Saturday, June 17, 2006

இந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள்..

இந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள், சில ஆலோசனைகள்

சில நாட்களுக்கு முன் 'இந்திய மக்கள் பேரவை' என்ற அமைப்பு தொடங்கப் படுவது பற்றி எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. இதன் அமைப்புச் சட்டம், நோக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இதைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என காத்திருந்தேன். இன்று இந்த அமைப்பின் செயல் திட்டங்களை 'முகவைத் தமிழன்' என்கிற 'ரைசுதீன்' மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகளையும் ஆலோசனைகளையும் இந்த அமைப்பினரிடம் கேட்க விரும்புகிறேன்.


1. இந்த அமைப்பின் நிறுவனர் யார்? இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார்? தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொர்றுப்புகளை யார் ஏற்றுள்ளனர்?

2. 'இந்திய மக்கள் பேரவை' என பொதுவான பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்பில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர் ஆகலாமா? அல்லது இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான அமைப்பா?

3. இரட்டை உறுப்பினர் சர்ச்சையால் முன்னர் ஜனதா கட்சி உடைந்ததும், த.மு.மு.க பிளவுபடாத போது த.மு.மு.கவுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இரட்டை உறுப்பினர் நிலையால் சர்ச்சைகள் ஏற்பட்டதும் நாம் அறிந்தது தானே? அதுவுமின்றி, எத்தனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியிலும் உறுப்பினராய் இருந்து கொண்டு இந்திய மக்கள் பேரவையிலும் இடம் பெற அனுமதிக்கும்? இது பற்றியெல்லாம் செயல் திட்டம் வகுக்கும் போது கவனித்தீர்களா?

4. பழனி பாபாவை தங்கள் வழிகாட்டியாக இந்த அமைப்பை நிறுவியவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. நமக்கு என்றென்றைக்கும் வழிகாட்டி நமது இறுதித் தூதர் முஹமது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே. தமிழகச் சூழலில் காயிதே மில்லத் (ரஹ்) போன்ற தலைவர்களின் சிந்தனைகளையும், பெரியார், அ.மார்க்ஸ் போன்றவர்களின் சிந்தனைகளையும் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியலை ஆராயும் 'முஸ்லிம் அரசியல் பரினாம வளர்ச்சி' என்ற நூலை 'அடையாளம்' வெளியிட்டுள்ளது. அதனை வாங்கிப் படியுங்கள்.

5. சிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா?

6. த.மு.மு.க தோன்றிய போது, முஸ்லிம் லீக்கை கடுமையாக விமர்சித்தது. இன்றளவும் நிறுத்தவில்லை. இப்போது 'இந்திய மக்கள் பேரவை' பிற முஸ்லிம் அமைப்புகளை விமர்சிக்கிறது. இது எந்த வகையில் முஸ்லிம்களுக்குப் பயன்படும்? விமர்சிப்பது எளிது. ஆனால் பிரச்சினைகளைக் கையாளும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்துள்ளீர்களா? (எனக்கும் முஸ்லிம் லீக், தேசிய லீக், த.மு.மு.க, தவ்ஹீத ஜமாஅத் போன்ற அமைப்புகளின் மீது கருத்து வேறுபாடுள்ளது. அவற்றை ஏற்கனவே இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். அவை அப்படியே உள்ளன. அதனால் திரும்ப எழுதவில்லை). இந்திய மக்கள் பேரவையில் அரசியல் அனுபவம் உள்ளவர் யார்?

7. புதிய அமைப்பு முஸ்லிம்களை மேலும் பிளவு படுத்தாமல் எவ்வாறு ஒன்றுபடுத்தும்?

8 comments:

முகவைத்தமிழன் said...

நியாயமான கேள்விகள், நல்ல ஆலோசனைகள்.

இயக்கம் என்று வரும்போது கட்டாயம் இதை ஆரம்பிப்பவர்கள் தங்களை வெளிக்காட்ட வேன்டும்.

இது என்ன ரகசிய இயக்கமா ? இதன் செயல் திட்டங்களை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது! இதன் நிர்வாகிகள் யர் என்பதையும் மற்றும் சகோ. அருளடியான் கேட்டுள்ள கேள்விகள் போன்றவற்றிற்கும் இதன் அமைப்பாளர்கள் பதில் தர கடமைப்பட்டுள்ளார்கள்.

நன்றி
முகவைத்தமிழன்

விமர்சகன் said...

நன்றி அருளடியான்,

இந்த அமைப்பின் நிறுவனர் யார்? இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார்? தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொர்றுப்புகளை யார் ஏற்றுள்ளனர்?

நிர்வாகிகளின் விபரம் ஏதும் இல்லாமல் இருந்தால் யார் என்ன நினைக்க? மெயில் அனுப்பிய முகவைத்தமிழனும் உங்களோடு சேர்ந்து சேம் ஸைடு கோல் (SAME SIDE GOAL) அடிச்சிருக்கார். ஒன்னுமே புரியமாட்டேங்குதுப்பா.

புதிய அமைப்பு முஸ்லிம்களை மேலும் பிளவு படுத்தாமல் எவ்வாறு ஒன்றுபடுத்தும்?

தூர நோக்கு பார்வையுடன் அமைந்த மிகச் சரியான கேள்வி. இருக்கின்ற அமைப்புக்கள் தங்கள் பொருப்புக்களை உணர்ந்து நடந்து கொள்வதே இப்போதைக்கு போதுமானது. புதிய அமைப்புக்கள் இன்னும் ஒரு பிரச்சனைக்கும், பிளவிற்கும் வழி கோலுமே அன்றி இருக்கின்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகாது.

சிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா?

ஒரு பக்கம் ஒருவர் சிறைவாசிகளின் பேட்டி என்று ஒன்றை வெளியிடுகிறார். இன்னொரு பக்கம் அது தவறு என்று சொல்லி மற்றொருவர் மெயில் அனுப்புகிறார். இது சிறைவாசிகளுக்கு சாதகமானதா? அல்லது ஆர்வக்கோளாரினால் இப்படி நடந்து கொள்கிறார்களா?

குற்றங்கள் நிரூபிக்கப்படாமல், விசாரணை என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதரர்களின் உணர்வுகள், கண்ணியங்கள் சிலருடைய செயல்களினால் சீர்குலைகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

முகவைத்தமிழன் said...

//நிர்வாகிகளின் விபரம் ஏதும் இல்லாமல் இருந்தால் யார் என்ன நினைக்க? மெயில் அனுப்பிய முகவைத்தமிழனும் உங்களோடு சேர்ந்து சேம் ஸைடு கோல் (SAME SIDE GOAL) அடிச்சிருக்கார். ஒன்னுமே புரியமாட்டேங்குதுப்பா.//

விமர்சகனுக்கு எது புரியவிலலை என்பது எனக்கு புரியவில்லை. புரிந்தும் பரியாததுபோல் மக்களை குழப்புகின்றாறா? இல்லை உண்மையில் புரியவில்லையா என்பதை விளக்க வேன்டும்.

"SAME SIDE GOAL" அடிப்பதென்றால் என்னவென்று தெரிந்து எழுதியுள்ளாரா அல்லது "ச்சும்மாக்காச்சுக்கும்" எதையாவது எழுதி தனது தலைவர் மக்களை குழப்புவதுபோல் தானும் குழப்பவேன்டும் என்று எழுதியுள்ளாரா? "SAME SIDE GOAL" முகவைத்தமிழன் எப்படி அடித்தார் என்று எழுத முடியுமா? இல்லையென்றால் விமாசகனுக்கு "SOCCER MANIA" என்று நினைக்கலாமா?

சிறைவாசிகள் பிரச்சினை இதில் எங்கிருந்து வந்தது? இந்திய மக்கள் பேரவையினர் சிறைவாசிகளை பற்றி ஏதாவது எழுதியுள்ளனரா ? அருளடியானும் விமர்சகனும் பதில் கூற வேன்டும். சிறைவாசிகளை பறறறி விமர்சிப்பவர்கள் தங்களுடைய மின்னஞ்சல்களிள் "பி.ஜே க்கு எலிக்காய்ச்சல்" "மணியாச்சி காஜா வேட்டி அவுந்துருச்சு உள்ளே உள்ளாடை அனியவில்லை" என்று சம்பந்தமில்லாமல் எழுதுவதுபோல்தான் விமர்சகனும் இங்கு உளரியுள்ளார்.

//ஒரு பக்கம் ஒருவர் சிறைவாசிகளின் பேட்டி என்று ஒன்றை வெளியிடுகிறார். இன்னொரு பக்கம் அது தவறு என்று சொல்லி மற்றொருவர் மெயில் அனுப்புகிறார். இது சிறைவாசிகளுக்கு சாதகமானதா? அல்லது ஆர்வக்கோளாரினால் இப்படி நடந்து கொள்கிறார்களா?//

மீன்டும் கேட்கிறேன், விமர்சகனுக்கு எது புரியவிலலை என்பது எனக்கு புரியவில்லை. புரிந்தும் பரியாததுபோல் மக்களை குழப்புகின்றாறா? இல்லை உண்மையில் புரியவில்லையா என்பதை விளக்க வேன்டும்.

மேற்க்கன்டதற்கு பதில் தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடையில் உள்ளது.

//குற்றங்கள் நிரூபிக்கப்படாமல், விசாரணை என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதரர்களின் உணர்வுகள், கண்ணியங்கள் சிலருடைய செயல்களினால் சீர்குலைகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.//

ஆஹா...அருமையான சந்தேகம் !! சஹாபாக்களின் கண்ணியத்தை சிலர் சீர்குழைப்பது போன்று ஒன்றும் யாரும் யாருடைய கண்ணியத்தையும் சீர் குழைத்துவில்லை!! "ஆடு நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம்" இவர்களுடைய சிறைவாசித்திற்கும் துன்பங்களுக்கும் யார் காரணம் என்பதை விமாசகன் அறிந்து பேசுகின்றாரா அல்லது "ச்சும்மாக்காச்சுக்கும்" ஏதாவது பேசுகின்றாரா? எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் விமர்சகன் அறிவதற்காகவேன்டி சிறைவாசிகளை தூன்டி குற்றம் புறிய சொன்னவர்கள் எப்படி இவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் என்று இவர்கள் சுயநினைவுடன் இட்ட கையெழுத்துடன் கூடிய வாக்குமூலத்தின் நகல்கள் (Obtained from Kovai Special Court) விரைவில் தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடையில் பிரசுரமாக உள்ளன பின்னர் தங்களின் சந்தேகம் தெளிவாகும்.

அதுவரையில் சிறைவாசிகளின் கண்ணியம் குறைந்ததா அல்லது இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பதை இங்கு சென்று பார்வையிடவும்.

தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை வலைப்பதிவில் இடம்பெற்ற பேட்டியில் பொய்கள் இடம்பெற்றதா?


நன்றி
முகவைத்தமிழன்

Abu Fathima said...

ரைசுத்தீன் சைட்டில் போட்ட பதிலையே இங்கேயும் பதிக்கிறேன்...

என்னத்தச் சொல்ல...

எல்லோருக்கும் தலைவர் ஆகணும்னு ஆசை.. இருக்கின்ற இயக்கங்களும் அதற்குள் நடக்கின்ற சண்டைகளுக்கும் நடுவே புதுசா இப்போ இன்னொண்ணு.. என்னத்தச் சொல்ல

சுயநலத்திற்கு சமுதாய அக்கரை முலாம் பூசி சும்மா நேரம் போகாத வேளைகளில் புதிய சட்ட திட்டங்கள் இயற்றி அலுவலக இண்டர்நெட்டில் அப்லோட் செய்யும் புதிய தலைவர்களையும், இயக்கங்களையும் என்னத்தச் சொல்ல...

ஏற்கனவே தமிழ் முஸ்லிம் சமுதாயம் துண்டு துண்டுகளாக்கப்பட்டு ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லக்கூட முன்வராத மனநிலையில் இன்னொரு துண்டு போட தயாராகிவிட்ட விஞ்ஞான தலைவரை என்னத்தச் சொல்ல...

(கடையநல்லூர் பள்ளிவாசல் சம்மந்தமாக நான்குநேரி சிறையில் அடைக்கபட்ட இருபெரும் அமைப்புகளின் 'ஊழியர்கள்' தனித்தனி ஜமாஅத்தாக தொழுதார்கள்... இதுதான் நவீன தௌஹீத் - 2006)
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கின்ற மக்களை ஒன்றுபடுத்துவதை விட்டுவிட்டு புதிய அமைப்பு தான் தீர்வு என முடிவுசெய்தவர்களை..... என்னத்தச் சொல்ல...

----2. சமூக அமைப்புகளில் ஏற்படும் மார்க்க கருத்து வேறுபாடுகளில் இந்திய மக்கள் பேரவை தலையிடாது.---

இதுசம்பந்தமாக முன்பு எழுந்த விஷயங்கள் புதிய தலைவருக்கு தெரியாதா? அப்படியானால் தலைவர் 'ரொம்ப' புதுசு போல இருக்கே...

இறுதியாக, தேர்தலில் நின்று ஓட்டு வாங்கணும்னா சொல்லுங்கோ... எனக்கு ஒரு வோட்டும் வீட்டுல 4 ஓட்டும் இருக்கு. உங்களுக்கே போட்டுற்றோம். அதைவிட்டுவிட்டு புதிய இயக்கமெல்லாம் வேண்டாம் தலைவா...

இதைத்தவிர வேற என்னத்தச் சொல்ல....


இப்படிக்கு
அபு பாத்திமா

விமர்சகன் said...

நன்றி முகவைத்தமிழன்

விமர்சகனுக்கு எது புரியவிலலை என்பது எனக்கு புரியவில்லை. புரிந்தும் புரியாததுபோல் மக்களை குழப்புகின்றாரா? இல்லை உண்மையில் புரியவில்லையா என்பதை விளக்க வேன்டும்

சில நாட்களுக்கு முன் 'இந்திய மக்கள் பேரவை' என்ற அமைப்பு தொடங்கப்படுவது பற்றி எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. இதன் அமைப்புச் சட்டம், நோக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இதைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என காத்திருந்தேன். இன்று இந்த அமைப்பின் செயல் திட்டங்களை 'முகவைத் தமிழன்' என்கிற 'ரைசுதீன்' மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார்.

இந்த அமைப்பின் நிறுவனர் யார்? இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார்? தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்புகளை யார் ஏற்றுள்ளனர்?

அருளடியான் சனி, ஜூன் 17, 2006 - 6:23 AM

இயக்கம் என்று வரும்போது கட்டாயம் இதை ஆரம்பிப்பவர்கள் தங்களை வெளிக்காட்ட வேன்டும்.

இது என்ன ரகசிய இயக்கமா? இதன் செயல் திட்டங்களை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது! இதன் நிர்வாகிகள் யார் என்பதையும் மற்றும் சகோ. அருளடியான் கேட்டுள்ள கேள்விகள் போன்றவற்றிற்கும் இதன் அமைப்பாளர்கள் பதில் தர கடமைப்பட்டுள்ளார்கள்.

முகவைத்தமிழன் சனி, ஜூன் 17, 2006 - 7:54 AM

நிர்வாகிகள் யார் என்பதை அறிந்து கொண்டுதான் நீங்கள் அந்த அமைப்பின் அமைப்புச் சட்டத்தை அருளடியானுக்கு அனுப்பியதாக நான் நினைத்தேன். யார் என்னவென்று தெரியாமல் வந்ததையெல்லாம் பார்வர்டு செய்திருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை.

எதையாவது எழுதி தனது தலைவர் மக்களை குழப்புவதுபோல் தானும் குழப்பவேன்டும் என்று எழுதியுள்ளாரா?

எ(ந)மது தலைவர் உலக மக்களுக்கு தெளிவான பாதையையும், சீர் தூக்கி சிந்திப்பதற்கான இறை வாக்குகளையும் பெற்று தந்து விட்டு சென்றுள்ளார். அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

சிறைவாசிகள் பிரச்சினை இதில் எங்கிருந்து வந்தது? இந்திய மக்கள் பேரவையினர் சிறைவாசிகளை பற்றி ஏதாவது எழுதியுள்ளனரா? அருளடியானும் விமர்சகனும் பதில் கூற வேன்டும்.

இந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள், சில ஆலோசனைகள்.

சிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா?

அருளடியான் சனி, ஜூன் 17, 2006 - 6:23 AM

நியாயமான கேள்விகள், நல்ல ஆலோசனைகள்.

முகவைத்தமிழன் சனி, ஜூன் 17, 2006 - 7:54 AM

சிறைவாசிகளை வைத்து தற்பொழுது இருக்கிற அமைப்புக்கள் அரசியல் செய்வதாகவும், அது அவர்களுக்கு பாதகமாய் அமைகிறது என்பதை கருத்தில் கொண்டும் அருளடியான் அவர்கள் இதை கேள்வியாகவும், ஆலோசனையாகவும் வைத்துள்ளார் என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்.

Thanks again,

விமர்சகன்

AbuMoosa said...

முகவைத்தமிழன் என்கிற ரைசுதீன் மக்களை குழப்புகிறாரா அல்லது குழப்பப்படுகிறாரா என்ப்து எனக்கு குழப்பமாக இருக்கிறது.

ஏனெனில் அவரே பதிகிறார் அவரே மறுப்பும் தெரிவிக்கிறார். இடையில் யாருடைய பெயரும் இல்லை.

ஏன் அவரே ரைசுதீன் என்கிற பெயரை முக்கியமானவற்றில் கூட உபயோகப்படுத்துவதில்லை.

அவர் விளக்க வேண்டும்.

அழகு said...

பழனிபாபா அவர்கள் படுகொலை செய்யப் பட்ட இரு தினங்களுக்குப் பிறகு துபையில் நடைபெற்ற இரங்கல்/கண்டனக் கூட்டங்களை அடுத்து ஏற்படுத்தப் பட்ட 'இந்திய முஸ்லிம் பேரவை' [United Muslim Forum] குறித்தும் அது இப்போது எங்கே என்றும் யாருக்காவது தெரியுமா?

10ஐ 9ஆக்க முயலலாம். பிறது 9ஐ 8ஆக்க ....; பத்தோடு பதினொன்று வேண்டாம் என்பது என் கருத்து.

IPF said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தங்களின் கேள்விகளுக்கு பதில் கீழ் உள்ள முகவரியில் உள்ளது சென்று பார்வையிடவும்.

இந்திய மக்கள் பேரவை - அருளடியானுக்கு பதில்