நன்றி : ஓசூர் ஆன்லைன்
உள்குத்து : இவ்வளவு தூரம் தம் கட்டி உணர்வு வாரஇதழில் சட்டசபைக்கு சென்ற சகோதரி "ஜெ" யின் சாதனையை "நமது எம்ஜிஆர்" பத்திரிகையைவிட அதிகமாக கட்டம் கட்டி எழுதியும் கூட தன்னை "அண்ணன்" என்று அழைக்காததால் உண்மையான அண்ணன் பிஜேயும் சகாக்களும் கடுமையான கோபத்தில் இருப்பதாக செய்தி.
ஜாம் பஜார் ஜக்கு : எலக்சன் உறவு எலக்சனோடு போச்சு, கலைஞரும் அம்மாவும் தங்களுக்கு ஒன்னுதான்னு அண்ணன் சொன்னதா கேள்வி. ஆனால் எதிர்கட்சிக்காரனை விட மோசமா முதல்வரை உணர்வு வாரஇதழில் விமர்சரிப்பது எதுக்குப்பா?
அண்ணன் தங்கச்சி பாசம் இன்னும் முறியலையின்னு காணிக்கறதுக்கானு? மக்கள் பேசிக்கிறாங்கப்பா!!
3 comments:
இன்னா ஜக்கு அன்னாத்தே, நானு இன்னா டோண்டுவா இல்லாங் காட்டி மாயவர்த்தானா லாம் கேட்டு என்னான்ட இன்னாமா கலாய்கீரெ..
ஒன்தேட்ரலலாம் நம்மாள படம் ஓட்ட முடியாது அன்னாத்தே ...எம்மாம் பெறிய ஆளு நீயி...இன்னாத்துக்கு பக்கிரி கைலெல்லாம் ஸொல்லிக்கினு..ச்சும்மா உஷாராகீரியானு பாத்தேன்...அப்பாலே...என்ன விட்ரு அன்னாத்தே நானு இத்தோட ஜகா வாங்கிக்கிறேன்...
//உள்குத்து : இவ்வளவு தூரம் தம் கட்டி உணர்வு வாரஇதழில் சட்டசபைக்கு சென்ற சகோதரி "ஜெ" யின் சாதனையை "நமது எம்ஜிஆர்" பத்திரிகையைவிட அதிகமாக கட்டம் கட்டி எழுதியும் கூட தன்னை "அண்ணன்" என்று அழைக்காததால் உண்மையான அண்ணன் பிஜேயும் சகாக்களும் கடுமையான கோபத்தில் இருப்பதாக செய்தி.//
ஆதாரத்தோடுதான் எழுதினீர்களா?
அல்லது
அண்ணனுடைய உள்ளத்திலுள்ளது தங்களுக்கு எப்படி தெரிய வந்ததென்பதை தெளிவாக கூற முடியுமா?
உண்மையிலேயே பி.ஜே கோபப்பட்டாலும் கூட, அது உண்மையாக இருக்கட்டும் அல்லது பொய்யாக இருக்கட்டும் அதனால் நமக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்போகிறது.
நமது பட்டோளையில் இவர் புறம் கூறினார் அல்லது இட்டுக் கட்டினார் என்றுதானே எழுதப்படும்.
மார்க்க விசயத்திலுள்ள தவறுகள் நிச்சயமாக சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஆனால் தனி நபர் விமர்சனம் முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.
இது ஒரு நல்ல முன்மாதிரி முஸ்லிமின் பண்பல்ல. சம்பந்தப்பட்டவர் தக்க பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
Post a Comment