தொழுகையில் அக்கறை இல்லை என்பது சரி அல்ல ஏனெனில் நான் ஐந்து வேலையும் பள்ளிவாசலுக்கு செல்கிறேன்.. எனக்கு அக்கறை உண்டு.. ஆனாலும் எனக்கு கவனம் இல்லையே என்று கேள்வி எழுவது நியாயமே..ஆனால் பள்ளிகூடம் தவறாமல் செல்லும் மாணவன் பரீட்சையில் தேர்ச்சி பெறாமல் போவது மாதிரி தான் இதுவும். மாணவன் தவறாமல் பள்ளிக்குச் செல்கிறான்.. ஏன்?.. காசு கட்டி சேர்ந்தாச்சே.. வீட்டில் ம்மா வாப்பா(அத்தா) திட்டுவார்கள் என்று தான் செல்கிறான்.ஆனால் படிப்பில் கவனம் இல்லை.. அதனால் பரீட்சையில் தேர்ச்சி பெறாமல் போகிறான். ஆகவே பாடத்தில் கவனம் வைக்க வேண்டும்.அதற்கு பாடத்தில் பிரியம் ஏற்பட வேண்டும். ஆதமுக்கு இப்லீஸ் மட்டும் சஜ்தா செய்யாமல் போனது அவனது அன்பு போலியானது என்பது தான்.ஆகவே தொழுகையை இறைவனுக்காக நேசியுங்கள். கவனம் தன்னால் வரும் என்பதை கவனித்து தெரிந்து கொள்ளலாம்.
தொடரும்..
Saturday, February 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இரண்டாவது பகுதியில் சொன்ன விஷயங்கள் அருமை.
இதில் கவனம் என்பது நபியவர்கள் காட்டித்தந்த முறைப்படி(தொழுவது) என்று புரிந்துக்கொண்டேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
Salaam to you Mr Abu Umar
Where is 'thamilil type seiyua' column..
I want to type thru that channel..
I respect your valuable commennts on my first part..
But you have to ait until I finish all the Part and then you ask your querries..I haven't finish my topic..
Thanks..
A.MohamedIsmail
அன்பின் இஸ்மாயில் நானா அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
/// I respect your valuable comments on my first part.. ///
நன்றி!
///You have to wait until I finish all the Part and then you ask your queries. I haven't finish my topic…///
கட்டுரையை பகுதி பகுதியாக வெளியிடுவது படிப்பவர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகவே இருக்கவேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் ஒரு பகுதியே நடத்தப்பட்டிருந்தாலும் அதில் உள்ள சந்தேகங்களை கேட்பது மாணவனின் உரிமை. பதில் சொல்வது ஆசிரியருக்கு கடமை என்பதாக நான் புரிந்து வைத்துள்ளேன்.
தற்போது நான் உங்கள் மாணவன். என்னுடைய கருத்துகளுக்கு நீங்கள் பிறகு சொல்வதென்றால் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் கேள்வியை இப்போதே கேட்டுவிடுகிறேன். இதன் மூலம் உங்கள் கட்டுரையில் அதற்கான பதிலையும் நீங்கள் இணைத்துவிடலாம் அல்லவா.
தமிழ் யுனிகோடில் டைப்செய்வதற்கு உதவக்கூடிய பக்கத்திற்கான சுட்டி, நமது தளத்தில் மேல் வலது மூலையில் இணைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்காக மீண்டும்:
http://islamkalvi.com/converter.htmYou can copy them, then paste into the comment page.
அன்புடன்
அபூ உமர்
ஸலாம் தம்பி அபூ உமர் அவர்களுக்கு..
நீங்கள் சாதாரண மாணவன் அல்ல நல்ல சூட்டிகையான மாணவனாக இருக்கக் கூடும்(உங்கள் மாணவன் அல்லவா என்று நீங்கள் கூறுவது கேட்கிறது) இல்லையென்றால் ஆசிரியருக்கே பாடம் எடுக்கும் விதமாக கேள்வி கேட்க முடியுமா?
அ.முகம்மது இஸ்மாயில்
Post a Comment