நகைமுகன் என்ற தேவர் சாதி வெறியன் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாகக் காட்டிக் கொண்டு தமிழ் நாட்டு அரசியலில் அறிமுகமானான். நடிகர் சிவாஜி தனிக் கட்சி தொடங்கிய போது அவருக்கு ஆலோசகராக இருந்தான். டைரக்டர் ராஜேந்தர் தனிகம்பெனி நடத்திய போது அவருடன் சேர்ந்து தமிழ் தேசிய முன்னணி அமைத்து தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டான். அப்போது இவர்களுடன் கோமாளி சுப்ரமணிய சாமியும் சேர்ந்து இருந்தான். பின்னர் சிவசேனாவின் சின்னத்துடன் சேப்பாக்கம் தொகுதியில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டான். சென்ற முறை கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டதில் இவனது பங்கும் உண்டு. நகை முகன் திராவிடத் தமிழர் கழகம், தனித் தமிழர் கழகம் என்ற பெயர்களில் அமைப்புகளை நடத்தினான். 'திராவிடன் வீரம்' என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தினான். சசிகலாவின் கணவன் நடராஜனுக்கு நெருங்கிய நண்பன். அதானல் பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி கட்சியாகவும், அல்லது மறைமுக உறவுடனும் இருந்துள்ளான். தற்போது, தனித் தமிழர் சேனா என்ற பெயரில் அமைப்பு நடத்துகிறான். என்ன பெயரே உங்களுக்கு சிவ சேனாவை நினைவு படுத்துகிறதா? இப்போது இவன் இந்து மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறான். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது இவனது கோரிக்கை. தமிழக அரசு இவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவனது அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழக முஸ்லிம்களின் அரசியலில் உறவையும், பகையையும் தீர்மாணிப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போது புதிய சிக்கல்கள் தோன்றியுள்ளன. தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தங்கள் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
Thursday, December 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment