Wednesday, June 28, 2006

கோவை வழக்கில் விடுதலை (முஸ்லிம்கள் தவிர்த்து!)




Source: தினகரன் இ-பேப்பர் (28-06-2006)

2 comments:

அபூ ஸாலிஹா said...

இதே செய்தி தினத்தந்தியில்...

கோவையில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை
11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

சென்னை, ஜுன். 28-

கோவையில் நடைபெற்ற கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

கோவை கலவரம்

கோவை போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ். இவர் 29.11.97 அன்று கொலைச் செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து முஸ்லிம் வகுப்பை சேர்ந்தவர்களை சிலர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.

செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவைஅரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்றிருந்த கும்பலை சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்தும் எரித்தனர். அந்த பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்ததாக சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனை பார்த்த கலவர கும்பல் நேராக அந்த வேனுக்கு சென்று வேனில் இருந்த அபீப் ரகுமான் என்பவரை கத்தியால் குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

4 பேர் படுகொலை

பின்னர் வேனில் இருந்த ஆரிஸ் என்பவரை இழுத்துப்போட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது. இதில் அவரும் இறந்தார். சற்று நேரத்தில் உக்கடம் கலவரத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அïப்கான் என்பவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிப்பும், சுல்தானும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவர்கள் கூட்டத்தினரை பார்த்ததும் அரசு ஆஸ்பத்திரி வாசலிலேயே ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஓடினார்கள். ஆனால் வன்முறை கும்பல் அவர்களை விரட்டியது. இதில் ஆரிப்பை துரத்தி அடித்து கொன்றனர்.

சுல்தான் காயத்துடன் தப்பிவிட்டார். மேலும் லியாகத் அலிகான் என்பவர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அவரை ஆஸ்பத்திரியின் கேட்டிலேயே வன்முறை கும்பல் தடியால் அடித்துக்கொன்றது. இந்த கலவரத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் அபீப் ரகுமான், ஆரிஸ், ஆரிப், லியாகத் அலிகான் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 30.11.97 அன்று நடந்தது.

11 பேருக்கு ஆயுள் தண்டனை

இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்தார்.

பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ëப்பு வழங்கினார்.

சி.எஸ்.ராஜ×, சம்பத், ஆனந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு 18.8.2000 அன்று கூறப்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்பு

11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை எதிர்த்து 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர். இந்த வழக்கில் இருந்து 11 பேரையும் விடுதலை செய்தனர்.

source : http://www.dailythanthi.com/article.asp?NewsID=267602&disdate=6/28/2006

நன்றி: அழகு

ஆத்தூர்வாசி said...

நெஞ்சு பொருக்குதில்லையே!!!

தமிழ்நாட்டில் நடப்பவைகளை பார்க்கும்போது...

இஸ்லாமியர்களைக் கொன்றவர்கள் விடுதலை...

கேரள முதல்வரே கேட்டும் மனிதாபிமான சிகிக்சையின்மை... (கண்துடைப்புக்காக... ஏதோ...)

கண்துடைப்பு இட ஒதுக்கீடு... (மத்திய அரசு இந்தக் கல்வியாண்டில் இட ஒதுக்கீடு செய்துவிட்டது...
ஆனால் தமிழக அரசோ... எல்லாம் பேச்சில்...)

தொண்டர் அணி செயலாளரையே காப்பாற்ற முடியாத தமுமுக...

என்றுதான் இந்தச்சமுதாயத்திற்கு விடிவோ... யா அல்லாஹ்...