Sunday, June 18, 2006

காதர் மொய்தீனை கண்டிப்போம்!

நன்றி: தினகரன் நாளிதழ் - 18 ஜூன் 2006

தமிழ் நாடு இ.யூ.முஸ்லிம் லீக்கின் தலைவரும், திமுகவின் மக்களவை உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொய்தீன், இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கும், தலித்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கை மிகவும் அறிவீனமானது. கண்டிக்கத்தக்கது. இஸ்லாத்தில் ஏற்கனவே இருக்கும் லெப்பை, மரைக்காயர், ராவுத்தர், தக்னீ போன்ற வேறுபாடுகளையே நாம் களைய வேண்டுமே தவிர, முஸ்லிம்கள் மத்தியில் தலித் என்று ஒரு புதிய சாதியைத் தோற்றுவிக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். கிறிஸ்தவர்களின் நிலை வேறு. அவர்களெல்லாம், இந்து மதத்திலிருந்து சாதிகளை மட்டுமல்ல. தீண்டாமை இழிவுகளையும் தமிழ் நாட்டு கிறிஸ்தவ மதத்துக்கு கொண்டுவந்து விட்டார்கள். இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி, வேலை வாய்ப்பு இழப்புகளை முஸ்லிம் செல்வந்தர்கள் தான் தங்கள் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக வழங்கி ஈடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அவர்களுக்கு கட்டணமின்றி இடமளிக்க வேண்டும். முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் கடைகளிலும், நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களே, உங்கள் கோரிக்கையை திரும்பப் பெறுங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தலித் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை தன் தேர்தல் அறிக்கையில் அச்சிட்டதற்காக, தமுமுக அ.இ.அ.தி.மு.கவிற்கு கொடுத்திருந்த தன் ஆதரவைத் திரும்பப் பெற்றது. முஸ்லில் லீக்கின் இக்கோரிக்கையை தமுமுக, த.நா. தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், தாவூது மியாகானின் முஸ்லிம் லீக், ஷேக் தாவூதின் முஸ்லிம் லீக் போன்ற முஸ்லிம் அமைப்புகளும், ஜமாஅத்தே இஸ்லாமியும் கண்டிக்க வேண்டும்.

4 comments:

அபூ ஸாலிஹா said...

//இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி, வேலை வாய்ப்பு இழப்புகளை முஸ்லிம் செல்வந்தர்கள் தான் தங்கள் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக வழங்கி ஈடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அவர்களுக்கு கட்டணமின்றி இடமளிக்க வேண்டும். முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் கடைகளிலும், நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.//

சத்தியத்தைக் கூறுகிறோம் பேர்வழி என்று சமுதாயத்தில் சண்டையை ஏற்படுத்துபவர்கள் மத்தியில், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை காலம் தாழ்த்தாமல் முன் வைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.

அபூ சுமையா said...

அருளடியான் said...

அபூ ஸாலிஹா, அபூ சுமையா - ஆகிய இருவருக்கும் நன்றி! முஸ்லிம் லீக் தலைவர்களிடம் தனிப்பட்ட நெருக்கமுள்ளவர்கள் நம் உணர்வ்களை தொலைப்பேசி வாயிலாகவும், நேரிலும் தெரிவியுங்கள்.

Unknown said...

இஸ்லாத்துக்கு வருபவர்கள் தங்கள் இனம் அனுபவிக்கும் இழிவையும் விட்டு விட்டே இஸ்லாத்தில் இயைண வேண்டும். பீ.ஜே. எப்போதோ சொன்னதுபோல் 'அத்தகையவர்கள் தன்னைத் தாழ்த்தப்பட்டவனாகவோ அல்லது தாழ்ந்தவனாகவோ கருதி அத்தகைய சலுகைகளுக்கு ஆசைப்படக்கூடாது. அவர்களின் புதிய சகோதரர்களாகிய நாம்தான் அவர்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.'
அவர்களின் பழைய நிலையிலிருந்து மாற்றி தலை நிமிர்ந்து மானமுள்ள மனிதனாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அதன் மூலம் நாமும் இறைவனிடமிருந்து நற்பேறுகளைப் பெற முடியும்.
காதர் மொய்தீன் தன்னுடைய கோரிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்பதே சரியானது.