Thursday, May 04, 2006

இளையவன் பதில் சொல்வாரா?

"தீமைக்கெதிராக எழுதுகோல் ஆயுமேந்தி"யிருப்பதாக உங்கள் தளத்தில் டைட்டில் போட்ட நீங்கள் அதில்,

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்-ஆன் 61:2)

என்ற இறைவனத்தை குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஆனால் கடந்த மாதம் (ஏப்ரல்-2006) சகோ. பாக்கர் அவர்களின் ஜித்தா வருகையையொட்டி வெளியிடப்பட்ட உங்களது சிறப்பு செய்தியாளர் அப்துல்லாஹ்வின் கட்டுரைக்கும் மேற்சொன்ன இறைவசனத்திற்கும் சில தொடர்பு இருப்பதாக நான் கருதுவதால் இப்பதிவை இடுகிறேன்.

பாக்கரை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் தலைவர் அவரை ததஜவின் சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார். அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல..

சகோ. பாக்கர் அவர்களின் (உம்ராவிற்கான) மொட்டைத் தலையுடன் சிங்கத்தின் பிடறி முடியை முடிச்சு போட்டதிலேயே உங்கள் சிறப்பு செய்தியாளர் அப்துல்லாஹ்வின் களத்தொகுப்பு சீரிய முறையில் வெளிப்படுகிறது.

பலபேர் இத்தவறை இணையத்தின் பல இடங்களில் சுட்டிக்காட்டியும்கூட, இதுவரை மறுப்போ அல்லது அக்கட்டுரையில் குறிப்பிட்ட வரியை நீக்கவோ நீங்கள் முயற்சி செய்யாததன் நோக்கமென்ன?. யாரோ எழுதிய கட்டுரையை பதிவு செய்திருந்தால் இந்த கேள்வியை நான் கேட்கப்போவதில்லை. சிறப்பு செய்தியாளர் செய்த தவறுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது உங்கள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளிலும் உண்மைகளுடன் பொய்களும் கலந்து இருக்கலாம், அதனை வாசகர்கள்தான் பிரித்துப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

தீமைக்கெதிராக எழுதுகோல் ஆயுதமேந்துவதை வரவேற்கிறேன். அதற்காக பொய்மையை ஆயுதமாக ஏந்துவது எந்த வகையில் நியாயம் என்பதை விளக்குவீர்களா?

மேற்குறிப்பிட்ட அதே கட்டுரையின் இறுதியில்:
இந்த வெளியீட்டை வாசிக்கின்ற அன்புச் சகோதரர்களே! யாரும் எங்கும் வருவதிலோ, பேசுவதிலோ காழ்ப்புணர்வுக் கொண்டு இதை நாம் வெளியிடவில்லை.
என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்-ஆன் 61:2) இன்ற இறைவசனத்தை மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.

3 comments:

வாசகன் said...

"மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா?"
அது பழமொழி

"மொட்டைத்தலைக்கும் சிங்கத்தின் பிடறிமுடிக்கும் முடிச்சுப் போடுவதா?"
இது புதுமொழி

அதாவது, இளையவன் வழி

விமர்சகன் said...

அன்பின் அபூ முஹம்மத்,

தாங்கள் குறிப்பிடும் இருதரப்பாரின் தவறும் பெரியதோர் விசயமில்லை என்றாலும் அதை கண்டிக்கும் விதம் ஆரோக்கியமான செயலாகத்தான் இருக்கிறது. தங்களுடைய இந்த இரண்டு விமர்சனங்களிலும் சில சந்தேகங்கள் தொற்றி நிற்கின்றன. அந்த சந்தேகங்களை சமுதாய நலன் கருதி தங்களிடம் வைக்கிறேன்.

தாங்கள் ஒரு தரப்பாரின் தவறை சுட்டிக்காட்டிய பொழுது அதை அதன் தலைமை கண்டிக்காதா என்று கேட்டிருந்தீர்கள். த.த.ஜ.வினருக்கு ஆதரவாக மெயில் அனுப்புபவர்கள் அதன் தலைமையால் அவிழ்த்து/ஏவி விடப்பட்ட நாய்கள் என்ற பொருள்பட காட்டமாக விமர்சனம் செய்திருந்தீர்கள்.

ஆனால் மற்றோர் தரப்பாரை சற்று விரிவாக மிகவும் தாமதமாக விமர்சனம் செய்கிறீர்கள். அதிலும் அவர்களை அவர்களின் தலைமை கண்டிக்காதா என்று கேட்காமல் நீங்கள் குறிப்பிடும் நபர் பதில் தருவாரா? என்று கேட்டிருக்கிறீர்கள். அந்த விமர்சனத்தில் மிகவும் மென்மையான வார்த்தைகளை மிகவும் கவனமாக கை கொண்டுள்ளீர்கள். தங்களுடைய அந்த விமர்சனத்தில் நீங்கள் குறிப்பிடும் நபரின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிப்பதை விடவும் அதற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் காட்ட முயற்சிக்கிறீர்கள்.

//யாரோ எழுதிய கட்டுரையை பதிவு செய்திருந்தால் இந்த கேள்வியை நான் கேட்கப்போவதில்லை. சிறப்பு செய்தியாளர் செய்த தவறுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?//

இது நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் அவருடைய தவறை சிறப்புச் செய்தியாளரின் தலையில் கொட்டிவிட்டு தப்பிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவருடைய தவறை அவர் சார்ந்த தலைமையோடு தொடர்பு படுத்தாமல் தாங்கள் விட்டு விட்டது ஆரோக்கியமான, நடுநிலையான விமர்சனமாக தெரியவில்லையே!

//அல்லது உங்கள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளிலும் உண்மைகளுடன் பொய்களும் கலந்து இருக்கலாம், அதனை வாசகர்கள்தான் பிரித்துப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?//

இதில் என்ன நமக்கு சந்தேகம்? நீங்கள் குறிப்பிடும் அந்த நபரின் வழியாக வரும் செய்திகள் யாவும் நம்பத்தகுந்தவை அல்ல என்று அவர் சார்ந்த இயக்கத்தினரே கூறி வருகிறார்கள். அப்படி இருக்க தங்களுடைய இந்த கேள்வி தாங்கள் குறிப்பிட்டுள்ள (சகோதரர் பாக்கர் தொடர்பாக உள்ள) செய்தியை தவிர்த்து மற்ற அனைத்துச் செய்திகளும் உண்மையானது போல சித்தரிப்பதாகவே உணர்த்துகிறது.

உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.

பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும், தீமை நரகத்திற்கு வழிவகுக்கும்.

என்ற முஹம்மது (ஸல்) அவர்களின் கூற்றை சக முஸ்லிம் சகோதரர்களுக்கிடையேவும், முஹம்மதின் தந்தையாகிய தங்களிடையேவும் பகிர்ந்து கொள்கிறேன்.

விமர்சகன்.

YAG said...

//இதில் என்ன நமக்கு சந்தேகம்? நீங்கள் குறிப்பிடும் அந்த நபரின் வழியாக வரும் செய்திகள் யாவும் நம்பத்தகுந்தவை அல்ல என்று அவர் சார்ந்த இயக்கத்தினரே கூறி வருகிறார்கள்//

How come TMMK supported the candidature of the person claiming to operate that site ?