Saturday, May 20, 2006

முஹம்மது நபியின் திருமணங்கள் (பாகம் 2)

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அன்பிற்குரிய சகோதரர்களே !

அண்ணல் நபி (ஸல்) அவர்களை பல கோணலாக சித்தரித்து சித்திரம் வரைந்து வெளியிட்டது மேல்படியார்களுடைய அறியாமையை வெளிப்படுத்திற்று அல்லது, மதத்துவேஷத்தை வெளிப்படுத்திற்று என்று அறிந்து கொள்ளலாம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தீவிரவாதியாக இருந்திருந்திருப்பார்களேயானால் அவர்களுடைய சமகாலத்து எதிரிகளை வெற்றி கொண்ட பொழுது அவர்களுடைய எதிரிகளின் மீது தீவிரவாதத்தை ஏவி இருப்பார்கள் மாறாக மன்னித்து விட்டு விடுகிறார்கள் என்பதை இதற்கு முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தோம்.

அவர்களுடைய அடுத்த சித்திரம் இரண்டு பெண்களுடன் நேரடியாக சொர்க்கத்திற்குள் நுழைவது போல் சித்தரித்திருந்தனர்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெண்களின் மீது மோகம் கொண்டுதான் பல பெண்களை திருமணம் முடித்தனரா? அல்லது அத்திருமணங்கள் அனைத்தும் தியாகத்தின் அடிப்படையில் அமைந்தவைகளா? என்று பார்ப்போம்.

( முதல் மனைவி ) அன்னை கதீஜா (ரலி) அன்ஹா அவர்கள்

மக்கா நகரிலிருந்து சிரியாவுக்கு சென்று வியாபாரம் செய்யும் முன்னனி நிறுவனங்களில் அன்று அன்னை கதீஜா (ரலி) அவர்களுடைய வியாபார நிறுவனம் முதல் இடத்தை பிடித்திருந்தது. எவ்வாறெனில் 300 க்கும் மேற்பட்ட ஒட்டகக்கூட்டம் வியாபார பொருட்களின் பொதிகளை சுமந்து கொண்டு அணி வகுத்துச்செல்லும். அதுவல்லாமல் அவர்களிடத்திலே விலைமதிப்புள்ள செந்நிற ஒட்டகங்களும் பலநூறு இருந்தன, அவர்களுடைய வியாபார நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்துவதற்கு தகுதியான ஒருவரை அன்னையவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை அபூதாலிப் அவர்களிடம் வளர்ந்துவரும் முஹம்மது அவர்கள் மக்கா நகரத்தின் ஒட்டுமொத்த சமுதாயத்தினரின் உள்ளத்திலும் அல்அமீன் (நேர்மையாளர்) அஸ்ஸாதிக் (உண்மையாளர்) எனும் நம்பகத் தன்மையுடன் வாழ்ந்து வந்தார்கள். அதனால் முஹம்மது அவர்களை தனது வியாபார நிறுவனத்தை பொறுபேற்று நடத்த தகுதியானவர் எனும் முடிவுக்கு வருகிறார்கள் அதன்படி அபூதாலிப் அவர்களிடம் சொல்லி அனுப்புகிறார்கள், அபூதாலிப் அவர்களும் அண்ணல் அவர்களும் ஆலோசனை செய்து முடிவில் பெரியநிறுவனத்தில் வேலை கிடைத்தமைக்கு படைத்தவனுக்கு இருவரும் நன்றி கூறிக்கொண்டு சம்மதிக்கிறார்கள். அண்ணல் அவர்கள் அன்னை அவர்களின் நிறுவனத்தில் நேர்மையான பணியாளராக பணியாற்றி வருகிறார்கள்.

அன்னையவர்களுடைய முந்தைய கனவர் இறந்து நீண்டநாட்கள் மறுமனம் புரியாமல் இருந்ததாலும் அன்னையவர்கள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் மிகப்பெரும் வசதி படைத்தவர்கள் என்பதாலும் அன்னை அவர்களோடு சமநிலையில் உள்ளவர்கள் பலர் அவர்களை மனமுடிக்க முனைந்தனர் அன்னை அவர்கள் அதற்கு இனங்காமல் இருந்து வந்தனர்.

அன்னையவர்களிடத்தில் பணியாற்றி வந்த அண்ணல் அவர்களின் நம்பகத்தன்மை, அமாணிதம் பேணல், உண்மை பேசுதல் போன்ற நற்குணங்களின் பால் அன்னையவர்கள் கவரப்படுகிறார்கள் அதனால் தனது வாழ்க்கை துனைவராக்கிக்கொள்ள விரும்பி அண்ணல் அவர்களுக்கு தூது அனுப்புகிறார்கள்,

அண்ணல் அவர்கள் அன்னை அவர்களிடத்தில் பணியாற்றும் போது அவர்களுடைய ஒழுக்கத்தையும், நேர்மையையும் அறிந்திருந்தார்கள் என்பதால் மனமுடித்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்கள், திருமணம் நடந்தேறுகிறது, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வின் மூலம் அவர்களுடைய வாழ்க்கை இன்பகரமாக செல்லுகிறது எந்தளவுக்கென்றால் அன்னையவர்களுடைய மறைவுக்குப்பின் அன்னையவர்களுடன் இணைந்து வாழ்ந்த பசுமையான நினைவுகள் அண்ணல் அவர்களுடைய இறுதிப்பயணம் வரை வாட்டி வதைத்தது என்றால் மிகையாகாது.

அரேபியர் ஒருவருக்கு பல மனைவிகள் இருப்பதையே கவுரவமாக கருதி வாழ்ந்த காலமது. ஒரு பேரீத்தம்பழத்தை பெற்றுக்கொளள முடியாத பரம ஏழையிடத்திலும் கூட பல மனைவியர் இருந்ததாக வரலாறு கூறுகிறது, ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செல்வ சீமாட்டியை மனந்ததன் மூலம் அவர்களும் செல்வ சீமானாவகவே வாழ்ந்தார்கள், அவ்வாறு இருந்தும் அன்னை அவர்களோடு வாழ்ந்த காலத்தில் வேறொரு பெண்ணை மனமுடிக்க வில்லை,

அன்னையவர்கள் ஏற்கனவே மனமுடித்து மூன்று குழந்தைளுக்கு தாயானவர்கள், குறைந்தது அண்ணல் நபி (ஸல்) அவர்களை விட பதினைந்து வயதிற்கு மூத்தவர்களும் கூட, எந்த ஒரு இளைஞனும் தனது முதல் தாரம் கண்ணிப் பெண்ணாக அமைய வேண்டும் என்றே ஆர்வம் கொள்வான், சூழ்நிலை காரணமாக விதவை அமைந்து விட்டாலும் அடுத்தது ஒரு கண்ணிப் பெண்ணை மனமுடிக்க ஆர்வம் ஏற்படும் இதுசகஜம். ஆனாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அதுமாதிரியான சிந்தனை அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் ஏற்பட வில்லை மரணித்தப்பின்பும் ஏற்படவில்லை அது மட்டுமல்லாமல் அன்று அவர்கள் ஒரு கண்ணிப் பெண்ணை மனமுடித்திருந்தால் அதை அன்னையவர்களும் எதிர்க்கமுடியாது, அன்றைய சமுதாயமும் எதிர்க்க முடியாது காரணம் அன்றைய அரபுலக ஆண்வர்க்கத்தின் கலாச்சாரமே அதுவாகத்தான் இருந்தது.

ஏன் இதை நாம் குறிப்பிடுகிறோம் என்றால் அண்ணல் அவர்களை ஒரு பெண் பித்தர் என்று மத துவேஷிகளால் வர்ணிக்கப்படுவதால் இதை சுட்டிக் காட்டுகிறோம் மேலும் விஷயத்திற்கு வருவோம்.

அன்னை அவர்கள் மரணிக்கும் பொழுது அண்ணல் அவர்கள் 48 வயதை அடைந்திருந்தார்கள்.

நாமும் மனிதர்கள் என்கிற ரீதியில் நம்முடைய அனுபவ ரீதியாக சில விஷயங்களை அறிவுப் பூர்மாக சிந்திப்போம். 25 லிருந்து 48 வயதுக்குட்பட்ட பருவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் ? இந்த பருவத்தில் அதுவும் அடுத்த மனம் புரிவதற்கு எந்த தடையுமில்லாத காலத்தில் தனது நேசமான ஒரே மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள் மேற்கத்தியர்கள் கூறுவது போன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்பித்தராக இருந்திருப்பார்களென்றால் அன்னையவர்களிடம் குவிந்து கிடந்த செல்வத்தை பயன்படுத்தி பலபெண்களுடன் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் காரணம் அது அவர்களுக்கு சரியான தருனமாகும். இன்று நாம் பார்க்கிறோம் லட்சாதிபதி, கோடீஸ்வரர், மில்லியனர், பில்லியனரிடம் எவ்வளவு தான் மனம் கவர்ந்த ஒரு மனைவி இருந்தாலும், அந்தப்புறத்தில் ஒன்றல்லாமல் பலர் ஆசைநாயகிகளாக இருப்பதை பார்க்கிறோம். பெண்பித்தர் என்று வர்ணிக்கப்படும் ஒருவர் தனது வசதியை பயன்படுத்திக் கொண்டு இப்படித் தான் வாழ்வார்.

ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்

- இடையூறு இல்லாத பலதார மனக் கலாச்சாரம் நடந்து கொண்டிருந்த காலத்தில்
- தான் பெரும் கோடீஸ்வரராக இருந்த நிலையில்
- முறுக்கேரிய நடுநிலை வாலிபப் பருவமாக இருந்த நிலையில்

இத்தனை சாதகமான நிலையிருந்தும் காலச்சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளாமல்; தன்னைவிட வயது முதிர்ந்த மனைவியுடன் பாசநேசமாக வாழ்க்கை நடத்துகிறார்கள், வாலிபம் முழுவதும் அந்த மனைவியுடன் முற்றுப்பெறுகிறது

தான் பிறந்து ஓடியாடி வளர்ந்த வீட்டை விட்டு, பெற்றார், உற்றார் உறவினர்களைப் பிரிந்து எங்கிருந்தோ அமானிதமாக தன்னிடம் வந்து இணைந்து கொண்ட ஒரு ஜீவன் தான் மனைவி என்கிற பிறர் வீட்டு அடைக்கலப்பொருளாகும், இந்த பெண் தியாகியின் மீது ஒவ்வொரு கணவன்மாரும்; எவ்வாறு பாசநேசமாக வாழவேண்டும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து உலகம் படிப்பினை பெறவேண்டும்.

தனக்கு மனைவியாக வருபவள் கண்ணிப் பெண்ணாக இருந்தாலும் சரி, கைவிடப்பட்ட அபலைப் பெண்ணாக இருந்தாலும் சரி, விதவையாக இருந்தாலும் சரி வயதில் மூத்தவளாக இருந்தாலும் சரி ஒருவனுக்கு மனைவி என்று வருபவள் அவனுடைய விதியில் இறைவனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவளாகும். அதனால் எந்நிலையில் ஒருத்தி தனக்கு மனைவியாக வந்தாலும் அவளுக்கு முதலில் தன்னுடைய இதயத்தில் இடமளித்து புரிந்துணர்வுடன் பாசநேசமாக வாழவேண்டும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்மை விட வயது முதிர்ந்தவர்களுடன் தமது இளமைக்காலத்;தை கழித்த தியாக வரலாற்றிலிருந்து படிப்பினை பெறவேண்டும்.

இதனால் தான் அல்லாஹ் தன் திருமறையில் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21 என்றுக் கூறினான்.

ஒரு மனிதரைப்பற்றி அவருடைய உள் அந்தரங்க வாழ்க்கைகளை அக்குவேறு ஆனிவேறாக மற்றவரை விட அவருடைய மனைவியால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையை அவர்களுடைய மனைவி என்கிற முறையில் அன்னையவர்கள் அதிகம் தெரிந்திருந்ததால் அண்ணல் அவர்களுக்கு இறைச்செய்தி இறங்கியதும் அன்னை அவர்கள் அதிக மகிழ்ச்சி அடைகிறார்கள், மேலும் அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக இதற்கு முந்தைய வேதங்களை கற்றறிந்த தனது உறவுக்காரரிடம் அழைத்துச்சென்று தனது கணவருக்கு இறைச்செய்தி இறங்கிய செய்தியை கூறுகிறார்கள் குர்ஆனுக்கு முந்தைய அனைத்து வேத கிரந்தங்களிலும் ரிக்வேதம் உட்பட முஹம்மது நபி அவர்களுடைய வருகையை உறுதிபடுத்தி இருப்பதை அவர் அறிந்தவர் என்பதால் அண்ணல் நபி அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் அவர்கள் வஹீ அறிவிக்கும் போது நடந்த நிகழ்வுகள், சூழல்களை வைத்து அவரே இறைத்தூதர் என்றும் அவரே இறுதி நபி என்றும் உண்மைபடுத்தி முஹம்மதை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள், நான் தள்ளாடும் முதுமையில் இருக்கிறேன் இன்னும் சிலகாலம் வாழ்வதாக இருந்தால் இவர்களை இந்த மக்கள் நாட்டை விட்டு விரட்டுவதை நான் கான்பேன் என்றும் எச்சரிக்கைப படுத்தி அனுப்பி வைக்கிறார். அவர் பெயர் நவ்பல் இப்னு வரக்கா.

அத்துடன் அன்னையவர்கள் ஈமான்கொண்டு முதல் இறைவிசுவாசியாகி விடுகிறார்கள், இஸ்லாமிய வளர்ச்சிக்காக தங்களுடைய முழுசெல்வத்தையும் தாரைவார்த்து விடுகிறார்கள்.செல்வ சீமாட்டியான அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலங்களில் அண்ணல் அவர்களோடு தாங்களும் பலகஸ்டங்களை அனுபவித்துள்ளார்கள் அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் மீது குறைஷிகள் ஏவிய பொருதார தடைக்கு அன்னை அவர்களும் இலக்கானார்கள், இறைச்செய்தி வந்து கொண்டிருந்த காலங்களில் கூடவே இருந்தார்கள், இடையில் இரண்டு வருடங்கள் இறைச்செய்தி இறங்காமல் இருந்த காலங்களில் அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டானோ என்று அண்ணல் அவர்கள் அதிகம் கவலைக்குள்ளான நாட்களில் அண்ணல் அவர்களுக்கு ஆருதல் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்த சம்பவம் அன்னையவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடத்தில் இறங்கும் இறைச்செய்தியின் மீது அதிகம் நம்பிக்கை சேர்த்தது, காரணம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள இறைச்செய்;தி என்று சுயமாக எதையும் கூறக் கூடியவர்களாக இருந்தால் தினமும் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருக்க முடியும், இறங்கிக் கொண்டிருப்பது இறைவேதம் தான் என்பதை மக்களிடத்தில் உறுதி படுத்துவதற்காக இதுவும் இறைவனுடைய ஏற்பாடு தான் என்பதற்கு வேரு அத்தாட்சி தேவை இவ்லை.

பெண் பித்தர் என்று மத துவேஷிகளால் கூறப்படுவது உண்மையானால் அன்னையவர்களோடு வாழ்ந்த 25 – 48 அதாவது 23வருட வாலிப பருவகாலத்தில் பல பெண்களை மனந்திருப்பார்கள். மனந்திருக்க வேண்டும். அவ்வாறு மனந்திருந்தால் எவரும் எதுவும் சொல்ல முடியாது காரணம் பலதாரமனம் என்பது இன்றைய மக்களிடத்தில் மோசமான சிந்தனை இருந்தாலும் அன்றைய மக்களிடத்திலே அது சாதாரணமாகவே கருதப்பட்டது அவ்வாறு சாதாரணமாக கருதபட்டக் காலத்தில், காலத்தின் சூழலை சாதகமாக்கி கொள்ளாமல் தனது நேசமான ஒரு மனைவியுடன் ஒரு இலட்சியத்தோடு குறிப்பிட்ட ஓர் இலக்கை ( ஓரிறை கொள்கையை ) நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். இன்றல்ல, அன்றல்ல, என்றும் இதுபோன்ற திடகாத்திரமான கட்டுப்படுத்தும் மனநிலை உள்ள முஹம்மது நபியை போல ஒரு தலைவர் எவரும் இருக்க முடியாது, இருந்ததாக வரலாறு இவ்லை.

இரண்டு பெண்களுடன் சொர்க்கத்திற்குள் நுழைவது போல் சித்தரித்திருந்த அச்சித்திரம் அவர்களுடைய கேடுகெட்ட கலாச்சாரத்தை பட்டவர்த்தனமாக பறை சாட்டுவதைக் காணலாம்.

பிஞ்சிலே பழுத்து வெம்பி விடும் இளைஞர், இளைஞிகள் அவர்களிடத்திலே மலிந்து கிடப்பதுடன்
பெண்களுடனான உல்லாசம் ஒன்று தான் சொர்க்கம் என்று நினைத்து அதில் வீழ்ந்து அதிலிருந்து எயிட்ஸ் எனும் கோடியநோயை விலைகொடுத்து வாங்கி தானும் சமுதாயத்தில் தீண்ட தகாதவர்களாகி, அதை பிறருக்கும் அறிமுகம் செய்த அவர்களே பெண் பித்தர்கள் என்பதை அவர்கள் பிறருக்காக வறைந்த சித்திரம் அவர்களை பறைசாட்டுகிறது, தனது எதிரிலுள்ளவர்களை குறை கூற உயர்த்தும் விரலுக்கு அடுத்த விரல் தன்னை சுட்டிக் காட்டுவதை சில மேதாவிகள் அறிய மாட்டார்கள், அச்சித்திரம் வரைந்தவனையும், அவனது சமூகத்தினரின் வழி தவறலையும் சுட்டிக்காட்டுவதை அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள் அச்சித்திரம் முழுக்க, முழுக்க மேற்கத்திய அவர்களின் கேடுகெட்ட மிருகப்புணர்ச்சி கலாச்சாரத்தையே சுட்டிக்காட்டுகிறது. மாறாக உயர்ந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை அல்ல.

தியாகத்தின் அடிப்படையில் அமைந்த மற்ற திருமணங்களைப பற்றி
அல்லாஹ் நாடினால் மேலும் எழுதுவோம்

- அதிரை ஏ.எம். பாரூக்

No comments: