Sunday, March 26, 2006

பாட்டாளி மக்கள் கட்சி



1. டாக்டர் ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கிய போது, தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் எந்த ஆட்சிப் பொறுப்பிலும் இருக்க மாட்டோம் என்று சொன்னார். ஆனால், தன் மகன் டாக்டர் அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்கியதுடன், மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்.

2. பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றத்துக்குப் பிறகு வன்னியர்கள் அரசு வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றதும், அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றதும் உண்மை தான். ஆனால், வணிகத்தில் வன்னியர்கள் இன்னும் வளரவில்லை. டாக்டர் அய்யாவின் குடும்பத்தினரைத் தவிர பிற வன்னியர்கள் மிகவும் வறிய நிலையிலேயே உள்ளனர்.

3. டாக்டர் ராமதாஸ் தன் சம்பந்தியை தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராய் ஆக்கியுள்ளார்.

4. டாக்டர் ராமதாஸ், எப்போதும் தன் கூட்டணி கட்சிக்கு துரோகமே செய்து வந்துள்ளார். தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக்குடன் பா.ம.க கூட்டணி சேர்ந்தது. மயிலாடுதுறை எம்.பி. சீட்டில் மறைந்த அப்துஸ் ஸமது போட்டியிட்டார். அவருக்கு வாக்களிக்காமல் பா.ம.கவினர் தி.மு.கவைச் சேர்ந்த வன்னிய வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஜான்பாண்டியன், திருமாவளவன், கிருஷ்ணசாமி என தலித் தலைவர்களுடன் மேடையில் தோன்றி செல்வாக்குப் பெற்ற பிறகு அவர்களுக்கு துரோகம் செய்தவர் ராமதாஸ். வாழப்பாடி ராமமூர்த்தியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், கூட்டணிக் கட்சித் தலைவரான அவரையே மக்களவைத் தேர்தலில் தோற்கடித்து, அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் செல்வகணபதியை வெற்றிபெறச் செய்தனர் பா.ம.கவினர். இந்த துரோகத்தில் டாக்டர் ராமதாஸின் நேரடிப் பங்கு உள்ளது.

5. கடந்த முறை பா.ஜ.க கூட்டணியில் இருந்து தி.மு.க உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியாய் விலகிய போது, கடைசியாய் விலகிய கட்சி பா.ம.கவே.

6. கட்சிக்காகப் பாடுபட்ட பன்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணசாமி, குணங்குடி ஹனீபா, பேராசிரியர் தீரன், பு.தா. இளங்கோவன் உள்ளிட்ட பலர் டாக்டர் ராமதாஸின் குடும்ப அரசியலால் வெளியேறினர்.

இக்கட்சியின் வளர்ச்சி சாதி அரசியலுக்கு வழிவகுக்கும். இக்கட்சி 31 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சி 5 இடங்களுக்கு மேல் பெறுவது தமிழ் நாட்டின் நலனுக்கு ஏற்றதல்ல. தமிழ் நாட்டின் முஸ்லிம் வாக்காளர்கள் இக்கட்சியைப் புறக்கணிக்க வேண்டும். இக்கட்சி போட்டியிடும் இடங்களில் வலுவான மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

No comments: