அடைந்தார்கள். எனினும் அச்சமயம் மீடியாக்கள் செய்திகளை எந்தத் தோரணணையில் வெளியிட்டார்கள். போர் நடப்பது இருநாடுகளுக்கு மத்தியில் ஆயினும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் இந்தியர்களுக்கும் என்ற சித்தரிப்பு முறையில் செய்திகளை வெளியிட்டார்கள். நம்மவர்களின் தியாகங்களை மறைத்தார்கள்.

1997 ஆம் ஆண்டு டிசம்பர் 6 சென்னையில் கண்டனப் பேரணி நடத்த முஸ்லிம்கள் அனுமதிகோரினர். அப்போது முஸ்லிம்கள் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் எந்தெந்த ஊர்களில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றார்களோ அங்கெல்லாம் காவல் துறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை என்ற பெயரில் பெருவாரியான முஸ்லிம்களை கைது செய்தது. முஸ்லிம் ஜமாத் தலைவர்களில் சிலர் அதற்கு ஆதரவாக வீடுவீடாகச் சென்று போராட்டம், பேரணி, கைது இதெல்லாம் நமக்கு அவசியமா? பேசாமல் உங்கள் இளைஞர்களை வீட்டில் இருக்கச் சொல்லுங்கள் என்றும் கூறினர்.

எங்கெல்லாம் முஸ்லிம்கள் பெயரில் அதிகமான ரயில் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததோ அவையெல்லாம் ரத்து செய்யப்பட்டன. மேலும் முஸ்லிம் பயணிகள் அனைவரும் அந்தந்த ஊர்களிலேயே கைது செய்யப்பட்டனர்.

தடையையும் மீறி, கொட்டும் மழையில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குழுமி பாபர் மசூதியை மீட்க குரல் எழுப்பினார்கள். அவர்கள் அனைவரையும் காவல் துறை கைது செய்ய நேரிடும்போது, பேருந்து வசதியின்றியும், தங்க வைப்பதற்கு இடவசதியின்றியும் திணறியது. இச்சூழலிலும் சன் டி.வி முதல்கொண்டு பத்திரிக்கைகள் எல்லாம் மக்கள் மத்தியில் செய்தியை இவ்வாறு பரப்பின.

"தடையை மீறி முஸ்லிம்கள் பேரணி நடந்த முன்வந்தனர். சுமார் 500 பேர் கைதானார்கள்" என்று.

இதற்குக் காரணம் முஸ்லிம்களின் பெரும்பான்மையை பறைசாற்ற இவர்களுக்கு மனமில்லை.
அதே போன்று தனிநபர் பாதிப்புக்கும் சமுதாய பாதிப்புக்கும் மீடியாவின் வளர்ச்சி மிகவும் அவசியம். கோவைக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை வசூலித்து மக்களுக்கு உதவ முன்வந்த முஸ்லிம் அமைப்புகளால் சுமார் 3 கோடிக்கும் மேல் எப்படி வசூல் செய்ய முடிந்தது. பத்திரிக்கை என்ற வலுவான மீடியா இருந்ததால்தானே அது சாத்தியமானது.

இவ்வாறான நிகழ்வுகளால் மீடியாவில் வளர்ச்சியடைந்தால் நம் சமுதாயம் முன்னேறும் என்பதையும் அறியமுடிகிறது. மீடியாவில் பின்தங்கியிருந்தால் அதற்கான பாதிப்புகள் எப்படி அமையும் என்பதையும் அறியமுடிகிறது.

ஆகவே முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் தலையீடுகள் ஊடகங்களில் அதிகமாக வேண்டும். அதன் மூலம் நல்ல எதிர்காலமும் பயனுள்ள விளைவுகளும் எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

-மாலிக்-

இப்னு ஹம்துன். said...

அந்தக் காலத்தில் மைக் ஹராம் ஆங்கிலம் ஹராம் என்று சொன்னதுப் போல இப்போது சொல்ல முடியாது.'துர்' முக்தாருக்கெல்லம் இன்று இடமிருப்பதாகத் தெரிய்வில்லை. காரணம், ஓரளவுக்கேனும் நமது சமூகத்தார் விழிப்புணர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.குர் ஆனும் ஹதீஸும் இன்று எல்லோரையும் சென்றடைகிற நிலையில் இருந்தாலும் நமது சமூகத்தைப் பொறுத்தவரை இவை போதா.

இங்கு நான் சொல்ல வருவது முதலில் சமுதாயம் முழுமையாக'முஸ்லிம்' என்பதை உணர வேண்டும். அதன்படி இன்றைக்கு நடக்கிற விவாதங்கள் கேள்வி பதில் நிகழ்வுகள் - மாற்றாருடனான கலந்துரையாடல்கள் அதிகப்படவேன்டும். இன்றைக்கும் 'கண் தானம் கூடுமா?' என்று விளங்காத ஆலிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது ஒரு அவலமே. மாற்று மத சகோதரர்களிடம் கலந்துரையாடுவதில் நம்மவர்களும் நிறைய விளங்கிக் கொண்டார்கள்.

அன்றைக்கிருந்த 'மீடிய' என்பதன்படி மலைகளின் உச்சியில் நின்றுக்கொண்டு நபி(ஸல்)அவர்கள் மக்களிடம் தஃவ செய்தார்கள். இன்றைக்கு TV யும் இணையமும் என்றாகிவிட்டது. நாம் முதல் அடி எடுத்து வைத்துவிட்டோம். இன்ஷா அல்லாஹ் இனி வெல்லுவோம்.

வாசகன் said...

விவாதம் நன்றாக போகிறது. இவ்விவாதத்தை பொது மக்களுக்கு அனுப்பினால் இன்னும் சில விஷயங்கள் கிடைக்கலாம்.

எனது ஆரம்ப அரட்டை மறுமொழியை நீக்கிவிடவும். இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ-க்கு என்ன வேலையாம். அதுசம்பந்தமான புருணைகாரரின் மறமொழியையும் கூட (அவர் விரும்பினால்).

அன்புடன்
-அரட்டையன்-

அபூ முஹை said...

முஸ்லிம்களுக்கென்று செய்தி ஊடகங்கள் (மீடியா) இல்லாதது பேரிழப்பாகும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. முஸ்லிம்களை நசுக்கவும், இஸ்லாத்தை அழிக்கவும் திட்டமிடும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு செய்தி ஊடகங்களே பக்க பலமாக பொய்யான செய்திகளை மக்களிடம் சேர்க்கிறது.

கொயபல்ஸ் தத்துவம் என்று சொல்வார்கள், இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என கொயபல்ஸ் தத்துவமாக இல்லாததை, திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள்.

துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை.

மின் வழியாக வீட்டிற்குள் நுழைந்து செய்திகளை நேரில் சொல்வதில் தொலைக்காட்சிக்கு நிகர் TV தான். தொலைக்காட்சியில் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு விளங்கிக் கொள்வதற்கு படிப்பறிவு வேண்டும் என்பதில்லை. பாமரனும் விளங்கிக் கொள்ளும் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் தொலைக்காட்சியே இன்று முண்ணனி வகித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

தொலைக்காட்சி மீடியாவுக்கு விளம்பரங்களே முதுகெலும்பாக இருக்கிறது. தொலைக்காட்சியில் விளம்பரங்களை வெளியிடுவதும், விளம்பரத்துக்கேற்ற இசையைச் சேர்ப்பதும் தவறல்ல, இஸ்லாம் விதிக்கும் நிபந்தனைக்குட்பட்டு இவைகளை சேர்த்துக் கொள்வதை ''ஹராம்'' என்று நாமறியவில்லை.

சகோதரர் அதிரையார் அவர்களுக்கு!
T.V ஐ தப்லீக் இயக்கத்தினர் தஜ்ஜாலோடு ஓப்பிட்டதை ஒரு செய்தியாக - தகவலாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நீங்கள் புரிந்து கொண்டது போல தப்லீக் ஜமாத்தைப் போட்டு தாக்கும் எண்ணத்தில் அது எழுதப்படவில்லை. தப்லீக் இயக்கத்தினர் தொலைக்காட்சியை தஜ்ஜால் என்று தீர்ப்பளித்தது உண்மையா? இல்லையா? என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டால் போதும்.

சகோதரர் இப்னு ஹம்துன் அவர்களுக்கு!
மத்ஹபுகள் இருப்பதே ''துர்ருல் முக்தாரும்'' இருக்கிறது என்பதற்கான ஆவணமாகும். இந்த கிதாபுகளின் பிரதிகள் இன்னும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. ஒரு மாதிரிக்கு, அதிகாலைக் காட்சியாக தொலைக்காட்சியில் ரமளான் மாதத்தில் ''ஸஹர் நேர சிந்தனைகள்'' என்று இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள். (நான் பார்த்ததில்லை கேள்விப்பட்டேன்) இந்நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடாது என்று பள்ளிவாசல்களில் சுற்றறிக்கை அச்சிட்டு விளம்பரப் பலகையில் ஒட்டியிருந்தார்கள். இன்னும் அந்த சுற்றறிக்கை இருந்து கொண்டுதானிருக்கிறது. தமிகழத்தில் முஸ்லிம் சமுதாயம் முழுக்க முழக்க ஒரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விடவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

இப்னு ஹம்துன். said...

அன்பின் அபூ முஹை,
//தமிகழத்தில் முஸ்லிம் சமுதாயம் முழுக்க முழக்க ஒரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விடவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.//
அதைத் தான் நானும் சொல்கிறேன். நமது சமுதாயம் முழுமையாக இஸ்லாத்தை உணரவேன்டும் என்று.
அதே சமயம் 'துர்' முக்தாரிலிருந்து எடுத்துக்காட்டப்பட்டுள்ள 'செய்திகளை' மத்ஹபுவாதிகளே இண்றைக்கு மேற்கோள்காட்ட முன்வர மாட்டார்கள் என்பதும் உண்மை தானே.
முஸ்லிம்கள் மீடியாவில் கோலோச்சுவதுப்பற்றி பேசும் போது அவர்கள் சரியான இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேன்டுமே என்கிற கவலையும் எழத்தானே செய்கிறது. (குர்-ஆனின் வசனங்களை க்கொண்டே இஸ்லாத்தை (அறியாமையாலும் அதீத ஆர்வத்தாலும்) தவறாக அறிமுகப்படுத்தவும் செய்வதும் இந்த முஸ்லிம்களால் தானே. கைர். விரிவா பிறகு எழுதுகிறேன்.

Abu Umar said...

புதிய நுட்பங்களை பயன்படுத்த தவறுவது
ஒரு குறிப்பிட்ட மீடியாவை உபயோகிக்கும்போது அந்தந்த காலத்திற்கு ஏற்ப புதிய தொழிற்நுட்பங்களை அதில் புகுத்தவில்லையென்றால் பின்னடைவுதான் ஏற்படும். சிறிய உதாரணம்:

மின்னஞ்சல் மூலம் தமக்கு வந்த "செய்திகளை" தம்மிடம் உள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் Forward செய்வது பலருக்கு வழக்கம். சில நண்பர்கள் அலுவலகத்துக்கு வந்ததும் முதல் வேலையாக இவைகளை செய்து முடித்தபின்னர்தான் மற்றதெல்லாம். அந்த அளவுக்கு ஆர்வம்.

ஒரு சிலர் மட்டுமே இதுபோல் செய்துவந்த காலம்போய், பலபேர் இவ்வாறு செய்ய ஆரம்பித்ததால் சில சிக்கல்களும் வந்தன.

1) பல மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருக்கும் ஒரே நபருக்கு, அவரின் அத்தனை மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுவது. (ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல் முகவரிகள் இருந்தால் இப்படித்தான்).
2) யாஹு/ஹாட்மெயில் வழியே தனக்கு Forward செய்யப்பட்ட இணைப்பு கோப்புகள் (Attachment Files) அடங்கிய மின்னஞ்சல்களை மீண்டும் யாஹு/ஹாட்மெயில் வழியே Forward செய்யும்போது இணைப்பு கோப்புகள் (இமேஜ் கோப்புகள் உட்பட) கலங்கி படிக்க முடியாததாகிவிடும்.
3) அலுவலக மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர்கள், திடீரென விடுமுறையிலோ அல்லது மாற்றலாகியோ செல்லும்போது அந்த மின்னஞ்சல் வரவுகளை உடனே தடுக்க முடியாது. (அனுப்புனருக்கு இவர் அனுப்பும் செய்தி எட்டினால் மட்டுமே உண்டு).
4) மின்னஞ்சல் வரவுகள் அதிகமானதால் தனக்கு வந்த மின்னஞ்சல்களில் என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே மற்றவர்களுக்கு Forward செய்வதுண்டு. இதனால் தவறான சில செய்திகள்கூட பரவ வாய்ப்புண்டு. பொய்யான செய்திகளை மற்றவர்களுக்கு பரப்பக்கூடாது என்பது இஸ்லாமிய கோட்பாடும்கூட.
5) சிலர் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் Bcc-யில் இடாமல் To-வில் இட்டு Forward செய்வார்கள். யாருக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதோ அத்தனை முகவரிகளும் பெறுநருக்கு கிடைத்துவிடும். அம்முகவரிகளை சேமித்துக்கொண்டு அவர் ஏதேனும் அனுப்ப முற்படுவார்.

மீடியாவில் புது தொழிற்நுட்பங்களை பயன்படுத்தவில்லையென்றால் நமக்கு பின்னடைவுதான் என்பதற்காக கொடுக்கப்பட்ட சிறிய உதாரணமே இது.

மாற்றுவழிகள்/புதிய தொழிற்நுட்பங்கள்:
a) யாஹு மடலாற்குழுமங்களை (Yahoogroups) பயன்படுத்தலாம்.
b) செய்திகளை வலைப்பதிவில் பதிந்து அதன் சுட்டியினை (Link) மட்டும் மின்னஞ்சலில் அனுப்பலாம்.

அதுபோல புதிய தமிழ் இணையதளம் ஆரம்பிப்பவர்கள் யுனிகோடில் ஆரம்பித்தல் நலம். முக்கியமாக இயக்கங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் யுனிகோடு மற்றும் இயங்கு எழுத்துரு நுட்பங்களை புகுத்தி ஆரம்பித்தால் எழுத்துரு பிரச்சினைகளும் வராது. மேலும் தேடுதளங்களின் மூலம் தேடப்படும்போது அச்செய்தி தட்டுப்பட வாய்ப்புண்டு.

-அபூ உமர்-

Abu Umar said...

மேற்கண்ட மறுமொழியின் தொடர்ச்சியாக:

RSS/XML Feeder தொழிற்நுட்பத்தை பயன்படுத்திதான் தமிழ்மணம் இந்த போடு போடுகிறது.

நீங்கள் கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்தி தமிழ்மணத்தில் இணைந்த புதிய பதிவுகள், மறுமொழிகள் (சற்றுமுன் பதிந்த பதிவுகளுக்கு உட்பட), பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் போன்றவற்றை படிக்கலாம். பக்கமும் எளிதாக திறக்கப்படும்.

http://www.thamizmanam.com/tamilblogs/userpanel.php


தமிழ்முஸ்லிம் மன்றமும் கீழ்கண்ட நுட்பங்களை உள்ளடக்கியதுதான்.
1. படிப்பதற்கு எளிதாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் டெம்ப்ளேட்டின் அமைப்பும் கலரும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2. இயங்கு எழுத்துரு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வின்டோஸ் 98-லும் படிக்கலாம்.
3. காட்டு/மறை என்ற Show/hide வசதியிருப்பதால் தமிழ்முஸ்லிம் பக்கங்களை மாதாவாரியாக உள்ள Archive கோப்புகளை சேகரித்து வைத்துக்கொண்டு Offline-ல் கூட மறுமொழிகளை படிக்கலாம்.
4.
tamilmuslimfeeder
வசதியின் மூலம் இஸ்லாமிய வலைப்பதிவுகளில் சேர்க்கப்படும் புதிய பதிவுகளின் விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற நுட்பங்களின் மூலம் ஊடகங்களில் முன்னேற்றம் என்றால், இதனை பயன்படுத்தாவிட்டால் பின்னடைவு என்பதில் சந்தேகம் உண்டா?

Abu Umar said...

குறும்படங்கள்
குறும்படங்களைப் பொறுத்தவரை அதன் எல்லை உங்களின் இஷ்டம்தான். இஸ்லாம் தடை செய்த விஷயங்களை நீக்கி மிகச்சிறிய பட்ஜெட்டில் குறும்படங்கள் எடுக்க முடியும். சினிமாவின் நோக்கம் கமர்சியல் என்றால், குறும்படங்களின் நோக்கம் கருத்துகளை முன்வைப்பதாகும்.

முஸ்லிம்கள் இவ்வூடகத்தை எந்த அளவுக்கு தொட்டுள்ளார்கள் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. டீ.வி, டிஷ் என்றாலே ஹராம் என்னும் குறுகிய எண்ணத்திலிருந்து வெளியே வராததால் இதில் நாம் கால்பதிக்கவில்லை. ஆனால் குஜராத் கலவரத்தை உலகிற்கு எடுத்துச்சென்றதில் இந்த ஊடகத்திற்கும் பங்குண்டு.

Abu Umar said...

05.05.2005 அன்று ஜித்தாவில் நடந்த புகாரி நினைவுப் பரிசு கட்டுரைப்போட்டி பெரியோர் பிரிவில் நண்பர் மாலிக் கான் அவர்கள் முதல் பரிசு வென்றுள்ளார். கட்டுரையின் தலைப்பும் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட தலைப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அதாவது
"முஸ்லிம்களும் ஊடகங்களும்"
என்ற தலைப்புதான் அது.

நாம் மீடியாவில் பின்தங்கியிருப்பதன் காரணத்தை கண்டறிவதற்கு முன்பு மீடியாவின் அவசியம் என்ன?, நாம் எவ்வாறெல்லாம் மீடியாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், இன்னும் பல விஷயங்களைப்பற்றி கட்டுரை அலசுகிறது.

இந்த விவாதத்தில் யாரும் பேசாத ஒன்றைப் பற்றி அக்கட்டுரை பேசுகிறது. அதனை மட்டும் கீழே இட்டுள்ளேன்.


//தனிநபர் பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள், ஜும்மாப் பேருரைகள்..
இவையாவும் மக்களைச் சென்றடையும் ஊடகங்களே! இவற்றின் மூலமாகவும் மக்கள் சக்தியை உருவாக்கிட முடியும். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மட்டும் போதித்துச் சென்றுவிடாமல் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். காலத்திற்குத் தகுந்தாற்போல் அவர்கள் வெள்ளிமேடைகளில் (குத்பாப் பேருரைகள்) பிரச்சாரங்கள் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம் நாடுகளில் பெருவாரியான முஸ்லிம்கள் ஒன்று குழுமக் கூடிய வெள்ளிக்கிழமை பேருரைகள் அரபி மொழியிலேயே சடங்குக்காக நடந்து வருகின்றன. நம்மில் பலரும் அதைப் பக்தியோடு கேட்டு துயில் கொண்டு செல்கிறோம். இன்றைய முஸ்லிம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது, சமுதாயத்தில் படர்ந்துவிட்ட களங்கங்கள் என்ன? மார்க்கத்தை எவ்வாறு நிலைநாட்டலாம் என உணர்ந்து இந்த குத்பாப் பேருரைகள் அமைந்தால் அதுவும் மீடியாவில் மகத்தான வெற்றிதான்.

பொழுதுபோக்கிற்காக எத்தனையோ அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால் பொழுதுபோக்கிலும் உபயோகமுள்ள ஒரு கருத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள் நடத்துதல் அவசியம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாகவும் மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப முடியும். மார்க்கப் பிரச்சாரங்கள், தொழுகை, இபாதத் போன்றவற்றிற்கு மட்டும் முஸ்லிம்கள் ஒன்று திரளக்கூடியவர்களாக இருந்த நிலை மாறி பாபர் மசூதி பிரச்சனை, வாழ்வுரிமை மாநாடுகள், அரசியல் மேடைகள், மதமாற்ற தடைச் சட்டம், லாட்டரி ஒழிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தற்போது ஒன்று குழுமக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனினும் மீடியாவில் நாம் சொல்லக்கூடிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை. எனவே நவீன மீடியாக்களைப் பயன்படுத்தி காலத்திற்கேற்றாற் போல செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.//