Monday, August 15, 2005

இதற்கு எவரும் விதிவிலக்கல்ல!

வஞ்சிக்கப்பட்ட பெரியார்கள் எனும் பதிவில் அபூ உமர், நபிகளாரின் வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமான, உயர்த்தப்பட்ட கல்லறைகளில் இறந்தவர்களிடம் கையேந்துவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஒரு பக்கம் இப்படி இருக்க, நீண்ட நெடிய காலம், நீண்டதொரு நிலப்பரப்பை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் ஆட்சி செய்த மன்னர் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் இறுதிச் சடங்குகள் இங்கு புகைப்படமாக உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.


மன்னர் அவர்களுக்கான ஜனாஸா தொழுகை


மன்னர் அவர்களின் மிகச் சாதாரண மண்ணறை



இவ்வுலகில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்த்துகளை வகித்தாலும், பதவி பட்டங்களை வாங்கிக் குவித்தாலும் இறுதியில் சென்று சேரும் இடம் மிகச் சாதாரணமானது. இதற்கு எவரும் விதிவிலக்கல்ல! எனும் அரிய தத்துவத்தை இஸ்லாம் எவ்வளவு எளிமையாக நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துகிறது என்பதற்கு மேற்கண்ட புகைப்படங்களே சாட்சி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஜனாஸாத் தொழுகை
தொழுவீர்களேயானால் இறந்தவருக்காக பிராத்தனையை உரித்தாக்குங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னு ஹிப்பான்

நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக
இருந்தனர்:

அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா
வமய்யிதினா வஷாஹிதினா
வகாயிபினா வஸம்ரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா
அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹிஹு
அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு
மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம
லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா
பஅதஹு


பொருள்:
யா அல்லாஹ்! எங்களில்
உயிரோடிருப்பவர்களையும் மரணித்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும்,
வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில்
ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா! எங்களில் உயிரோடு இருப்பவர்களை
இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக!
எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே
மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யத்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு
தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி



புகைப்படம்: நன்றி

2 comments:

Abu Umar said...

Related Article:

http://tamilmuslim.blogspot.com/2005/08/blog-post_21.html

Sardhar said...

இது சம்பந்தமான பதிவுக்கு சுட்டி(Link) கொடுத்தமைக்கு நன்றி!