Monday, February 14, 2005

முரசு அஞ்சல் மென் பொருள் உபயோகிக்கும் முறைகள்!

ஆங்கிலத் தட்டச்சாளர்களுக்கு வேகமாக எழுதுவதற்கு தோதான மென் பொருளே முரசு அஞ்சல் - முரசு அஞ்சல் பயன்படுத்தும் முறைகள் பற்றி சிறு விளக்கம்!

முரசு அஞ்சலை பதிவிறக்கம் செய்து கணனியில் பொருத்திக் கொள்ளுங்கள். 'நோட்பேட்" முரசு அஞ்சலில் எழுவதற்கு மிக வசதியாக இருக்கிறது - அது பற்றியே இங்கு விவரிக்கிறேன்.

நோட்பேடை சொடுக்கித் திறந்து அதில் +Murasu ஐ சொடுக்கி >Set keyboard >Anjal keyboard ஐ சொடுக்கி (ரைட் மார்க்கில்) வையுங்கள். மீண்டும் +Murasu ஐ சொடுக்கி >Set Encoding >Unicode Tamil ஐ சொடுக்கி (ரைட் மார்க்கில்) வையுங்கள்.

அடுத்து Format ஐ சொடுக்கி Word Wrap சொடுக்கி (ரைட் மார்க்) வையுங்கள். மீண்டும் Format >Font >TSCu_InaiMathi ஐ சொடுக்கி எழுத்துருவின் அளவையும் தேவைக்கேற்றாற்போல் சொடுக்கி OK கொடுத்து விடுங்கள். இப்போது யுனிகோட் எழுத்துரு தயார்!

உங்கள் கீ போர்டில் F12 ஐ அழுத்திவிட்டு tha த mi மி z ழ் என thamizil - தமிழில் எழுதலாம். மீண்டும் F12 ஐ அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுதலாம். சுருங்கச் சொன்னால் 'தமிங்கிலம்' எழுத வசதியான மென் பொருள்.

எழுதியதை சேமித்து வைக்கும்போது சேமிக்கும் இடத்தில் Encoding - Unicode அல்லது UTE-8 ஐ சொடுக்கி வையுங்கள். Encoding >ANSI ல் இருந்தால் சேமிக்க மறுத்துவிடும்.

இதே முறைதான் +Murasu >Set Encoding >TSCII 1.7 Tamil - TAB Tamil - TAM Tamil ஆகியவற்றை சொடுக்கி திஸ்கி(TSCII), டாப்(TAB), டாம்(TAM) எழுத்துருவில் எழுதலாம். முரசு அஞ்சலில் தமிழ் எழுதும் போது கண்டிப்பாக F12-ஐ ஒருமுறை அழுத்திக்கொள்ள வேண்டும்.

முரசு அஞ்சலை கணனியில் பொருத்தியபின் எப்போது கணனியைத் திறந்தாலும் விண்டோவில் வெளிப்படும் Murasu Anjal2000 னை Minimise செய்து கொள்ளுங்கள்.

கூடுதல் விபரம், மற்றும் எழுத்துக்கள் பற்றி விபரங்கள் தேவையெனில் எழுதுங்கள். (இதை முரசு அஞ்சல் யுனிகோடில் எழுதியுள்ளேன்)

7 comments:

நிர்வாகி said...

வின்டோஸ்-98 உபயோகிப்பவர்களுக்கு யுனிகோடு தமிழில் தட்டச்சு செய்ய இருந்த ஒரு பிரச்சினையும் நீக்கப்பட்டுவிட்டது. அபூமுஹை அவர்களுக்கு நன்றி.

முரசு அஞ்சல் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய தயக்கம் உள்ளவர்கள், இவ்வலைப்பதிவின் ஆரம்பத்திலேயே "தமிழ் தட்டச்சு செய்ய" ஒரு பக்கத்தின் சுட்டியும் (http://islamkalvi.com/converter.htm) இணைக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைனில் இருந்துக்கொண்டுதான் தட்டச்சு செய்யவேண்டும் என்பதில்லை. இப்பக்கத்தை உங்கள் கணினியிலேயே Save as போட்டு சேமித்துக்கொள்ளலாம். TheneeUniTx.ttf (http://islamkalvi.com/font/TheneeUniTx.ttf) என்ற எழுத்துரு மட்டும் உங்களிடம் இருந்தால் போதுமானது. வின்டோஸ் Xp உபயோகிப்பவர்களுக்கு இந்த எழுத்துருவும் அவசியமில்லை.

உறுப்பினர்கள் நல்ல கருத்துகளை எழுத்து வடிவில் பதியும்போது எழுத்தாற்றல் மேலும் பண்படும். இங்கு உறுப்பினர்களாக பதிவு செய்த நண்பர்கள் அதிகம். ஆனால் எழுதுபவர்கள்தான் குறைவு. எழுதப்பழகுங்கள்! எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள்!. உங்கள் கருத்துகளை இவ்வையகத்திற்கு தெரிவியுங்கள்!.

அன்புடன்
நிர்வாகி

Abu Umar said...

அபூமுஹையாரே,
நீங்கள் "தமிங்கிலம்" என்று எழுதியதை நான் திமிங்கிலம் என்று படித்துவிட்டேன். நாங்கள் தங்கிலீஸ் என்றுதான் சொல்லுவோம்.

என்னைப்போன்ற சோடாபுட்டிகளுக்காக இத்தளத்தின் எழுத்துரு அளவை சற்று அதிகரித்திருப்பது மகிழ்ச்சி. உங்களின் கட்டுரை பயனுள்ளதாக இருக்கிறது. முக்கியமாக TAB எழுத்துருவில் தட்டச்சு செய்ய என்ன செய்வது என்று சிறிது நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்.

கட்டுரைக்கு நன்றி,

அன்புடன்
அபூ உமர்

நிர்வாகி said...

எ-கலப்பை (ver.2.0) மூலம் தமிழ் யுனிகோடில் தட்டச்சு செய்ய

எகலப்பை (ver. 2.0) மென்பொருள் மூலம் யுனிகோட், டிஸ்கி எழுத்துருக்கள்

இப்னு ஹம்துன் said...

அன்புள்ள அபூ முஹை,
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் இதுவரை முரசு அஞ்சலில் அல்லது சுரதா பக்கத்தில் அடித்து காப்பி பேஸ்ட் செய்வதுண்டு.

யாஹூவில் மெய்ல் அனுப்பும் போது பேஸ்ட் செய்தாலும் எழுத்துக்கள் மாறிவிடுகின்றன.
மரத்தடி க்கு இணைப்பாக அனுப்ப நினத்தால் அவர்களோ இனைப்புகளை ஏற்பதில்லையாம்..

என்க்கு மெய்லில் திஸ்கி யும் யுனிகோடும் எப்படி அடிப்பது என்பதை சொல்லித்தருவீர்களா?
நன்றி வஸ்ஸலாம்.

Abu Umar said...
This comment has been removed by a blog administrator.
Abu Umar said...

யுனிகோடு எழுத்துருவை பல்வேறு இடங்களில் பயன்படுத்துவது எப்படி?இங்கே சொடுக்கவும்
http://islamkalvi.com/web/unicode_help.htm

திஸ்கி எழுத்துருக்களை பல்வேறு இடங்களில் பயன்படுத்துவது எப்படி?இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

முதன்மை பட்டியலின் இருந்து Tools என்ற பிரிவில் Internet Options என்ற பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்
அதில் Fonts என்ற பொத்தானை அழுத்தி Language Scripts என்பதில் User Defined என்பதை தேர்வு செய்யவும்
அத்துடன் Web Page Font என்பதற்கு TSC_Avarangal (http://islamkalvi.com/font/tscava.ttf) என்ற வரிவடிவினைத் தேர்வு செய்யவும்
தமிழ் மின்னஞ்சல் கடிதங்களை வடிவமைக்கும்போதும் தமிழ் பக்கங்களைப் படிக்கும் போதும் குறியீட்டினை User Defined ஆக அமைத்திட வேண்டும் இதற்கு முதன்மைப் பட்டியலில் இருந்து Encoding என்னும் பட்டியலைக் கிளிக் செய்து User Defined என்பதைத் தேர்வு செய்யவும்

இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஹாட்மெயில்

மேற்கூறியது போல இண்டர்நெட் எக்ஸ்புளோரரை தமிழில் உள்ளீடு செய்யும்படி அமைக்கவும்
ஹாட்மெயில் இணையத்தின் மூலம் தமிழில் மின்னஞ்சல் செய்ய Compose என்ற பகுதிக்குச் செல்லவும்
இப்பொது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் முதன்மைப்பட்டியலில் இருந்து View என்ற பட்டியலில் Encoding என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் User Defined என்பதனைத் தேர்வு செய்யவும்
மேற்கூறிய முறையையே தமிழ் மின்னஞ்சல்களைப் படிக்கவும் பயன்படுத்தலாம்
குறிப்பு - உங்கள் நண்பர்கள் நீங்கள் அனுப்பும் தமிழ் மின்னஞ்சல்களைப் படிக்க இயலாமல் சிரமப்பட்டால் உங்கள் மின்னஞ்சல்களில் எந்த வித வடிவமைப்பையும் பயன்படுத்தக் கூடாது Plain Text மட்டும் பயன்படுத்த வேண்டும் இதற்கு ஹாட்மெயிலின் Tools என்ற பிரிவினை கிளிக் செய்து Rich Text Editor OFF என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்

முதன்மை பட்டியலில் இருந்து Tools பிரிவை கிளிக் செய்யவும்
அதிலிருந்து Option பிரிவில் Read என்னும் பகுதியை தேர்வு செய்யவும்
இதில் Fonts என்னும் பட்டனை அழுத்தி அதில் User Defined என்பதை கிளிக் செய்யவும்
இப்போது Proportional Font என்னும் இடத்தில் TSC_Avarangal எழுத்துருவையும் Fixed Width என்னும் இடத்தில் aAvarangalFxd என்ற எழுத்துருவையும் தேர்வு செய்த பின் OK பட்டனை அழுத்தவும்
தமிழ் மின்னஞ்சல் கடிதங்களை வடிவமைக்கும்போதும் அவற்றை படிக்கும் போதும் குறியீட்டினை User Defined ஆக அமைத்திட வேண்டும் இதற்கு முதன்மைப் பட்டியலில் இருந்து Encoding என்னும் பட்டியலைக் கிளிக் செய்து User Defined என்பதைத் தேர்வு செய்யவும்.

யாஹு மெசஞ்சர்

யாஹு மெசஞ்சர் மூலம் தமிழில் அரட்டையடிக்க Login என்னும் பிரிவில் கிளிக் செய்து Preferences என்னும் பிரிவைத் தேர்வு செய்யவும்
இதில் Category என்னும் பிரிவில் Appearance என்ற பகுதியைத் தேர்வு செய்யவும்
இங்கு Text Font என்ற பகுதியில் TSC_Avarangal வரிவடிவினைத் தேர்வு செய்யவும்
பிறகு Fonts and Colors என்ற பட்டனைக் கிளிக் செய்து TSC_Avarangal என்ற வரிவடிவினைத் தேர்வு செய்யவும்
இத்துடன் உங்களது தேர்வைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிட Always use my fonts and colors, overriding my friends என்பதை டிக் செய்யவும்.

எம் எஸ் என் மெசஞ்சர்

அரட்டையைத் தொடங்கும் முன் Fonts என்ற பிரிவைக் கிளிக் செய்து TSC_Avarangal என்ற வரிவடிவினைத் தேர்வு செய்யவும்
இதுபோல் உங்கள் நண்பரையும் TSC_Avarangal என்ற வரிவடிவினைத் தேர்வு செய்யச் சொல்லவும்
குறிப்பு - முக்கியமாக நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே தமிழ் வரிவடிவினை பயன்படுத்த வேண்டும்.

Abu Umar said...

திஸ்கி அஞ்சல் உதவி:


http://www.murasu.com/help/tscii17/tscii17guide_0023en.htm
மேலும்


http://www.murasu.com/help/quickstart/a2ksehelp.htm