Tuesday, January 25, 2005

தனியார் ஹஜ் ஏஜென்டுகளிடம் கவனம் தேவை

14.01.2005 அன்று சேலம் மூசா டிராவல்ஸ் மூலமாக ஹஜ் செய்ய வந்த 67 புனித பயணிகள் ஜித்தா ஏர்போர்ட்டில் டிரலாவல்ஸின் தில்லுமுல்லு காரணமாக 40 மணிநேரம் காத்திருந்தனர்.

சில வருடத்திற்கு முன்பு மினாவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தற்போது (முஅல்லிம்) முறைப்படி தங்குவதற்கு இடம் மற்றும் ஏனைய பயண வசதிகள் செய்யப்பட்ட பின்னரே ஹஜ் செய்ய முடியும் என்ற நிலையை சவுதி ஹஜ் நிர்வாகம் எடுத்திருந்தது. அதன்படி மக்காவுக்கு வரும் ஹாஜிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்ட அதே வேளையில் பாதைகளில் தங்கும் யாத்திரியர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

அதன் படி சேலம் மூசா டிராவல்ஸ் நிர்வாகம் முஅல்லிம் நிர்வாகத்திற்கு கட்ட வேண்டிய தொகைக்கான காசோலையை எடுத்து வராததால் ஜித்தா விமான நிலையத்தில் இப்பயணிகள் சங்கடப்படவேண்டிய நிலையாகிவிட்டது. கடைசியாக அவர்களிடம் சிலவுக்கு உள்ள பணம் வசூல் செய்யப்பட்டு முஅல்லிமுக்கு நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட பின்னரே (அதாவது ஹஜ் கிரியை ஆரம்பிக்கும் கடைசி கட்டத்தில்) மக்காவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனை இங்கு எழுதுவதற்கு காரணம், இதே பிரச்சினையில் இதே டிராவல்ஸ் சுமார் 100 பயணிகளுடன் போன வருடம் இதே நாடகத்தை நடத்தியது. அப்படி இருந்தும் இந்த டிராவல்ஸ் மூலமாக ஹாஜிகள் வருவதற்கு ஏஜென்டின் முயற்சி காரணமாக இருக்கலாம்.

மனிதன் ஒரு தடவை தப்பு செய்யலாம். மீண்டும் மீண்டும் இதே வழியென்றால் இத்தகையவர்களை சமுதாயத்திற்கு இனம் காட்டுவது நமது கடமை.

இந்த தடவை சேலம் மக்கள் இச்செய்தியை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தி ஹின்டு, என்.டி.டீ.வி. போன்றவற்றிற்கு தெரிவித்து உள்ளார்கள். இது தவிர லோக்கல் பள்ளிவாசல்களில் இத்தகையவர்களைப்பற்றிய அறிவிப்பு செய்தால் மக்கள் விழிப்புணர்வு அடைய வாய்ப்புள்ளது. உணர்வு, மக்கள் உரிமை போன்ற முஸ்லிம்களின் வாரஇதழ்களுக்கு இத்தகைய செய்திகளை எடுத்துச்செல்வது நல்லது.

இத்தகைய விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஊர் பெரியவர்கள் இந்த டிராவல்ஸ்-க்கு கொடுக்கப்படும் லைசன்ஸ்களை ரத்து செய்வதற்குறிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அப்படியில்லையென்றால் அடுத்த வருடமும் இந்த நிலைமை வராது என்பது என்ன நிச்சயம்.

ஒரு முஸ்லிம் இரண்டு தடவை ஒரே விஷயத்தில் ஏமாறுவது அவனுடைய தகுதிக்கு இழிவானதாகும். அனுபவங்கள் எல்லாருக்கும் வருவதில்லை. மற்றவர்களுக்கு வந்தாலும் நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஏஜென்டிடம் நமது பயண வேலைகளை ஒப்படைப்பதற்கு முன்னால் அவர்களைப்பற்றி விசாரித்துக்கொள்வது நல்லது.

No comments: