ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து வந்து நான்கு முறை உம்ரா செய்துவிட்டார், உங்கள் மீது ஹஜ் செய்வது கடமையாகிவிட்டது என்றால் அதற்கு அவர் ஹஜ் செய்வதற்கு உடல் நிலை ஒத்துக் கொள்ளாது என்கிறார் . ஒரு கால் அவர் ஹஜ் செய்யாமல் இறந்து விட்டால் அவரின் நிலை என்ன? நபி வழியிலிருந்து விளக்கம் தேவை.
Monday, February 07, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்பின் அபூயாஸிர் ரஃபீக் அவர்களுக்கு,
ஒருவர் செய்த சுன்னத்தான உம்ராவுக்கும் அல்லது ஹஜ்ஜின் மாதங்களில் ஹஜ் செய்வதற்காக இன்றி செய்த உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதுபோன்ற கேள்விகள் கேட்பதற்கு முன், இதனை பல்வேறு கோணங்களில் யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே விடை கிடைத்துவிடும்.
ஒருவருக்கு ஹஜ் கடமையான நிலையில் (பொருளாதார வசதியும் உடல் சக்தியும் இருந்து) ஹஜ் செய்யாத நிலையில் துல்ஹஜ் மாதமும் அவரை கடந்துச் சென்றுவிட்டால், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றைச் செய்யாதவராகிவிடுகிறார். இத்தவறு இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள விஷயம் என்பதால் இறைவன் மன்னிக்கவும் செய்யலாம் தண்டிக்கவும் செய்யலாம். (இறைவன் மிக்க மன்னிப்பாளன்).
அதுவல்லாது உடல்முடியாத காரணம் உண்மையாக இருந்தால் அவருக்கு ஹஜ் கடமை இல்லை.
எதிர்காலத்தில் உங்களிடமிருந்து நல்ல பல விஷயங்களை எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற கேள்விகளைத் தவிர்த்து, இம்மன்றத்தின் மூலம் நல்ல பல சிந்தனைகளை எங்களுக்கு கற்றுத் தருமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கங்கள் மட்டுமே இஸ்லாம் என்பது தவறான எண்ணம்.
இம்மன்றம் நிறுவப்பட்டது எழுத்தாற்றலை வளர்க்கவே. எழுத்துக்களால் நாம் சுற்றி வலைக்கப்பட்டிருக்கிறோம். நாம் போராடவேண்டியது நிறைய இருக்கிறது.
///ஒருவருக்கு ஹஜ் கடமையான நிலையில் (பொருளாதார வசதியும் உடல் சக்தியும் இருந்து) ஹஜ் செய்யாத நிலையில் துல்ஹஜ் மாதமும் அவரை கடந்துச் சென்றுவிட்டால்///
ஒருவருக்கு ஹஜ் கடமையான நிலையில் (பொருளாதார வசதியும் உடல் சக்தியும் இருந்து) ஹஜ் செய்யாத நிலையில் துல்ஹஜ் மாதமும் அவரை கடந்துச் சென்று மறுவருடங்களில் அவரின் ஹஜ்-ஐ நிறைவேற்ற முடியாமல் இறந்துவிட்டால் என்று திருத்தி படிக்கவும்.
நான் சொல்லாமல் விட்ட விஷயத்தை பூர்த்தி செய்யும்படி நண்பர் அபூ முஹை அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அதோடு, அபூ முஹை அவர்கள் முரசு அஞ்சல் மென்பொருளை உபயோகித்திருப்பதால், விண்டோஸ் 98 உபயோகிப்பவர்களுக்கு முரசு அஞ்சல் பயன்படுத்தும் விதத்தை சிறிய கட்டுரையாக தரும்படி அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment