Thursday, February 17, 2005

கல்வியைத் தேடுங்கள்

யாஹு மடலாற்குழுவில் (Yahoogroups) அப்பொழுது புதிதாக தென்பட்ட RSS திரட்டியின் பயனை தெரிந்துக்கொள்ள கூகிலில் தேடியதில் வந்து மாட்டியது பிளாக்கர் தளத்தில் அமைக்கப்பட்ட ஒரு தமிழ் வலைப்பதிவு. ஏற்கனவே நண்பர் ஒருவர் இனி மார்க்கெட் வலைப்பூக்களுக்குத்தான் என்று சொன்னது அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

நானும் வலைப்பதிவு அமைக்க எண்ணி முயற்சித்து பிறகு யுனிகோடு கன்வர்ட்டரை தேடிப்பிடித்து விண்டோஸ் 98-ஐ பயன்படுத்துவதால் அதற்காக டைனமிக் எழுத்துரு அமைப்பு நிறுவ என ஒரு நீண்ட முயற்சி நடந்தது.

பிளாக்கர் வலைப்பதிவுகளில் முன்பெல்லாம் விளம்பரங்கள் வரும். விளம்பரங்கள் சில நேரத்தில் வில்லங்கமாக ஆவதும் உண்டு. நமது பதிவில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளுக்கு சம்பந்தமான விளம்பரத்தை காட்டும். எனது வலைப்பதிவில் இஸ்லாம் என்று குறித்திருந்தேன். அதனை வைத்து இஸ்லாம் சம்பந்தமான தளங்கள் என்று சில பட்டியலைத் தந்தது. போய் பார்த்தபோதுதான் தெரிந்தது அது கிருஸ்துவர்களின் இஸ்லாமிய போர்வை அழைப்பு என்று. இப்பொழுது இந்த விளம்பரங்கள் இல்லாமல் பிளாக்கர் வலைப்பதிவுகளை பார்க்க முடியும்.

இன்னொரு விளம்பரம் மட்டும் தொடர்கிறது. blogspot என்று எழுதும்போது blogpsot என்று எழுத்தில் தவறு செய்தீர்களானால் கிருஸ்துவ அழைப்பு பக்கத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடும். ஆனாலும் பிளாக்கர் அளிக்கும் வலைப்பதிவு வசதிபோல் வேறொன்றும் இல்லை என்கிற அளவுக்கு வந்துவிட்டது. இன்னும் பல வசதிகளை பிளாக்கரில் செய்து கொடுத்துள்ளார்கள். தற்பொழுது மறுமொழிகளிலும் சுட்டிகள் (Links) கொடுக்கும் வசதியும் வந்துவிட்டது.

கூகில் விளம்பரங்களை உங்கள் வலைப்பதிவில் அனுமதித்தால் காசு தருகிறார்கள்.

வலைப்பதிவு சம்பந்தமான இக்கல்வியை நானே தேடி பெற்றுக்கொண்டதால் புதிதாக வலைப்பதிவு அமைப்பதோ மாடல் மாற்றுவதோ ஒரு சிறு விஷயமாகவே எனக்குப்படுகிறது என்றாலும், நான் இவ்விஷயத்தில் இன்னும் மாணவனே!. நிறைய தேடுகிறேன். தேடியதை பிறருக்கும் சொல்கிறேன்.

கல்வியை தேடிச் சென்று பெற்றுக்கொள்கிறபோது, அதன் பயன் தேடிவரும் கல்வியைவிட நேர்த்தியாக இருப்பதை எண்ணி வியப்படைகிறேன்.

அன்புடன்
அபூ உமர்

சில குறிப்புகள்:
பிளாக்கர் தளத்தில் அமைக்கப்பட்டதுதான் இவ்வலைப்பதிவும்.
கூகில், பிளாக்கர், ஜிமெயில் ஆகியவை, ஒரே நிறுவனத்திற்குரியது.

2 comments:

Sardhar said...

Quote : "பிளாக்கர் வலைப்பதிவுகளில் முன்பெல்லாம் விளம்பரங்கள் வரும். விளம்பரங்கள் சில நேரத்தில் வில்லங்கமாக ஆவதும் உண்டு"

அபூ உமர் அவர்களே...

விஜய் கூறியது போல (http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?t=33) செய்து ப்ளாக் விளம்பர டூல் தலைப்பினை நானும் தூக்கி விட்டேன். "உண்ட வீட்டுக்கு..." போல தோன்றினாலும் வில்லங்கமான விளம்பரங்களை தவிர்க்கிறதால் அவசியம் என்றே தோன்றுகிறது.

நீங்களும் செய்துவிடுங்களேன் ப்ளீஸ்...

அன்புடன்
முஹம்மத் சர்தார்

Abu Umar said...

சர்தார்,
நான் சொன்ன பிரச்சினை வேறு. அந்த பிரச்சினை முன்பு இருந்தது, ஆனால் இப்பொழுது இல்லை.

விஜய் எழுதியுள்ளது போல் டூல் பாரினை எடுத்துவிட்டால் வலைப்பதிவின் அழகும் போய்விடும், தேடும் வசதியினையும் இழந்துவிடுவீர்கள்.

அன்புடன்
அபூ உமர்

.