முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு குறித்து இக்கூட்டத்தொடரிலேயே சட்டத்திருத்தம்
சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள 13வது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தினார்.புதிய சட்டமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரில் பின்வரும் சட்டங்கள் உட்பட பல சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று ஆளுனர் தன் உரையில் குறிப்பிட்டார்:
- சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஏற்படுத் துவதற்குத் தேவையான சட்டத்திருத்தம்
கொண்டு வரப்படும். - மத மாற்றத் தடைச் சட்டத்தை முறைப்படி திரும்பப் பெறும்
சட்ட முன் வடிவை இந்தக் கூட்டத் தொடரில் கொண்டு வரும். - ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்து மதங்களிலும் இருக்கின்ற ஆதி திராவிடர்களுக்கும் கிடைத்திட வழி வகை செய்யப்படும்.
தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் அரசு உதவி பெறாத, சிறுபான்மையினரதல்லாத சுயநிதிக் கல்வி நிலையங்களில் கட்டாய இடவொதுக்கீட்டுக்குச் சட்டம்- ஏழைகளுக்கான இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் சட்டம்,
- காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுகளை அமல் செய்ய நடுவணரசை வலியுறுத்தல், (பாசனத்துக்காக மேட்டூரணை ஜூன் 12ல் திறக்கப்படும்.)
- நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதைப் பரிசீலிக்க ஒரு ஆணையம் நிறுவப்படும,
- எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் கணினி வழங்குதல்,
ஆதாரம் : MSN INDIA.com (TAMIL)
1 comment:
The following article was published in hindustantimes, talks about real status (govt administrative service and officers) of muslims in india.
http://www.hindustantimes.com/news/181_1706723,00120002.htm
InshaAllah, i will try to translate into tamil soon (probably get the consent of the author and newspaper -- to avoid any controversy), please let me whom to contact to publish.
Jazakallahu Khair,
Post a Comment