Wednesday, May 04, 2005

தமிழ் இலக்கணம் கசக்குமா? (பகுதி 2)

அளித்தல் - ஈதல்
அழித்தல் - கெடுத்தல்

ஒலி - சப்தம்
ஒளி - வெளிச்சம்
ஒழி - நீக்கு

குலம் - சாதி
குளம் - நீர்நிலை

குளம்பு - Hoof
குழம்பு - Sauce

கொல் - கொன்றுவிடு
கொள் - பெறு

கோல் - கம்பு
கோள் - கோள் சொல்லல்

சூல் - கருப்பம்
சூள் - சபதம்

தோல் - Skin
தோள் - Soulder

புலி - Tiger
புளி - புளியம்பழம்

மூலை - Corner
மூளை - Brain
மூழை - அகப்பை

வலி - நோய்
வளி - காற்று
வழி - பாதை

வால் - Tail
வாள் - ரம்பம்
வாழ் - வாழி

விலா - விலா எலும்பு
விளா - விளாமரம்
விழா - திருவிழா

விலக்குதல் - நீக்குதல்
விளக்குதல் - Explanation

வெல்லம் - கரும்பு வெல்லம்
வெள்ளம் - நீர்ப் பெருக்கு

வேலை - தொழில்
வேளை - பொழுது

(படிக்கும் பாடங்கள் தொடர்ந்து எழுதுவேன்.. இறைவன் நாடினால்)

4 comments:

Sardhar said...

கோள் - அர்த்தம் பூமி , சந்திரன், மார்ஸ் போன்ற Planet களுக்கும் பொருந்தும்.

(அதெல்லாம் சர்த்தான்!.. படம் சொல்லும் கருத்து Part-2 ரிலீஸ் எப்போ?)

அபூ முஹை said...

சர்தார், இருந்த Part 1 படத்தையே காணலியே நீங்க Part 2வை கேக்கிறீங்க!

Abu Umar said...

//சர்தார், இருந்த Part 1 படத்தையே காணலியே நீங்க Part 2வை கேக்கிறீங்க!//

அபூ முஹை,
நீங்கள் எதை சொல்கிறீர்கள்? Part 1 கீழே உள்ளது.

சர்தார்,
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி. நான் சற்று பிஸியாக இருக்கிறேன். முடிந்தவுடன் பழையபடி தொடருவேன்.

அன்புடன்
அபூ உமர்

அபூ முஹை said...

அபூ உமர் இரண்டு நாளா ''இமேஜ்'' இடத்தில் படம் இல்லை இப்ப தெரிகிறது!