Sunday, January 16, 2005

நவீன தொழிற்நுட்பத்தை...

மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழி தலாக் போன்றவை சமீபத்தில் கேள்விபட்டிருக்கலாம். மார்க்க அறிஞர்கள் இதனைப்பற்றி விவாதிப்பது தேவையில்லை என்பது எனது கருத்து.

ஒருவன் இவ்வளவு காலம் வாழ்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்கிறான். இந்த விவாகரத்து சாதாரண குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பும் அளவுக்கு அற்பமான விஷயம் அல்ல.

இருவரும் மனம் ஒப்பி விவாகரத்து செய்யும்போது இச்சிறு கன்ஃபர்மேசன் போதுமே என்று நீங்கள் நினைக்கலாம். இருவரும் மனம் ஒப்பினால்கூட அதே வழிமுறையை பிடித்துக்கொண்டு சிலர் விளையாடலாமல்லவா? இதனால் நடுநிலையாளர்கள்கூட இஸ்லாத்தைப்பற்றி தவறாக எண்ண வாய்ப்பாகிவிடும்.

ஒருவன் திருமணம் செய்துகொள்ள குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலிலோ பயன்படுத்தலாமா என்று யோசிப்பதில்லை. அதைவிட சென்ஸிடிவான ஒரு பிரச்சினையை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான் எனது வாதம்.

இதுபோன்ற ஃபத்வா கொடுக்கும் ஹஜ்ரத்துகள், தன் மகளுக்கு இதுவழியாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்வாரா?

எதிர்வினைகள்:
இதையெல்லாம்விட இஸ்லாத்தில் முத்தலாக் (ஒரே நேரத்தில் சொல்லும் மூன்று தலாக்) அனுமதி இல்லை என்பதும் அதனை சில முஸ்லிம்கள் பயன்படுத்துவதால் இஸ்லாத்திற்கு தவறான அவப்பெயர் என்பதும் நாம் அறிந்ததே. இறைவன் தன் திருமறையில் சொல்கிறபடி ஒவ்வொரு தலாக்கிற்கும் இடைவெளி கொடுத்து அந்த இடைவேளையில் அவன் தன் மனைவியை இணைத்துக்கொள்ள விரும்பினால் இணைத்துக்கொள்ளலாம் என்ற செய்தியும், அவ்வாறு இணைத்துக்கொள்ளாமல் கால இடைவெளிக்குப்பிறது மூன்று தலாக்குகள் பூர்த்தி ஆகிவிட்டதென்றால் அவன் தன்மனைவியை மீட்டிக்கொள்வதற்கு மனரீதியாக என்ன தண்டனை என்பதை நாம் அறிந்ததுபோல் மாற்றுமதத்தவர்கள் அறிந்துக்கொள்ள வாய்ப்புகள் இல்லை.

சாதாரணமாக ஒரு முஸ்லிம் தும்மினாலே வெடிக்குண்டு வெடித்துவிட்டது என்று பத்திரிகைகள் திரித்து எழுதும் காலத்தில் இருக்கிறோம். எனவே இதுபோன்ற அற்பமான ஆராய்ச்சிகளை கைவிட வேண்டும். மேலும் இறைவன் அனுமதித்த விஷயங்களில் மிகவும் வெறுக்கின்ற ஒரு விஷயம்தான் இந்த தலாக் என்பது. இதனை ஒரு வாழ்த்து செய்திபோல் விளையாடுவது நல்லதல்ல.

ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு பணம் அனுப்புவதற்கு ஃபாக்ஸ், மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை பயன்படுத்துவதில்லை. காரணம் இது நம்பகமானது அல்ல என்பதால் ஸ்விஃப்ட் (Swift) மற்றும் டெலக்ஸ்களே (Telex) பயன்படுத்தப்படுகின்றன.

நமது மற்ற மின்னஞ்சல் கணக்கிலிருந்து நமக்கே வைரஸ் அனுப்பப்படுகிறது. நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் தெரிகிறதா?

எல்லா விஷயங்களுக்கும் ரெடிமேட் ஃபத்வா எழுதுகிறேன் என்று முயற்சி செய்து உண்டாக்கப்பட்ட மொகலாய காலத்து ஃபத்வாக்கள் இன்று குப்பை கூடையில். ஆகவே இதுபோன்ற நடைமுறைகளையும் ஆராய்ச்சிகளையும் கைவிடப்படவேண்டும்.

நவீன தொலைத்தொடர்பு காரணிகளை பயன்படுத்தி முஸ்லிம்கள் முன்னேற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அது இத்தகைய விஷயங்களில் ஏற்படுவது முன்னேற்றமாக கருதமுடியாது.

உறுப்பினர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
அபூ உமர்

1 comment:

இப்னு ஹம்துன் said...

இக் கட்டுரையின் நிஜம் வலிமையாக சமூகத்தில் உணர்த்தப்படவேண்டும்.

மார்க்க அறிஞர்கள் இதுபோன்ற விஷயங்களை தமது பிரசங்கங்களின் வழியே விழிப்புணர்வேற்படுத்தவேண்டும்.