Tuesday, June 13, 2006

ஜெ.ஜெயின் அண்ணன், தம்பி - பி.ஜே கோபம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசத் தொடங்கியதும் "அண்ணன் வைகோ அவர்களே" என்று சொன்னதும் மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் காணப்பட்டார் வைகோ. பின்னர் திருமாவளவனை "தம்பி திருமாவளவன்" என்று ஜெயலலிதா குறிப்பிட்டார். இந்த பாசமிகு அழைப்புகள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இருவரையும் நெகிழச் செய்தது.

நன்றி : ஓசூர் ஆன்லைன்

உள்குத்து : இவ்வளவு தூரம் தம் கட்டி உணர்வு வாரஇதழில் சட்டசபைக்கு சென்ற சகோதரி "ஜெ" யின் சாதனையை "நமது எம்ஜிஆர்" பத்திரிகையைவிட அதிகமாக கட்டம் கட்டி எழுதியும் கூட தன்னை "அண்ணன்" என்று அழைக்காததால் உண்மையான அண்ணன் பிஜேயும் சகாக்களும் கடுமையான கோபத்தில் இருப்பதாக செய்தி.


ஜாம் பஜார் ஜக்கு : எலக்சன் உறவு எலக்சனோடு போச்சு, கலைஞரும் அம்மாவும் தங்களுக்கு ஒன்னுதான்னு அண்ணன் சொன்னதா கேள்வி. ஆனால் எதிர்கட்சிக்காரனை விட மோசமா முதல்வரை உணர்வு வாரஇதழில் விமர்சரிப்பது எதுக்குப்பா?

அண்ணன் தங்கச்சி பாசம் இன்னும் முறியலையின்னு காணிக்கறதுக்கானு? மக்கள் பேசிக்கிறாங்கப்பா!!

9 comments:

Jaggu & Pakkiri said...

தோ..டா!

மொகவெ, மேட்ரு குடுத்தியா போவியான்னு இல்லாதெ மேட்ருலே இன்னாத்துக்கு என்னிய இஸ்துகினு கீறே?

உனுக்கு நெஞ்சிலெ மஞ்சா கீதா ... அல்லாத்தியும் நீயே எயிதினு போவியா ... அத்த உட்டுட்டு எம்பேர்லே இன்னாத்துக்கு ரீல் உட்றே?

நானு இன்னா டோண்டுவா இல்லாங் காட்டி மாயவர்த்தானா?

ஒன்னோட ஜிகில்பாஜி மேட்ர பக்கிரி கைலெ ஸொல்லி கீறேன். அவன் பொல்லாத ஆளு. அவ்ளோத்தான் ஸொல்லுவேன்.

ஜாம்பஜார் ஜக்கு ID: 28397049

புதுப் பார்வை said...

இந்த "உள் குத்து" வக்கிர மனநிலையின் பிரதிபளிப்பாகும்.

Jaggu & Pakkiri said...

\\இந்த "உள் குத்து" வக்கிர மனநிலையின் பிரதிபலிப்பாகும்.\\

நீயி 'ளி'லே மிஷ்டேக் பண்ணிட்டே ... அத்தெ நானு கரீட் பண்ணி கீறேன்.

மித்தபடி நீயி குட்த்த பாயிண்ட்டு கரீட்டு கண்ணு. உனுக்கு டாங்ஸுபா!

வர்ட்டா?

ஜாம்பஜார் ஜக்கு ID: 28397049

முகவைத்தமிழன் said...

இன்னா ஜக்கு அன்னாத்தே, நானு இன்னா டோண்டுவா இல்லாங் காட்டி மாயவர்த்தானா லாம் கேட்டு என்னான்ட இன்னாமா கலாய்கீரெ..

ஒன்தேட்ரலலாம் நம்மாள படம் ஓட்ட முடியாது அன்னாத்தே ...எம்மாம் பெறிய ஆளு நீயி...இன்னாத்துக்கு பக்கிரி கைலெல்லாம் ஸொல்லிக்கினு..ச்சும்மா உஷாராகீரியானு பாத்தேன்...அப்பாலே...என்ன விட்ரு அன்னாத்தே நானு இத்தோட ஜகா வாங்கிக்கிறேன்...

அபூ ஆஸியா said...

//உள்குத்து : இவ்வளவு தூரம் தம் கட்டி உணர்வு வாரஇதழில் சட்டசபைக்கு சென்ற சகோதரி "ஜெ" யின் சாதனையை "நமது எம்ஜிஆர்" பத்திரிகையைவிட அதிகமாக கட்டம் கட்டி எழுதியும் கூட தன்னை "அண்ணன்" என்று அழைக்காததால் உண்மையான அண்ணன் பிஜேயும் சகாக்களும் கடுமையான கோபத்தில் இருப்பதாக செய்தி.//

ஆதாரத்தோடுதான் எழுதினீர்களா?

அல்லது

அண்ணனுடைய உள்ளத்திலுள்ளது தங்களுக்கு எப்படி தெரிய வந்ததென்பதை தெளிவாக கூற முடியுமா?

விமர்சகன் said...

உள்குத்து : இவ்வளவு தூரம் தம் கட்டி உணர்வு வாரஇதழில் சட்டசபைக்கு சென்ற சகோதரி 'ஜெ' யின் சாதனையை 'நமது எம்ஜிஆர்' பத்திரிகையைவிட அதிகமாக கட்டம் கட்டி எழுதியும் கூட தன்னை 'அண்ணன்' என்று அழைக்காததால் உண்மையான அண்ணன் பிஜேயும் சகாக்களும் கடுமையான கோபத்தில் இருப்பதாக செய்தி.

ஒன்றுக்கும் உதவாத உள்குத்து. ஆதாரங்களின்றி இப்படி கேலி செய்யும் பதிவுகளை நிர்வாகம் எப்படித்தான் அனுமதிக்கிறதோ தெரியவில்லை. அல்லது முகவைத்தமிழனின் இந்த கற்பனை கேலியை கண்டு நிர்வாகம் மனம் மகிழ்கிறதோ என்றும் தெரியவில்லை.

நிர்வாகிகளின் நினைவுக்கு..

பிரச்னைக்குரிய மறுமொழிகள் என்று நிர்வாகம் கருதினால் அத்தகைய மறுமொழிகளை நிர்வாகம் அனுமதிக்காது.

தனி நபர் தாக்குதலில் (வசவு மற்றும் திட்டுதல்) ஈடுபடும் உறுப்பினர்கள் நீக்கப்படுவார்.

தமிழ்முஸ்லிம் மன்றம் ஏன்? எதற்கு?

நிர்வாகிகளே! சுதந்திரமான விவாத மன்றமா? அல்லது தந்திரமான விவாத மன்றமா?

அபூ ஆஸியா said...

உண்மையிலேயே பி.ஜே கோபப்பட்டாலும் கூட, அது உண்மையாக இருக்கட்டும் அல்லது பொய்யாக இருக்கட்டும் அதனால் நமக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்போகிறது.

நமது பட்டோளையில் இவர் புறம் கூறினார் அல்லது இட்டுக் கட்டினார் என்றுதானே எழுதப்படும்.

மார்க்க விசயத்திலுள்ள தவறுகள் நிச்சயமாக சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஆனால் தனி நபர் விமர்சனம் முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

இது ஒரு நல்ல முன்மாதிரி முஸ்லிமின் பண்பல்ல. சம்பந்தப்பட்டவர் தக்க பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

விமர்சகன் said...

நன்றி அபு ஆஸியா,

இது ஒரு நல்ல முன்மாதிரி முஸ்லிமின் பண்பல்ல. சம்பந்தப்பட்டவர் தக்க பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

தவறுகளை தவறென்று ஒத்துக் கொள்ளும் பண்பு நம் அனைவரிடமும் வளர வேண்டும். ஆகவே சகோதரர் அபு ஆஸியாவுடன் சேர்ந்து நானும் சம்பந்தப்பட்டவரிடம் (முகவைத்தமிழனிடம்) இருந்து தக்க பதிலை எதிர்பார்க்கிறேன்.

விமர்சகன்

Abu Fathima said...

----------------
உண்மையிலேயே பி.ஜே கோபப்பட்டாலும் கூடஇ அது உண்மையாக இருக்கட்டும் அல்லது பொய்யாக இருக்கட்டும் அதனால் நமக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்போகிறது.

நமது பட்டோளையில் இவர் புறம் கூறினார் அல்லது இட்டுக் கட்டினார் என்றுதானே எழுதப்படும்.

மார்க்க விசயத்திலுள்ள தவறுகள் நிச்சயமாக சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஆனால் தனி நபர் விமர்சனம் முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

இது ஒரு நல்ல முன்மாதிரி முஸ்லிமின் பண்பல்ல. சம்பந்தப்பட்டவர் தக்க பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
சூ மேற்கண்டவாறு சொன்னவர்: அபூ ஆஸியா | 9:23 யுஆஇ துரநெ 17இ 2006
-------------------
எல்லோருக்கும் ஒரே அளவுகோலை வைக்கவேண்டும் என்பதை பலநேரங்களில் சில மனிதர்கள் மறந்துவிடுகின்றனர். அந்த லிஸ்டில் அபுஆசியாவும் ஒருவர் என நினைக்கிறேன்.

ஹாமித் பக்ரி மேட்டரில் தனிநபர் விமர்சனம் செய்யப்பட்டதே... அப்போது ஏன் கேள்விகள் எழுப்பவில்லை?

இதுபோல பல விஷயங்களைச் சொன்னாலும்... ரொம்ப லேட்டஸ்டாக மௌலவி சம்சுதீன் காசிமி தன் மீது ஒரு குற்றச்சாட்டு கூறிவிட்டார் என்பதற்காக சொல்லவே நாகூசும் விஷயங்களை 'மக்கள் மத்தியில் தஃவாவுக்கென்று' காசு வாங்கி ஒளிபரப்புச் செய்யும் டிவிசேனலிலும் பின்னர் இணைய தளங்களிலும் பிளாஷ் நியூசாக போட்டனரே... எங்கேய்யா போனீர்கள்?

உண்மையிலேயே கண்டும் காணாதது போல இருந்தீர்களா அல்லது செலக்டிவ் அம்னீசியாவா? அபுஆசியா தான் சொல்லணும்...

ஊருக்குத்தான் உபதேசம் என்பது இதுதானோ.....

இப்படிக்கு
அபு பாத்திமா