Sunday, March 19, 2006

தமுமுகவும் தவ்ஹீத் ஜமாஅத்தும்

தமுமுகவைப் பற்றியும், தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றியும் என் கருத்தை ஏற்கனவே பதிவு செய்து விட்டேன். இந்த இரு அமைப்புகளைப் பற்றியும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் விமர்சனம் பலருக்கும் செய்தி மடலாக வந்து படித்து இருப்பார்கள். இவர்களைப் பற்றி பொதுவான விமர்சனங்களும் சில முஸ்லிம் வலைப்பதிவுகளில் படித்தேன். சமநிலைச் சமுதாயம் மாத இதழில் ஏவிஎம் ஜாஃபர்தீன் இவ்விரு அமைப்புகளைப் பற்றியும் வைத்துள்ள விமர்சனம் ஆக்கப் பூர்வமானது. எனவே இவ்விரு அமைப்புகளைப் பற்றியும் எதுவும் சொல்லாமல் பிற அரசியல் கட்சிகள் மீதான விமர்சனத்தை தொடர்கிறேன். இவற்றிலும் அ.இ.அ.தி.மு.கவைப் பற்றி போதிய அளவு விமர்சித்து விட்டேன். வாசகர்களின் தகவலுக்காக: தமுமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ இ அ தி மு க கூட்டணிக்கு தன் ஆதரவைத் தெரிவித்து உள்ளது.

1 comment:

சுட்டுவிரல் said...

//சமநிலைச் சமுதாயம் மாத இதழில் ஏவிஎம் ஜாஃபர்தீன் இவ்விரு அமைப்புகளைப் பற்றியும் வைத்துள்ள விமர்சனம் ஆக்கப் பூர்வமானது//

என்ன அது? எம் போன்ற வாசகர்களுக்கு அறியத்தரலாமே.!