தொழுகையில் கற்க வேண்டியது
இஸ்லாத்தில் தொழுகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது என்று சொல்ல தேவையில்லை. ஆனால் தொழுகையை முறையாக தொழுவதே இல்லை. இறைவன் கூட தனது திருமறையில் 'இறைவனை கண்ணியப் படுத்த வேண்டியவாறு கண்ணியப் படுத்த வில்லை' என்று கூறுகிறான்.மஜ்னூன் ஒரு முறை லைலாவை தேடி அலைந்து கொண்டிருக்கும் போது தொழுகின்ற ஒருவரை கடந்து சென்று விட்டான். அந்த தொழுகையாளி தொழுது முடிந்ததும் மஜ்னூனை பிடித்து, 'ஏன்பா.. நான் தொழுதுகிட்டிருக்கிறது தெரியாம குறுக்கே போறீயே இது தவறில்லையா?' என்கிற ரீதியில் கேட்க மஜ்னூன் சொன்னானாம், 'நான் லைலாவை தேடி சென்றேன்.. எனக்கு லைலாவை தவிர வேறு எதுவும் கண்ணுக்கு தெரிய வில்லை.. ஆமாம் நீங்கள் அல்லாவை வணங்கியதாக சொன்னீர்களே அப்படியானால் நான் குறுக்கே சென்றது உங்களுக்கு எப்படி தெரிந்தது..' என்று. இதில் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு.. அதாவது நாம் இறைவனை முறையாக தொழ வில்லை என்பது தான் அது. கவனம் என்பது அக்கறை சம்மந்தப்பட்ட விஷயம்.. தொழுகையில் அக்கறை இல்லை என்பது தான் உண்மையாக இருக்கும்.
தொடரும்..
Saturday, February 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்புள்ள இஸ்மாயில் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தங்களின் பதிவிற்கு நன்றி. இவ்விவாத மன்றத்தில் கருத்துக்களை பதிவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உள்ளது. அதுபோல் எதிர்மறையான கருத்துக்கள் வந்ததென்றால் அதனை எதிர்கொள்வதோ, விளக்கம் அளிப்பதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ உங்களின் கடமை என்பதையும் ஞாபகத்திற்கு கொண்டுவருகிறேன்.
எனது வேண்டுகோள்:
சுதந்திரமான விவாதத்திற்கு இம்மன்றம் தயாராக உள்ளது. இதன் மூலம் நம் அறிவை பன்படுத்திக்கொள்வது ஒன்றுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
அன்புடன்
நிர்வாகி
Quote
///"ஆமாம் நீங்கள் அல்லாஹ்-வை வணங்கியதாக சொன்னீர்களே அப்படியானால் நான் குறுக்கே சென்றது உங்களுக்கு எப்படி தெரிந்தது..." என்று.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு.. அதாவது நாம் இறைவனை முறையாக தொழ வில்லை என்பது தான் அது.///
UnQuote
சகோதரர் இஸ்மாயில் அவர்களுக்கு,
தொழுகையில் இருக்கும் போது மணி எத்தனையென்று நேரம் பார்ப்பது, தலையை அண்ணாத்தி பார்ப்பது போன்ற செயல்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
அதே நேரத்தில், தன்னை மறந்து (அதாவது குறுக்கே யாராவது சென்றாலும் தெரியாத அளவுக்கு) தொழும்படி இஸ்லாம் காட்டித் தரவில்லை.
கீழ்வரும் மூன்று ஆதாரங்களும் ஹதீஸ்களின் கருத்துக்கள் மட்டுமே. ஆதாரத்துடன் தேவைப்பட்டால் தேடி எடுத்துதர கடமைப்பட்டுள்ளேன்.
1. தொழுகையில் தடுப்பு (சுத்ரா) வைத்து தொழச்சொன்ன நபியவர்கள், அதனையும் மீறி குறுக்கே செல்பவர்களை கைநீட்டி தடுக்க சொன்னார்கள்.
2. நபியவர்கள் ஜமாஅத் தொழுகையில் இருக்கும்போது குழுந்தையின் அழுகுரல்
கேட்டு தொழுகையை நீட்டாமல் சுருக்கிக்கொண்ட நிகழ்ச்சி.
3. தொழுகையிடத்தில் விஷ ஜந்துக்கள் வந்தால் அதனை அடித்துவிட்டு தொழவேண்டும் என்று நமக்கு ஏவியது.
இது போன்ற விஷயங்கள் நீங்கள் சொன்னவைகளுக்கு எதிரானதாகவே இருக்கிறது. காரணம் தன்னை மறந்து தொழுதால், குறுக்கே செல்பவனை கைநீட்டி தடுக்க முடியாது, குழந்தை அழுவது தெரியாது, சஜ்தா செய்யுமிடத்தில் பாம்பு படமெடுத்தாலும் தெரிய வாய்ப்பு இல்லை.
நான்கு வருடத்திற்கு முன்பு திருமணமான புதிதில், (லைலாவினால்) மஜ்னூனாக மாறியிருந்த சமயம், டவுன் பள்ளிக்கு தொழுகைக்கு போயிருந்த போது, ஒரு ஆள் திடீரென எனக்கு முன்னால் தோன்றி கோபமாக, "நான் தொழுதுக்கொண்டிருப்பது உனக்கு கண்ணு தெரியலையா", என்றார். அதாவது அவர் தொழுது கொண்டிருக்கும்போது நான் குறுக்கே சென்றுவிட்டேனாம்.
"நீங்கள் ஏன் கைநீட்டி தடுக்கவில்லை", என்று நான் கேட்டதற்கு, "யாராவது தொழும்போது கைநீட்டி தடுப்பார்களா?", என்றார்.
தொழுகையில் குறுக்கே செல்வது தவறு என்று தெரிந்தவருக்கு, கைநீட்டி தடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.
முறையாக, கவனத்துடன் அல்லது அக்கறையுடன் தொழுதால் மட்டுமே ஒருவருக்கு யாராவது குறுக்கே சென்றால் புரிந்துக்கொள்ள முடியும். இஸ்லாம் சொல்லும் தொழுகை பல நிலைகளை உள்ளடக்கியது. அதில் தக்பீர் உண்டு, ருக்ஹு உண்டு, சுஜுது உண்டு. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தொழுகைக்கும் ரக்அத் மாறுபடும். இதில் குறுக்கே செல்பவரை அறியாதவண்ணம் தொழுவதற்கு சாத்தியமில்லை.
Post a Comment