Thursday, February 03, 2005

இஸ்லாத்தின்பெயரால் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம்

சிலருக்கு எங்கு எதைப் பேசுவது என்று தெரியாது. ஏற்கனவே சுனாமியைப்பற்றி சுய ஆராய்ச்சி தமிழ்மணத்தில் வெளியிட்டு நபியவர்களையும், இஸ்லாத்தையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் எப்படியெல்லாம் கேளிசெய்ய வேண்டுமோ அதனை செய்தாகிவிட்டது.

சுனாமி வந்து மனிதர்கள் (குறிப்பாக குழந்தைகள்) இறக்கப்பட்டு எல்லாரும் சொந்த பந்தங்களை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அவ்வேளையில் "இது இறைவனின் தண்டனை என்றார்".

இப்பொழுது தமிழ்மணம் முஸ்லிம்வாசகர்கள் எல்லாம் பர்தா இல்லாமல் அலைந்து திரிந்துக்கொண்டிருப்பதால் பர்தாவின் அவசியத்தைப்பற்றி உணர்த்த வந்திருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்மணத்தில் முஸ்லிம்கள் வாசகர்கள் மிகக் குறைவு.

இவரைப்பற்றி முஸ்லிமல்லாதவர் சொன்ன ஒரு வார்த்தையை இங்கு சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும்.

"அல்லாஹ்வை கொடூரக்காரன் என்று சொல்வதற்கு ஜாஃபரைப்போன்று தைரியம் யாருக்கும் இல்லை" என்பதுதான் அது.

தமிழ்மணத்தில் இப்பொழுது சூடாக இருப்பது "முஸ்லிம் எதிர்ப்பு" கருத்துக்கள்தான். இதனை நீக்க திறமையை வெளிப்படுத்துவதை தவிர்த்து மற்றதையெல்லாம் செய்கிறார் சகோதரர் குவைத் ஜாஃபர் அலி.

மொத்தத்தில் தமிழ்மணம் வலைப்பதிவாளர் அரங்கத்தில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் ஒரே ஆள் இந்த சகோதரர்தான்.

இதனைப்பற்றி இங்கு ஜாஃபர் விவாதிக்க விரும்பினால் tamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு எழுதி இவ்விவாத அரங்கில் தன்னை இணைத்துக்கொள்ளச் சொல்லட்டும்.

இவர் சுனாமி பற்றி எழுதியது சரியா? தப்பா? என்று இங்கு விவாதம் நடத்தலாம்.

8 comments:

அபூ முஹை said...

abu yaseer, jafar ali இருவரும் ஒருவர் என்றே கருதுகிறேன்.

நிர்வாகி said...

இம்மன்றத்தில் அபு யாஸிர் என்று எழுதுவது நண்பர் ரஃபீக் அவர்கள். கணிணி மென்பொருள் வல்லுனர். ஜித்தாவில் பணிபுரிகிறார். யாஸிர் என்பதுதான் ஜாஃபர் அலி.

ஜாஃபர் அலி நல்ல சிந்தனையுடன் எழுத்துத் திறமைகளை உங்கள் இஸ்லாம் மின்மன்றத்தில் அரங்கேற்றியவர்தான். அறிவுரை சொல்லும் விஷயத்தில்கூட கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பார் என்று முன்பு தெரியும். "தமிழ் சகோதரர்களே!" என்ற அவரது பதிவில் மலம் திண்ணும் மனிதர்கள் என்று எழுதினார். பிறகு சுனாமி பற்றி எழுதிய போதுதான் தெரிந்தது இங்கிதமும் தெரியாதவர் என்று.

அவருடைய யாஹு மற்றும் ஹாட்மெயில் கணக்கிற்கு இன்விடேஷன் கொடுத்தாகிவிட்டது. இதுவரை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லுவதுதான் அவர் நோக்கம் என்றால் சென்சிடிவ் எது என்று தெரியாதவராக தமிழ்மணத்தில் எழுதுவதைவிட தமிழ்முஸ்லிம் மன்றத்தில் எழுதுவது சிறந்தது. எங்கள் தவறுகளை அவர் திருத்தட்டும். அவரின் தவறுகளை மன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டலாம் அல்லவா.

அபூ முஹை said...

சரிதான்.

Abu Umar said...
This comment has been removed by a blog administrator.
அபூ முஹை said...

இது வேண்டாம் என்று எண்ணுகிறேன். ஜாஃபர் தமது கருத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் எனவே பழசை சுட்டிக்காட்ட வேண்டாமே.

Abu Umar said...
This comment has been removed by a blog administrator.
அருளடியான் said...

சில முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் இஸ்லாத்தில் இணைந்தவர்களை படத்துடன் செய்தி வெளியிட்டு எதிர் தரப்பினரை ஆத்திரமூட்டினர். தற்போது, தன் உறுப்பினர்களிடம் பைஅத் பெறும் ஒரு முஸ்லிம் அமைப்பு நடத்தும் பத்திரிக்கையும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற புரிதலே இல்லாமல் செய்திக் கட்டுரைகள் வெளியிடுகிறது. இந்தப் போக்கை இணையத்திலும் கடைப்பிடிக்கும் ஜாஃபர் என்கிற யாசிர் போன்றவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அருளடியான்

Abu Umar said...

இங்கு பேசப்பட்ட பிரச்சினை இரண்டு வகையானது.

1) அறிவுரை சொல்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறதா என்பது பற்றியது
2) நாம் கூறும் விஷயம் குறிப்பிட்ட வசனம் சம்பந்தப்பட்டதுதானா என்பது

அவர் செய்த ஆராய்ச்சி தவறு என்பதை அவர் ஒத்துக்கொண்டார் என்றால் நித்தம் நித்தம் குர்ஆன் வசனத்தை சொல்லும் இவர், அங்கு தவறு நடந்துவிட்டதற்கு பொதுவாக வருத்தம் தெரிவிக்கவேண்டும் அல்லவா?. தவறு தன் ஆராய்ச்சியில் மட்டுமே தவிர குறிப்பிட்ட வசனம் இவ்வாறு கூறவில்லை என்று சொன்னால், இவர் ஏற்படுத்திய அவப்பெயர் அழியும் அல்லவா?.

இரண்டாவது சூழ்நிலை அறிந்து பேசவேண்டும் என்பதில் இன்னும் இவர் திருந்தவில்லை என்பதை கண் முன்னால் பார்க்கிறோம்.

இப்போதைக்கு இதுபோதும் என நினைக்கிறேன்.

அபூ முஹை கேட்டுக்கொண்டதற்கிணங்க குறிப்பிட்ட Comment-ஐ நீக்கிவிட்டேன். தேவைப்பட்டால் பிறகு இணைக்கலாம்.

அக்பர் பாட்சா தனது கட்டுரையில் எழுதிய கீழ்கண்ட விஷயம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

http://suvatukal.blogspot.com/2005/02/blog-post.html

///முஸ்லிம்கள் தான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும், குறிப்பாக தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் மார்க்கத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த தொடங்கியதன் விளைவுதான் இது. மாற்றார்களுக்கு, குறிப்பாக முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் குறை சொல்வதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு இப்படி மார்க்கத்தை அடையாளப் படுத்துவது இதனால் மிகவும் எளிதாகி விடுகிறது.///