Tuesday, February 01, 2005

தபகாத் இப்னு சஅது

அஸ்ஸலாமு அலைக்கும்,

திண்ணையிலும் தற்போது நேசகுமாரின் வலைப்பதிவிலும் பதியப்பட்டிருக்கும் இஸ்லாம் குறித்த விவாதங்களை நண்பர்கள் அறிந்திருக்கலாம். நேசகுமாரின் சமீபத்திய பதிவையொட்டி அவருக்கு விளக்கம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் தொடர்பாக, மேலே குறிப்பிட்ட தபகாத் இப்னு சஅது என்ற நூலைப்பற்றி யாரேனும் அறிந்திருந்தால் அதைப்பற்றி தகவல்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த நூல் தொகுக்கப்பட்ட காலம், அதன் நம்பகத்தன்மை, (ஆதாரபூர்வமானதா? அல்லது ஆதாரமற்றதும் கலந்துள்ளதா?), இந்நூலைப்பற்றிய மற்ற மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன.

என்னை இந்த மின் அஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
salahudn@yahoo.co.uk

நன்றி. வஸ்ஸலாம்

Salahuddin

1 comment:

அபூ முஹை said...

வ அலைக்கும் ஸலாம்.

தபகாத் பற்றிய குறிப்புகள் எதுவும் தேவை இல்லை என்றே கருதுகிறேன். தேவைப்பட்டால் தபகாத் பற்றிய விபரங்களை
வெளியிடலாம்.

அறிவிப்பாளர் தொடர் இல்லாத இடைச் செருகல் செய்தி என்பது தெளிவு. தஃப்ஸீர் அத்தபரி திருக்குர்ஆன் விளக்கவுரையிலும் அறிவிப்பாளர் தொடர் இல்லாத இதே இடைச் செருகல் செய்திதான் இடம் பெற்றிருக்கிறது.

இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத செய்தி என்பதை 'நபி - ஸைனப் திருமணம்" என்ற தலைப்பின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறியவும்.