இணையத்தில் செய்தி பத்திரிகை வாசிப்பதைவிட, பத்திரிகை வாங்கி படிப்பது ரொம்ப நல்லதாக படுகிறது. போன வாரம் தினமணி பேப்பரை புரட்டியதில் "கொல்லப்பட்ட பலஸ்தீன தீவிரவாதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது" என்ற பட செய்தி போட்டிருந்தார்கள்.
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்லும் தினமணி, தீவிரவாதிகளை நல்லவர்களாக சித்தரிப்பதைதான் ஜீரணிக்க முடிவதில்லை. சொந்த வீடுகளை இடித்து தாய்மண்ணை கபளீகரம் செய்யும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக கல்லெரியும் 10-வயது பாலஸ்தீனிய சிறுவர்களை பிடித்து கொலை செய்யும் இஸ்ரேல் இராணுவத்தை அது தன் கடமையை செய்துவிட்டதுபோலவும் கொலை செய்யப்பட்ட சிறுவர்களை தீவிரவாதிகள் என்றும் வெளிப்படுத்துகிறார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், வாழைப்பழ ஜுஸில் ஊசி ஏற்றுவதை தினமணியில் பார்த்துக்கொள்ளலாம். நமக்கென்று தனி நாளிதழ் உருவாகும் வரை வேறு வழியில்லை.
அப்பு முதல் சங் பரிவாரத்தினை தூக்கிபிடிக்கும் போக்கு தினமணியில் நிரம்ப உண்டு. நடுநிலையாளராக நடித்தாலும் நாலு செய்தி தெரிந்துக்கொள்ள முடிகிறது. சேனலில் நமக்கு தேவையான குறிப்பிட்ட செய்தியை மட்டும் உள்வாங்கிக்கொள்ள முடியாது. நடிகை வழுக்கி விழுந்த செய்தியையும் தலையில் சேகரித்துக்கொள்ள வேண்டும். பத்திரிகை அப்படியல்ல, தேவையானதை மட்டும் படித்துக்கொள்ளலாம். ரிகார்டாகவும் இருக்கும். இந்த தேதி பத்திரிகையில் இந்த செய்தி இருக்கிறது என்று ஆதாரம் எழுத முடியும். ஆதாரத்திற்கு யாரும் சேனலை குறிப்பிடுவது இல்லையே.
பிளாக்கர் தளத்தில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே ஜிமெயில் இன்விடேஷன் வழங்கி வந்த ஜிமெயில் தற்போது எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுப்பதுபோல் தெரிகிறது. அதுவும் குறைந்தது 50 இன்விடேஷன்கள்.
2 எம்.பி அளவு மின்னஞ்சலை பயன்படுத்தும் ஹாட்மெயில் காதலர்கள் உஜாலாவுக்கு மாறுவதாக தெரியவில்லை. உங்கள் ஹாட்மெயில் மின்னஞ்சலின் அளவை அதிகரித்துக்கொள்ள விரும்புகிறவர்கள் எனக்கு மடலிடவும் (toabuumar@gmail.com). அதற்கான வழிமுறைகளை அனுப்பித்தருகிறேன்.
தமிழ்மணத்தில் "பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்" என்ற கட்டுரை செமப்போடு போடுகிறது. எனக்குதான் "டாலாக்கு டோல் டப்பிமா"-வுக்கு அர்த்தம் தெரியாது என்றிருந்தேன். இவர்களுக்கும் அர்த்தம் தெரியாதாம். தமிழ் பற்று பற்றி பேசும் சில மூத்த இலக்கியவாதிகள் தனது வலைப்பதிவுகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் இட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
இன்னொரு பதிவு தமிழ்மணத்தில் சக்கை போடு போட்டது. "பொய்மை இகழ் - சோ" என்ற தங்கமணியின் கட்டுரைதான் அது.
20.02.2005-க்கான தினமணி கதிரில் தொழில் வெற்றிக்கு பிரத்யேக கன்சல்டிங் அளிக்கும் நெடுமாறன் அவர்களிடம் "நம் நாடு தொழிற்துறையில் பின்தங்கியிருக்க அதிக மக்கள் தொகையே காரணம் என்கிறார்களே?" என்று கேட்டதற்கு, கீழ்கண்டவாறு பதில் அளித்திருந்தார்.
இது தவறான கருத்து. உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இன்று பொருளாதாரத்திலும் அது உயர்ந்து நிற்கிறது. வளரும் நாடுகள் சீனாவின் தொழில் புரட்சியைப் பின்பற்றுகின்றன. அமெரிக்கா, சீனாவைக் கண்டு அலறுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில், நேருவைச் சந்தித்த டாடா, "பெருகி வரும் மக்கள் தொகை எதிர்காலத்தில் இந்தியாவைப் பாதிக்கும்" என்றார். அதற்கு நேரு, "பிறக்கும் ஒவ்வாரு குழந்தையும் வாயுடன் மட்டும் பிறப்பதில்லை. உழைப்பதற்கு இரு கைககளுடன்தான் பிறக்கின்றன" என்றார்.
அது போல நாம் கைகளுக்கு ஆக்கப்பூர்வமான வேலை கொடுக்க மறந்துவிட்டோம்.
Friday, February 25, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிகவும் அவசியமான, அலசப்பட வேண்டிய கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்.
QUOTE:
"நமக்கென்று தனி நாளிதழ் உருவாகும் வரை வேறு வழியில்லை."
அதுவரை, இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் விஷ கருத்துக்களைக் களைய, முழு முயற்சி எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு முஸ்லிம்களும் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Post a Comment