நடுநிலைச் சமுதாயம்
இறைவன் நடுநிலையைப் பேணச் சொல்லி நமக்கு அறிவுறுத்துகிறான். ஒவ்வொரு பிரச்சினையிலும் எது நடுநிலை என்பதை குர் ஆன், நபி வழி அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தை கூறுகிறேன். முஸ்லிம்கள் சிறுபாண்மையாய் வாழும் நாட்டில், அவர்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு தீர்வு காண மூன்று வழிகள் உள்ளன:1. அயுதம் ஏந்தி அநீதியாளர்களுக்கு எதிராகப் போராடுவது. கோவையில் சில முஸ்லிம் சகோதரர்கள் எடுத்த முடிவு. பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவிகள்
2. அநீதீ இழைத்தவர்களுடன் சட்டப்படி வழக்காடுவது. குஜராத்தில் முஸ்லிம்களுடன் முஸ்லிமல்லாத நடுநிலையாளர்கள் எடுத்த முடிவு. தாமதமானாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பாபர் மஸ்ஜித் வழக்கிலும் முஸ்லிம்கள் சட்டப்படி நீதியை நிலை நாட்ட முயல்கின்றனர்.
3. அநீதி இழைப்பவர்களுடன் ஒரே கூட்டமாகச் சேர்ந்து கொள்வது. அல்லது சமரசமாகி விடுவது. இதனை உதாரணம் சொல்ல என் மனம் கூசுகிறது. செல்வந்தரகளில் சிலர் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான்.
என் அறிவுக்குப் பட்டவரை மூன்றாம் வழி எப்படி முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் அநீதியோ, அது போலவே முதல் வழியும் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் பெரும் தீங்கே. முன்னர் மறைந்த ஒரு முஸ்லிம் தலைவரும், தற்போது சிறையில் வாடும் ஒரு முஸ்லிம் தலைவரும் இத்தவறை செய்தனர். தற்போது, ஒரு குழுவினர் தாங்கள் மட்டுமே அழைப்பு பணி செய்பவர்கள் என்றும், மற்றவர்கள் எல்லாம் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் கூறி வருகின்றனர். நள்ளிரவில் மறைமுகமாகப் பயிற்சி செய்கின்றனர். ரகசியக் கூட்டம் போடுகின்றனர். இவர்களுக்கு நட்புரிமையோடு அறிவுறுத்துபவர்களையும் துரோகிகளாய் சித்தரிக்கின்றனர். இவர்களை முற்றிலுமாக முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு வல்ல இறைவன் நேர்வழி காட்ட பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment