Thursday, November 15, 2007

மக்கள் உரிமைக்கு கேள்வி

சாதி அமைப்புகளுடன் சமூக ஒப்பந்தம் சாத்தியமா?
மக்கள் உரிமைக்கு கேள்வி
தமுமுகவின் மக்கள் உரிமை வார இதழின் 9 - 15 நவம்பர் 2007 தேதியிட்ட பதிப்பில் 'குஜராத் இனப்படுகொலை' தொடர்பாக வாசகர் கேட்ட ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது போல், சாதிய அமைப்புகளுடன் சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும் என எழுதியுள்ளனர். இது எந்த வகையில் சாத்தியம் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பான சில சந்தேகங்களுக்கு 'மக்கள் உரிமை' பதில் அளிக்க வேண்டும்.

1. தமிழ் நாட்டில், அமைப்பு ரீதியாகவே தேவர் சாதியினர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்டோர் தலைவராக வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
2. திண்ணியம், மேலவளவு போன்ற ஊர்கள் தேவர் சாதி வெறியின் அடையளமாக உள்ளன.
3. தேவர் சாதியினரில் மிகப்பெரும்பாண்மையினர் இவற்றை ஆதரிக்கின்றனர்.
4. நாடார் சாதியின் செல்வந்தர்களில் பலர் இந்து வெறி அமைப்புகளுக்கு புரவலர்களாக உள்ளனர். அச்சாதியின் ஏழைகள், இந்து வெறி அமைப்புகளில் உறுப்பினர்களாய் உள்ளனர்.
5. இதுவன்றி, முஸ்லிம்களுக்கு பல அமைப்புகள் இருப்பது போல், ஒவ்வொரு சாதிக்கும் பல சங்கங்கள் உள்ளன. எந்த சாதி அமைப்புடன் தமுமுக ஒப்பந்தம் செய்து கொள்ளும்?

இதே பொருளில் எழுதப்பட்ட முந்தைய பதிவுகள்:

No comments: